Posts

Showing posts from January, 2026

வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 6.1

Image
  மகாலட்சுமி பயந்தது போல் இல்லாமல் பைக்கை நிறுத்தி விட்டு திரும்பிய ரிஷி தன்னை எதிர்கொண்ட கதிரை அணைத்து விடுவித்து, “ரொம்ப நேரமாச்சா கதிர்?” என்றான்.  “இல்லை ரிஷி, அரை மணி நேரம் தான். அதுவும், வந்ததும் தட்டு வரிசை அடுக்கி மற்ற ஏற்பாடு பார்த்துட்டு இருந்தோம்..” என்றவனுக்கு தலையசைத்தவன், “நல்லா இருக்கீங்களா மாமா?” என்று தினகரனிடம் நலம் விசாரித்து அப்படியே அவர்களோடு பேசியபடி அங்கேயே நின்று விட்டான். அன்றைய விசேஷத்திற்காக வீட்டில் எளிமையான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஹாலில் கிழக்கு நோக்கி மனை போடப்பட்டு விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. சுமதியும் காயத்ரியும் கொண்டு வந்திருந்த சீர்வரிசைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர். மகாலட்சுமி நுழைந்த போது ஹாலில் உறவினர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். வாயை பொத்தியபடி வந்தவளை கண்டதும் பாக்கியம் எழுந்து கொள்ள “வா.. வாமிட், வந்துடறேன்” என்று பொதுவாக அனைவருக்கும் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். அண்ணனும் அப்பாவும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் அவள் தாயும் அண்ணிகளும் கண்டு கொள்வார்கள். அதனால் அவர்கள் வரும் முன்பாக ...

மனசெல்லாம் மழையே - 25

Image
  “ தப்பு நம்ம மேல..! இத்தனை நாளா என் மகளுக்கு நடக்கபோற நல்லது என்னை வேற எதையும் யோசிக்கவிடல.. எத்தனை சமாதானம் சொன்னாலும் நான் அண்ணன் குடும்பத்தை இந்த நிலையில நிறுத்தினது சரியாகிடாது..   என்னால ஏற்பட்ட களங்கத்தை நான் தான் துடைக்கணும்..” என்ற சீதாவிற்கு ' இந்த நொடியே உயிர் போய்விடாதா.. ?' என்று எண்ணுமளவு அத்தனை வேகமாக வலி ஊடுருவியது. நெஞ்சம் மரத்து போக கண்ணீரும் வற்றிய நிலையில் “நான் செய்த தப்புக்கு நான்தான் பிராயச்சித்தம் பண்ணும் தயவு செய்து   சொன்னதை செய்ங்க” என்று சீதா நெஞ்சை கல்லாக்கி கொண்டு சொல்ல இருமகள்களும் கண்ணீரோடு அவரை பார்த்தனர். “ செய்த தப்பை திருத்தி மன்னிப்பு கேட்க நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க தென்றல் தயவுசெய்து போய் தயாராகு.. நம்மால மாப்பிள்ளைக்கு இன்னொரு அவமானம் வேண்டாம்” என்று சொல்ல கரைந்த விழிகளோடு நின்றிருந்த தளிரின் உயிர்கூடு சீதாவின் வார்த்தைகளில் நொறுங்கி போனது. “ அம்மா ப்ளீஸ்ம்மா இது வேண்டாம் நான்.. எனக்கு..” என்று நெஞ்சம் விம்ம துடிக்கும் இதழ்களுடன் தாயை பார்த்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தை எழாதளவு நெஞ்சை முட்டி அழுத்திக்கொண்டு நின்ற...

மனசெல்லாம் மழையே - 24

Image
  “ ஸாரி அத்தை தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க இதை சொல்லாம விட்டது என்னோட தப்பு தான்” என்று கண்ணீரை துடைத்த தளிர் ஜெகதீஸ்வரியிடம் சொல்லிகொண்டிருக்கும் போதே...  "இத்தனை வருஷமா பணம் காசு , சொத்து எதுவும் வேணும்னு தேடி வராதப்பவே நினைச்சேன் எப்படிடா இப்பதானே தெரியுது.." என்று அருவெறுப்போடு சொன்னவரின் வார்த்தைகள்   தளிர் , தென்றலை சுக்குநூறாக சிதற செய்திருந்தது. " நாங்க எப்படி வாழறோம்னு நீங்க ஒன்னும் சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை..." என்று தென்றல் கண்ணீரோடு முன்னே வரவும் , " ஷ்ஷ் தப்பும் பண்ணிட்டு பேசவும் செய்வீங்களா.. ? உங்க லட்சணத்துக்கு நீங்க வாயே திறக்ககூடாது.." என்று அவர் தென்றலை கண்டித்தவரிடம்.. , " என்ன பேசுறீங்க நீங்க.. ? இவங்க உங்க தம்பி குடும்பம் அந்த நினைப்பும்   வார்த்தையில கொஞ்சம் கண்ணியமும் கவனமும் இருக்கட்டும்” என்றாள் சுஜி. " தம்பி குடும்பமா .. ? இன்னொரு முறை அதை சொல்லாதம்மா , இவங்க செய்திருக்க வேலையால என்னால வெளியே தலைகாட்ட முடியாது.. , இனி இந்த குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , உங்களை ஏமாத்தினதுக்கு ...

வாழ்க்கைத்துணை - 5

Image
ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக கணவனின் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த மகாலட்சுமியின் விரல்கள் கையில் இருந்த ஸ்ட்ராவை அழுத்திப் பிடிப்பதும் விடுவிப்பதுமாக இருந்தது. “என்ன யோசனை லச்சு? ஜூஸ் குடி” என்றவன் “என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே, என்ன?” என்றான். “பேசணும்..” என்று முணுமுணுத்து ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள். ‘அவள் தான் பேச வேண்டும்’ என்று சொன்னால், ஆனால் இப்போது ‘பேசலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம்.  இன்று பேச தயங்கினாலும் என்றேனும் ஒருநாள் இதை பற்றி பேசி தானே ஆக வேண்டும்?! அதுவும் அவள் படும் அவஸ்த்தைக்கு நிச்சயம் எக்காரணம் கொண்டும் இனியும் தள்ளிப்போட கூடாது.. என்ற உறுதி இருந்தாலும் கணவன் எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற கேள்வி அவளை சட்டென பேச விடவில்லை. பல கட்ட யோசனைகளில் ஆழ்ந்திருந்தவளுக்கு இப்போது என்றால் மாமியார் அருகில் இல்லாத நிலையில் தன் பேச்சை கணவன் சரியாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு என்ற எண்ணம் பிறக்க அவள் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. மெல்ல குரலை செருமி, “என்னங்க நான் பேப்பர் போடலாம்னு இருக்கேன்” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லி விட்டு அவன் முகத்தை பார்த்தாள...

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17