வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 11.2

 

“இதே இந்த இடத்துல ஒரு ஆண் பேராசிரியர்  இருந்திருந்தா யோசிக்காம விரட்டி இருப்பீங்க ஆனா பொண்ணு செய்தா மட்டும் மூடி மறைச்சு தப்பிக்க வைக்க பார்க்கறீங்க.. அதுவும் அவங்க உங்க மருமகள் என்பதால விசாரிக்க கூட முதலில் நீங்க தயாரா இல்லை” என்று சக்கரவர்த்திக்கு அழுத்தம் அதிகரித்தது.

 

“யாரா இருந்தாலும் தீர விசாரிச்சிட்டு தான் முடிவெடுக்கணும். உங்க அவசரத்துக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செய்ய முடியாது. ஃபோட்டோவின் உண்மை தன்மை குறித்த ரிசல்ட் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. இப்போதைக்கு போராட்டத்தை கைவிட்டு கிளாஸ்க்கு போங்க” என்று சமாதானபடுத்த முயன்றார்.

 

“ரிசல்ட் வரட்டும் நீங்க ஆக்ஷன் எடுங்க ஆனா அதுவரைக்கும் இவங்க காலேஜ் வரக்கூடாது அப்படி வந்தா நாங்க வர மாட்டோம்” என்று அனைவருமே ராஜனின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

 

நயனியை கல்லூரியில் இருந்து வெளியேற்றும் வரை போராடுவோம் என்று மாணவர்கள் சக்கரவர்த்தியின் அறைக்கு வெளியில் குழுமிவிட்டனர். 

நிலைமை கை மீறி செல்வதை கண்ட சக்கரவர்த்தி நயனியை முதலில் கல்லூரியில் இருந்து கிளம்பும் படி சொன்னார்.

 

நயனியும் கல்லூரியில் இருந்து வீடு வந்து சேர ஹாலில் அனைவரும் குழுமியிருக்க அவள் பெற்றோரும் அவளுக்காக காத்திருந்தனர்.

 

நயனி வீட்டினுள் நுழையும் முன்னமே, “அங்கேயே நில்லுமா இனி இந்த வீட்டுக்குள்ள ஒரு அடி எடுத்து வச்ச நடக்கிறதே வேற” என்றார் முரளிதரன்.

 

ஆனால் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே நயனியை நெருங்கிய சேதுராமன் எடுத்ததுமே நயனிகாவை ஓங்கி அறைந்தார்.

 

“எங்க மானத்தை வாங்குறதுக்குனே வந்து பொறந்திருக்கியா நீ?! அப்படி என்ன அரிப்பெடுத்து போய் வயசு வித்யாசம் தெரியாம திரியற ? மாப்பிள்ளை வர வரைக்கும் கூட காத்திருக்க முடியாதா? உன் லட்சணம் தெரிஞ்சு கேள்வி கேக்குற சம்பந்தி முதல் யாருக்கும் பதில் சொல்ல முடியல..” 

 

“அக்கம் பக்கம் தலை காட்ட முடியல.. ஆசிரியர் என்பது எத்தனை உன்னதமான பணி ஆனா உங்க பொண்ணு அந்த ஆசிரியர் இனத்துக்கே ஒரு பெரும் கரும்புள்ளின்னு அவனவன் காரி துப்புறானுங்க” என்றவர் மீண்டும் அறையும் முன் நிதிஷா அவர் கையை தடுத்து பிடித்தாள்.

 

“விடு நிதி! யாருக்கும் கட்டுபடாம தான்தோன்றி தனமா திரிஞ்சப்பவே இவளை கண்டிச்சு இருக்கணும் ஆனா உன் அம்மா ஹாஸ்டல்ல தண்ணி தெளிச்சு விட்டதோட விளைவை இப்போ நாம அனுபவிக்கிறோம்..”

 

“அப்பா என்னப்பா பேசுறீங்க? அக்காவை பத்தி நமக்கு தெரியாதா? யாரோ ஒருத்தன் இந்த மாதிரி தப்பா பரப்பினா அதை நம்புவீங்களா? நான் தான் சொல்றேனே அக்கா அந்த மாதிரி கிடையாது எங்கேயோ தப்பு நடந்திருக்கு” என்றிட அதுநேரம் வரை கண்ணீரோடு நின்றிருந்த தனலட்சுமி ஓடி வந்து மகளை கட்டிக் கொண்டார்.

 

“யார் என்ன சொன்னாலும் நீ கலங்காதே வர்ஷிமா எனக்கு உன்னை பத்தி தெரியும்..” என்றார்.

 

“என்னடி தெரியும்? ஒழுங்கா பொண்ண வீட்டோடு வச்சு கட்டு கோப்பா வளர்க்க துப்பில்ல தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு அழுது ஆர்பாட்டம் பண்ணினா சரியாகிடுமா?” என்றபடி தனலட்சுமியை இழுத்து பிடித்து அவரையும் அறைந்தார் சேதுராமன்.

 

“இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கிறீங்க?!” என்று நயனி ஆவேசமாக கேட்க.,

 

“ஒழுங்கா உன்னை வீட்ல வச்சு சொல்லி வளர்த்திருந்தா என் மகளை மாதிரி கட்டுக்கோப்பா ஒழுக்கத்தோடு வளர்ந்திருப்ப ஆனா எந்த கட்டுப்பாடும் இல்லாம ஹாஸ்டல்ல விட்டது இவ தானே! அதுக்கு தான் இந்த அடி..”

 

“நாக்கு மேல பல்லை போட்டு அவனவன் பேசுறான். என்ன பொண்ணு வளர்த்திருக்கீங்க இதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்னு சொல்றானுங்க...” என்றிட “இத்தனை அசிங்கத்துக்கு பிறகும் என்ன தைரியத்துல மா இங்க வந்த?” என்று முரளிதரன் நயனி முன்னே வந்தார்.

 

“ஏன் இது தான் என் வீடு! நான் இங்க தானே வரணும்!”

 

“என்னமோ நீ உழைச்சு கட்டின மாதிரி அவ்வளவு உரிமையா பேசுற? நாங்க யாரு எப்பேர்பட்ட குடும்பம்னு தெரியுமா? எங்க வந்து சேர்ந்து இருக்கன்னு கூட தெரியாம கண்டபடி கூத்தடிச்சிட்டு இப்போ குரலை உயர்த்துவியா? முதல்ல வெளியே போ” என்றார்.

 

“என் பெண்ணை கூட வேண்டாம்னு சொல்லி உன்னை கட்டி வச்சதுக்கு எங்க அக்கா மாமா மானத்தை மொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டியே?! என் மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு துரோகம் செய்துட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு இங்க வந்து நிற்க என்ன தைரியம் இருக்கணும் உனக்கு?!” என்ற முரளிதரன்,

 

“உங்க பொண்ணு இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது முதல்ல கூட்டிட்டு போங்க” என்றார் சேதுராமனிடம்.

 

“என் மேல எந்த தப்பும் இல்லை. நீங்க நம்பினாலும் நம்பாமல் போனாலும் என் மேல சுமத்தப்பட்ட எல்லாமே ஃபால்ஸ் அலிகேஷன் அன்ட் காட்டினது ஃபேக் போட்டோஸ், வீடியோஸ்..”

 

“என் வாழ்க்கையில அபய் தவிர வேற யாருக்குமே இடமில்லை. அவர் என்னை ஏத்துக்கிறதுக்காக நான் காத்திருக்கேன், என்னோட அபய்க்கு நான் எந்த துரோகமும் செய்யலை.. இது சத்தியம்!!” என்றவள் நயனிகாவையே பார்த்தபடி நின்றிருந்த நிர்மலாவிடம் சென்று,

 

“அத்தை இந்த ரெண்டு வருஷத்துல உங்களுக்கு என்னை பற்றி நல்லா தெரியும் தானே! யார் என்ன சொன்னாலும் எதையும் நம்பாதீங்க இது எதுவுமே உண்மை கிடையாது. நான் உங்க பிள்ளையை காதலிக்கிறேன் அவர் மட்டும் தான் என் வாழ்க்கை!!”

 

“இது அந்த பையன் அவனை கண்டிச்சதுக்காக என் மேல சுமத்தின பழி. நிச்சயமா அது பொய் என்று சீக்கிரமே நிரூபிக்கப்படும்.. அதுவரைக்கும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று திடமாகவே பேசிய நயனி யாரை கண்டும் அஞ்சவில்லை, அவர்கள் எதிரே கூனி குறுகி போகவில்லை, அவள் கண்களில் இருந்து சொட்டு கண்ணீர் கூட வெளியேறவில்லை.

 

அதை கண்ட அனைவருக்குமே ஆச்சர்யம்!!

இதே நயனிகாவின் இடத்தில் மற்றொரு பெண் இருந்தால் மொத்தமாக உடைந்து உரு தெரியாமல் தன்னை அழித்துக் கொண்டிருப்பாள். ஆனால் ‘தன் மீது தவறில்லை யார் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்காது’ என்ற உறுதியுடன் நின்றிருந்தாள் நயனிகா வர்ஷி.

 

“இதோ பாருமா இதையெல்லாம் கேட்கிறதுக்கு நாங்க தயாரா இல்லை முதல்ல நீ தப்பு இல்லைன்னு நிரூபிச்சுட்டு வா அதுக்கப்புறம் பேசு” என்றிட நயனிகாவோ அங்கிருந்து நகர மாட்டேன் என்பது போல ஹாலில் அமர்ந்து விட்டாள்.

 

யார் என்ன சொன்ன போதும் எதையும் கண்டு கொள்ளாதவள், “என் மேல தப்பில்லாதப்போ என்னை எப்படி நீங்க வெளியே போக சொல்ல முடியும்? இது என் வீடு நான் எங்கேயும் போக மாட்டேன்..” என்றிட சக்கரவர்த்திக்கு அழைப்பு சென்றது.

 

ஆனால் அவர் தன் நண்பரான காவல்துறை அதிகாரியை சந்திக்க சென்றிருந்தவர் மாலை போல தான் வீட்டிற்கு வந்தார்.

 

வாசலுக்கே சென்ற நயனிகா, “மாமா நான் ஏற்கனவே ஒருமுறை உங்க கிட்ட இந்த பையனை பத்தி சொல்லி இருக்கேனே உங்களுக்கு ஞாபகம் இருக்கா?..” என்றாள் பரிதவிப்போடு.

 

“அதை சொன்ன ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் சம்பந்தத்தை பத்தி நீ சொல்லவே இல்லையே?!” என்று கேட்டதில் ஆடிப் போனாள் நயனிகா.

 

“ஃபோட்டோஸ் வீடியோ ரிசல்ட் வந்துடுச்சு..” என்றார் இறுகிய குரலில்.

 

“என்னாச்சு?” என்று தனலட்சுமியும், நிதிஷாவும் பரபரத்தனர். 

“எல்லாமே உண்மையான ஃபோட்டோஸ் வீடியோஸ் தான்!! ஏன் நயனி இப்படி?!” என்றவரின் வார்த்தையில் நொறுங்கிப் போனாள் நயனிகா.

 

“மாமா என்ன பேசறீங்க? உங்களுக்கு என்னை தெரியாதா? இந்த காலத்துல ஏஐ மூலமாக நிஜத்துக்கும் பொய்க்கும் வித்தியாசம் இல்லாத அளவு எவ்வளவு ஃபோட்டோஸ் வீடியோஸ் வேண்டுமானாலும் கிரியேட் பண்ணலாம். ப்ளீஸ் நான் தான் இவ்ளோ தூரம் சொல்றேனே என்னோட வார்த்தைக்கு மதிப்பில்லையா?”

 

“நீங்களுமா இதையெல்லாம் நம்பறீங்க? ப்ளீஸ் மாமா நான் உங்க பையனுக்கு உண்மையா தான் இருக்கேன். அவர் என்னை ஏத்துக்கலைன்னு வழி தவறும் அளவுக்கு நான் மோசமானவள் கிடையாது. அவர் மேல நான் உயிரையே வச்சிருக்கேன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்ற அவள் மன்றாடலை கேட்பதற்கு சக்கரவர்த்தி தயாராக இல்லை.

 

அந்தளவு விஷயம் பூதாகரமாகி “ஸ்டுடென்ட் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தது உங்க மருமகளா? கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா விசாரிச்சிங்களா? ஏன் இப்படி ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தீங்க? அவளோட அம்மாவுக்கே இப்போ இருக்கிறவர் இரண்டாவது புருஷனாமே… அம்மாவே கண்ட்ரோல்ல இல்லனா பொண்ணு மட்டும் எப்படி சக்கரவர்த்தி இருப்பா?!” என்று அவருக்கு பல அழைப்புகள். எதற்கும் பதில் சொல்லி மாளவில்லை.

 

ஒரு புறம் மாணவர்களின் அழுத்தம் மறுபுறம் இப்படிப்பட்ட விசாரிப்புகள், போலீஸ் விசாரணை இதற்கு இடையில் அவர்கள் இருவருக்கிடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் உண்மை தான் என்ற செய்தி அவரை நிதானிக்க விடவில்லை.

 

“நீ இனி காலேஜ்க்கு வர வேண்டாம், முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்றார்.

 

“மாமா...”

 

“எனக்கு குடும்ப கௌரவம் முக்கியம். அதுக்கு களங்கம் ஏற்படுத்தின உனக்கு இனி இந்த வீட்ல இடமில்லை நயனி” என்றவர் “இந்த பொண்ணோட எந்த பொருளும் வீட்ல இருக்க கூடாது” என்று கட்டளையிட்டு சென்றார்.

 

அதேநேரம், “என் வீட்டு வாசற்படி மிதிச்சிடாத” என்று சேதுராமன் செல்ல தனலட்சுமி அங்கிருந்து நகராமல் மகளை பார்த்து நின்றிருந்தார்.

 

“என்ன ம்மா பார்க்கிற நீ போ” என்றாள் முயன்று புன்னகைத்து.

 

“பாவிமகளே இப்போ எப்படிடி உன்னால சிரிக்க முடியுது? நான் போக மாட்டேன். என்ன நடந்தாலும் நான் பார்த்துகிறேன், நீ என்கூட வா.. ” என்றார் கண்ணீரோடு.

 

“வந்து...” என்று புருவம் உயர்த்தி அன்னையை பார்த்தவள்,

 

“ப்ச் ம்மா நீ என்னோடு வந்த பிறகு உன்னை திரும்ப அந்த ஆள் வீட்டுக்குள்ள சேர்த்துவானா?.. நிதி பார்கவ் நீ பெத்த பசங்க தானே?! அவங்களுக்கு நீ எதையும் பார்க்க வேண்டாமா?..”

 

"நீயும் தானேடி என் பொண்ணு!.. உன்னை யார் பார்ப்பா?!" என்று மகளை கட்டிக்கொண்டு கதறிவிட்டார். 

 

“நான் தனியா இருந்தே பழக்கபட்டுட்டேன் என்னால் முடியும் நீ போ ம்மா. இதுக்காக எல்லாம் நான் ஒன்னும் செத்துட மாட்டேன். என்மேல தப்பில்லை! அது என்னைக்கு இருந்தாலும் நிருபணம் ஆகும்” என்றவளை தேடி சுதர்ஷன் வந்திருந்தான்.

 

"என்ன நயனி இதெல்லாம்?! போலீஸ் ஸ்டேஷன் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்றவன் சூழலை  புரிந்து கொண்டு நயனியை தன் வீட்டிற்கு அழைத்தான். 

“அப்போ நீங்க இந்த ஃபோட்டோஸ் நம்பலையா சுதர்ஷன்?! நான் உங்க வீட்டுக்கு வருவதால உங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துடாதா?” என்றாள் விரக்தியான புன்னகையோடு. 

“என்ன மாதிரியான கேள்வி நயனி இது?! எனக்கு உங்களை தெரியாதா?”

“நாம ஒரு இரண்டு முறை பேசி இருப்போமா? அப்புறம் எப்படி?”

“அபய் எப்பவுமே சஞ்சுவும் நீங்களும் ஒட்டி பிறக்காத இரட்டை பிறவிங்க போலன்னு சொல்லுவான்.. அதோடு இரண்டு முறை உங்களோடு பேசி பழகி இருக்கேன் நயனி!! அது போதாதா?..”

“என் ஃப்ரெண்ட் எவ்வளவோ தடுக்க முயன்ற போதும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவனை விடாப்பிடியா கட்டிகிட்டீங்க நீங்களா அவன் உங்களோடு இல்லாததால அவனுக்கு துரோகம் செய்ய நினைச்சிருப்பீங்க?”

“நிச்சயம் உங்க மேல தப்பிருக்காது. ப்ளீஸ் என்னை உங்களோட பிரதரா நினைச்சுட்டு என் வீட்டுக்கு வாங்க.. என் அம்மாவும் வைப்பும் என்னை போல தான்!!” என்றவன் நயனியை தன் பாதுகாப்பில் பார்த்து கொள்வதாக நம்பிக்கை கொடுக்கவும் தான் தனலட்சுமி கிளம்பினார். 

நினைவில் இருந்து மீண்டவள் முகத்தை அழுந்த துடைத்தபடி திரும்ப அங்கே அபய் ஸ்ரீவத்ஸன் நின்றிருந்தான்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1