நயனிகாவிடம் பயிலும் மாணவனான ராஜன் அவளை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை பக்கவாக போடத் தொடங்கி விட்டான்.
எதார்த்தம் போல அவளிடம் பேசுவது ஏதேனும் விசேஷங்களில் புகைப்படம் எடுக்கும் போது எதேர்ச்சையாக நிற்பது போல நயனிகாவின் அருகில் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டான்.
அதுமட்டுமல்ல பல நாட்கள் லைப்ரரி, ஆடிட்டோரியம், கேன்டீன் என்று பல இடங்களில் நயினியை சந்தித்து,
“நீங்க இல்லை என்றால் இந்நேரம் நான் கிடையாது. சரியான நேரத்துல என்னை காப்பாற்றி வழிகாட்டின உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு புரியலை மேம்..” என்று உணர்ச்சி பெருக்கில் அவள் கையை பிடித்தபடி நன்றி தெரிவித்து அனைத்தையும் புகைப்படமாகவும் மாற்றியிருந்தான்.
இது எதையும் அறியாத நயனி எதார்த்தம் போல அவனிடம் புன்னகையோடு பேச அதுவே இப்போது அவளுக்கு வினையாகி போய் இருந்தது.
ஆனால் சிறுத்தை என்றும் தம் புள்ளிகளை மாற்றிக்கொள்வது கிடையாது இல்லையா?!
அப்படி தான் மீண்டும் ஒரு மாணவனுடான பிரச்சனையில் நயனி தலையிட்டதில் அவள் மீதான வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
ராஜன் சரியான சந்தர்பத்திற்காக காத்திருந்த போது தான் கல்லூரியில் நடைபெற்ற விழா அமைந்தது.
தன் காதலியிடம் திட்டத்தை ராஜன் விளக்கவும், "ஏன் ராஜன் இப்படி பண்ற? மேம் ரொம்ப நல்லவங்க டா.. இதெல்லாம் வேண்டாம்" என்றாள் திவ்யா.
"அடங்குடி! அவளுக்கு என்ன தைரியம் இருந்தா என்னை சஸ்பெண்ட் பண்ண வைப்பா.. இன்னிக்கு நான் அடிக்கிற அடியில இருந்து அவ எழவே கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றான்.
திவ்யாவை காவலுக்கு நிறுத்தி விட்டு வகுப்பறையில் மயங்கி இருந்த நயனியை நெருங்கி தன் சட்டையை கழற்றி விட்டு நயனி புடவை மாராப்பை அகற்றி விட்டு அவளை அணைத்துக் கொண்டிருப்பது போல, முத்தமிட்டுவது போல என்று அவளுடன் மிக நெருக்கமான புகைப்படங்களை எடுத்திருந்தான்.
அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த திவ்யாவால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. அதனால் உடனே உள்ளே சென்றவள், “ராஜன் ஸ்டாப்!!” என்றாள்.
“யூ பிட்ச்! எதுக்குடி இப்போ உள்ள வந்த? வெளியே யாராவது வராங்களான்னு பாரு..” என்றவன் நயனியை அவன் இடையோடு கட்டிக்கொண்டு புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்தான்.
“சாங் முடிஞ்சது எல்லா கேர்ள்ஸும் வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் போ..”
“இன்னும் நேரம் இருக்குமேடி அதுக்குள்ளவா வந்துட்டாங்க?”
“ஆமா, டைம் இல்லை கிளம்பு” என்றிட தன் நோக்கம் முழுதாக நிறைவேறாத அதிருப்தியோடு பேன்ட்டை சரி செய்தவன் சட்டையை அணிந்தபடி வெளியேறினான்.
ஆனால் திவ்யா உடன் வராததை கண்டவன் மீண்டும் வந்து, “என்னடி பண்ற வா போகலாம்” என்றான்.
“ராஜன் மேம் இருக்கிற நிலைமையை பார்த்தா என்னாகும்?”
“பார்க்கணும்னு தானே இந்த நாடகமே?!”
“ஆனா இப்போ மத்தவங்களுக்கு தெரிஞ்சா நாம மாட்டிக்க வாய்ப்பு இருக்கு. உன் எண்ணம் ஈடேறாது சொன்னா கேளு, முதல்ல நீ போ நான் வரேன்..” என்றவள் ராஜன் செல்லவும் நயனியின் மாராப்பை சரி செய்தாள்.
பின் அவளை டேபிள் மீது தலை சாய்த்து படுக்க வைக்க மயக்கத்தில் இருந்த நயனிகா இது எதையும் அறியவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்த மாணவிகள் நயனி டேபிளில் சாய்ந்திருப்பதை கண்டு ஒருவேளை உறங்குகிறாளோ? என்று நினைத்து அடுத்த பாடலுக்கு தயாராக தொடங்கினர்.
ஒருத்தி நயனியை எழுப்ப முயல, "ஏய் வேண்டாம் விடுடி! மேம் காலையில் இருந்து டான்ஸ், ஸ்கிட், மைம்னு எல்லா ரிஹர்சல்லயும் கூட இருந்து எவ்ளோ பேரோட பெர்ஃபார்மென்ஸ்க்கு ட்ரெஸ் பண்ண ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க..”
“மே பீ ரொம்ப டயர்டா இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ணாத நாம அடுத்த டான்ஸ்க்கு லேஹெங்கா தானே போட போறோம் நாமளே ரெடியாகிடலாம்" என்று தயாராகி சென்றனர்.
“ஆனாலும் ஹேர் ஸ்டைல் என்னடி பண்ண?”
“அதுதான் மேம் ஏற்கனவே ஒரு டுட்டோரியல் காட்டினாங்களே நானும் ரேணுவும் ஏற்கனவே ப்ராக்டீஸ் பண்ணினோம் ஸோ நாமலே பண்ணிக்கலாம் நோ ப்ராப்ளம்..” என்றவர்கள் தயாராகி அடுத்த பாடலுக்கு கிளம்பி சென்றனர்.
அவர்கள் செல்லவுமே மனம் கேளாத திவ்யா ராஜனுக்கு தெரியாமல் மீண்டும் அறைக்கு வந்து நயனிகாவிற்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றாள்.
ஆனால் முடியாததில் அவளுக்கு துணையாக அங்கேயே இருந்தவள் அடுத்தடுத்து வந்த மாணவிகள் மேம் இன்னுமா தூங்குறாங்க? எழுப்பி விடலாமா?” என்றனர்.
“இல்லை நானே ட்ரை பண்ணினேன் ஆனா மேம் தான் எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க..” என்றதில் அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
மேலும் இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கண் விழித்த நயனி அருகே இருந்த திவ்யாவிடம் "என்ன நீ மட்டும் இருக்க மத்த கேர்ல்ஸ் எங்க? நான் தூங்கிட்டனா?!" என்றாள்.
"ஆமாம் மேம்" என்றவள் எதுவும் நடக்காதது போல அவளோடு கீழே இறங்கி சென்றாள்.
அடுத்த சில நாட்களிலேயே ராஜன் அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இடையே பரவ செய்திருந்தான்.
அவன் நினைத்தபடி அந்தரங்க நிலையில் நயனியோடு வீடியோ எடுக்க முடியாததால், அதில் மட்டும் அவன் வேறொரு பெண்ணோடு நெருக்கமாக இருந்ததில் அப்பெண்ணிற்கு பதில் நயனியின் முகத்தை தத்ரூபமாக ஏஐ மூலமாக மாற்றியிருந்தான்.
ராஜனை அழைத்து விசாரிக்கையில், “எல்லாமே உண்மை தான் ஸார்! மேம்கும் எனக்கும் ரொம்ப நாளாவே பழக்கம் உண்டு. அன்னைக்கு மேம் தான் ஸார் என்னை கூப்பிட்டாங்க, கிளாஸ்ரூம்ல எப்படின்னு நான் கேட்டதுக்கு எனக்கு நீ இப்போவே வேணும் உடனே வாடா இல்லை இன்டர்னல்ஸ்ல கை வைப்பேன்னு சொன்னாங்க அதனால தான் நான் போனேன்” என்று எடுத்ததுமே அனைவரின் தலையிலும் இடியை இறக்கி இருந்தான்.
“ஸார் இது அப்பட்டமான பொய்! இவனோட தப்பை மறைக்க பொய் சொல்றான்” என்று சீறினாள் நயனி.
“யாரை பேசறன்னு புரியுதா? பொய் சொன்னா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும் என்று எச்சரித்தார் சக்கரவர்த்தி
"நான் எதுக்கு ஸார் பொய் சொல்லணும்? கரெஸ் ஸார் கல்யாணம் பண்ணின அடுத்த நாளே இவங்களை பிரிஞ்சு போயிட்டதால ரெண்டு வருஷமா அவங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றதா சொன்னாங்க..”
“அதுமட்டுமில்லை அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருந்ததாம் அதனால அவங்களுக்கு கம்பனி கொடுக்க சொல்லி கேட்டாங்க”
“முதல்ல என்னால இதை நம்ப முடியலை. ஆனா மேம் தான் அவங்களுக்கு இந்த ஃபேவர் பண்ணினா நான் ட்ரக்ஸ் எடுக்கிற விஷயத்தை யார்க்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னாங்க...”
“யூ ராஸ்கல்! உனக்கு போய் பாவம் பார்த்தேனே?! உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அந்த பழக்கத்துல இருந்து உன்னை காப்பாத்த தானேடா நினைச்சேன் ஆனா எப்படி நாக்கூசாம இப்படி பேசற?” என்ற நயனி அவனை அடிக்கவே சென்று விட்டாள்.
மற்றவர்கள் நயனியை இழுத்து பிடிக்க, “என் பேரன்ட்ஸ் மேல சத்தியமா இதுதான் ஸார் நடந்தது. அப்பவும் நான் இது தப்பு! முடியாது மேம்னு சொன்னேன் ஆனா அவங்க தான் தப்பை தடயமே இல்லாமல் பண்ணினா தப்பு என்னைக்கும் தப்பாகாதுன்னு சொன்னாங்க” என்றவனை நயனி ஓங்கி அறைந்து,
"யூ ராஸ்கல்! உன்னை.." என்று மீண்டும் அவனை தான் போட்டிருந்த செருப்பை கொண்டு அடிக்க அங்கே பதற்ற சூழல் உருவாகியதில் பெண் பேராசிரியர்கள் அவளை தனியே அழைத்து சென்றனர்..
“ஸார் நான் அப்போவே நீங்க என்னோட குரு இதெல்லாம் தப்புன்னு சொல்லி நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன். ஆனா அவங்க ஆசைக்கு சம்மதிக்கலை என்றால் என் இன்டர்னல்ஸ்ல கை வச்சு செமெஸ்டர் எழுத விடாம பண்ணுவேன்னு சொன்னாங்க”
“போதும் நிறுத்து ராஜன். அபாண்டமா பேசாத?! யார் சொல்லி நயனி மேல இப்படி ஒரு பழி சுமத்துற?!” என்றார் சக்கரவர்த்தி.
“நான் ஏன் ஸார் பழி சொல்லணும்? நடந்த உண்மையை தான் சொல்றேன். அவங்களுக்கு என்னை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் என்னை கூப்பிடுவாங்க.. என் படிப்பை கையிலெடுத்து அவங்க மிரட்டறப்போ நான் என்ன ஸார் செய்ய முடியும்? இப்போ இந்த விஷயம் என் லவ்வர்க்கு தெரிஞ்சுடுச்சு..”
“எங்களுக்குள்ள பிரச்சனை அதிகமானதுல அவ தான் என் ஃபோன்ல இருந்து இந்த போட்டோஸ் எல்லாம் லீக் பண்ணிட்டா இல்லைனாலும் நான் இதெல்லாம் வெளியே தெரிய விட்டிருக்க மாட்டேன்” என்றவனின் பேச்சும் நம்பும் படியாக இருந்தது..
பின்னே! ஏற்கனவே ஒரு ஆசிரியை பதினேழு வயது மாணவனுடன் உறவில் இருந்ததோடு அவனை அழைத்து கொண்டு ஊரை விட்டு சென்றுவிட்ட செய்தியால்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும்.. என்று யாருக்கு தெரியும்?!
ஒருவேளை இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று பேராசிரியர்கள் இடையிலேயே பேச்சு முளைத்தது.
என்ன தான் கல்லூரியினுள் அதிகளவிலான கட்டுப்பாட்டின் காரணமாக போதை பொருட்கள் பரவாமல் இருந்தாலும் வெளியில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பல மாணவ மாணவிகள் கூட்டாக போதை பொருட்களை எடுப்பது அங்கு வரும் பெண்களோடு உல்லாசமாக இருப்பது என்பது வழக்கமாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி சீனியர் ஜூனியர் என்று பல மாணவ மாணவிகள் இவன் கட்டுப்பாட்டில் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களில் சிலர் நயனிக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தனர்.
“அப்படி என்ன மா பார்த்தீங்க?” என்ற சக்கரவர்த்தியின் கேள்விக்கு..,
“ஸார் நயனி மேம் அடிக்கடி ராஜன் கிட்ட தனியா பேசுவதை பார்த்திருக்கோம். கிளாஸ் மட்டும் இல்ல வெளியிலும் நிறைய முறை சிரிச்சு பேசுறது கையை பிடிக்கிறதுன்னு நாங்களே பார்த்திருக்கோம். ஆனா அப்போ இவங்க இப்படின்னு எங்களுக்கு தெரியாது”
“ஏம்மா நயனி கிட்ட எத்தனையோ ஸ்டுடென்ட்ஸ் படிக்கிறப்போ அவங்க என்ன ராஜனோட மட்டும் தான் பேசினாங்களா? வேற யாருடனும் பேசவில்லையா?” என்று ஒரு ஆசிரியர் கேட்டதற்கு,
“இருக்கலாம் ஸார் ஆனா மத்தவங்க கிட்ட பேசுறதுக்கும் இவன் கிட்ட பேசறதுக்குமான வித்தியாசத்தை நிறைய முறை பார்த்திருக்கிறோம்...” என்றனர்.
“அப்படி என்ன வித்தியாசம்?”
“இவங்க பல இடங்களில் ரொம்ப நேரம் சிரிச்சு பேசி இருக்காங்க, ஒண்ணா சாப்பிட்டு இருக்காங்க..” என்றிட அது நேரம் வரை பொறுமையாக அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த நயனி,
“ஸார் ராஜன் அவன் பண்ணின தப்புக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டு ‘நான் இந்த பழக்கத்துல இருந்து விடுபட நினைக்கிறேன் எனக்கு கவுன்சில் பண்ணுங்க மேம்’ என்று கேட்டுகிட்டதால பல நேரம் பேசி இருக்கேன் ஆனா இவங்க சொல்ற மாதிரி கிடையாது... இந்த ஃபோட்டோ எப்படி எடுக்கபட்டது என்று எனக்கு தெரியாது..” என்ற போதும் அதை ஏற்க தான் அங்கு யாரும் தயாராக இல்லை.
“ஸார் இது ஏஐ காலகட்டம்! எத்தனை ஃபேக் போட்டோஸ்னாலும் ரெடி பண்ணலாம் ஒரிஜினல் போலவே இருக்கும். இந்த போட்டோஸ் உண்மை தன்மையை சோதிக்காமல் ஒரு முடிவுக்கு வராதீங்க ஸார்” என்று சக பேராசிரியையும் நயனியோடு நட்புறவில் இருப்பவளுமான மகேஸ்வரி சொல்ல சில ஆண் ஆசிரியர்களும் அதை ஆமோதித்தனர்.
நயனியின் விஷயம் கல்லூரி முழுக்க பரவி விட்டதில் அவர்கள் சொன்னது போல உண்மை தன்மையை சோதிக்க அன்றே புகைப்படங்களை அனுப்பி இருந்தனர்.
ஆனால் அதற்குள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நயனிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருந்தனர்.
"வீடியோவின் உண்மைத் தன்மையையும் சோதிக்க அனுப்பி இருக்கிறோம்" என்று நிர்வாகம் அவர்களிடம் சொல்ல,
“இதெல்லாம் கண் துடைப்பு! ஸ்டுடென்ட்டை கட்டாயபடுத்தின லக்சரரை தண்டிப்பதை விட்டுட்டு நீங்க உங்க ஸ்டாஃப்பை காப்பாற்ற பார்க்கறீங்க” என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அதற்குள் விஷயம் காட்டுத்தீயாக சமூக வலைதளங்களில் பரவி நயனிக்கு எதிரான கருத்துக்கள் அலை மோதியது. உடனடியாக நிர்வாகம் அவளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கி விட்டனர் மாணவர்கள்.
Comments
Post a Comment