வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தீராத காதல் தொல்லையோ - 3.2

“க்ருதி!!” என்ற வேதாந்தின் அழைப்பு அவள் உயிரை ஊடுருவி செல்ல தன்னையும் மீறி அவள் பார்வை மீண்டும் அவன் வசம் செல்ல, “கங்க்ராட்ஸ் க்ருதி!!” என்றான் வசீகரமாய்.

“தே.. தேங்க்ஸ்!!” என்று அவள் சொல்ல மென்மையாய் இமைகளை மூடி திறந்து புன்னகையோடு தலையசைத்து அங்கிருந்து கிளம்பினான் வேதாந்த் ஆரியன்.

வேத் கிளம்பவும் தான் இத்தனை நேரம் அவள் இழுத்து வைத்திருந்த மூச்சு ஆசுவாசமாக வெளிப்பட்டது. 

நல்ல வேளை தனக்கு முன்பாக அவன் கிளம்பி விட்டான் ஒருவேளை அவள் கிளம்பாமல் இங்கேயே இருந்திருந்தால் அவளால் சாதாரணமாக எழுந்து அந்த இடத்தை விட்டு தடுமாற்றம் இல்லாமல் நடந்து சென்று இருக்க முடியுமா? என்று அவளுக்கே தெரியாது.

அந்த வகையில் தன் மனம் அறிந்தார் போல எவ்வித சங்கடமும் கொடுக்காத அவன் செயல் மட்டுமல்ல பார்வை, பேச்சு அனைத்தும் அவளையும் அறியாமல் அன்றைய நாள் முழுக்க வேதாந்துடனான நினைவுகளை அசை போட வைத்தது. 

“நிஜமாவே இது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கு ஸர்” என்றான் அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து வந்த தர்ஷன்.

“எது?” என்ற வேதாந்த் முகத்தில் வற்றாத புன்னகை.

“உங்களுக்கு மோடி மஸ்தான் வேலையெல்லாம் தெரியுமா ஸர்”

“என்ன மேன் உளறிட்டு இருக்க?”

“ஸர், மேம் எதுவும் சொல்லாமலே அவங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டு விஷ் பண்றீங்களே! உங்களை இப்படி பார்க்க எனக்கு  ரொம்பவே புதுசா இருக்கு ஸர்” என்றிட தன் கையில் இருந்த காப்பை ஏற்றிவிட்டபடி வெளியில் வந்தவனுக்கு கமிஷனரிடம் இருந்து அழைப்பு.

பேசி விட்டு வந்தவன் காரில் ஏறி அமர “ஸர் நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?!” என்றபடி ஸ்டார்ட் செய்தான்.

“சொல்லு தர்ஷன்!!” என்றான் க்ருதி தன்னிடம் பேசிய உற்சாகத்தோடு.

“ஸர் கொலுசு யாரோடதுன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?!” 

“இன்னுமா நீ கண்டுபிடிக்காம இருக்க?”

“மேமோடது தானே?!” என்றதற்கு உற்சாக தலையசைப்பு.

“கொடுத்துட்டீங்களா ஸர், நான் கவனிக்கலை…” என்றவன் வழக்கு குறித்து வந்த அலைபேசி அழைப்பை ஏற்க சென்றிருந்தான்.

“இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கு..” என்றவன் கரம் தன் நெஞ்சில் பதிந்து சட்டைப்பையில் இருந்த கொலுசை வருடியது.

“இன்னொரு கேள்வி ஸர்..”

“சும்மா கேளு தர்ஷன்..”

“இவ்ளோ தூரம் வந்தவர் மேடமை கொண்டு போய் டிராப் பண்ணி இருந்தா உங்களுக்கு மட்டுமில்லை அவங்களுக்கும் சந்தோஷமா இருந்திருக்குமே?!..” என்றிட அதற்கும் அவன் புன்னகை இன்னும் விரிந்தது.

ஆனால் மகிழ்ச்சியால் அல்ல அவன் கொண்டிருக்கும் வலியை மறைக்க முயன்றதால்!!

பின்னே! வாசுதேவன் மகள் இன்று அவனையும் அவன் வாழ்த்தை எதிர்பாராத அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவனுக்கு பதில் அளித்ததே அதிகம். இதில் எங்கிருந்து அவனோடு வருவதெல்லாம்?!

“உன் மேடமை கூட்டிட்டு நான் ஸ்டூடியோவுக்கு கிளம்பிட்டா கமிஷனர் ஆபீஸுக்கு யார் போகறதாம்? இப்போவே டென் மினிட்ஸ் லேட், பேச்சை குறைச்சுட்டு வேகமா போ மேன்..” என்றவனுக்கு ஃபாரன்சிக்கில் இருந்து அழைப்பு வர அதை ஏற்றபடி கமிஷனர் ஆஃபிஸுக்கு கிளம்பினான். 

வேதாந்த் கிளம்பி பிறகும் அவள் செவியில் ரசனையோடு வேத் அவள் பெயரை உச்சரித்தது ஒலித்து கொண்டே இருக்க மெல்லிய நடுக்கம் உண்டானது மிருதுளாவிடம்.

பின்னே அவன் உச்சரித்த விதத்தில் ‘உயிரை துளைத்து ஊடுருவிய அவள் பெயரே தேனில் மூழ்கிய பலாவின் சுவையாக தித்திக்க செய்கிறதே!! ஏன் இப்படி? எதனால்?’ என்று புரியாமல் அலமலந்து போனவள் தன் நடுக்கத்தை மறைத்தபடி எழுந்து கொண்டாள். 

“என்ன நடக்குது இங்கே? ஏசிபிக்கு உன்னை தெரியுமா? உன் பேரை சொல்றாரு.. விஷ் பண்றாரு, எனக்கு ஒண்ணுமே புரியலை. உண்மையை சொல்லு உனக்கும் அவரை தெரியுமா?” என்றதற்கு மெல்லிய தலையசைப்பு. 

“நிஜமாவா? எப்படி?” 

“அவங்க என் அண்ணியுடைய தம்பி..”

“வாட்? நிஜமாவா சொல்ற? பாருடா, அப்போ அவர் உனக்கு முறை மாப்பிள்ளைன்னு சொல்லு..” என்றதில் தூக்கி வாரிப்போட்டது மிருதுளாவிற்கு.

“ஹே என்ன பேசுற? அப்படி எதுவும் கிடையாது. நான் அவர்கிட்ட பெருசா பேசினது கூடவே இல்ல..” 

“அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?”

“எனக்கு போலீஸ்னாலே அலர்ஜி தேஜூ, உனக்கு தெரியாதா?”

“உனக்கா? உன் அப்பாவுக்கு தானே போலீஸ் பிடிக்காதுன்னு சொன்ன?!”

“ஆமா, அவருக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது. இப்போ நான் அவங்க கூட பேசினது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!”

“அண்ணியுடைய தம்பின்னு சொல்ற… போலீசே பிடிக்காதவர் இவரோட அக்காவை மட்டும் எப்படி உங்க அண்ணனுக்கு கட்டி வச்சீங்க? ஸ்ட்ரேஞ்ஜா இருக்கு..” என்றவளின் சந்தேகமும் நியாயம் தான்!! 

பின்னே உத்ராவை நிலவனுக்கு திருமணம் செய்த போது வேதாந்த் காவல்துறையில் இல்லையே.. ஒருவேளை இருந்திருந்தால் நிச்சயம் வாசுதேவன் உத்ரவை தன் வீட்டு மருமகளாக கொண்டு வந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான்!!

“இவ்ளோ நெருங்கின சொந்தமா இருந்துட்டு பேசாமல் இருக்க முடியுமா என்ன?”

“எனக்கு அவங்க கிட்ட பேச என்ன இருக்கு?”

“ஹே!! என்ன இவ்ளோ அசால்ட்டா கேட்டுட்ட? நம்ம ஏசிபி மாதிரி பாச்சிலர் மட்டும் சொந்தமா இருந்துட்டா பொண்ணுங்க மட்டுமில்லை பெற்றவர்கள் மத்தியிலும்  அவரை கொத்திட்டு போக எவ்ளோ போட்டி நடக்கும் தெரியுமா?” 

“எனக்கு அதெல்லாம் தெரியாது.. டைம் ஆச்சு கிளம்பலாமா?” என்றபடி கேப்பில் ஏறி அமர்ந்தாள்.

“என்னடி இது போலீஸா இருக்கிறது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? இதுக்காகவே அவங்க கூட பேசாம இருப்பியா?”

“உன் எதிர்ல தானே பேசினேன்.. ப்ச் இப்போ நீ எதுக்காக இவ்ளோ கேள்வி கேட்கிற? கொஞ்ச நேரம் அமைதியா வாயேன்..” என்றவள் மீண்டும் வாசுதேவனுக்கு அழைத்தாள்.

அண்ணனோடு கோவில் கும்பாபிஷேகம் குறித்த பேச்சு வார்த்தையில் இருந்தவர் மகளின் அழைப்பை இம்முறையும் ஏற்கவில்லை.

நேரத்திற்கு ஸ்டூடியோ சென்றுவிட்ட க்ருதி கேப்பில் இருந்து இறங்கிய போது தான் தன் கொலுசில் ஒன்று இல்லாததை உணர்ந்தாள்.

“என்னாச்சு மித்து?”

“என் கொலுசு!! கொலுசை காணோம் தேஜு…” என்றாள் பதற்றக்குரலில்.

“நல்லா தேடி பாரு..” என்றவளும் காரில் தேட அங்கே கொலுசு இல்லை..”

“என் அம்மாவோட கொலுசு. அப்பா முதல் முதல்ல அவங்களுக்கு வாங்கி கொடுத்த தங்க கொலுசு தேஜு..” என்றவள் குரல் கலங்கி போயிருந்தது. 

“மேம் நீங்க கேப்ல ஏறும் போது கொலுசு இருந்ததா? என்றார் டிரைவர்.

“தெரியலை ண்ணா, நான் கவனிக்கலை..

“டோன்ட் வொரி மித்து, கொலுசு கிடைச்சுடும்..”

“இங்கே இல்லையேடி..”

“ஒருவேளை கோவில்ல தொலைஞ்சு இருக்குமோ?!..”

“அப்படி தான் நினைக்கிறேன்..”

“மேம் தங்க கொலுசுன்னு சொல்றீங்க, பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடலாமா?

இல்லை அதெல்லாம் வேண்டாம்” என்றவளுக்கு தன் போக்கில் வேதாந்தின் நினைவு ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி, கோவில்ல தான் இருக்கணும், நீ பாரு தேஜு” என்றாள்.

சரி நீ கவலைப்படாத, நான் இப்போவே கோவிலுக்கு போய் பார்த்துட்டு வரேன்.. உனக்கு டையமாச்சு நீ போ…” 

தேஜு கோவிலுக்கு செல்ல கண்ணீரை உள்ளிழுத்தபடி அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட்டிடம் க்ருதி விஷயத்தை சொல்ல அடுத்த ஐந்தாம் நிமிடம் இசையமைப்பாளர் முன் அமர வைக்கபட்டிருந்தாள்.

அதேநேரம் வீட்டிற்கு வந்த சைலேந்தரிடம், “என் தம்பி கால் பண்ணி இருந்தாங்க..” என்றார் வாகீ.

ஆம் அர்ஜூன் குழந்தைகளோடு கிளம்ப சமையலறைக்கு வந்த வாகீஸ்வரிக்கு தன் தம்பியிடம் இருந்து அழைப்பு வந்தது.

பொதுவாகவே அதிகாலை அழைப்பு என்றால் நிச்சயம் அது வெளிநாட்டில் இருக்கும் அவரின் தம்பி சத்தியசீலனாக தான் இருக்கும். இன்று சற்று தாமதமாக அழைத்து இருக்கிறார்.

“என்ன விஷயமா?” 


“குடும்பத்தோடு இந்தியாவிலேயே செட்டில் ஆகப்போறான்னு ஏற்கனவே சொல்லி இருந்தேனே நியாபகம் இருக்கா?”


“இருக்கு மா..” என்றார் புன்னகையோடு.


“இந்த மாச கடைசி மொத்தமா இந்தியாவுக்கு வந்துட போறான், அதுக்கான ஏற்பாடு எல்லாம் முடிச்சாச்சாம்”

 

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் வாகீ..” 


“விஷயம் அது இல்லைங்க..”

“வேற என்னமா? அதுதான் போன மாசமே அவனோட வீட்டை கிளீன் பண்றதுக்கு ஆட்கள் ரெடி பண்ணிட்டேனே.. வேற ஏதாவது உதவி தேவைப்படுதா?” 

“அது இல்லைங்க, நம்ம ஹன்சிகாவுக்கு கல்யாணம் பண்றதா முடிவு பண்ணி இருக்கானாம். வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்பதுல உறுதியா இருக்கான்..”


“ஏன் அங்கே நம்ம ஊர் பசங்க யாரும் இல்லையா என்ன?” 


“அதெல்லாம் இருக்காங்க. ஆனா அவனுக்கு ஒரே பொண்ணு இல்லையா?! அவங்க இங்க வந்த பிறகு கண் காணாத தூரத்தில் மகளை கொடுத்துட்டு எதுக்குன்னு யோசிக்கிறான்..”


“உன் தம்பி நினைச்சா போதுமா? ஹன்சி ஒத்துக்கணுமே?! அந்த நாட்டு கலாச்சாரத்துக்கு பசங்க டேட்டிங் அது இதுன்னு இருப்பாங்களே.. ஹன்சிக்கு அப்படி எந்த விருப்பமும் இல்லையா?” 


“நீங்க வேற, அவளை வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க அந்த அளவுக்கு கன்சர்வேட்டிவ்! டாக்டர் படிப்பு நல்லபடியா முடிச்சிட்டா இங்க நம்ம நாட்டுல எழுத வேண்டிய எக்ஸாம் இன்னும் மூணு மாசத்துல வருதாமே அதுக்கான பிரிபரேஷனும் பண்ணிட்டு இருக்கா..”


“கல்யாண பொறுப்பை அப்பா அம்மாகிட்ட விட்டுட்டா அவங்க எது சொன்னாலும் சரின்னு சொல்லி இருக்கா. எந்த நாட்டுக்கு போனாலும் வேர் இங்கே தானே! அன்னைக்கு நான் எங்கப்பா அம்மாகிட்ட சொன்ன பதிலை தான் என் தம்பி பெண்ணும் சொல்லி இருக்கா..” என்றார் பெருமிதத்தோடு. 


“என்ன வாகீ சொல்ற இந்த காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா?”

 

“ஏன் இருக்கக் கூடாதா? காலம் மாறினா எல்லாமே மாறிடனும்னு சட்டமா என்ன? எல்லாரும் செய்யறதால சரி தப்பு பார்க்காமல் நாமளும் அதை செய்யணுமா என்ன? அவளுக்குன்னு ஒரு விருப்பம் இருக்க கூடாதா?”

 

“அதுதான் மா கேட்கிறேன் அவளுக்குன்னு ஒரு விருப்பம் இல்லாம அப்பா அம்மாவோட விருப்பம்னு சொல்றது நிஜமாவே ஆச்சரியமா இருக்கு…”


“உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கலாம் ஆனா எனக்கு இல்லை. ப்ச் நான் நான் பாருங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கேன்..” என்றபடி கணவர் அருகே அமர்ந்தார். 


“சரி என்ன விஷயம் சொல்லு..”


“என் தம்பிக்கு ஹன்சி குட்டியை நம்ம பையனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு எண்ணம். சொந்தம் விட்டுப் போகாதுங்கறது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணிக்கு தான் இதுல ரொம்ப விருப்பம்…” 


“என்னம்மா சொல்ற? அதுக்கு வேத் சம்மதிக்கணுமே?!”


“எனக்குமே அந்த கவலை தாங்க. அதனால தான் சீலன் நிச்சயம் கல்யாணம்னு கேட்டதுக்கு நான் எந்த உறுதியும் கொடுக்கல. எங்க பையனோட விருப்பம் தான் எங்களுடைய விருப்பம்னு சொல்லிட்டேன்..”


“மித்து பத்தி ஏதாவது சொன்னியா?”


“இல்லைங்க எதுவும் சொல்லல.. சீலனோட ஆசையையும் மறுக்க முடியல. எனக்கு ஹன்சி மித்து யார் மருமகளா வந்தாலும் சந்தோஷம் தான்..”


“ஆனால் அதை தீர்மானிக்க வேண்டியது வேத் தான்!!” என்றிட வாகீஸ்வரி முகம் பொலிவிழந்து போனது.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17