Posts

வாழ்க்கைத்துணை - 20.1

Image
ரிஷி மகாவை அழைத்துக்கொண்டு கேஃபிடேரியாவிற்கு செல்ல அங்கு பெரிதாக ஆட்கள் இல்லை.  ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ரிஷியோடு இணைந்து நடந்த  மகாலட்சுமியின் பார்வை கணவனின் மீதே!! திருமணமான இத்தனை மாதங்களில் புது மாப்பிள்ளைக்கே உண்டான கவனிப்பு மகாவின் சாப்பாடு என்று எடை கூடி இருந்தவன் இப்போது கூடிய எடையோடு சேர்த்து மேலும் சில கிலோக்கள் குறைந்து காணப்பட்டான்.  இந்தளவு இளைத்து போயிருப்பவன் நிச்சயம் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தான் இருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அதற்கு காரணம் தன்னையும் குழந்தைகளையும் பிரித்து இருப்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.  அப்படியே அவன் தன்னை தேடி இருந்தாலும் தனக்காக தேடி இருக்க மாட்டான் பத்திரத்திற்காக தான் தேடி இருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.  ‘ப்ச் அப்படி இருக்காது மகா, அவருக்கு எமோஷனல் சப்போர்ட் நீதான்! இப்போ இருக்கிற நெருக்கடியில ஆறுதலுக்காக கூட உன்னை தேடி இருக்கலாம். உன் புருஷனை பற்றி நீயே நல்லவிதமா நினைக்கலைன்னா எப்படி?’ என்று அவள் மனமே அவளை கடிந்தது.  அவளே சரியாக யோசிக்க நினைத்தாலும் இருவருக...

மனசெல்லாம் மழையே - 37

Image
  “ வெரி குட்! அப்போ உனக்கு ஆக்சிடென்ட் ஆனதை நினைச்சு உங்க அம்மா அழறாங்களே அதுக்கு யார் காரணம்.. ?”   “ எதிர்ல வந்தவங்க..”                                                    “ உனக்கு உடம்புல அடிபட்டிருக்கு அதுக்கு யார் காரணம்.. ?”   “ எதிர்ல வந்தவங்க..” “ இப்போ நீ குணமாக வேண்டி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்க அதுக்கு என்ன காரணம் .. ?” “ எனக்கு எதிர்பாராத நடந்த ஆக்சிடென்ட்ல உடம்புல ஏற்பட்ட காயம்” “ வெரி குட்..!! ஒருவேளை எதிர்ல வந்தவங்க ஸ்ட்ரேஞ்சரா இல்லாம உனக்கு நல்லா தெரிஞ்சவங்களாவோ     இல்ல உன்னோட தங்கையாகவோ இருக்கும் பட்சத்தில் இப்பவும் தப்பு அவளோடதா இல்ல உன்னோடதா.. ?” “ யாரா இருந்தா என்ன டாக்டர் ரூல்ஸ் மீறி யாரை பற்றியும் கவலைபடாம இஷ்டத்துக்கு ஓட்டிட்டு வந்து ஆக்சிடென்ட் பண்ணின என் தங்கச்சிமேல தான் தப்பு” “ ஓகே உன்...

மனசெல்லாம் மழையே - 36

Image
  முதல் நாள் மனநல மருத்தோவரிடம் அவளை அழைத்து வந்தபோது அவள் பிரச்சனை பின்னணி குறித்து கேட்டறிந்து கொண்ட சிவசங்கரி முதலில் அவளுக்கு நல்ல உறக்கம் தேவை என்பதால் அன்று அவளுக்கு மாத்திரைகளை பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.  இதோ இரண்டாம் முறையாக அவளை அழைத்து வந்திருக்க அவள் மனதில் இருப்பதை மெல்ல மெல்ல வெளிகொணர்ந்திருந்தார். “ டாக்டர் இப்படிபட்டவங்களை என்னோட ஃப்ரெண்ட்ஸா வச்சிருந்தததை நினைச்சா எனக்கே என் மேல கோபமா வருது.. நானெல்லாம் ஏன் உயிரோட இருக்கேன்னு தோணுது..   என்னை பார்த்து வளர்ந்தா தென்றலும் இப்படித்தானே ஆகிடுவா.. என் அம்மா அப்பாவோட நம்பிக்கையை காப்பாற்றாத நான் எதுக்கு இருக்கணும்.. ? ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க அதுவும் ஒவ்வொரு நிமிஷமும் அவன் போட்டிருந்த டாட்டூ என்னோட முகம் எல்லாத்துக்கும் நான் தானே காரணம்.." "எங்கப்பா என்னை பற்றி எவ்ளோ கனவு கண்டார் உங்களுக்கு தெரியுமா டாக்டர்.. ஆனா அவர் எங்களை விட்டு பிரிஞ்ச பிறகும் எங்கம்மா என்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க எல்லாத்தையும் நானே.. ” என்று அழுகையினூடே அவரை பார்த்த தளிரை பேசவிட்டு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் மருத்துவர்...

மனசெல்லாம் மழையே - 35

Image
  “ ம்மா அக்காக்கு என்னம்மா ஆச்சு ஏன் இப்படி இருக்காங்க.. ? நீங்களும் ஏன் எதுவும் சொல்லாம அழுதுட்டே இருக்கீங்க” என்று பள்ளியில் இருந்து திரும்பிய தென்றல் சிவந்த விழிகளும் வீங்கிய முகமுமாக தளிர் இருந்த கோலமும் அதற்கு நிகராக கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த தாயையும் கண்டு மிகவும் பயந்து போய் கேட்டிருந்தாள். ஆனால் இளைய மகளை பார்த்த சீதாவிற்கு எதையும் பேசும் சக்தி இல்லாது போக அவளை கட்டிக்கொண்டு மெளனமாக   கண்ணீர் வடித்தார்.. “என்ன பண்ற சீதா.. ?” என்று அதட்டல் போட்ட மீனாக்ஷி தென்றலை தன்புறம் இழுத்து , “ ஒண்ணுமில்ல கண்ணு அக்காக்கு வயிறு வலி அதான் இப்படி இருக்கா நீ நைட் க்ளாஸ் போகணுமே சீக்கிரம் போய் முகம் கழுவிட்டு வா நான் காஃபி போடுறேன் குடிச்சுட்டு கிளம்புவ” என்று பத்தாம் வகுப்பில் இருக்கும் தென்றலை பள்ளிக்கு கிளப்பிவிடுவதற்காக எழுந்து கொண்டார் மீனாக்ஷி. “ அக்காக்கு வயிறுவலிக்குது அதனால அழறாங்க ஆனா அம்மா ஏன் த்தை அழறாங்க..” என்ற தென்றலுக்கு தாய் தமக்கையின் நிலையை கண்டு தன்போக்கில் கண்களில் இருந்து நீர் இறங்கி கொண்டிருந்தது. “ ப்ச் உன் அக்கா படுற அவஸ்த்தையை பார்த்து என்னமோ ஏதோன்ன...