“வெரி குட்! அப்போ உனக்கு ஆக்சிடென்ட் ஆனதை நினைச்சு உங்க அம்மா அழறாங்களே அதுக்கு யார் காரணம்..?”
“எதிர்ல வந்தவங்க..”
“உனக்கு உடம்புல அடிபட்டிருக்கு அதுக்கு யார் காரணம்..?”
“எதிர்ல வந்தவங்க..”
“இப்போ நீ குணமாக வேண்டி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்க அதுக்கு என்ன காரணம் ..?”
“எனக்கு எதிர்பாராத நடந்த ஆக்சிடென்ட்ல உடம்புல ஏற்பட்ட காயம்”
“வெரி குட்..!! ஒருவேளை எதிர்ல வந்தவங்க ஸ்ட்ரேஞ்சரா இல்லாம உனக்கு நல்லா தெரிஞ்சவங்களாவோ இல்ல உன்னோட தங்கையாகவோ இருக்கும் பட்சத்தில் இப்பவும் தப்பு அவளோடதா இல்ல உன்னோடதா..?”
“யாரா இருந்தா என்ன டாக்டர் ரூல்ஸ் மீறி யாரை பற்றியும் கவலைபடாம இஷ்டத்துக்கு ஓட்டிட்டு வந்து ஆக்சிடென்ட் பண்ணின என் தங்கச்சிமேல தான் தப்பு”
“ஓகே உன் தங்கச்சி தப்பு பண்ணிதால தான் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு.. அப்போ தன்னை மாத்திக்க வேண்டியது அவளா நீயா..? இதுக்கு அப்புறம் வண்டியை குறிப்பிட்ட ஸ்பீட்குள்ள ரூல்ஸ் ஃபாலோ பண்ணி ஓட்ட வேண்டியது யார்..?” என்றதும் டாக்டர் என்று தளிர் அதிர்வோடு பார்த்தாள்.
“ரிலாக்ஸ் தளிர் இது ஒரு கற்பனை கேள்வி தான்! உன் தங்கையை நான் ப்ளேம் பண்ணலை.. ஜஸ்ட் ஆன்சர் மீ”
“என் தங்கச்சி டாக்டர்” என்றாள் மெல்லிய குரலில்.
“உன்மேல எந்த தப்பும் இல்லையா..?”
“அவ இப்படி ரேஷ் டிரைவிங் பண்ணுவான்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா அவளை மாற்றி இருப்பேன்... எனக்கு தெரியாததால என்மேல தப்பு இல்ல டாக்டர்..” என்றாள் உறுதியான குரலில்.
“வெரி குட்..!! இவ்ளோநேரம் நடுநிலையா பதில் சொல்லிட்டு வந்த நீ இப்போ இதே சூழலை உனக்கு நடந்த விஷயங்களோடு ஒப்பிட்டு நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லனுமே தவிர திரும்பவும் நான் நல்ல பொண்ணு இல்ல நல்ல அக்கா இல்ல எல்லாம் என் தப்புன்னு சொல்லகூடாது... சரியான பதிலை மட்டும் சொல்லணும்” என்றதும் “சரிங்க டாக்டர்” என்றாள்.
“தட்ஸ் மை கேர்ள்..!” என்று தட்டி கொடுத்தவர், “நீ சரத்தை உன்னோட ஃப்ரெண்டா மட்டும் தான் பார்த்த, பழகின அவனை எங்கயும் காதலானா நினைக்கலை, அதேபோல அவனோட பழகறப்போ எங்கயும் ஹோப் கொடுக்குற மாதிரியோ அவனுக்கு சிக்னல் கொடுக்குற மாதிரியோ நீ நடந்துக்கல கரெக்ட்டா..?”
“ஆமா டாக்டர்.. ஹீ வாஸ் ஜஸ்ட் மை ஃப்ரெண்ட் லைக் அதர்ஸ்” என்று அவனுடனான நட்பை இறந்தகாலத்தில் தளிர் குறிப்பிட்டதில் சிவசங்கரியின் முகத்தில் மீண்டுமொரு புன்னகை.
“ஆண் பெண் என்று பேதமும் பார்க்காமல் நீ உன் நிலையில் சரியா இருந்த போதும் உன் விருப்பத்தை மதிக்காம உனக்கு தெரியாம தாலி கட்டினது யார் தப்பு..?”
“சரத்தோடது டாக்டர்”
“ஓகே உனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துட்டதை நினைச்சு நான் சரியா பெண்ணை வளர்க்கலை அவளை கட்டுபடுத்தலை கண்டிக்கலைன்னு சொல்லி உங்க அம்மா வேதனைப்பட்டு அழுதுட்டு இருக்காங்க..” என்றவரை “ஒரு நிமிஷம் டாக்டர்..” என்று இடைமறித்த தளிர்..,
“எப்படி வண்டி ஓட்டும் போது எங்கப்பா சொல்லி கொடுத்த ரூல்ஸ் மறக்காம சரியா இருந்தேனோ அதேபோல ஃப்ரெண்ட்ஸ்ஸோட பழகறப்போ எங்கப்பா அம்மா சொல்லி கொடுத்ததை மீறி எங்கயும் நான் நடக்கலை அதனால எங்கம்மா மேல எந்த தப்பும் இல்ல டாக்டர் அவங்களை எதுவும் சொல்லாதீங்க..” என்றதும் புன்னகையோடு அவள் தோளில் தட்டிக்கொடுத்தவர்,
“நீ சொன்னது ரொம்ப சரி நான் மறுக்கலை, ஆனா சரியா யோசிச்சு சொல்லு எப்படி ரோட் ரூல்ஸ் சரியா ஃபாலோ பண்ணியும் உனக்கு ஆக்சிடென்ட்டாகி உங்க அம்மா அழுதாங்களோ அதேபோல அவங்க வார்த்தையை மீறாம நீ நடந்துகிட்ட போதும் இப்பவும் அவங்க அழறாங்க... இதுக்கும் நீதான் காரணம்..?” என்றவர் தளிரின் புருவம் முடிச்சிடுவதை கண்டு,
“எனக்கு சரியா யோசிச்சு நியாயமான பதில் சொல்லணும் தளிர்”
“கண்டிப்பா சரத் தான் டாக்டர்”
“பெர்ஃபெக்ட்..! இப்போ நடந்த ஆக்சிடென்ட்ல உன்னோட உடம்புக்கு பதிலா மனசு ரொம்பவே காயப்பட்டு போயிருக்கு, ஏன் வாழனும்னு நீ யோசிக்கிற அளவுக்கு உன்னை கொண்டு வந்ததுக்கு யார் காரணம்..?” என்ற மறுநொடியே “சரத்” என்று வேகமாக பதிலளித்தாள் இளந்தளிர்.
“நீ ட்ரீட்மென்ட்க்கு வந்திருக்க காரணம்..?”
“சரத்”
“இப்போ சொல்லு தளிர் இதுல எந்த இடத்துல நீ தப்பு செய்த..? உன் வரையில் நீ சரியாதான் இருக்க.. இதுவும் உனக்கு எதிர்பாராம நடந்த விபத்து தான்! ஆனால் தப்பான நட்பு, அவனை நம்பி போனது உன்னோட தப்புன்னு சொல்லி தப்பானவனுக்காக உன்னையே ஏன் வருத்திக்கிற..? இது சரியான்னு நீயே யோசி.. இதனால உன்னோட அம்மா, அத்தை, தங்கை சந்தோஷபடுவாங்களான்னு நீயே சொல்லு” என்று கேட்க இல்லை என்று வேகமாக தலையசைத்தாள்.
“அடுத்து முட்டாள்தனமா இருந்துட்டேன்னு சொன்னியே இங்க முட்டாள்னு சொல்லகூடாது முட்டாள்கள்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும்” என்றதும் தளிர் புரியாமல் பார்க்க,
“சரத்தோட உண்மையான முகத்தை, குணத்தை கண்டுபிடிக்க முடியாத நீ முட்டாள்னா சந்தியா, அஜய், லேகா எல்லாம் யாரு..? அவங்களும் முட்டாள்கள் தான்”
“டாக்டர்” என்ற தளிர் அவர் வார்த்தைகளில் இருந்த உண்மையில் திகைப்போடு அவரை பார்த்தாள்.
“ஆமா தளிர் இங்க சாதூரியமா யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நடந்துகிட்ட சரத் உங்க எல்லாரையும் தான் முட்டாள் ஆக்கி இருக்கான்... அவனுக்கு உன்மேல இருக்கிறதுக்கு பேர் காதல் இல்லைன்னு உனக்கே புரியுது கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கு பதிலா லேகா இல்ல சந்தியாக்கு இது நடந்திருந்தா அப்பவும் அவங்களை, அவங்க அம்மா, அப்பாவை தப்பு சொல்லுவியா? இல்ல சரத்தை சொல்லுவியா?” என்று கேட்கவும் தான் தளிருக்கு தன் மீது எந்த தவறுமே இல்லை வீணாக தன்னையே பழி சுமத்தி தன்னை சார்ந்தவர்களை வருத்தி கொண்டிருக்கிறாள் என்ற நிதர்சனம் புரிந்தது.
“இங்க பாரும்மா ஏமாத்துறது தான் தப்பு ஏமாறுவது
தப்பில்லை.. ஆனா அந்த ஏமாற்றத்துல இருந்து நாம என்ன கத்துக்குறோம் அடுத்தமுறை
திரும்ப ஏமாறாம இருக்கோமா என்பது தான் முக்கியம். எவ்வளோ வயசு அனுபவம் கொண்டவங்களே
சிலநேரம் துரோகிகளால் ஏமாற்றப்படும் போது பத்தொன்பது வயசான நீ ஏமாந்தது
ஆச்சர்யமில்லை.. ஐ மீன் சரத்தால் ஏமாற்றப்பட்ட உன்னோட மற்ற ஃப்ரெண்ட்ஸயும்
சேர்த்து தான் சொல்றேன்.”
“டாக்டர்”
“நம்ம பழகு ஆரம்பிக்கிறவங்க புது ஆட்களா
இருந்தா அவங்களை ஒரு சந்தேக வட்டத்துக்குள்ள வைப்போம் ஆனா நீங்க எல்லாரும் சின்ன
வயசுல இருந்தே பிரண்ட்ஸ். அப்படி இருக்கும்போது அவன் உங்ககூட ஆறாவதுல பழக
ஆரம்பிச்ச புதுசுல சின்ன குழந்தைகளோட ஃப்ரெண்ட்ஷிப் இது சரியா
தப்பான்னு யோசிக்காது நம்மகூட டைம் ஸ்பென்ட் பண்ணுறாங்களா நமக்கு ஷேர் பண்றாங்களா
நம்மல கேர் பண்றவங்களான்னு மட்டும் தான் பார்க்கும்.. இவன் நல்லவனா கெட்டவனா
அதெல்லாம் யோசிக்கிற மெச்சூரிட்டி லெவல் அந்த வயசுக்கு இருக்காது..
அதைவிட என்னோட ஃபிரெண்ட் நல்லவனாதான் இருப்பான்னு உங்களுக்குள்ள அசைக்க முடியாத
நம்பிக்கை தான் இருக்கும்”
“இதே ஓரளவு மெச்சுரிட்டி வந்த பிறகு உன்னால
இந்த அளவு யாரையும் க்ளோஸ்ட் ஸர்கிள்குள்ள வரவிட்டிருக்க முடியாது ஆமாதானே..?”
என்று கேட்க ஒப்புக்கொண்டாள்.
“ஏன்னு யோசிச்சிருக்கியா..?”
“யோசிச்சது இல்ல டாக்டர் ஆனா எனக்கும்
அவங்களுக்கும் அவ்வளவா வேவ்லென்த் செட் ஆகாது ஆனா லேகா மாதிரி யாரோடவும் சண்டை
எல்லாம் போடமாட்டேன் எனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி போயிடுவேன்.”
“எக்ஸாக்ட்லி..!! சிலநேரம் நமக்கு பிடிச்சவங்க
எது செய்தாலும் நமக்கு பிடிக்கும். கேள்வியே கேட்காம அதை அப்படியே அக்செப்ட்
பண்ணிப்போம் அதேநேரம் பிடிக்காதவங்க நமக்கு நல்லதே செய்தாலும்
பிடிக்காது..”
“ஏன் டாக்டர் அப்படி ..?”
“அதுக்கு ஒரே காரணம் எனக்கு அவங்களை பிடிக்காது
என்பதே..! அப்படியில்லாம ஒருத்தங்களோட செயலை நடுநிலையா வச்சு பார்க்கிற
பக்குவத்துக்கு வந்துட்டாலே பிரச்சனைகள் குறைந்திடும் ஆனா அந்தளவுக்கு மனுஷங்க
பக்குவப்பட நிச்சயம் காலமெடுக்கும்”
“உன்னோட படிக்கிற மற்றவங்ககிட்ட இருந்து நீ
தள்ளி நின்னு பார்க்கிறப்போ அவங்களோட ப்ளஸ் மைனஸ் எல்லாமே உனக்கு புரிஞ்சிருக்கும்
ஆனா உன்னோட பிரெண்ட்ஸ்சை அப்படி ஒரு சந்தேகவட்டத்துக்குள்ளவோ இல்ல தள்ளி நின்னோ
பார்த்திருக்க மாட்ட அதுதான் உங்க யாராலையும் அவனை கண்டுபிடிக்க முடியாம போனதுக்கு
காரணம்”
“சின்ன வயசுல இருந்து பழகறோம் நம்மளோட ஃபிரண்ட்ஸ்
எப்பொழுதுமே கரெக்டா தான் இருப்பாங்க என்ற நினைப்பு உங்க யாருக்கும் அவனை
சந்தேகிக்க தோன்றி இருக்காது... அதைவிட அவனும் தீனா அசோக்கும் சந்தேகம் வராத அளவு
உங்ககிட்ட நடந்திருக்காங்க...” என்றவர் மேலும் பேசிக்கொண்டே செல்ல இப்போது தளிரின்
முகத்தில் முன்பைவிட அதீத வெளிச்சம் பிறந்தது.
தெளிவான பெண்ணான தளிரை யோசிக்க சொல்லி அனுப்பி வைத்தவர்
அடுத்து வந்த அமர்வுகளிலும் சரத் அவள் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியது பச்சை
குத்தியது என்று அனைத்திற்கும் தன் மீதே பழி போட்டுக்கொண்டவளிடம் அதுகுறித்த
தெளிவை ஏற்படுத்தி அவளை பக்குவபடுத்தியவர் இறுதியாக,
“ஏன் தளிர் உன்னால நல்ல அக்காவா நல்ல மகளா
இருக்க முடியாதுன்னு நினைக்கிற..? அந்த ஒருநாள் உன்
வாழ்க்கையை தீர்மானிச்சுடாது, அதைவிட அந்த நாளுக்காக உன்
வாழ்நாளையே இழக்கிறதை உன்னோட அப்பாவே அதை விரும்பமாட்டார்
தெரியுமா..?”
“டாக்டர்..”
“நிச்சயம் அன்றோடு எதுவும் மாறிடலை இப்பவும்
உனக்கான வாழ்க்கையை நீ வாழ்ந்துதான் ஆகணும். உன்னோட தங்கைக்கு நீ நல்ல ரோல்மாடலா
இருப்ப உன்னோட அம்மாவை பெருமிதபடுத்தும் அளவு உன்னால திரும்ப வரமுடியும் அதை
எப்படி செய்யணும்னு யோசிக்கிறதை விட்டுட்டு தேவையில்லாத குப்பைக்காக உன்
வாழ்க்கையை ஏன் தளிர் அழிக்க பார்க்கிற..?”
“அப்படியில்ல டாக்டர்.. அது அப்போ ஏதோ ஒரு
குழப்பம், சடன் ஷாக் எனக்கு எல்லாமே தலைகீழ மாறிட்ட மாதிரி
இருந்தது, இனி அப்படி இருக்கமாட்டேன் டாக்டர்.. எனக்கு எங்க
அம்மா, அத்தை, தென்றல் தான் எனக்கு
முக்கியம்”
“அப்படின்னா இதுக்கு மேலயும் சரத் மற்றும் தீனா
அசோக் மாதிரியான வேண்டாத குப்பைகளை அவங்களோட நினைவுகளை ஏன் சேமிச்சு வச்சிருக்க..!
அவங்களை நீ தூக்கி எறியாத வரை நிச்சயமா உனக்கும் உன்னை சார்ந்தவங்களுக்கும்
நிம்மதி இருக்காது..” என்றவர் அடுத்தடுத்து வந்த அமர்வுகளிலும் வாழ்க்கை குறித்த
புரிதலை அவளுக்கு ஏற்படுத்த தளிர் முழுதாக குற்ற உணர்வில் இருந்து வெளிவந்து
வெற்றிகரமாக புனர்ஜென்மம் எடுத்து மகிழ்ச்சியாக தன் வாழ்வை வாழ தொடங்கியிருந்தாள்.
இறுதி கட்ட கவுன்சிலிங் முடிந்து மகிழ்ச்சியோடு தளிர்
கிளம்பவும் மீனாக்ஷி தங்கள் குழந்தையை மீட்டு கொடுத்ததற்காக மருத்துவருக்கு
கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.
“இந்த மாதிரி நிறைய கேஸஸ் நான்
பார்த்திருக்கேன் சிலர் இரண்டு வருஷமானாலும் அதை கடக்க முடியாம அதனுடைய தாக்கத்தோடவே
இருப்பாங்க... பொதுவாவே இந்த மாதிரி பாதிப்பில் இருந்து வெளிவந்து தனக்கான வாழ்வை
வாழ்வதற்கு அசாத்திய நம்பிக்கையும் மனஉறுதியும் வேண்டும். தளிர் கிட்ட அது நிறையவே
இருக்கு..” என்றவரை இடைமறித்தவர்,
“என் தம்பி அப்படிதான் டாக்டர் எங்க
எல்லாரையும் விட நம்பிக்கையும் தைரியமும் அவனுக்கு அதிகம்” என்றார் மீனாக்ஷி..,
“நிச்சயமா..! இனி அந்த பசங்க திரும்ப வந்தாலும்
தளிர் கிட்ட பெருசா மாற்றம் இருக்காது.. அவங்களை எல்லாம் தூசி போல கடந்து
போயிடுவா.. அவளோட எதிர்காலத்துக்காக எப்படி அவளை அங்கிருந்து கூட்டிட்டு
வந்தீங்களோ அதேபோல இனி இதை பற்றிய பேச்சுக்கள் எடுக்காமல் இருக்கிறதும் நல்லது..”
என்று வழியனுப்பி வைத்தார்.
வீடு வந்து சேர்ந்த தளிருக்கு ஆலம் எடுத்து உள்ளே அழைத்து
சென்ற மீனாக்ஷி பூஜையறையில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து தளிரின் தலையில்
ஊற்றியவர் “இது கங்கை தீர்த்தம் ஆனா இதை அக்னி தீர்த்தமா நினைச்சுக்கோ.. இது
உனக்கு மறுபிறவி தாயீ போனதெல்லாம் போகட்டும் டாக்டரம்மா சொன்ன மாதிரி
எல்லாத்தையும் இங்கயே மறந்துட்டு இனி உன் வாழ்க்கையை நீ சந்தோஷமா வாழனும்..
எங்களுக்கு அதுதான் வேணும்” என்று சொல்ல மீனாக்ஷியை கட்டிக்கொண்ட தளிர்
புன்னகையோடு தலையசைத்தாள்.
மேலும் சில வாரங்கள் கடந்த நிலையில் :
தென்றல் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு வேலூருக்கு வந்து
சேர்ந்திருக்க தளிரை கண்டவளின் விரிந்த விழிகள் மூட
முடியாது போக, “எப்படிம்மா அக்கா நான்
ஹாஸ்டல் போகும் முன்னாடி வேற மாதிரி இருந்தா இப்போ வேற மாதிரி இருக்கா..?” என்று
தளிரை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“ஏன்டி பிள்ளை மேல கண்ணு வைக்கிற..”
“நான் கண்ணு வைக்கலை அத்தை அக்கா கன்னம் எப்படி
திரும்ப பன்னு மாதிரி ஆச்சுன்னு பார்த்துட்டு இருக்கேன்” என்றதில் மற்றவர்கள்
சிரிக்க,
“என்னை பார்க்ககூட வராததுல அக்காவை ரொம்ப மிஸ்
பண்ணினே தெரியுமா அத்தை ஆனா இப்போ என் கண்ணையே என்னால நம்ப முடியலை.. அக்கா நீ
என்னை கொஞ்சம் கிள்ளு..” என்று ஆச்சர்யமாக
சொன்னவளுக்கு பல மாதங்கள் கழித்து தளிரை கண்ட சந்தோஷத்தை விட அவளை பழைய மாதிரி
பார்த்த மகிழ்ச்சியில் அத்தனை ஆர்பரித்தாள்.
அன்று நாள் முழுக்க தளிருடனே சுற்றி திரிந்து அவளோடு வெளியில்
சென்று வந்தபின் உணவை முடித்துக்கொண்டு
அவளோடு படுத்துக்கொள்ள நெடுநாளுக்கு பின் தளிரும் தங்கையின் வருகையில் இரட்டிப்பு
மகிழ்ச்சியோடு இருந்தவள் அன்றிரவு முழுக்க அவளுடைய விடுதி கதைகளை கேட்டுக்கொண்டு
நடுஇரவில் தூங்கியிருந்தனர்.
அடுத்த நாள் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டு இருந்த மகள்களை சீதா நிறைவோடு
பார்த்திருந்தாலும் அவர் முகத்தில் அவரையும் அறியாது ஒருவிட கலக்கம்
சூழ்ந்திருந்தது.
தென்றலை பதினொன்றாம் வகுப்பில் சேர்த்திருக்க மூன்றாம்
வருடத்தில் இருந்த தளிர் கல்லூரி முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்து படித்து
கொண்டிருப்பதை கண்ட சீதாவிடம் அதே கலக்கம் காணப்படவும் “ஏன் சீதா ஒருமாதிரி
இருக்க..?” என்றார் மீனாக்ஷி.
“சித்தி என் பொண்ணு திரும்ப எனக்கு கிடைச்சுட்டா
ஆனா இனி எப்படி நான் அவளை கரையேத்துவேன்..? அவளுக்கு
ஏற்கனவே கல்யாணம் ஆனதை நான் என்னன்னு சொல்லி மாப்பிள்ளை தேடுவேன் ..?” என்றதுமே
“என்ன பேசுற சீதா..?” என்று அதட்டல் போட்டார்
மீனாக்ஷி.
“இல்ல சித்தி இப்படி ஒரு
அசம்பாவிதம் அவளுக்கு நடந்ததை நாம சொன்னா யாராவது நம்புவார்களா..? மாப்பிள்ளை
வீட்டார் கிட்ட என்னன்னு சொல்லி எப்படி அவ கல்யாணத்தை நடத்துவேன்னு எனக்கு ஒன்னும்
புரியலை சித்தி..”
“ஏன்டி கூறுகெட்டதனமா பேசுற..? அவளுக்கு
நடந்ததுக்கு பேர் கல்யாணமே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்
அதை சொல்லனும்ன்னு சொன்னா என்ன அர்த்தம்...?”
“இல்லன்னு நமக்கு தெரியும் சித்தி ஆனா நாளைக்கு
அவளுக்கு மாப்பிள்ளை வீட்டார் தேடி வந்தா என்ன சொல்ல..?”
“ஏன் சொல்லணும்..”
“என்ன சித்தி பேசுறீங்க..? சொல்லாம எப்படி கல்யாணம் செய்ய முடியும்..?” என்று
சீதா திகைப்போடு பார்க்க,
“சரியாதான் பேசறேன்..! ஏன்டி நீ என்ன நாள்
நட்சத்திரம் பார்த்து பத்திரிகை அடிச்சு பந்தக்கால் நட்டு ஊர்கூட்டி பந்தி வச்சு
உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியா?
“இல்ல சித்தி அதுக்காக சொல்லாம..”
“இதோ பார் சீதா ஒரு பெண்ணுக்கு ஊரறிய கல்யாணம் பண்ணி
கொடுத்து அந்த வாழ்க்கை தோத்து போனாலே அவளுக்கு அடுத்த வாழ்க்கை அமையறது அவ்ளோ
லேசுபட்ட காரியமில்ல...""இங்க நீ பெண் பார்க்க வரவங்க கிட்ட உன் பெண்ணுக்கு அவ
விருப்பம் இல்லாம ஒருமுறை தாலி ஏறிடுச்சுன்னு சொன்னா அதை அப்படியே நம்புவாங்கன்னு
நினைக்கிறியா..?” என்று கேட்க சீதாவின்
பயமுமே அதுதானே..! பதிலளிக்காமல் கண்ணீரோடு மீனாக்ஷியை பார்த்தார்.
Comments
Post a Comment