Posts

வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தீராத காதல் தொல்லையோ - 4.1

Image
மனைவியின் முக மாற்றத்தை கண்ட சைலேந்தர், “வேத் தன்னோட முடிவில் எவ்வளவு உறுதியா இருப்பான் என்று உனக்கு தெரியாதா வாகீ?!” என்று அவரை தேற்றினார். “தெரியும் இந்தர் ஆனா வாசு அண்ணா பேசின பேச்சுக்கு அவர் கிட்டயே மித்துவை வேண்டான்னு சொல்லிட்டு வந்த பிறகு எப்படி?”  “அப்போ நீ தைரியமா உன் தம்பிக்கு ஓகே சொல்லி இருக்க வேண்டியது தானே?!”  “அதுதான் முடியலைன்னு சொல்றேனே..” என்றதில் புன்னகையோடு “ஏன்?” என்றார். “என் பிள்ளையை பற்றி எனக்கு தான் தெரியும்! அவனோட ஆசை தான் என்னோட ஆசையும், இருந்தாலும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட கல்யாண பேச்சை எடுத்து பார்த்தேன் ஆனா பிடி கொடுக்கவே இல்ல.. அப்புறம் எப்படிங்க?”   “வேத் ரொம்ப கண்ணியமாவே தன்னோட விருப்பத்தை சொன்னான்.. இப்போவும் அவனோட விருப்பம் மித்துவா இருந்தா அது தப்பில்லையே வாகீ..” “நிச்சயமா ஆனா மித்துவோட பதில் இப்போ என்னவா இருக்கும்னு தெரியாம எப்படி? நாம இன்னொரு முறை பேசி பார்க்கலாமா?” “என்னன்னு பேசுவ?” என்றதற்கு அவரிடம் பதில் இல்லை.  “அப்போ உன் தம்பிக்கு முதல்லையே சொல்லிடு, சீலன் அனாவசியமா ஹன்சி மனசுல ஆசையை வளர்த்து அப்புறம் அது எல்லாருக்குமே ...

தீராத காதல் தொல்லையோ - 3.2

Image
“க்ருதி!!” என்ற வேதாந்தின் அழைப்பு அவள் உயிரை ஊடுருவி செல்ல தன்னையும் மீறி அவள் பார்வை மீண்டும் அவன் வசம் செல்ல, “கங்க்ராட்ஸ் க்ருதி!!” என்றான் வசீகரமாய். “தே.. தேங்க்ஸ்!!” என்று அவள் சொல்ல மென்மையாய் இமைகளை மூடி திறந்து புன்னகையோடு தலையசைத்து அங்கிருந்து கிளம்பினான் வேதாந்த் ஆரியன். வேத் கிளம்பவும் தான் இத்தனை நேரம் அவள் இழுத்து வைத்திருந்த மூச்சு ஆசுவாசமாக வெளிப்பட்டது.  நல்ல வேளை தனக்கு முன்பாக அவன் கிளம்பி விட்டான் ஒருவேளை அவள் கிளம்பாமல் இங்கேயே இருந்திருந்தால் அவளால் சாதாரணமாக எழுந்து அந்த இடத்தை விட்டு தடுமாற்றம் இல்லாமல் நடந்து சென்று இருக்க முடியுமா? என்று அவளுக்கே தெரியாது. அந்த வகையில் தன் மனம் அறிந்தார் போல எவ்வித சங்கடமும் கொடுக்காத அவன் செயல் மட்டுமல்ல பார்வை, பேச்சு அனைத்தும் அவளையும் அறியாமல் அன்றைய நாள் முழுக்க வேதாந்துடனான நினைவுகளை அசை போட வைத்தது.  “நிஜமாவே இது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கு ஸர்” என்றான் அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து வந்த தர்ஷன். “எது?” என்ற வேதாந்த் முகத்தில் வற்றாத புன்னகை. “உங்களுக்கு மோடி மஸ்தான் வேலையெல்லாம் தெரியுமா ஸர்” “என்ன மேன் உளறிட்...

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17