வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 36

 


முதல் நாள் மனநல மருத்தோவரிடம் அவளை அழைத்து வந்தபோது அவள் பிரச்சனை பின்னணி குறித்து கேட்டறிந்து கொண்ட சிவசங்கரி முதலில் அவளுக்கு நல்ல உறக்கம் தேவை என்பதால் அன்று அவளுக்கு மாத்திரைகளை பரிந்துரைத்து அனுப்பிவிட்டார். 

இதோ இரண்டாம் முறையாக அவளை அழைத்து வந்திருக்க அவள் மனதில் இருப்பதை மெல்ல மெல்ல வெளிகொணர்ந்திருந்தார்.

டாக்டர் இப்படிபட்டவங்களை என்னோட ஃப்ரெண்ட்ஸா வச்சிருந்தததை நினைச்சா எனக்கே என் மேல கோபமா வருது.. நானெல்லாம் ஏன் உயிரோட இருக்கேன்னு தோணுது..  என்னை பார்த்து வளர்ந்தா தென்றலும் இப்படித்தானே ஆகிடுவா.. என் அம்மா அப்பாவோட நம்பிக்கையை காப்பாற்றாத நான் எதுக்கு இருக்கணும்..? ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க அதுவும் ஒவ்வொரு நிமிஷமும் அவன் போட்டிருந்த டாட்டூ என்னோட முகம் எல்லாத்துக்கும் நான் தானே காரணம்.."

"எங்கப்பா என்னை பற்றி எவ்ளோ கனவு கண்டார் உங்களுக்கு தெரியுமா டாக்டர்.. ஆனா அவர் எங்களை விட்டு பிரிஞ்ச பிறகும் எங்கம்மா என்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க எல்லாத்தையும் நானே..என்று அழுகையினூடே அவரை பார்த்த தளிரை பேசவிட்டு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் மருத்துவர்.

என் ஃபோட்டோவை அவன் யூஸ் பண்ற பெட்ஷீட் டவல் எல்லாத்துலயும் போட்டிருக்கான் எனக்கு அப்படியே உடம்பெல்லாம் எரியுது டாக்டர்... அதுவும் அவனோட இன்னர்ஸ்ல கூட ச்ச்சீய் இப்படியும் ஒருத்தன் செய்வானா எனக்கு தூங்க முடியலை, இத்தனைக்கும் அவனுக்கு நான் சாப்பாடு கொண்டு போய் கொடுத்திருக்கேன் என் கையாள அசைன்மென்ட் எழுதி இருக்கேன் என்னோடவே உட்கார்ந்து தான் படிப்பான் அப்போல்லாம் ஒருத்தன் என்னை தப்பா பார்த்திருக்கிறான்னு கூட தெரிஞ்சுக்காத அளவு நான் முட்டாளா இருந்திருக்கேனே டாக்டர்... எங்கத்தை சொன்ன மாதிரி எங்கப்பா தான் அன்னைக்கு என்னை சீக்கிரம் முழிக்க வச்சிருக்கார் இல்லன்னா மயக்கத்துல இருந்த என்னை..என்று தேம்பியவள்,  

எனக்கு உடம்பெல்லாம் கூசுது.. இதுக்கெல்லாம் நான் தானே காரணம்! நான் ஏன் உயிரோட இருக்கணும் நீங்களே சொல்லுங்க..?” என்று மன அழுத்தத்தின் காரணமாக தளிர் பேசிக்கொண்டே செல்ல மருத்துவருக்கு அவள் நிலை நன்கு புரிந்தது.. முதலில் அவளுக்கு தன்னை குறித்து ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை தேவையற்றது என்றும் சரத்தால் உடைக்கபட்டிருக்கும் தளிரின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் (selfesteem) மீட்டெடுத்து ஆண் பெண் நட்பு தவறில்லை என்ற புரிதலை கொடுத்து சரத் செய்த காரியங்களுக்கு அவள் எப்போதும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெளிவுபடுத்தினாலே அவள் குற்ற உணர்வு நீங்கி இயல்பாகி விடுவாள் என்று கணித்துவிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் இது யாரோ முன்பின் அறிந்திராத நபராக இருந்தால் கூட தளிர் இந்தளவு குற்ற உணர்சிக்கு ஆளாகி இருக்கமாட்டாள், எதிர்பாராத நிகழ்வால் கொண்ட அதிர்ச்சி மட்டுமே இருந்திருக்கும் ஆனால் இதை செய்தது நண்பர்கள் எனும் போது அவர்களின் துரோகம் ஒருபுறம் இப்படிபட்ட நண்பர்களுடன் பழகிய தன் மூடத்தனத்தை எண்ணி கோபம், கழிவிரக்கம் மறுபுறம் என்று தனக்குள் போராடிய தளிர்  நிச்சயம் அளித்து மீட்க கூடிய நிலையில் தான் இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டவர் அவளுக்கான கவுன்சிலிங்கை ஆரம்பித்திருந்தார். 

சீதா மகளை இங்கு அழைத்து வந்ததை கண்டு மிரண்டு போனவர் ‘என் பொண்ணு ஒன்னும் பைத்தியம் இல்ல சித்தி ஏன் இப்படி..?’ என்று  கண்ணீர் சிந்தவும், அவரை தேற்றிய மருத்துவர் தளிரின் நிலையை அவருக்கு புரியும்படி விளக்கி ஒருவேளை கவுன்சீலிங் அளிக்காமல் போனால் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு அவள் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிப்பாள் என்பதை தெளிவு படுத்தியவர் அவளுக்கான cbt சிகிச்சை முறை பற்றியும் விளக்கமளித்து நிச்சயம் தளிரை பழைய மாதிரி மாற்றி கொடுப்பதாக உறுதி கொடுத்திருந்தார்.  

அதேவேளை தளிரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்றல் மட்டுமல்ல வேறு யாருக்குமே நடந்ததை சொல்லாமல் மறைத்துவிட்ட மீனாக்ஷி தன் உடல்நிலையை காரணம் காட்டி சீதாவும் தளிரும் தன்னோடு இருப்பது அவசியம் என்றவர் தென்றலை அவள் படித்து கொண்டிருந்த பெண்கள் பள்ளியில் இருந்த விடுதியில் சேர்த்துவிட்டார்.

தென்றலுக்கு ரகுபதியிடம் பற்று அதிகம் என்பதால் அவளுக்கு அனைத்தும் அவர்தான் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக  தென்றலை வீட்டின் அருகில் இருந்த பெண்கள் பள்ளியில் சேர்த்திருந்தவர் மதியம் உணவுக்காக வரும் போது தானே மகளுக்கு உணவு ஊட்டிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இறந்த அந்த வருடம் தான் தென்றலை தளிரின் பள்ளிக்கு மாற்றுவதாக முடிவு செய்திருந்தார் ஆனால் அவர் மறைவு எதையும் செய்ய முடியாது போனதில் தென்றல் பெண்கள் பள்ளியில் தொடர்ந்திருந்தாள்.

தளிருக்காக சீதா சென்னையை விட்டு வந்தபோதும் தென்றல் பத்தாம் வகுப்பில் இருந்ததால் அவளை மாற்றமுடியாது  விடுதியில் சேர்க்க ஒப்புக்கொண்டார். 

அந்த மாத இறுதியில் மீண்டும் கவுன்சிலிங் செஷன் முடித்த தளிர், சீதா மீனாக்ஷியோடு கிளம்பவும் “ஒரு நிமிஷம்மா.. தளிர் படிச்சிட்டு இருந்தான்னு சொன்னீங்களே எந்த காலேஜ் எந்த வருஷம்...” என்றார் மருத்துவர்.

கல்லூரியின் பெயர் சொல்லியவர் இரண்டாவது வருஷம் டாக்டர்”

சென்னையில தானே படிச்சிட்டு இருந்தான்னு சொன்னீங்க.. உங்களுக்கு இன்னொரு பெண்ணும் இருக்காங்கன்னு சொன்னீங்களே அவங்க என்ன பண்றாங்க..?” என்றவருக்கு எங்கே தளிரின் பாதிப்பு அவளையும் தொற்றி இருக்குமோ என்ற எண்ணம்.

ஆமா டாக்டர் ஆனா அவளுக்கு எதுவும் தெரியாது சித்திதான் சின்ன பொண்ணு பயந்துடுவன்னு சொல்ல வேண்டாம் சொல்லிட்டாங்க.. அம்மூ அப்படி ஒரு முடிவுக்கு வந்த பிறகு என்னால சென்னையில் இருக்க முடியலை... தென்றல் இப்போ டென்த்ல இருக்கிறதால அவளோட படிப்பை பாதியில நிறுத்த முடியாதுன்னு அவ படிக்கிற ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்த்துட்டோம்”

அவர்கள் குடும்ப பின்னணி முழுதும் அறிந்திருந்தவர், “அதுவும் சரிதான்..! நல்ல முடிவு எடுத்திருக்கீங்க ஆனா இந்த இடமாற்றம் இப்போ தளிருக்கு தேவையானதா இருந்தாலும் என்னோட கவுன்சிலிங் மட்டுமே போதாது அவ காலேஜ்க்கு போறதும் முக்கியம்”

காலேஜா..! இல்ல டாக்டர் தளிர் வீட்டு வாசல் விட்டு போகவே ரொம்ப பயப்படறா.., எங்களோட வெளியில வர நேரம் மட்டும் தான் மத்தபடி காலிங் பெல் அடிச்சாகூட கதவை திறக்க யோசிக்கிறா அதுதான் அவ நல்லா ஆகிட்டா போதும்ன்னு வீட்டோட நாங்களே பத்திரமா பார்த்துக்கறோம்”

இல்லம்மா அப்படியே வீட்டோட வச்சிருக்கிறது தளிரோட நிலையை இன்னுமே மோசமாக்குமே  தவிர அவளை குணப்படுத்த உதவாது.. தளிரோட ஸ்டேட் ஆஃப் மைன்ட்க்கு கோஎட் காலேஜ் சரிவராது இங்கயே நல்ல கேர்ள்ஸ் காலேஜ் இருக்கு என்னோட இன்பிளூயன்ஸ்ல அவளை சேர்க்க ஏற்பாடு பண்றேன் டிசி மற்ற விஷயம் எல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்.. நல்லா படிக்கிற பொண்ணுக்கு நிச்சயம் என்னோட ட்ரீட்மென்ட்டோட சேர்த்து காலேஜ் சூழலும் தேவை...” என்றவர் தானே அவளுக்காக புகழ்பெற்ற கல்லூரியில் பேசிட அடுத்த மூன்றாம் நாள் தளிர் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.

வேண்டாம் அத்தை எனக்கு எதுவும் வேண்டாம் நான் இப்படியே உங்களோட இருக்கேனே..” என்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் சொன்ன தளிரை தேற்றி தினமும் மீனாக்ஷி அவளை ஆட்டோவில் கொண்டு விடுபவர் மீண்டும் கல்லூரி முடியும் நேரம் சென்று அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

முதலில் அவளுக்கு புது கல்லூரி, பெண்கள் மட்டுமேயான புது சூழல் ஒருவித அமைதியை கொடுத்தாலும் முன்பு போல படிப்பை தொடர்வது என்பது அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை... புத்தகத்தை எடுக்கையில் நண்பர்களுடன் செலவிட்ட நிமிடங்கள் அவர்களுக்கு சொல்லி கொடுத்தது அதை தொடர்ந்து எழுந்த பேச்சு, கிண்டல், கேலி என்று நினைவுகள் அவளை பாடாய்படுத்தியது.

சில நாட்கள் வீட்டில் வந்து, ‘நான் ஷேக்ஸ்பியர் சோனட்க்கு (shakespearean sonnet) விளக்கம் சொல்லிகொடுத்தப்போவாவது என்கிட்ட ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே ம்மா, இல்ல லேகா அஜய் லவ் தெரிஞ்ச போதாவது சொல்லியிருக்கலாமே  ஏன் எதுவும் சொல்லாம இப்படி செய்தான்..? நாங்க வெளியில போறப்போ எங்களை பத்திரமா பார்த்துகிட்ட தீனாவும் அசோக்கும் அவனுக்கு துணை போவாங்கன்னு எதிர்பார்க்கலைம்மா..’ என்று ஒருமூச்சு அழுது தீர்ப்பாள்.

ஆசிரியர் நடத்தும் பாடங்களில் மனதை ஒருமுகபடுத்தி கவனத்தை குவிக்க முடியாமல் வெகுவாக திண்டாடியவள் பின்வந்த நாட்களில் மிகவும் கடுமையாக அவளுடனே தளிர்  போராட வேண்டி இருந்தது.. அதேபோல உடன் பயில்வோரிடம் இருந்தும் ஆரம்பத்தில் ஒருவிதமான ஒதுக்கத்தை கடைபடித்தவள் சிவசங்கரியிடம் தொடர்ந்து மேற்கொண்ட cbt சிகிச்சையின் பலனாக மெல்ல தன் கூட்டை விட்டு வெளியில் வந்தவள் முன்பு போல யாரிடமும் நெருக்கமான நட்பு பாராட்டவில்லை என்றாலும் ஓரளவு சகஜமாக பேச தொடங்கியிருந்தாள்.

மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில்:

முன்பு போல எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்காமல் ஒரளவு படிப்பில் தன் சிந்தையை செலுத்த தொடங்கி இருந்த இளந்தளிரிடம் மருத்துவர் எதிர்பார்த்த மாற்றங்கள் மெல்ல வர தொடங்கியிருந்தது. அவ்வப்போது தங்கையை பார்க்கும் ஆவல் மேலிட்டாலும் அங்கே சென்றால் சந்தியா, லேகா உட்பட மற்றவர்களை சந்திக்க வேண்டுமே என்ற எண்ணமே தளிரை போகவிடாமல் செய்திருந்தது.

ஆனால் தளிர் அழைப்பை ஏற்காது போனதில் வீடு தேடி வந்த சந்தியாவிடம் அவள் பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளாள் என்ற சீதா சமாளிக்க பரீட்சை எழுதகூட வராதவளை பார்க்க லேகாவும் உடன் வர அன்று தளிரின் வீடு பூட்டப்பட்டிருக்க அவள் எண்ணும் உபயோகத்தில் இல்லாமல் போயிருந்தது. அதன்பின் அவ்வப்போது அவள் எண்ணிற்கு அழைத்தும் வீட்டிற்கு சென்று பார்த்தவர்களால் தளிரை நெருங்க முடியவில்லை. அனைத்தும் தளிரை காப்பாற்ற வேண்டி  மீனாக்ஷி எடுத்த முடிவுகள்.. வீட்டு தலைவன் இல்லாத நிலையில் சீதா பெரும்பாலும் அவர் வழிகாட்டுதலின் படி நடந்து கொண்டிருந்தார்.

அன்று சீதா உறங்கி கொண்டு இருந்த மகளை பார்த்தவாறு  என்ன சொன்னாலும் “அந்த பசங்களோட பழகவிட்ட என்மேல தான் சித்தி தப்பு..! என்னால என் பொண்ணு அனுபவிக்கிறா, உங்க தம்பிகிட்ட அப்பவே பொம்பளை புள்ளைங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்ல போடாம போனது என் தப்பு தானே..!” என்று மீண்டும் கண்ணை கசக்க மீனாக்ஷியிடம் அத்தனை கோபம்.

எந்த காலத்துல இருக்க நீ..? நம்ம காலம் மாதிரியா என்ன இப்போல்லாம் படிக்கிற பள்ளிக்கூடத்துல இருந்து வேலைக்கு போற இடம் வரைக்கும் ஆம்பளையும் பொம்பளையும் பேசி பழக வேண்டிய நிர்பந்தம் இருக்கு ஆனா தங்களோட எல்லை தெரிஞ்சு இருந்துகிட்டா பிரச்னை இல்ல..  உன் பிள்ளையை ஆம்பள பசங்களோட பழக வேண்டாம்னு நீயும் சொல்லல உன் புருஷனும் சொல்லல.. நல்லது கெட்டது எடுத்து சொல்ல வேண்டிய பெத்தவங்களே அனுமதிக்கிறப்போ அந்த பிள்ளைக்கு அது நல்லதுன்னு தான் தெரியும் அதை சந்தேகபடனும்னு கூட தோணாது..

யார் கண்டா இப்படி ஒரு நாய் வஞ்சம் வச்சு நம்ம பிள்ளை வாழ்க்கையை கெடுக்கும்னு...? பட்ட பிறகு தானே புரியுது.. உன் பொண்ணு மேல நீ வச்ச நம்பிக்கை அதுக்கு ஏற்றபடி நம்ம பிள்ளையும் நடந்துகிட்டதால நீயும் தடுக்கலை இங்க யாரையும் குற்றம் சொல்றதுக்கு இல்லை, ஆண்டவன் ஏனோ நமக்கு இதை எழுதி வச்சிருக்கான் இதுவும் ஒரு படிப்பினை தான்.. ஆனா நடந்து முடிஞ்சதை திரும்ப திரும்ப இதையே பேசறதால குணமாகிட்டு வர பிள்ளையோட நினைப்பு திரும்ப அந்த நாளைக்கு போய் அவளை நிம்மதி இல்லாம ஆக்கிட்டும், நமக்கு பிள்ளை முக்கியம் சீதா கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டு இப்படி அழுது வடியாம அமைதியா இருடி என் தாயீ சீக்கிரமே பழைய மாதிரி திரும்ப நம்ம கைக்கு வந்துடுவா..” என்று உருட்டி மிரட்டி அவரை அடக்கி வைத்திருந்தார்.

வாரம் தவறாமல் மருத்துவரை சந்திக்கும் தளிர் இப்போதும் மீனாக்ஷியின் துணையோடு கல்லூரி சென்று வந்தாலும் கவனசிதறல் இன்றி படிப்பில் முழுவீச்சாக கவனம் செலுத்தி கொண்டிருந்தாள். மற்ற பெண்களிடமும் அவள் பேச்சு சகஜமாகி இருக்க வீட்டிலும் மளிகை பொருட்கள் லிஸ்ட் போடுவது, வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது என்று மெல்ல மெல்ல பழையபடி மாறிக்கொண்டு இருந்தாள்.

அடுத்தநாள் சிவசங்கரியின் முன் அமர, “நீ வண்டி ஓட்டுவியா தளிர்..?” என்று அவர் கேட்கவும் எதற்கு இப்போது இந்த கேள்வி என்பதாக அவரை பார்த்தவள், “ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.

ரோட்டுல வண்டி எடுத்துட்டு எப்படி போவ..?”

எப்படின்னா புரியலை டாக்டர்”

ஐ மீன் ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவியா இல்ல உன் இஷ்டத்துக்கு வண்டியை பறக்க விடுவியா..?”

அச்சோ அப்படியெல்லாம் இல்ல டாக்டர் அப்பா சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுத்தபோதே எனக்கு ட்ராபிக் ரூல்ஸ் சொல்லி கொடுத்துட்டார் அதனால வண்டி எடுக்கும் முன்ன ஹெல்மெட் போட்டுட்டு ஷால் டை பண்ணிட்டு லெப்ட் சைட்ல ஸ்பீட் லிமிட்டோட தான் ஓட்டுவேன் இதுவரை எந்த ட்ராபிக் ரூல்ஸும் ப்ரேக் பண்ணினது இல்லை..”

ஓகே வெரி குட் இப்போ நான் கேட்க போறது ஒரு கற்பனையான கேள்வி ஆனால் இதுக்கு நீ எதையும் யோசிக்காம அந்த சூழலுக்கு எது சரின்னு நினைக்கிறியோ அந்த பதிலை தான் சொல்லணும் சரியா..?”

ஓகே டாக்டர்..”

நீ எல்லா ரூல்ஸ் ஃபாலோ பண்ணி வண்டி ஓட்டிட்டு போற அப்போ உன் எதிர்ல ஃபாஸ்ட்டா எந்த ரூல்சும் ஃபாலோ பண்ணாம ஹை ஸ்பீட்ல ஒரு வண்டி வந்து உன்னை மோதி உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுது.. உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க ட்ரீட்மென்ட் போகுது அம்மா அத்தை எல்லாரும் அழுதுட்டு இருக்காங்க... இப்போ சொல்லு உனக்கு நடந்த ஆக்சிடென்ட்க்கு யார் மேல தப்பு..?”

எதிர்ல வந்தவங்க மேல தான் டாக்டர்” 

ஏன் அவங்களை மட்டும் சொல்ற..? நீ ரோட்டுல வண்டி ஓட்டினதால தானே ஆக்சிடென்ட் ஆச்சு நீ ரோட்டுல போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதே..! அப்போ அதுக்கு நீயும் தானே காரணம் அப்புறம் எப்படி இல்லைன்னு சொல்ற தளிர்..?”

நிச்சயமா இல்லை டாக்டர்..! அந்த ஆக்சிடென்ட் நடக்கும்னே எனக்கு தெரியாதே அப்புறம் எப்படி நான் காரணமாக முடியும்.. இல்ல இப்படி ரேஷ் டிரைவிங் செய்யறவங்களுக்கு பயந்து நான் வண்டி ஓட்டாம இருக்க முடியுமா..?” என்று கேட்க சிவசங்கரியின் இதழ்களில் அழகிய புன்னகை மலர்ந்தது.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1