Posts

Showing posts from February, 2026

வாழ்க்கைத்துணை - 20.1

Image
ரிஷி மகாவை அழைத்துக்கொண்டு கேஃபிடேரியாவிற்கு செல்ல அங்கு பெரிதாக ஆட்கள் இல்லை.  ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ரிஷியோடு இணைந்து நடந்த  மகாலட்சுமியின் பார்வை கணவனின் மீதே!! திருமணமான இத்தனை மாதங்களில் புது மாப்பிள்ளைக்கே உண்டான கவனிப்பு மகாவின் சாப்பாடு என்று எடை கூடி இருந்தவன் இப்போது கூடிய எடையோடு சேர்த்து மேலும் சில கிலோக்கள் குறைந்து காணப்பட்டான்.  இந்தளவு இளைத்து போயிருப்பவன் நிச்சயம் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தான் இருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அதற்கு காரணம் தன்னையும் குழந்தைகளையும் பிரித்து இருப்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.  அப்படியே அவன் தன்னை தேடி இருந்தாலும் தனக்காக தேடி இருக்க மாட்டான் பத்திரத்திற்காக தான் தேடி இருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.  ‘ப்ச் அப்படி இருக்காது மகா, அவருக்கு எமோஷனல் சப்போர்ட் நீதான்! இப்போ இருக்கிற நெருக்கடியில ஆறுதலுக்காக கூட உன்னை தேடி இருக்கலாம். உன் புருஷனை பற்றி நீயே நல்லவிதமா நினைக்கலைன்னா எப்படி?’ என்று அவள் மனமே அவளை கடிந்தது.  அவளே சரியாக யோசிக்க நினைத்தாலும் இருவருக...

தமிழ் நாவல் எழுத விரும்புவோருக்கான வழிகாட்டி

  ஒரு நல்ல நாவல் எழுத தொடங்குவது எப்படி? – தொடக்க எழுத்தாளர்களுக்கான வழிகாட்டி தமிழில் நாவல் எழுத வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எங்கிருந்து தொடங்குவது, எப்படி கதையை அமைப்பது, வாசகர்களை ஈர்ப்பது எப்படி என்ற சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரை தொடக்க எழுத்தாளர்களுக்கு உதவும். 1. நல்ல கதை யோசனை தேர்வு செய்யுங்கள் ஒரு நாவலின் முதன்மை அதன் கதை. காதல், குடும்பம், த்ரில்லர், சமூக பிரச்சனை, உணர்ச்சி போன்ற எந்த வகை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் அது வாசகர்களின் மனதை தொட வேண்டும். 2. கதாபாத்திரங்களை வலுவாக உருவாக்குங்கள் நல்ல நாவலை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பது கதையைக் காட்டிலும் கதாபாத்திரங்களுக்காக தான். அவர்களின்: பின்னணி குணம் இலக்கு பலவீனம் இவற்றை தெளிவாக அமைத்தால் கதை உயிர் பெறும். 3. கதை அமைப்பை திட்டமிடுங்கள் நாவல் எழுதும்போது மூன்று பகுதிகள் முக்கியம்: தொடக்கம் – கதையை அறிமுகப்படுத்துதல் நடுப்பு – சிக்கல்கள் மற்றும் உணர்ச்சி வளர்ச்சி முடிவு – தீர்வு அல்லது திருப்பம் இந்த அமைப்பு வாசகர்களை இறுதி வரை பிடித்திருக்கும். 4. உணர்ச்சியை முக்கியமாக கொடுங்கள் தமிழ் வாச...

மனசெல்லாம் மழையே - 33

Image
  “ வாயை மூடு அசோக் இனி ஒரு வார்த்தை பேசாத , எனக்கு செய்த துரோகத்துக்கு பேர் நல்லதா.. ? இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்சுட்டு புரிஞ்சுக்கணும் சொன்னா என்ன அர்த்தம்.. ?” என்று சீறிய இளந்தளிருக்கு இப்படியும் ஒரு நாள் தன் வாழ்வில் வரக்கூடும் என்ற எண்ணமே இல்லாததில் இன்றைய நிகழ்வுகள் பேரதிர்ச்சியே..!! அவர்களிடம் என்ன பேச , அடுத்து என்ன செய்ய என்று புரியாத ஒரு நிலை..!   “ தளிர் அப்படி எல்லாம் பேசாத , சரத் விட உனக்கு ஒரு நல்ல லைஃப் பார்ட்னர் கிடைக்க மாட்டாங்க அதனால தான் நாங்க அவனுக்கு உதவ நினைச்சோம்.. அவனோட காதல் எவ்ளோ தெய்வீகமானதுன்னு உனக்கு தெரியுமா தளிர்.. ?” என்று அசோக் முன்னே வர அவனை முந்திக்கொண்டு வந்த தீனா , “ அவன் உன்ன உயிருக்கு உயிரா விரும்புறான் தளிர் அவனோட காதல் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.. அவனோட வாழ்ந்தா உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது.. செமெஸ்டர் பீஸ் கூட அவனே பார்த்துப்பான் நிச்சயமா உங்க அப்பாவோட இடத்துல இருந்து உன்னை..” என்று தீனா தொடங்கும் பளார் என அவன் கன்னத்தில் அறைந்தவள்.. , “ ராஸ்கல் வாயை மூடு! என் வாழ்க்கையை டிசைட் பண்ண நீங்க யாருடா.. ? யாரை யார் ...

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

Image
இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்றிருந்த ரிஷி ஞாயிறு மதியம் போல தான் வீடு வந்து சேர்ந்தான்.  வழி நெடுக அவனுக்கு அழைத்த ஆசிரியர் சொன்ன செய்தி தான் அவன் மனதை ஆக்கிரமித்து இருக்க வீட்டிற்குள் நுழைந்ததும், “சிந்து எங்க ம்மா?” என்றான்.  “அவ இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலையே.. ஏன் வரதா கேட்கிற?” “ஸ்கூலா? சண்டே அதுவுமா?” என்று நெற்றி சுருங்க இந்திராவை பார்த்தவன், “எத்தனை நாளா அவளுக்கு இப்படி ஞாயிறு கிழமைகளில் ஸ்கூல் இருக்கு?” என்றான்.  “அது எப்போவாவது ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க..” “அதுதான் எப்போன்னு கேட்கிறேன். எனக்கு தெரிஞ்சு அவ இப்படி ஸ்பெஷல் கிளாஸ் போனது கிடையாதே.. சாயந்திரம் வரைக்கும் வைப்பாங்க அதுவும் அவளை அப்பா போய் கூட்டிட்டு வந்துடுவார் தானே?!” “ஆமாப்பா ஆனா நீ இரண்டு முறை ஊருக்கு போயிருந்தியே அப்போ கிளாஸ் வச்சுருந்தாங்க.. முதல்முறை உங்கப்பா கல்யாணத்துக்கு போயிருந்தால அவ ஃபிரெண்ட் ஒருத்தி கூட கிளம்பி போயிட்டா.. அடுத்தமுறையும் அவளே வந்து கூட்டிட்டு போனா..” “என்னது, நான் ஊருக்கு போயிருக்கும் போது மட்டுமா? அதுவும் ஃப்ரெண்ட் கூடவா? இதை ஏன் நீங்க என்கிட்டே சொல்லவே இல்லை..” “இதுல ச...

வாழ்க்கைத்துணை - டீசர்

Image
ரிஷி நிதானமாக காஃபியை பருக சிவபாலன் மூலமாக அவன் சாப்பிடாமல் கிளம்பியதை அறிந்தவள் கணவனுக்கு சுட சுட இட்லி, பொங்கல் வாங்கி கொண்டு வந்து வைத்தாள். “என்ன இதெல்லாம்? எதுக்குடி இப்போ வேஷம் கட்டுற?” என்றான் குறையாத கோபத்தோடு. “வேஷமா? மைண்ட் யுவர் லாங்குவேஜ் ரிஷி. உங்க முகத்தைப் பார்த்தாலே நீங்க சாப்பிடலைன்னு தெரியுது மாமாவும் அதேதான் சொன்னார்.. வயிறு காலியா இருந்தா புத்தி எப்படி சரியா யோசிக்கும்? அதனால தான் வாங்கிட்டு வந்தேன், சாப்ட்டுட்டு பேசலாம்..” என்றாள் கடுப்போடு. “அப்போ என்னை புத்தி இல்லாதவன்னு சொல்றியாடி..” என்று கோபத்தோடு ரிஷி எழுந்து விட்டான்.  “கொஞ்சமும் சுயபுத்தி இல்லாம அடுத்தவங்க சொல்றதை கேட்டு நடக்கிறவங்களுக்கு என்ன பெயரோ அதை நீங்களே உங்களுக்கு வச்சுக்கோங்க நான் சொல்ல விரும்பல…” என்றவள் அவன் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து, “இது ஒன்னும் நம்ம வீடோ பெட்ரூமோ கிடையாது உங்க இஷ்டத்துக்கு சத்தம் போட்டு பேச.. கொஞ்சம் உங்க சத்தத்தை கம்மி பண்றீங்களா?”  “நீ தான்டி என்னை பேச வைக்கிற, என்னையும் என் குழந்தைகளையும் பிரிச்சுட்டு இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி…” என்றவனை இடையிட்ட...

வாழ்க்கைத்துணை - 19.2

Image
  ரிஷிக்கு மகாலட்சுமியின் புன்னகை மிகவும் பிடித்தம். சத்தமின்றி மலரும் பூக்களை போல இதழ்களை பிரியாத அவள் புன்னகை பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். மகாவின் கண்களில் தோன்றும் ஆர்ப்பாட்டமில்லாத புன்னகை இதழ்களில் படர்ந்து அவற்றின் வளைவில் நிறைவு பெரும். பலமுறை அவள் புன்னகை முகத்தை ரசித்திருக்கிறான் ஆனால் பெரிதாக அவளிடம் பகிர்ந்தது கிடையாது.  இப்போதும் தன்னை கண்டதும் அவள் முகத்தில் க்ஷண நேரத்தில் வந்து போன புன்னகையில் ரிஷியின் பார்வை தேங்கி நின்றது. மகாவை கண்ட நொடி அவன் கொண்டிருந்த கோபம், ஆதங்கம், ஆற்றாமை எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. அவனையும் மீறி கடந்த சில நாட்களாக மனம் மனைவியை தேடிக்கொண்டு தான் இருக்கிறது.  இத்தனை நாள் பிரிவில் ‘பணமா? நகையா? பத்திரமா?’ எதுவுமே அவன் நினைவில் இல்லை. ஆனால் ‘தன்னோடு மனைவி இல்லையே’ என்ற எண்ணம் அவனை அதிகம் வாட்டியது.  இதுதான் காரணம் என்று வரையறுக்க முடியாதளவு ‘எதற்கு அவளை தேடுகிறோம்?’ என்று தெரியாமலே ரிஷியன் மனம் அவளை தேடிக்கொண்டிருந்தது.  அவனும் இங்கு நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொள்ள தான் வந்திருக்கிறான். ஆனால் இங்கே மகாவை அவ...