Posts

Showing posts from March, 2026

வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 54

Image
  மேலும் சில நாள்கள் கழிந்த நிலையில்: எப்போது தளிர் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றான் என்பது தெரிந்ததோ அப்போதே சரத்தும் அவனை சார்ந்தவர்களும் முழுதாக உதய்யின் வட்டத்திற்குள் வந்துவிட்டனர். அவர்களை கண்காணிப்பதற்கு தனியாக ஆள்களை நியமித்திருந்த நிலையில் அவன் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனையையும் உதய் விட்டுவிடவில்லை. முதலில் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்த சரத் தளிரின் வீட்டிற்கு வந்து சென்ற பின்னர் சேர்ந்திருந்தது சிவனேஷின் மருமகனும் உதய்யின் பள்ளிதோழியுமான டாக்டர் உமையாளின் கணவரின் மருத்துவமனை..!  அங்கே நிவியின் தோழியும் செவிலியராக பணியாற்றுவதால் விஷயம் தெரிந்ததும் சரத்தை கண்காணிக்கவும்    பேசுவதை கேட்பதற்கான ஒட்டுகேட்கும் கருவியையும் அடுத்த ஓரிரு நாளில் பொருத்துவது உதய்க்கு அத்தனை சிரமமாக இருந்துவிடவில்லை. அதுமட்டுமின்றி பாதிநேரம் சிகிச்சை , டெஸ்ட் , ஸ்கேன் என்ற பெயரில் அவனை அலைகழித்து இறுதியில் அவன் அனுமதிக்கபட்டிருந்த அறைக்கு நிவியின் தோழியை மாற்ற செய்திருந்தான்.   பகல் முழுக்க அவன் அறையை ஒட்டிய முன் அறையில் இருப்பவர் அவனை சந்திக்க வருபவர்களையும் அவர...

மனசெல்லாம் மழையே - 53

Image
  தன் உடற்பயிற்சி அறையில் இரு கைகளிலும் க்ளவுஸோடு இருபது கிலோ மதிப்பிலான பன்ச்சிங் பேக்( punching bag) முன்னே ஆர்ம்கட் பனியன் ஷார்ட்ஸ் சகிதம் நின்றிருந்த உதய் வியர்வை வடிய ஏறி இறங்கிய வேக மூச்சுக்களுடன் தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தான். “ தளிர் கிட்ட என்னடா பேசின... ?” என்று கோபமாக ராகவன் வந்து நிற்க அதை காதிலேயே வாங்காமல் அவன் கைகளும் கால்களும் ஒருவித ரிதத்தோடு இருந்தது... அதுவும் வழக்கத்திற்கு மாறான வேகத்தோடு! “ உன்கிட்ட தான்டா கேட்கிறேன்... வாய் இல்லாத பச்ச பிள்ளை கிட்ட ரொம்ப தான் துள்ளிட்டு இருக்க கேட்க யாரும் இல்லைன்னு நெனச்சியா.. ? அண்ணன் நான் இருக்கேன்டா” என்றான் குறையாத சீற்றத்தோடு. “ யாரை சொல்ற.. ?” என்றவனின் கைகள் வேகத்தை கூட்டினாலும் பார்வை என்னமோ ராகவன் மீது அழுத்தமாக படிந்திருந்தது.. “ வேற யாரு தளிரை தான் சொல்றேன். உன் தங்கச்சி மாதிரி இல்ல ரொம்ப அமைதியான , பாசமான , அறிவான பொண்ணுடா.. அந்த பொண்ணுக்கு அதிர்ந்து பேசகூட தெரியாது. யாரையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிற தளிர் அழற அளவுக்கு நீ என்ன சொன்ன... ?” என்றவனை ஒரு பார்வை பார்த்த உதய் மீண்டும் இருகைகளாலும...

வாழ்க்கைத்துணை - 29.2

Image
மகாவின் கேள்வியின் பின்னே இருந்த அவள் வேதனையை உணர்ந்ததில் அனைவரும் சட்டென பதில் சொல்ல முடியாமல் அவளை பார்த்திருக்க, “சரி குழந்தை பிறந்த போது ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு ஆனா அதுக்கு முன்னாடி கூட வராத மனுஷனுக்கு எப்படி நீங்க இவ்ளோ வக்காலத்து வாங்கறீங்கன்னு தான் எனக்கு புரியலை..”  “மகா மாப்பிள்ளை தன்னோட தப்பை உணர்ந்துட்டார்.. உனக்கு செய்த தப்பை எங்க கிட்ட ஒத்துக்கிட்டு மன்னிப்பும் கேட்டார். செய்த தப்பை ஒத்துக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? அதைவிட அதுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறது சாதாரணம் இல்லை…” “மாப்பிள்ளை எந்த ஈகோவும் இல்லாம எங்க எல்லார் கிட்டயுமே மன்னிப்பு கேட்டார். இன்னொரு முறை நீ இப்படி வீட்டுக்கு வருமளவு நடந்துக்க மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்திருக்கார். உன்னை இனி கண் கலங்காம பார்த்துப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கார்டி.. இன்னும் என்ன கோபம் உனக்கு?” என்றார் பாக்கியா. “மகாம்மா ஆம்பளைங்க அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்து மாமியார் வீட்டார் கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டாங்க ஆனா மாப்பிள்ளை எந்தளவு மனசு மாறி இருக்கார் என்பதுக்கு இதுவே பெரிய ஆதாரம். அவர் திருந்தி வந்திருக்கப்போ பழசை ...

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17