வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 66

 


தளிரின் குடும்பத்தை  கண்ட மறுநொடியே பாய்ந்து சென்று, “எங்கடி வந்தீங்க..?” என்று ஆக்ரோஷமாக கேட்டார் ராஜி.

அத்தை அவருக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்று தளிர் நிற்காது வழிந்த கண்ணீரோடு கேட்டதும் தான் தாமதம், “யாருக்கு யாருடி அத்தை..?” என்று தளிரை ஓங்கி அறைந்தார் ராஜி.

இதை எதிர்பாராத மூவருமே அதிர்ந்து நிற்க, “எதுக்கு எங்கக்காவை அடிச்சீங்க..?” என்று முதலில் சுதாரித்திருந்தாள் தென்றல்.

எதுக்கு அடிச்சேனா..? ஏன்டி உன் அக்கா சமார்த்தியமா உண்மையை மறைச்சு, மறந்துட்டேன்னு கதை கட்டிவிட்டு ஊரார் முன்னாடி எங்க குடும்பத்தை அடிச்ச அடியை விட இது ஒன்னும் அதிகமில்லை, அவ செய்த காரியத்துக்கு ஒரு அடியோட விட்டேன்னு சந்தோஷப்படுடி.. ஆனா இன்னொருமுறை உங்கக்கா லட்சணத்துக்கு அத்தை சொத்தைன்னு சொந்தம் கொண்டாடினா நடக்கிறதே வேற...” என்று கடுமையான குரலில் எச்சரித்தார்.

இதோ பாருங்க எங்களுக்கு ஒன்னும் உங்களை பல் சொத்தை, தேங்காய் பத்தைன்னு கூப்பிட ஆசை கிடையாது... நீங்க என்ன எங்கப்பாவோட பிறந்தவங்களா இல்லை எங்க ...” என்ற தென்றல் அப்போதுதான் மருத்துவமனையில் இருந்த சிலரின் பார்வை அவர்கள் மீது படிவதை கண்டு, “அக்கா நீ வாக்கா  இவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சு..?” என்று தளிரின் கையை பிடித்துக்கொண்டு முன்னேறினாள்.

ஏய் எங்கடி போறீங்க..? நில்லுங்க” என்ற ராஜி அவர்கள் முன்னே நிற்கவும்,

உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று திமிராகவே சொன்ன தென்றலிடம் “தென்றல் இதென்ன பேச்சு? கொஞ்சம் அமைதியா இரு, அவங்க இருக்கிற மனநிலைக்கு கோபப்படலைன்னா தான் ஆச்சர்யம்! ஆதங்கத்துல பேசினா கூட பேசுவியா..? இப்போ எனக்கு அவரை பார்க்கணும் தயவுசெய்து நீ பேசி எதையும் கெடுத்துடாத” என்றவள் குரல் அத்தனை ரணமாய் ஒலித்தது.

ஏய்! நீ யாரையும் பார்க்க முடியாது... கிளம்புடி”

இதொபாருங்க உங்களுக்கு என்மேல கோபமிருந்தா இன்னும் நாலு அடி கூட சேர்த்து அடிச்சுக்கோங்க ஆனா எனக்கு அவரை ஒரே ஒருமுறை பார்க்கணும் ப்ளீஸ் தடுக்காதீங்க”

ஏய் உன்னை ஒருமுறை அடிச்சதுக்கே என் கையை நல்லா சானிடைசர் போட்டு கழுவனும்டி இதுல நாலு அடியா..? ச்சீ உன்னை தொட்டா கூட பாவம் என் கையோட சுத்திக்கும்” என்று அருவெருப்பாய் பார்க்க தென்றலின் பொறுமை எல்லை கடந்தது.

ராஜி முன் சுட்டுவிரலை நீட்டி, “உங்களுக்கு இவ்ளோதான் மரியாதை இன்னொரு வார்த்தை என் அக்காவை பேசனீங்க மரியாதை கெட்டுடும்” என்ற தென்றலின் கையை கீழே இறக்கிய தளிர்,

வாயை மூடுடி! இப்போ அவங்க இருக்கிற நிலைமைக்கு யார் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காம போனாலும் நான் தான் காரணம்..! அதை மறந்துட்டு பேசாத... அதுவும் அவரோட நிலை..மைக்கு நா.. நா..ன்..” என்றவளின் வார்த்தை பாதியிலேயே உடைந்து சிதறியது.

அடேயப்பா..! ஏதோ இதாவது உனக்கு புரிஞ்சிருக்கே! ரொம்ப நல்லது இப்படியே நடையை கட்டுடி” என்ற ராஜியை தென்றல் முறைத்து நிற்க.,

எதுக்கு சீதா இங்க வந்தீங்க..? உங்களால நாங்க பட்ட அவமானம் போதாதா..? எப்படி இன்னுமும் தேடி வந்து எங்க நிம்மதியை கெடுக்க முடியுது..?” என்றார் ஜெகா குறையாத வேதனையோடு.

இல்லைங்க மாப்பிள்... உதய் தம்பி இப்போ எப்படி இருக்காரு..? அவரை பார்த்துட்டு போ...” என்று அவர் முடிக்கும் முன்னமே,

ஓ! என் புள்ள உயிரோட இருக்கானா செத்துடானான்னு பார்க்க வந்தீங்களா..?”

சம்பந்தியம்மா என்ன பேசறீங்க..?” என்று பதறிபோனார் சீதா.

சம்மந்தியா..?” என்று ராஜி சீறவும்.,

மேம் ப்ளீஸ் ஏன் இப்படி பேசறீங்க..? எனக்கு உங்களோட நிலைமை புரியுது தைரியமா இருங்க.. நிச்சயம் அவருக்கு ஒன்னுமாகாது” என்று தாயாக ஜெகாவின் வேதனையை முன்னிறுத்தி தளிர் வெகு நிதானமாக அச்சூழலை கையாண்டாள்.

ஆனால்  ‘ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்’ என்பதால் அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் குறை கண்டுபிடித்தவர்,

என்னது ஒன்னுமாகாதா..? ஏன்டி பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட பார்க்கறியா..? தெரியாம தான் கேட்கிறேன் உன்னை கட்டிக்க நினைச்ச பாவத்துக்கு என் பையனுக்கு இதுக்கு மேல என்னவாகனும்னு நீ எதிர்பார்க்கிற..? காலையில இருந்து எங்க ஸ்கூல், கம்பனின்னு அடிமேல அடி வாங்கி இப்போ நூலிழையில எங்க பையனையே பறிகொடுத்து இருப்போம்... எல்லாத்துக்கும் நீயும் உன் புருஷனும் மட்டுமே காரணம்..”  என்றதில் முற்றிலுமாக அதிர்ந்து போனாள் தளிர்.

வாயை மூடுங்க அந்த சைக்கோவை எங்கக்கா புருஷன்னு இன்னொரு முறை சொன்னீங்க நடக்கறதே வேற..”

ஏன்? ஏன் சொல்லகூடாது? அவன் தானே இவளுக்கு தாலி கட்டின புருஷன் அதை மறைச்சு எங்க புள்ளையை கட்டிக்க பார்த்ததால தானே இவ்வளவு பிரச்னையும்... எங்க இல்லைன்னு சொல்லு பார்ப்போம்” என்று சீற,

உண்மை தெரியாம இஷ்டத்துக்கு பேசாதீங்க எங்க அக்கா அங்கேயே என்ன நடந்ததுன்னு தெளிவா  சொல்லிட்டாங்க.. அதுக்கு அப்புறமும் இந்த மாதிரி அபாண்டமா பேசாதீங்க அவனுக்கும் என் அக்காக்கும் சம்பந்தம் இல்லை..”

அப்படின்னு  நீங்க தான்டி சொல்லிட்டு இருக்கணும்.. ஆனா ஊருல கேட்டு பாருங்க உங்கக்கா சங்கதி என்னன்னு தெரியும்..! ச்சை பெண்ணை கண்டிச்சு வளர்க்க தெரியாம இஷ்டத்துக்கு திரிய விட்டுட்டு வெட்கமே இல்லாம இங்க வந்து நிற்க எப்படி சீதா முடியுது உன்னால...?”

“.....”

பொண்ணுங்களை கட்டுபாடில்லாம நீ வளர்த்து வச்சதோட விளைவு இன்னைக்கு என் பையன் உயிரே  போயிருக்கும்.. போதும்மா! போதும்  உங்க குடும்பத்தால நாங்க அளவுக்கு அதிகமாவே பட்டுட்டோம்..  நீ வேதம் ஊதுன வரை போதும் கிளம்பு இங்கிருந்து” என்றார் விடாப்பிடியாக.

ப்ளீஸ் மேம் எனக்கு உங்க ஆதங்கம் புரியுது... இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டோம் ஆனா இந்த ஒரே ஒருமுறை பார்த்துட்டு போயிடுறோம் நான் உங்களை வேற எதுவும் கேட்கலை” என்று தளிர் கண்ணீரோடு மன்றாட அதெல்லாம் ஜெகா காதில் விழவே இல்லை.

நீ யார்டி என் புள்ளைக்கு! இவ்ளோ உரிமையா பார்க்கணும்னு சொல்றதுக்கு..?” என்று கேட்க பதிலின்றி நின்ற தளிரின் செவியில் அன்று அவள் உதய்யிடம் கேட்ட ‘எனக்கு நீங்க யார்..?’  என்ற கேள்வியே ரீங்காரமிட அதில் எழுந்த வலியால் கசந்த புன்னகையோடு ஜெகாவை பார்த்தாள்.

 “யார் செய்த புண்ணியமோ இவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து கடவுள் என் பையனை காப்பாத்தி கொடுத்திருக்கார் அது உனக்கு பொறுக்கலையா..?” என்று ஆதங்கத்தோடு கேட்க ஆங்காங்கே இருந்த மக்கள் ஒன்று கூடிவிட்டனர்.

இதோ பாருங்கடி இங்கிருந்து ஒரு அடி நீங்க உள்ள எடுத்து வச்சாலும் மரியாதை கெட்டு போயிடும் போயிடுங்க இங்கிருந்து...” என்று கேட்டின் புறமாக கையை நீட்டினார் ராஜி.

ஆனால் அதை காதிலேயே வாங்காத தளிர் தன் போக்கில் உதய்யை பார்த்துவிடும் தீர்மானத்தோடு பிடிவாதமாக நடக்க தொடங்கி விட்டாள்.

ஏய்! ஏய் நில்லுடி! நீ போக கூடாதுன்னா போக கூடாது”

ம்மா அவரை ஒரே ஒருமுறை பார்த்துட்டு போயிடுறேன் அவர்கிட்ட பேசக்கூட மாட்டேன்... என்னை நம்புங்க ப்ளீஸ்” என்று தளிர் ராஜி முன்னே கைகூப்ப அவரோ கொஞ்சமும் இலகுவதாகவே இல்லை.

எப்போ உங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சோமோ அப்பவே எங்க குடும்பத்தை சனி பிடிச்சுடுச்சு... ஏதோ ஆண்டவனா இந்த கல்யாணத்தை நிறுத்தி பிடிச்ச சனியை விலக்கி விட்டுட்டாருன்னு நினைச்சா இப்பவும் ஏன்டி அட்டைபூச்சி மாதிரி எங்க பிள்ளையை விடாம பிடிச்சு ரத்தம் குடிச்சிட்டு இருக்கீங்க..? இன்னும் உங்களுக்கு என்னதான் வேணும்..?”

சம்மந்தியம்மா நாங்களே இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கலை... எங்களை மன்னிச்சுடுங்க இதை தவிர வேற எனக்கு கேட்க தெரியலை..” என்று சீதா கண்ணீரோடு கெஞ்சினார்.

ஏன்டி நீ மன்னிப்பு கேட்டுட்டா நாங்க இழந்தது எதுவும் இல்லைன்னு ஆகிடுமா..? உன் பொண்ணை கட்ட நினைச்ச பாவத்துக்கு ஊரார் முன்னாடி அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, குடும்ப கௌரவம் போய், கோடி கணக்குல நஷ்டப்பட்டு கடைசியில என் புள்ளையையும் படுக்க வச்ச பிறகும் இன்னும் யாரை முழுங்க இங்க வந்திருக்கா...?” என்று கேட்க அவர்களிடம் பதிலில்லை.

ப்ளீஸ் இப்படி பேசாதீங்க அவருக்கு எதுவும் ஆகாது..”

வாயை மூடுடி! உன்னால என் மாமா, அத்தை, பேத்தின்னு எல்லாருமே எமனை பார்த்துட்டு வந்துட்டாங்க அது போதலையா ..? எப்படி ஓடி ஆடி பம்பரமா சுத்திட்டு இருந்த என் மகனும் சாவை தொட்டுட்டு வந்துட்டான்.. உன் காத்து பட்ட கூட பாவம் முதல்ல இங்கிருந்து கிளம்புடி” என்று ஜெகா விடாப்பிடியாக நிற்க அங்கே வந்து சேர்ந்தனர் நிவியும் சுஜியும்.

கூட்டத்தை விலக்கி கொண்டு வந்தவர்களுக்கு மூவரின் கண்ணீர் சுமந்த முகமே சூழலை விளக்கிட உடனே, “ம்மா என்னம்மா பண்றீங்க? எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசிக்கலாம், இப்படி எல்லார் எதிரேயும் வேண்டாம் வாங்க..”

நாம இழக்க இன்னும் என்ன நிவி பாக்கி இருக்கு..? இதோ இவளால போகாத மானமா இப்ப நாங்க பேசறதால தனியா போயிடபோகுது..? விடு பார்க்கிறவங்க பார்த்துட்டு போகட்டும் இனி மறைக்க எதுவும் இல்லை ஆனா இவ என் பிள்ளையை பார்க்ககூடாது” என்று உறுதியாக நின்றுவிட்டனர் இருவரும்.

தளிர் நீயாவது புரிஞ்சுக்கோ இங்க சூழல் சரியில்ல இன்னொரு நாள் உதய்யை பார்ப்பீங்க” என்ற சுஜியை மெளனமாக கட்டிக்கொண்ட தளிரின் கண்ணீர் வரைமுறை இன்றி வழிந்தது.

அழுகையினூடே “ப்ளீஸ் அண்..ணி எனக்கு அவரை நேர்ல பார்க்கணும் நியூஸ்ல பார்த்திருந்தாலும் என... எனக்கு ஒ..ரே ஒருமுறை அவர் நிஜ..மா இருக்கிறதை தொட்டு ஃபீல் பண்ணனும்.. என்னை நீங்களாவது  புரிஞ்சுக்கோங்க எனக்கு வேற எதுவுமே வேண்டாம்...”  என்று குழந்தையாக மிழற்ற அவள் முதுகை நீவி சுஜி அணைத்துக்கொள்ள..,

என்னது என் புள்ளையை தொட்டு பார்க்கனுமா..? அடி செருப்பால! உன் மூச்சு காத்து பட்டாலே என் புள்ளைக்கு ஆகாதுன்னு சொல்றேன்.. எங்க என்னை மீறி கை வை பார்க்கலாம்”  என்று காளியாகவே அவதரித்துவிட்டார் ராஜி.

ராஜிம்மா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க”  என்று சுஜி அதட்டல் போட,

ம்மா இந்த ஒரே ஒருமுறை அண்ணியை விடுங்க”  என்று ஜெகாவிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள் நிவி.

வாயை மூடுடி!”  என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சுஜி தளிரை அழைத்து செல்ல அவளும் வேகமாக நடக்க தொடங்கிவிட்டாள்.

எங்கடி போற..? என் குடும்பத்தை நிர்மூலமாக்காம விட மாட்டியா..?”  என்று தளிர் கையை பிடித்து தடுத்த ஜெகா அவள் கன்னத்தில் அறைய போகவும் சடுதியில் அதை தடுத்து பிடித்திருந்தாள் தளிர்.

எனக்கு அவரை பார்க்கணும் பார்க்காம இங்கிருந்து போக மாட்டேன்.. இப்போ என்ன உங்களுக்கு என்னை அடிக்கணும் திட்டனும் அதுதானே...! நான் அவரை பார்த்துட்டு வந்த பிறகு என்ன வேணுமானாலும் பண்ணிக்கோங்க பட் ப்ளீஸ் இப்போ விடுங்க”  என்று மன்றாடலுடன் ஜெகாவின் கையை விட,

என் தங்கச்சி மேலேயே கை வைக்கிறியா..?” என்று ராஜி எகிற,

அக்கா வேண்டாம் வாக்கா அத்தானை நாம இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்ற தென்றலால் அங்கு அரங்கேறி கொண்டிருக்கும் காட்சிகளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அதேவேளை அம்பலவணனின் அழைப்பு வரவும் ஏற்று பேசியவள், “தளிர் இன்னொரு நாள் உதய்யை பார்ப்ப இப்போ கிளம்புடா” என்று கூடியிருந்த கூட்டத்தையும் தந்தையின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு அவள் சொல்ல..,

அண்ணி ப்ளீஸ்” என்று இறுக்கமாக சுஜியின் கையை பிடித்துகொண்டாள்.

புரிஞ்சுக்கோ தளிர்...  அடுத்தடுத்து எல்லாமே நடந்துட்டதுல இருந்து யாருமே இன்னும் வெளியில வரலை. அதுவும் அப்பா காலையில் இருந்தே ரொம்ப அப்செட் உதய் ஆக்சிடென்ட் நியூஸ் கேட்டு மயங்கியே விழுந்துட்டார்”

உதய்யை இந்த நிலையில் பார்த்த பிறகு அவரால சரியாய் பேசக்கூட முடியலை எங்களுக்கும் ஹீலிங் டைம் வேணும்.. அம்மாவும் ராஜிம்மாவும் இதுக்கெல்லாம் காரணம் சரத் தான்னு தெரிஞ்சதுல இருந்து ரொம்ப கோபமா இருக்காங்க நாம எது சொன்னாலும் புரிஞ்சுக்காம உன்னை இன்னும் அதிகமா பேசுவாங்க, அதை உன்னால கேட்க முடியலாம் ஆனா என்னால இதுக்கு மேல முடியாது..”

அதே சமயம் அவங்களை கட்டுபடுத்துறதும் அவ்ளோ ஈஸி இல்லை... அப்பா உதய்க்கு இது தெரிஞ்சா அவங்க நிலை இன்னும் மோசமாகும் அதனால் இவங்களுக்கு உன் மேல கோபம் அதிகமாகும் புரியுதா..?”  என்று கேட்க,

புரியுது அண்ணி”  என்று கீழ் உதட்டை கடித்து பொங்கிய அழுகையை கட்டுபடுத்த முயன்றவள்,

பட் ப்ளீஸ் எனக்காக! ஒரே ஒருமுறை தான் அண்ணி நான் திரும்ப வரமாட்டேன்” என்று சுஜியின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு  ‘என்னை புரிந்து கொள்ளேன்’  என்று தளிர் தத்தளிக்க அவள் தவிப்பு புரிந்தாலும் இப்போதைய சூழலை மேலும் கனமாக்க விரும்பாதவர் தன்னில் இருந்து அவள் கையை பிரித்து,

இப்போ இருக்கிற சூழல்ல ‘எரியறதை பிடுங்கினா அவங்க கொதிப்பு தானா அடங்கிடும்’ எனக்கும் வேற வழியில்லை, ப்ளீஸ் இப்போ போடா நிச்சயம் உதய்யை பார்க்க ஏற்பாடு பண்றேன்” என்றவள் தென்றலிடம் தளிரை ஒப்படைக்க அதற்குள் காரை அங்கே வர சொல்லியிருந்த நிவி அவர்களை பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தாள்.

Comments

Main Pages