வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - டீசர்


ரிஷி நிதானமாக காஃபியை பருக சிவபாலன் மூலமாக அவன் சாப்பிடாமல் கிளம்பியதை அறிந்தவள் கணவனுக்கு சுட சுட இட்லி, பொங்கல் வாங்கி கொண்டு வந்து வைத்தாள்.


“என்ன இதெல்லாம்? எதுக்குடி இப்போ வேஷம் கட்டுற?” என்றான் குறையாத கோபத்தோடு.


“வேஷமா? மைண்ட் யுவர் லாங்குவேஜ் ரிஷி. உங்க முகத்தைப் பார்த்தாலே நீங்க சாப்பிடலைன்னு தெரியுது மாமாவும் அதேதான் சொன்னார்.. வயிறு காலியா இருந்தா புத்தி எப்படி சரியா யோசிக்கும்? அதனால தான் வாங்கிட்டு வந்தேன், சாப்ட்டுட்டு பேசலாம்..” என்றாள் கடுப்போடு.


“அப்போ என்னை புத்தி இல்லாதவன்னு சொல்றியாடி..” என்று கோபத்தோடு ரிஷி எழுந்து விட்டான். 


“கொஞ்சமும் சுயபுத்தி இல்லாம அடுத்தவங்க சொல்றதை கேட்டு நடக்கிறவங்களுக்கு என்ன பெயரோ அதை நீங்களே உங்களுக்கு வச்சுக்கோங்க நான் சொல்ல விரும்பல…” என்றவள் அவன் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து,


“இது ஒன்னும் நம்ம வீடோ பெட்ரூமோ கிடையாது உங்க இஷ்டத்துக்கு சத்தம் போட்டு பேச.. கொஞ்சம் உங்க சத்தத்தை கம்மி பண்றீங்களா?” 


“நீ தான்டி என்னை பேச வைக்கிற, என்னையும் என் குழந்தைகளையும் பிரிச்சுட்டு இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி…” என்றவனை இடையிட்டு, 


“ரிஷி நம்ம பிரச்சினையை அப்புறம் பேசிக்கலாம் முதல்ல சாப்பிடுங்க..” என்று சொல்ல அங்கே வந்து சேர்ந்தான் ராம்.


“என்ன மச்சி சாப்பிட உட்கார்ந்துட்ட டைம் ஆச்சு…”


“ராம் அவர் இன்னும் சாப்பிடலை,  சாப்பிட வச்சு கூட்டிட்டு வாங்க..” என்றவள் எழுந்து மீட்டிங் ஹாலுக்கு செல்ல முற்பட, 


“எங்க கிளம்பிட்ட?” என்றான் அடிக் குரலில். 


“வந்த வேலையை பார்க்க.. நீங்க எதுக்காக இங்க வந்தீங்கன்னு தெரியாது பட் நான் உங்க கூட சண்டை போடறதுக்கு வரல… வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் நம்ம பிரச்சினையை பேசிக்கலாம்..” என்றவள் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். 


************

மகாவும் மிதுனும் தங்களுக்கு தேவையானதை ப்ளேட்டில் எடுத்து வைத்துக் கொண்டு பேசியபடி டேபிளை நோக்கி சென்றனர். 


உணவு இடைவெளியில் 'தன்னை தேடி வருவாள்..' என்று காத்திருந்த ரிஷி மகா மிதுனுடன் செல்வதை கண்டு கொதித்து போனவன் உடனே ஒரு தட்டை எடுத்து கையில் அகப்பட்டதை வைத்துக்கொண்டு வேகமாக அவர்கள் பின்னே சென்றான்.


மகாவும் மிதுனும் சிரித்தபடி ஏதோ பேசிக்கொண்டு செல்ல அவர்களுக்கு இடையில் “எக்ஸ்கியூஸ் மீ” என்று புகுந்த ரிஷி “நீங்களும் எங்களோடு ஜாயின் பண்ணிக்கலாம் மிதுன். ஐ டோன்ட் மைண்ட்..” என்றான். 


ஒரு நொடி அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தவன், “ஸாரி நீங்க இருக்கிறதை மறந்துட்டேன் ரிஷி, யூ கேரி ஆன்.. ஸீ யூ லேட்டர் மகா..” என்றான் புன்னகையோடு. 


“இட்ஸ் ஓகே! நீங்க இங்கே உட்காருங்க நாங்க அந்த சைடு போறோம்..” என்று மகாவின் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வேறு புறம் சென்றான்.


“இப்போ எதுக்கு என்னை தனியா  கூட்டிட்டு போறீங்க? திரும்பவும் சண்டை போடவா?” என்றவளுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவன் அவள் கையில் இருந்து பிளேட்டை வாங்கி டேபிள் மீது வைத்து “உட்காருடி..” என்றான். 


ஒரு பெருமூச்சோடு அமர்த்தவள் இனி வரப் போகும் புயலை சந்திக்க தன்னை தயார்படுத்தும் முயற்சியாக கண்களை மூடி திறந்து கணவனை பார்த்தாள்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17