வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தமிழ் நாவல் எழுத விரும்புவோருக்கான வழிகாட்டி

 ஒரு நல்ல நாவல் எழுத தொடங்குவது எப்படி? – தொடக்க எழுத்தாளர்களுக்கான வழிகாட்டி

தமிழில் நாவல் எழுத வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எங்கிருந்து தொடங்குவது, எப்படி கதையை அமைப்பது, வாசகர்களை ஈர்ப்பது எப்படி என்ற சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரை தொடக்க எழுத்தாளர்களுக்கு உதவும்.

1. நல்ல கதை யோசனை தேர்வு செய்யுங்கள்

ஒரு நாவலின் முதன்மை அதன் கதை. காதல், குடும்பம், த்ரில்லர், சமூக பிரச்சனை, உணர்ச்சி போன்ற எந்த வகை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் அது வாசகர்களின் மனதை தொட வேண்டும்.

2. கதாபாத்திரங்களை வலுவாக உருவாக்குங்கள்

நல்ல நாவலை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பது கதையைக் காட்டிலும் கதாபாத்திரங்களுக்காக தான்.
அவர்களின்:

  • பின்னணி

  • குணம்

  • இலக்கு

  • பலவீனம்

இவற்றை தெளிவாக அமைத்தால் கதை உயிர் பெறும்.

3. கதை அமைப்பை திட்டமிடுங்கள்

நாவல் எழுதும்போது மூன்று பகுதிகள் முக்கியம்:

  • தொடக்கம் – கதையை அறிமுகப்படுத்துதல்

  • நடுப்பு – சிக்கல்கள் மற்றும் உணர்ச்சி வளர்ச்சி

  • முடிவு – தீர்வு அல்லது திருப்பம்

இந்த அமைப்பு வாசகர்களை இறுதி வரை பிடித்திருக்கும்.

4. உணர்ச்சியை முக்கியமாக கொடுங்கள்

தமிழ் வாசகர்கள் உணர்ச்சி மிகுந்த கதைகளை விரும்புவார்கள்.
காதல், குடும்ப பாசம், தியாகம், வலி, நம்பிக்கை போன்ற உணர்ச்சிகளை கதைமொழியில் சேர்த்தால் வாசகர்கள் கதையுடன் இணைந்துவிடுவார்கள்.

5. தினமும் எழுதும் பழக்கம் வளர்த்துக் கொள்ளுங்கள்

ஒரு நல்ல எழுத்தாளர் ஒரே நாளில் உருவாகமாட்டார்.
தினமும் 500–1000 வார்த்தைகள் எழுதினால் சில மாதங்களில் ஒரு முழு நாவல் உருவாகும்.

முடிவாக

நாவல் எழுதுவது ஒரு பயணம். ஆரம்பத்தில் சிரமமாக தோன்றினாலும், தொடர்ந்து எழுதினால் உங்கள் சொந்த குரல் உருவாகும். முக்கியமானது — ஆரம்பிக்க வேண்டும்.

தமிழில் நல்ல கதைகள் உருவாக வேண்டும் என்றால் புதிய எழுத்தாளர்கள் முன்வர வேண்டும். நீங்கள் தொடங்கும் கதை ஒருநாள் பல வாசகர்களின் மனதில் இடம் பெறலாம்.

Comments

Main Pages