வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 15.2

“இனி ஒரு நிமிஷம் கூட என் பொண்ணு இங்க இருக்க கூடாது..” என்ற தினகரன் மகளிடம், “நீ போய் டிரஸ் பேக் பண்ணி மாத்திரை மருந்து எல்லாம் எடுத்துட்டு வாம்மா..” என்றவர் பார்வை மகளின் கன்னத்தில் பதிந்தது. 

மகாவின் கன்னத்தில் ரிஷியின் விரல் தடம் பதிந்து சிவந்து போய் இருப்பதை கண்டவரின் கோபம் அவர் கட்டுக்குள் இல்லை. அவர் அங்கேயே இருந்து இன்னுமே வார்த்தை தடித்து விடக் கூடாதே என்பதால் தன் கோபத்தை கட்டுப்படுத்தி வெளியில் சென்றார். 


“என்னங்க அவசரப்பட வேண்டாம். வளைகாப்புக்கு ஐயர் குறிச்சு கொடுத்த நாளுக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லை.. எதுவா இருந்தாலும் நிதானமா பேசிக்கலாம்..” என்ற பாக்கியலட்சுமி கணவனின் பின்னே செல்ல சிவபாலன் அவர்களை சமாதானப்படுத்த உடன் வெளியில் சென்றார்.


அதேநேரம் தன் அறைக்கு சென்ற இந்திராவோ மீண்டும் மகளுக்கு அழைத்து பேச தொடங்கி விட்டார்.


அறையில் மகாலட்சுமி ரிஷிவரதன் இருவரும் தனித்து விடப்பட்டிருக்க கணவனை வெறித்திருந்த மகா ‘இனியும் அவனிடம் பேச எதுவுமில்லை’ என்ற முடிவோடு முகத்தை அழுந்த துடைத்து ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி பெட்டியை எடுத்து தன் போக்கில் உடைகளை அடுக்கத் தொடங்கினாள். 


மனைவியின் இந்த செயலை சுத்தமாக ரிஷி எதிர்பார்க்கவில்லை.


‘அவளை எப்படி தடுப்பது? என்ன சொல்லி தன் செயலை நியாயப்படுத்துவது’ என்று புரியாமல் செயலற்று போய் அவளையே பார்த்திருந்தவன் பல நிமிடங்களுக்குப் பின்பே ஸ்மரன் பெற்றான். 


இது அவன் பேச வேண்டிய நேரம். மகாவிடம் அவன் பேசியே ஆக வேண்டும் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும்!!


கண்ணீரை உள்ளிழுத்தபடி இருந்தவளின் அருகே சென்று குரலை செருமியவன், “ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்க அதற்கு மகாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 


ரிஷி என்ற ஒருவன் அந்த அறையில் இருப்பதை உணராதவள் போலவே தன் போக்கில் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். 


“உன்கிட்ட தான் கேட்கிறேன் மகாலட்சுமி, நீ மயங்கியதையும் ஹாஸ்பிடல் போனதையும் ஏன் என்கிட்ட சொல்லல..” என்றான் மீண்டும். 


மகா அவனை தாண்டி சென்று மாத்திரைகளை எடுக்க முற்பட்டதில் பொறுமை இழந்தவன் அவள் கையைப் பிடித்து, “உன்கிட்ட தான்டி கேட்கிறேன் ஏன் என்கிட்ட சொல்லல..” என்றான் அடிக்குரலில். 


“கையை விடுங்க..”


“முடியாது எனக்கு பதில் தெரிஞ்சாகணும்.. என் பிள்ளைகளை பத்தி தெரிஞ்சுக்க எனக்கு உரிமை  இருக்கு, சொல்லுடி..” என்றவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள்,


“உங்ககிட்ட சொல்றதால பெருசா என்ன நடத்தற போகுது? எப்படியும் ட்ரிப்ஸ் போட்டு முடிஞ்சதும் போய் ஆஃபீஸ்ல வேலையை பாருன்னு தானே சொல்ல போறீங்க அதுக்கு எதுக்கு நேரத்தை விரயம் பண்ணி உங்களுக்கு சொல்லணும்?”


“மகாலட்சுமி..” 


“ப்ச் கத்தாதீங்க..” என்று அவனிடம் இருந்து கையை விடுவித்து கொண்டவள், 


“எங்கே உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, ஒருவேளை முன்னாடியே இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா புதுசா வேற ஏதாவது பதிலை சொல்லி இருக்க போறீங்களா இல்லை எனக்காக ஓடி வந்திருப்பீங்களா?” என்று கேட்க அவனால் பதில் பேச முடியவில்லை. 


பின்னே அவள் மயங்கிய நேரம் அவன் ஃபைனான்சியரை சந்திக்க அல்லவா சென்றிருந்தான்.


அவன் ஆபீஸில் இருந்து அவர் அலுவலகம் வெகு தூரம், கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலான பயணம். 


அப்படியிருக்க, அவனால் அவரை பார்க்காமல் உடனே அங்கிருந்து கிளம்பி இருக்க முடியாது.. அவளையும் ஆபீஸுக்கு திரும்பி போக தான் சொல்லி இருப்பான்.. அதை மனைவி சரியாக கணித்து கேட்டதில் பதிலின்றி நின்றான். 


“உங்களுடைய மௌனமே அதுதான் பதில்னு சொல்லாமல் சொல்லுது…” என்றாள் எள்ளலாக.


“என்னோட பதில் எதுவா இருந்தா என்னடி? அங்க நடந்ததை என்கிட்டே சொல்ல வேண்டியது உன்னோட கடமை, அதை ஒழுங்கா செஞ்சியா?” 

 

“கடமை?” என்று கசந்த முறுவலோடு அவனைப் பார்த்தவள், “என் கடமையை இதுவரைக்கும் நான் ஒழுங்கா தான் செய்துட்டு வரேன் ரிஷி ஆனா என்னைக்காவது என்னை உங்க பொண்டாட்டியா நீங்க மதிச்சு இருக்கீங்களா?”


“அப்படி என்ன உங்களுக்கு பொண்டாட்டின்னா அவ்ளோ அலட்சியம்? நானும் பார்த்துட்டேன் உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு அம்மாவா, அக்காவா, தங்கையா, மகளா, இவ்ளோ ஏன் அக்கா மகளா இருந்தா கூட அவங்களுக்கு கிடைக்கிற மரியாதை பொண்டாட்டியா இருக்கும் பெண்ணான எனக்கு கிடைக்கிறதில்லை..”


“ஏன் இந்த பாரபட்சம்? அப்படி என்ன நான் உங்களுக்கு இளக்காரமா போயிட்டேன்? என்கிட்டே எதையும் ஷேர் (Share) பண்றதில்லை, டிஸ்கஸ் பண்றதில்லை, மனம் விட்டு பேசறதில்லை, எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னாடியும் ஒரு வார்த்தை கேட்கிறது இல்லை.. மொத்ததுல இந்த வீட்டுல இருக்கிற ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு ஹோம் அப்ளையன்சஸ்கும் (Home Applainces) எனக்கும் எந்த வித்யாசமும் இருந்ததில்லை..”


“அந்தளவுக்கு என்னை நீங்க ஒரு மனுஷியா மதிச்சது இல்லை. ஏன் ரிஷி இப்படி? ஒரு பொண்டாட்டியா பெட்டை தவிர்த்து வேற எதுக்குமே நான் லாயகில்லைன்னு நீங்களா எப்படி முடிவு பண்ணுனீங்க?”


“ஏய்! திரும்ப அதையே பேசாதடி.. இன்னொரு முறை இப்படி பேசின நடக்கிறதே வேற..”


“அப்படி என்னை நடத்தலைன்னு நினைக்கிற உங்களுக்கு ஏன் இவ்ளோ ரோஷம் வருது?” என்றவளுக்கு தன் அருமை தெரியாத, தன்னை புரிந்து கொள்ளாத, அவன் வாழ்வில் தான் முக்கியம் என்று நினைக்காதவனோடு இனியும் சகித்துக் கொண்டு இருப்பதற்கு அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. 


“வேண்டாம் மகாலட்சுமி நான் திரும்பவும் சொல்றேன், இந்த வார்த்தைக்காக தான் கொஞ்சம் முன்ன என்கிட்டே வாங்கின.. திரும்ப அதையே பேசி என் கோபத்தை கிளறாத!” என்று அடிக்குரலில் ரிஷி சீறிட அவனை உறுத்து பார்த்தவள், 


“நான் ஒரு போஸ்ட் கிராஜுவேட் (Post Graduate) ரிஷி. ஐடி ஃபீல்ட்ல நாலு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு, எவ்வளவோ மனுஷங்களை சந்திச்சு அவங்களோடு சேர்ந்து வொர்க் பண்ணி நம்ம வீட்ல வருவதை விடவும் பல இக்கட்டான சூழல்களை அங்கு சந்திச்சு இருக்கேன்…”


“சொல்லப்போனா பல இடர்பாடுகளை கையாண்டு அதுக்கான தீர்வுகளை கண்டுபிடிச்சு யாரையும் சாராமல் சுயமா முடிவெடுத்துன்னு எவ்வளவோ விஷயங்களை காலேஜ் டேஸ்ல இருந்து என் வயசுக்கு நான் கடந்து வந்திருக்கேன்.. ஐ’ம் ஆன் எம்பவர்ட் வுமன் (Empowered Woman) ஆனா நீங்க என்னை அப்படியா நடத்துறீங்க?”  


ஒரு மனைவியாக எந்த நிலையிலும் அவனோடு துணை இருக்க வேண்டியது மகாவின் கடமை.


ஆனால் அதை செய்யாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருப்பது தான் அவன்  கண்மூடித்தனமான கோபத்திற்கு வழிவகுத்தது.


இப்போதும் அதையே செய்பளை பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தான். 


“இங்கே எல்லாம் உங்க இஷ்டம் தான்.. எதுலயும் நான் தலையிடக்கூடாது, என் அபிப்ராயத்தை கேட்க மாட்டீங்க, ப்ச் அதுகூட பரவால்ல ஆனா இதே வீட்டுல இருக்கிற எனக்கு எதை பற்றியும் ஒரு தகவல் கூட கொடுக்கறது இல்லை..


அப்போ இந்த வீட்ல நான் யாருங்கிற சந்தேகம் எனக்கு வருவது நியாயம் தானே?! அதை கேட்டா அடிப்பீங்களா?..” என்று முடிக்கும் முன்னமே,


“மகாலட்சுமி அது ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன். ஆனா நீ என்ன வார்த்தைடி பேசுற! நான் என்ன உன்னை அப்படி தான் நினைச்சேனா?”

 

“நீங்க எப்படி நினைச்சீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா இதுவரைக்கும் என்னை அப்படித்தான் நடந்திக்கிட்டு இருக்கீங்க.. நம்முடைய எண்ணங்கள் தான் செயலா வெளிப்படும்னு சொல்லுவாங்க..”


“இதுநாள் வரை உங்களுடைய செயல் இப்படித்தான் இருந்திருக்கு அப்போ அது உங்க எண்ணத்தின் வெளிப்பாடு தானே! அதை ஒத்துக்க ஏன் உங்களுக்கு இவ்ளோ தயக்கம்?”


“உங்களை பொறுத்தவரை பொண்டாட்டி என்பவள் இந்த வீட்டுக்கு சம்பளம் இல்லாது வேலை செய்து, கூடவே வெயில், மழை பார்க்காம உங்களுக்கு சம்பாதிச்சு கொடுத்து, போதாததுக்கு ராத்திரியில உங்களோட தேவையை தீர்க்கிறவ மட்டுமே! அப்படி தானே?!” என்று மெல்லிய விசும்பலோடு கலங்கிய குரலில் கணவனை பார்த்தாள்.


“மகாலட்சுமி நான் கடைசியா உன்னை வார்ன் (Warn) பண்றேன், தேவை இல்லாம பேசாத..” என்று வேகமாக அவளை நெருங்கியவன் சட்டென இரு அடி பின்னே வைத்து இடையில் இரு கரங்களையும் பதித்து தன்னை நிதானித்தான். 


“ஏன் நிறுத்திட்டீங்க.. திரும்ப அடிக்க வேண்டியது தானே?! கமான், நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? உங்க சொல் பேச்சு கேட்டு எந்த கேள்வியும் கேட்காம நீங்க நினைக்கிறதை செய்து முடிக்கிற ஒரு பொம்மையா நான் இருக்கணுமே தவிர எதையும் எதிர்பார்க்க கூடாது, நியாயத்தை பேச கூடாது அப்படிதானே?!..”


“இதுக்கு எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி?..” என்றவளின் பேச்சு ரிஷியின் கரம் சுவரில் ஓங்கி அறைந்த சப்தத்தில் நின்று போக, “நான் என்ன மாதிரி சூழலில் இருக்கிறேன்னு புரிஞ்சுக்காம உன் இஷ்டத்துக்கு வார்த்தை விடாதேடி..” என்றான் குறையாத கோபத்தோடு.


இமைக்காமல் அவனை பார்த்திருந்தவள் “என்ன பெரிய சூழல்? உங்க அக்கா பொண்ணு வயசுக்கு வந்திருக்கிறதால அவளுக்கு உங்க அக்கா எதிர்பார்க்கிற சீர் செய்யணும்.. இல்லைன்னா உங்க அக்கா கையை கிழிச்சுப்பாங்க அதுதானே?!” 


“இதுநாள் வரை நீங்க உங்க அம்மா, அக்கா அவங்க பொண்ணுக்குன்னு யாருக்கு செய்யறதையும் நான் தடுத்தது கிடையாது. இனியும் தடுக்க மாட்டேன், ஆனா அதுக்கு என்னோட சம்பளத்தையோ, நகையையோ இடப்பத்திரத்தையோ என்னைக்கும் எதிர்பார்க்காதீங்க..” என்றாள் நிர்தாட்சன்யமாய்.


கைகளை கட்டிக்கொண்டு விழிகள் இடுங்க தன் முன்னே பேசிக்கொண்டு இருந்தவளையே வெறித்திருந்தவன், “இப்போ நீ இந்த வீட்டை விட்டு போனா அப்படியே போயிடனும், இனி இங்க வரக்கூடாது..” என்று ‘என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம்’ என்ற சிந்தனையே இல்லாமல் பேசினான் ரிஷிவரதன். 


“கவலை படாதீங்க, நான் வரமாட்டேன். ஆனா இனியும் என் பணத்தை, சொத்தை எதிர்பார்த்து இருக்காதீங்க.. அதுக்கு நான் ஆள் இல்லை. உங்களுக்கு என்னைக்கு பொண்டாட்டியோட அருமை தெரியுதோ அப்போ தேடி வாங்க பேசிக்கலாம்...” என்றவள் பையில் அவளின் நகை பத்திரம் என்று அனைத்தையும் திணித்தாள்.


“என்னடி இதெல்லாம்? வேண்டாம் மகாலட்சுமி நான் ஒண்ணும் திருடன் இல்லை. இப்படி என்னை நம்பாமல் நீ எல்லாத்தையும் எடுத்து வைக்க..” என்றதை காதிலேயே வாங்காமல் அனைத்தையும் அடுக்கினாள்.


அவள் முழங்கையை பிடித்து இழுத்தவன், “நீ என்னை ரொம்ப அவமான படுத்துறடி..” என்றான் ஆவேசத்தோடு. 


“இந்த நிலையில என்னை கொண்டு வந்து நிறுத்தினது நீங்க தான்! உங்க அக்கா பொண்ணுக்கு செய்யறதை நான் தப்புன்னு சொல்லலை ஆனா தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்! அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க..”


“என் அப்பா என் பிள்ளைகளோட எதிர்காலத்துக்காக கொடுத்ததை யாருக்கோ என்னால தானம் செய்ய முடியாது.. இந்த பாத்திரத்துக்காக நீங்க என்னை கை நீட்டின பிறகும் இதை இங்கேயே விட்டு வைக்கிற அளவுக்கு நான் முட்டாள் இல்லை…” 


“இன்ஃபாக்ட் இவ்ளோ நடத்த பிறகும் இப்போ நீங்க மூச்சு பிடிச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கிறதே என் மேலயும் குழந்தைகள் மேலயும் இருக்கிற அக்கறையால கிடையாது சிந்துவுக்கான சீர் செய்ய உங்களுக்கு தேவையான இடப்பத்திரத்துக்காக தானே?!” என்ற மறுநொடியே, “மகாலட்சுமி” என்றான் சப்தமாக.


“சத்தம் போட்றதால உண்மையை மறைக்க முடியும்னு நம்பறீங்களா ரிஷி? இப்போ நான் வீட்டை விட்டு போறதை விட என் பணமும், சொத்தும் தான் உங்களுக்கு பெருசுன்னு எனக்கு தெரியும்..”


“வேண்டாம் மகாலட்சுமி, போதும் இதுக்கு மேல பேசாத..”


“அதுக்காக தானே என்னை இங்க தங்க வைக்க பார்க்கறீங்க? ஆனா அது என்னைக்குமே நடக்காது. எனக்கு மரியாதை இல்லாத இடத்துல இனியும் இருக்க நான் ஒன்னும் முட்டாளில்லை..” என்றவள் பத்திரத்தை அவன் முன் நீட்டி, 


“இது என் பிள்ளைகளுக்கானது!! அவங்களுக்கு தான் சேரனும்..” என்றாள் தீர்க்கமான குரலில். 


“அப்போ என்னை விட இந்த சொத்து தான் உனக்கு முக்கியமாடி?”


“என்னை விடவும் உங்களுக்கு என் பணமும் சொத்து முக்கியமா இருக்கலாம் ஆனா எனக்கு என் பிள்ளைகள் முக்கியம். அப்பாவா நீங்க அவங்களை பற்றி யோசிக்காம போகலாம் ஆனா அம்மாவா என்னால அப்படி இருக்க முடியாது..” 


“கடைசியா சொல்றேன் மகாலட்சுமி, இந்த வீட்டு வாசற்படியை தாண்டினா இனி நமக்குள்ள எதுவும் இல்லை, என்னை நீ மறந்துட வேண்டியது தான்” என்று இறுதியாக எச்சரித்தான். 


அதில் ஒரு நொடி அவள் அசைவற்று நின்றாலும் மறுநொடியே, “இப்போ எனக்கு தேவை மன அமைதி, இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் எனக்கு அது கிடைக்க போறது கிடையாது ரிஷி.. என் பிள்ளைகள் என்னை நம்பி இருக்காங்க.. உங்களுக்கு நான் தேவையில்லாம இருக்கலாம் ஆனா அவங்களுக்கு நான் ரொம்ப தேவை..”


“நான் மன நிம்மதி இல்லாமல் இருந்தா அது அவங்களை பாதிக்கும், என்னோட வேதனையும் வருத்தமும் சிசுக்களின் வளர்ச்சியை பாதிக்க நான் விட மாட்டேன். எனக்கு இப்போ அமைதியான சூழல் தேவை. அதனால தான் ஏழாம் மாசமே வளைகாப்பு செய்ய சொல்லி இருந்தேன் ஆனா அதுக்குள்ள பிரச்னையை பெருசு படுத்தினது நீங்க தான்!!”


“உங்களை நம்பி வந்த என்னை நீங்க கைவிடலாம் ஆனா அவங்களை என்னால கைவிட முடியாது ரிஷி.. ஒருவேளை நான் இந்த வீட்டு வாசற்படியை திரும்ப மிதிக்காம போறது தான் விதியா இருந்தா அதையும் என் குழந்தைகளுக்காக ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்.. குட் பை!!” என்றவள் நொடியும் தாமதிக்காமல் வெளியில் வந்து பெற்றோருடன் கிளம்பி சென்றாள். 
 

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.3