வாழ்க்கைத்துணை - 20.1

Image
ரிஷி மகாவை அழைத்துக்கொண்டு கேஃபிடேரியாவிற்கு செல்ல அங்கு பெரிதாக ஆட்கள் இல்லை.  ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ரிஷியோடு இணைந்து நடந்த  மகாலட்சுமியின் பார்வை கணவனின் மீதே!! திருமணமான இத்தனை மாதங்களில் புது மாப்பிள்ளைக்கே உண்டான கவனிப்பு மகாவின் சாப்பாடு என்று எடை கூடி இருந்தவன் இப்போது கூடிய எடையோடு சேர்த்து மேலும் சில கிலோக்கள் குறைந்து காணப்பட்டான்.  இந்தளவு இளைத்து போயிருப்பவன் நிச்சயம் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தான் இருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அதற்கு காரணம் தன்னையும் குழந்தைகளையும் பிரித்து இருப்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.  அப்படியே அவன் தன்னை தேடி இருந்தாலும் தனக்காக தேடி இருக்க மாட்டான் பத்திரத்திற்காக தான் தேடி இருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.  ‘ப்ச் அப்படி இருக்காது மகா, அவருக்கு எமோஷனல் சப்போர்ட் நீதான்! இப்போ இருக்கிற நெருக்கடியில ஆறுதலுக்காக கூட உன்னை தேடி இருக்கலாம். உன் புருஷனை பற்றி நீயே நல்லவிதமா நினைக்கலைன்னா எப்படி?’ என்று அவள் மனமே அவளை கடிந்தது.  அவளே சரியாக யோசிக்க நினைத்தாலும் இருவருக...

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்



இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்றிருந்த ரிஷி ஞாயிறு மதியம் போல தான் வீடு வந்து சேர்ந்தான். 


வழி நெடுக அவனுக்கு அழைத்த ஆசிரியர் சொன்ன செய்தி தான் அவன் மனதை ஆக்கிரமித்து இருக்க வீட்டிற்குள் நுழைந்ததும், “சிந்து எங்க ம்மா?” என்றான். 


“அவ இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலையே.. ஏன் வரதா கேட்கிற?”


“ஸ்கூலா? சண்டே அதுவுமா?” என்று நெற்றி சுருங்க இந்திராவை பார்த்தவன், “எத்தனை நாளா அவளுக்கு இப்படி ஞாயிறு கிழமைகளில் ஸ்கூல் இருக்கு?” என்றான். 


“அது எப்போவாவது ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க..”


“அதுதான் எப்போன்னு கேட்கிறேன். எனக்கு தெரிஞ்சு அவ இப்படி ஸ்பெஷல் கிளாஸ் போனது கிடையாதே.. சாயந்திரம் வரைக்கும் வைப்பாங்க அதுவும் அவளை அப்பா போய் கூட்டிட்டு வந்துடுவார் தானே?!”


“ஆமாப்பா ஆனா நீ இரண்டு முறை ஊருக்கு போயிருந்தியே அப்போ கிளாஸ் வச்சுருந்தாங்க.. முதல்முறை உங்கப்பா கல்யாணத்துக்கு போயிருந்தால அவ ஃபிரெண்ட் ஒருத்தி கூட கிளம்பி போயிட்டா.. அடுத்தமுறையும் அவளே வந்து கூட்டிட்டு போனா..”


“என்னது, நான் ஊருக்கு போயிருக்கும் போது மட்டுமா? அதுவும் ஃப்ரெண்ட் கூடவா? இதை ஏன் நீங்க என்கிட்டே சொல்லவே இல்லை..”


“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு வரதா, பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதற பசங்களுக்கு இப்படி ஸ்கூல்ல கிளாஸ் வைக்கிறது வழக்கம் தானே!”


“இருக்கட்டும். ஆனாலும் இதை நீங்க என்கிட்டே சொல்லி இருக்கனுமா இல்லையா? வயசு பொண்ண யார் கூடவும் தனியா அனுப்பிடுவீங்களா? சரி இன்னைக்கு யார் கூட போனா?”


“அதே பொண்ணு தான்பா வந்து அழைச்சுட்டு போனா? ஆமா எதுக்கு நீ இவ்ளோ கேள்வி கேட்கிற?”


“என்னம்மா ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கிற பொண்ணை தனியா எதுக்கு அனுப்புனீங்க ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா பெத்தவங்களுக்கு யார் பதில் சொல்றது?”


“வரதா அவ சின்ன குழந்தை. கூட்டிட்டு போக வந்த பொண்ணு இவளுக்கு ஃபிரெண்ட்..”


“இருக்கட்டுமே, முதல் முறை விடுங்க நம்ம கண்காணிப்புல இல்லாம அடுத்தடுத்து எதுக்கு தனியா அனுப்புனீங்க? அப்பாவோடு போக சொல்ல வேண்டியது தானே..”


“நீ பேசறது கொஞ்சமும் சரியில்லை. என் பேத்தி என்ன தப்பு பண்ணிட்டான்னு கண்காணிக்க சொல்ற? அவ என் மகளை மாதிரி…”


“நான் இல்லைன்னு சொல்லலை..” என்றவன் இதற்கு மேலும் அவருக்கு புரிய வைக்க முடியாது என்பதால், “சரி நான் கிளம்பறேன்..” என்று வந்ததும் வராததுமாக பைக் சாவியை எடுத்துகொண்டு கிளம்பிவிட்டான்.


அவர்கள் தெருவை கடந்ததுமே வண்டியை நிறுத்தி விட்டு முதலில் அவளின் ஆசிரியருக்கு அழைத்தவன் இன்றைய வகுப்பு பற்றி கேட்க அவரோ ஞாயிறுகளில் எப்போதுமே  யாருக்குமே வகுப்புகள் கிடையாது என்றார். 


கோபத்தோடு வண்டியை கிளப்பியவன் சிந்துவின் தோழி வீட்டிற்கு தான் சென்றான். அங்கே அந்த பெண் அவள் வீட்டில் தான் இருந்தாள். ஆனால் ரிஷி சிந்துவை பற்றி கேட்க அவள் முகம் மாறிப்போனது.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - டீசர்