வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 61

 


தளிர் சரத்திடம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த உதயாதித்தனின் அகத்தில் பெருமகிழ்ச்சி ஊற்று..!

என்னதான் தன்னை அவள் வாழ்வில் இருந்து விலக சொல்லி பிடிவாதமாக இருப்பவளின் தன் மீதான நேசத்தை இத்தனை நாள்கள் அவள் தவிப்பில் உணர்ந்திருந்தாலும் இப்போது வாய்மொழியாக கேட்டதில் விழிகளில் பரவசம் வழிந்தது.

அதரங்களில் உறைந்த மலர்ச்சியோடு தன்னிடம் அளிக்கப்பட்டிருந்த கோப்பை பார்த்திருந்தவனின் முகமே அத்தனை பிரகாசித்து கொண்டிருந்தது.

தன் எதிரில் இருந்த டிசைனரிடம் குறிப்பிட்ட பக்கங்களை பைனலைஸ் செய்துவிட்டு துடிப்பும் துள்ளலுமாக புது கட்டிடத்தை சுற்றி வந்தவனை கண்டு “ஸார் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல..?” என்றான் அரவிந்த்.

மெல்லிய புன்னகையோடு தலையசைத்தவன் ஷோரூமின் முகப்பில் பொருத்தபட்டிருந்த கண்ணாடியை பார்த்தவாறு, “ஃபினிஷிங் பெர்ஃபெக்ட்டா இருக்கு... மற்ற இன்டீரியர் வொர்க்கான திங்க்ஸ் எல்லாமே வந்தாச்சு தானே..? ஏதாவது பெண்டிங் இருக்கா..?”

ஆமா ஸார் வுட் (wood)  நாளைக்கு நைட்க்குள்ள டெலிவரி கொடுக்கறேன் சொல்லியிருக்காங்க  அடுத்தநாள் காலையே கார்பெண்டர்ஸ் வந்து வொர்க் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.”

யார் ரிசீவ் பண்ண போறா..?”

ஸார் சேகர் வராங்க நானும் கூட இருப்பேன்..”

ஓகே..! இரண்டு நாளா கிளைமேட் கொஞ்சம் டல்லாவே இருக்கு மழை வந்தாலும் வரலாம் ஸோ ஜன்னலோரம் இல்லாம சேஃப்பா வைக்க சொல்லுங்க..” என்றவன் நாளை முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லவும் கவனமாக கேட்டுக்கொண்ட அரவிந்த் நகர கட்டிடத்தை விட்டு வெளியே வந்த உதய்யின் கண்ணில் பட்டது ஃபேன்சி ஸ்டோர்..

உடனே அங்கு சென்றவன் வளையல்களை பார்வையிட அவனுக்கு ராகவனிடமிருந்து அழைப்பு.

உதய் மட்டுமல்ல மருத்துவமனையில் அறைக்கு வெளியே காத்திருந்த ராகவனுக்கும் அவள் பேசியது துல்லியமாக கேட்டது. தளிரை கொண்டு வந்து வீட்டில் விட்ட மறுநொடியே மகிழ்ச்சியோடு உதய்க்கு அழைத்து “மச்சான் தளிர் பேசினதை கேட்டியா..?” என்றான்.

கேட்டேன்... கேட்டேன்.. அதுக்கு என்ன..?”

டேய் எவ்ளோ சந்தோஷமான விஷயம் ஏன்டா இப்படி பேசற..?”

ஏன்டா என்கிட்ட என்னை யாருன்னு கேட்டுட்டு எனக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லிட்டு கணக்கை கழிக்க சம்மதிச்சு டைம் கேட்டவ எவன் கிட்டயோ புருஷன்னு சொல்லுவா இதை நான் வேற எப்படி பேசணும்னு நீ எதிர்பார்க்கிற..?” என்று அடக்கப்பட்ட புன்னகையோடு சிலிர்த்து கொண்டான்.

யார்கிட்ட சொன்னா என்னடா..? இப்போ என் தங்கச்சி மனசு புரிஞ்சதா உனக்கு..?”

எனக்கு புரியறது இருக்கட்டும் உனக்கு அவ பேசினது முழுக்க புரிஞ்சதா..?”

“....”

நான் தான் அவ புருஷன் ஆனா நான் வேண்டாமாம்.. என்னடா அவ இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கா..? ஒருவேளை உன் தங்கச்சிக்கு கஜினி சூர்யா மாதிரி ஏதாவது மண்டையில அடிபட்டு இருக்குமோ..! கல்யாணத்துக்குள்ள அவளை சரிபண்ணி அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு மச்சான்” என்று உதட்டை கடித்துகொண்டு உதய் சிரிக்க,

ஆமா மச்சான் கூட்டிட்டு வரும் போது  உன்கிட்ட சொல்லகூடாதுன்னு சத்தியம் வாங்கிடுச்சுடா....”

என்ன சத்தியம்..?”

அதை நான் என் வாயால சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்..”

ப்பாஅஹ்! என்ன ஒரு பாசம்..!” என்று சிலிர்த்தவன், “என்ன என்னை புருஷன்னு சொன்னதை சொல்லகூடாதுன்னு சொன்னாளா..?”

அதே... அதேதான் மச்சான்” என்றதில் உதய்யின் சிரிப்பு இரட்டிப்பானது.

என்னடா சிரிக்கிற..?”

இல்ல மச்சான் உன் தங்கச்சிக்கு மட்டுமில்ல நீயும்  நல்ல டாக்டரை பாரு” என்ற உதய் அட்டகாசமாக சிரிக்க,

டேய் என்ன நக்கலா..? எனக்கு என்னமோ உனக்கு பிரச்சனை வந்துடகூடாதுன்னு சரத்கிட்ட தளிர் அப்படி சொல்லி இருக்கும்னு தோணுது அதுக்கு கலாய்ப்பியாடா...?” என்றிட கட்டுபடுத்த முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான் உதய்.

ப்ச் போதும் நிறுத்துடா...! அதுதான் தளிர் மனசுல இருக்கிறது தெரிஞ்சுடுச்சே இப்பவாவது வீட்டுக்கு வாடா... தளிர் நீ எப்போ வருவன்னு என்கிட்டே நாலு நாளா ஜாடை மாடையா கேட்டுட்டு இருக்கு, நான்தான் வேலை அதிகம் சீக்கிரம் வருவான்னு சொல்லியிருக்கேன்” என்றிட மறுபுறம் மௌனம்.

கேட்குதாடா எப்போ வீட்டுக்கு வர சொல்லு..?”

மச்சான் இப்போ நான் அங்க வந்தா உன் தங்கச்சி உன் தங்கச்சியா இருக்கமாட்டா பரவாயில்லையா..?” என்று உதய் தீவிரக்குரலில் கேட்க,

அடப்பாவி!” என்ற ராகவனின் பதிலில் உதய்யின் அதரங்களோடு சேர்த்து கண்களும் புன்னகைத்தது.

என்னடா பேசற..?”

என்ன பேசிட்டேன்..! சும்மா இருந்த என்னை பேச வச்சு கெடுக்க பார்த்தது நீ..?”

ஏதே! உன்னை நான் கெடுத்தேனா..?”

இல்லையா பின்னே..! உன் தங்கச்சியை பார்க்க வர சொன்னது நீதானே..!”

டேய் என் வாயை கிளறாத..! தளிர் உன்னை பார்க்க ஆசைப்படுது நீயும் அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணியேன்னு பாவம் பார்த்தா ரொம்ப தான் ஓவரா போற..”

நீ ஒன்னும் எனக்கு பாவம் பார்க்க தேவையில்ல, நான் கிளம்பிட்டேன் நீ ஷோரூம்க்கு வந்துடு அவளுக்கு வளையல் வாங்கிட்டு வரேன் கொடுத்துடுவ...” என்று பேச்சை முடித்துக்கொண்டு வேலூர்க்கு கிளம்பினான்.

*********************

வாசலையே வெறித்தவாறு இருந்த சரத்தின் செவியில் தளிரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு கொண்டிருந்ததில் நொடிக்கு நொடி அவன் முகம் விகாரமாகிக்கொண்டே போனது.

ஒருகட்டத்தில் ‘அவர் தான் என் புருஷன்’ என்ற வார்த்தை அவனை முழுதாக ஆக்கிரமித்து பித்து பிடிக்க செய்ய கிட்டத்தட்ட தலையே வெடித்துவிடும் நிலை தான் சரத்தினது..!

தளிர் கிளம்பவும் மருத்துவருக்கு தகவல் அனுப்பிய செவிலியர் உள்ளே நுழைய அங்கே தளிர் முன் மண்டியிட்டிருந்த அதே இடத்தில் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிய உதடு வீங்கி வலியோடு தலையை பிடித்துக்கொண்டு “ஆஆஆஆஅ” என்று உள்ளடக்கிய குரலில் கத்திக்கொண்டிருந்தான் சரத்.

அவனை எழுப்பி மெத்தையில் அமர்த்திய செவிலியர் அவனுக்கு முதலுதவி அளிக்க தொடங்கவும், “என்னை இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணுங்க” என்று வலியோடு வாயை முழுதாக திறக்கமுடியாமல் மெல்ல முணுமுணுக்க அவன் ஒவ்வொரு உதட்டசைவிற்கும் ரத்தம் நிற்காமல் வழிந்தது.

ஸார் பேசாதீங்க..! டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க நீங்க பேசினா ப்ளட் இன்னும் லாஸாகும்..” என்றிட சிவந்த விழிகளோடு அமர்ந்திருந்தவனின் முன் வந்து “எப்படி அடிபட்டது மிஸ்டர் சரத்..?” என்றவாறே அவன் முகத்தை நிமிர்த்தியிருந்தார் மருத்துவர்.

என்.. என்னை ஸ்ஸ்ஆஆ டிஸ்...சா...ர்ஜ்” என்று அவன் கஷ்டப்பட்டு வாயை திறக்க,

காம் டவுன் சரத்! முதல்ல காயத்தை பார்ப்போம்” என்ற உமா அமைதியாக அவன் முகத்தை ஆராய அங்கே தளிர் சலைன் பாட்டிலை எறிந்ததில் உதடு கிழிந்து வீங்கி கன்றி போயிருந்தது.

‘மூக்கு எலும்பிலும் ப்ராக்ச்சர் ஆகியிருக்க வாய்ப்பு இருக்க கூடும்’ என்பதை அறிந்தவர் உடனே அவன் உதட்டில் தையலிட்டு, மூக்கை ஸ்கேன் செய்த பின்னர் ஆபரேஷன் தியேட்டரையும் தயார் செய்ய சொல்லி சென்று விட்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில் கிழிந்திருந்த மேலுதட்டிலும் கீழுதட்டிலும் தையல் போடப்பட்டு ஸ்கேன் செய்ததில் அவன் மூக்கு எலும்பு உடைந்திருப்பதை உறுதி செய்து அதற்கான அறுவை சிகிச்சையை உடனே செய்து மூக்கில் பிளாஸ்டரோடு அவனை அறைக்கு அழைத்து வந்திருந்தனர்.

பேசினால் வலி அதிகரித்து தையல் விட்டுபோக வாய்ப்பு உண்டு... குறைந்தது முப்பது மணி நேரத்திற்கு வாயசைக்க கூடாது” என்றவர் அவனுக்கு வலி குறைப்பதற்கான மருந்தை செலுத்தி விட்டு சென்றார்.

அவன் உள்ளம் எரிமலையாக வெடித்து சிதறிக்கொண்டிருக்க மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவன் விழித்த போது நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது.

தன் அருகே விழித்துக்கிடந்த  குமாரிடம் பேப்பர் பேனா கொண்டு வருமாறு சைகை செய்திருந்தான்.

அவன் எழுதுவதற்கு வசதியாக சிறு இரும்பு மேஜையை அவன் முன் வைக்க சரத் குறையாத ஆவேசத்தோடு பேப்பரில் எழுத தொடங்கினான்.

அதை படித்து பார்த்த குமார் திகைத்து போனான்.

பின்னே தளிர் தன்னிடம் சேருவதற்கு தடையாக இருக்கும் உதய்யை சாகடிப்பதற்கு  முன் எப்படியாவது கதற வைக்க வேண்டும் என்று வெறி கொண்டவன் இரவோடு இரவாக ஆள்களை அனுப்பி அவன் ஷோரூம், Preowned கார்களை விற்பனை செய்யும் இடங்களுக்கும், அம்பலவாணனின் பள்ளி, தொழிற்சாலை மற்றும் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடம் என்று அனைத்து இடங்களையும் தீயிட்டு கொளுத்த ரவுடிகளை ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தான்.’

அதிர்ந்து நின்ற குமாரை பார்த்தவாறே மெல்ல எழுந்து சென்று ஜன்னலின் அருகே நிற்க, “ஸார் ஏதோ நீங்களே ஆக்சிடென்ட் பண்ணிட்டு தப்பிச்சுடலாம் சொன்னதால தான் நான் ரிஸ்க் எடுத்து லாரி பேசி கொடுத்தேன் ஆனா உதய் ஸார் அவங்களும் பணபலம், ஆள்பலம்னு பெரிய ஆளுங்க தான்...  நிச்சயம் இப்படி பட்டவர்த்தனமா காரை கொளுத்தி, ஸ்கூல சேதாரமாக்கினா நாளைக்கு போலீஸ் சும்மா விடாது எதுக்கும் யோசிங்க” என்றதும் பேப்பரை பிடுங்கியவன்,

இந்த வேலையை கச்சிதமா செய்து முடிச்சா ஏற்கனவே சொன்ன மாதிரி அப்பார்ட்மென்ட் மட்டுமில்ல ஈஸிஆர்ல உனக்கு பங்களாவே கிடைக்கும்” என்றதில் உற்சாகமானவன் உள்ளே நர்ஸ் வரவும் வெளியே சென்று தன் தம்பி மூலம் அறிமுகமாகி இருந்த ரவுடி கும்பலை அழைத்து பேசிவிட்டு வந்தவன் மீண்டும் ஜன்னலருகே நின்றிருந்த சரத்திடம் சென்று,

எல்லாம் சரி ஸார் ஆனா இப்போ எல்லா இடத்துலயும் சிசிடிவி கேமரா இருக்கிறதால மாட்டிக்கிட்டா என்ன செய்யன்னு கேட்கிறாங்க..? அதோட ஆள்களும் காவலுக்கு இருப்பாங்க அவங்களை என்ன செய்ய..?”

நான் சொன்னது நடக்கணும் தடுக்க எவன் வந்தாலும் தயங்காம அவங்களையும் சேர்த்து கொளுத்துங்க.., ஆனா என் பெயர் வெளியே வரக்கூடாது...

ஸார் இத்தனை கொலையா..? வேண்டாம் ஸார்...”

குமார் நீயா பண்ண போறா ரவுடிங்க தானே பண்ண போறாங்க அவங்களுக்கு ஒரு ஆளை போட இரண்டு லட்சம் வரை தரேன்னு சொல்லு எத்தனை கொலையும் பண்ணுவான்”

எல்லாமே மெயின் பிளேஸ்ல இருக்கிற இடங்கள்... ஒருவேளை மாட்டிக்கிட்டா என்ன பண்ண..?”

இது தொழில் போட்டியால, இல்ல முன்பகையால நடந்ததுன்னு சொல்லி ரவுடிகளை வேற யார் மேலயாவது பழியை போட சொல்லு...” என்று  எழுதி கொடுத்தான்.

ரிஸ்க் ஜாஸ்திங்கிறதால அமவுன்ட்டும் டபுளா கேட்கிறாங்க ஸார்”

ஒரு இடத்தை கொளுத்த பத்து லட்சம் கூட கொடுக்கறேன் சொல்லு ஆனா அவன் நிம்மதியா இருக்ககூடாது.. போலீஸ் பிடிச்சுட்டு போய் அடிச்சு விசாரிச்சாலும் என் பெயர் வெளியே வரக்கூடாது அதுக்கும் தனியா ஒவ்வொருத்தனுக்கும் பேமென்ட் கொடுக்கறேன்”

நிஜமாவா ஸார்...”

ஆமா! அவன்கிட்ட இந்த பணமும், பலமும் இருக்கிறதால தானே தளிர் அவனை புருஷன்னு சொன்னா, என்னைவிட அதிகமா அவனுக்கு வலிக்கணும்...”

நான் அவனையே இல்லாம ஆக்கின பிறகு அவளை தேடி என்னை வரக்கூடாதுன்னு சொன்ன தளிர் என்னை தேடி வந்து தானே ஆகணும்...” என்று பேச முடியாமல் எழுதி கொடுத்தவனின் முகத்தில் அத்தனை வன்மம்.

*********************

ராகவனிடம் வளையலை கொடுத்து, “உன் தங்கச்சியை மறக்காம இதையும் கணக்குல எழுதிக்க சொல்லு” என்றான்.

இதுக்கு நீ வாங்கி கொடுக்காமலே இருந்திருக்கலாம்டா..” என்றதில் இருவர் முகத்திலும் புன்னகை.

சரி மச்சான் தளிர் பேசின பேச்சுக்கு சரத் வேற எதுவும் ப்ளான் பண்ணலையா..?”

அதுதான் மொத்தமா என்னை க்ளோஸ் பண்ண ப்ளான் பண்ணிட்டானே..!”

அப்படி சொல்ல முடியாதுடா... தளிர் புருஷன்னு சொன்னதுல அவன் கோபமெல்லாம் முன்னவிட அதிகமா இருக்கும்.. உன்னை ஏதாவது செய்ய நினைப்பான்டா எதுவுமே சொல்லலையா..?”

சொல்றதுக்கு வாய் வேணும் மச்சான்! அதுதான் மூக்கோட சேர்த்து உன் தங்கச்சி வாயையும் உடைச்சு விட்டுட்டாளே..! இப்போ அவனுக்கு மூக்கு எலும்பு உடைந்து அதற்கான சர்ஜரியும் கிழிந்து போன வாயை தச்சும் விட்டிருக்காங்க...”

ஆனா இனி நாம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்டா..” என்றதை ஆமோதித்த உதய்,

கண்டிப்பா! சரி இனி நீ பார்த்துக்கோ எனக்கு ஒருவாரமா சரியான தூக்கமில்லைடா, நைட் வேற ப்ராக்டீஸ் இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா தான் அடுத்து ஃபோகஸ் பண்ண முடியும்”

என்ன ப்ராக்டீஸ்..?” என்று கேட்கவும் இரவில் தான் எடுத்துக்கொண்டிருக்கும் பயிற்சி குறித்து விளக்கினான்.

பின்னே சரத்தின் ஆள்கள் பகல் முழுக்க உதய்யை தொடர்ந்து கண்காணிப்பதால் ஓடும் காரிலிருந்து லாவகமாக குதிப்பதற்கு ருத்ரவேலன் தன் தோழனான காவல்துறை பயிற்சியாளரை நியமித்து உதய்க்கு இரவு நேரத்தில் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தான். 

கை கால் முட்டிகளுக்கு உரிய knee, thigh, elbowcap எனப்படும்  பாதுகாப்பு கவசத்தோடு மிதமான வேகத்தில் செல்லும் காரில் இருந்து மெத்தை மீது குதிப்பதற்கு பயிற்சி எடுத்தவன் பின்னர் சற்று அதிக வேகத்தில் இருந்து குதிக்கவும் கற்றுக்கொண்டான்.

நேரே வீட்டிற்கு சென்றவன் உணவை மறுத்துவிட்டு சோர்வோடு தன் படுக்கையில் விழ தளிரின் அழைப்பு.

கணக்கை முடிக்க மட்டுமே உன்னை கூப்பிட சொன்னதா நியாபகம்... எப்போ வச்சுக்கலாம்” என்று கேட்க மறுபுறம் அமைதி.

காதுல விழுதாடி...?”

உதய் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..”

ஓஓஓ....”

அப்போதான் நான் சொல்றது உங்களுக்கு புரியும்..”

கோ அஹெட்” என்றதும் குரலை செருமியவள்,

ப்ளீஸ் உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது..”

ஓஓஹோ...”

உதய் நாம ரெண்டு பேரோட ஒபீனியன்ஸ்... இட்.. இட் ஆக்சுவலி ஹார்ட் டூ பீ டுகெதர்.. யூ க்நொவ் ஐ ரியலி பிலீவ்..!”

அப்புறம்..” என்றவனுக்கு அதற்கு மேல் பேசினால் நிச்சயம் தூக்கம் பறிபோகும் என்பது புரிந்து போனது.

ப்ச் உங்களுக்கு எப்படி புரியவைக்கிறது’ என்ற தளிர் அணில் பற்றிய கதையை ஆரம்பிக்கவும் ஃபோனை மியூட்டில் போட்டுவிட்டு ஏசியை அதிகரித்தவன் விளக்கை அணைத்து கண்களை மூடிக்கொள்ள உறக்கம் அவனை சுகமாக தழுவியது.

பதினைந்து நிமிடங்களாக அவனுக்கு புரிய வைத்துவிடும் வேகத்தோடு கதையை சொல்லி முடித்து தளிர்  இப்போ புரியுதா நான் ஏன் சொல்றேன்னு..?’ என்று கேட்க மறுபுறம் பதிலில்லை...

அடுத்த பத்து நிமிடங்களுக்கு உதய் பதில் சொல்லாமல் போனாலும் அதை பொருட்படுத்தாமல் சொல்ல வந்ததை சொல்லி முடித்த பின்பே தளிர் அழைப்பை துண்டிக்க’ இங்கே உதய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

Comments

Main Pages