வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 14

 

 

"என்னை மாதிரியே மாமிக்கும் palmல தான் இருக்கும் நல்லா தேடி பாருங்க..." என்று வைஷு மாமனுக்கு உதவ வந்தாள்.

"அண்ணா என்னண்ணா நீங்க இன்னுமா கண்டுபிடிக்கல..? நான் வேற அவர்கிட்ட  பெட் கட்டியிருக்கேன்.. சீக்கிரம்! இல்லன்னா எனக்கு இரண்டாயிரம் போயிடும் அதோட என்னை ஓட்டி எடுத்துடுவார் ப்ளீஸ் கண்டுபிடிச்சிடுங்க.."

"நிவி இப்படி பேசறதுக்கு பதிலா உங்கண்ணி எங்க எழுதியிருக்கான்னு ஒரு க்ளு கொடுக்கலாமில்ல..?" என்று உதய் தங்கையை துணைக்கு அழைத்தான்.

"என்னது டீச்சர்கிட்டயே பிட் அடிச்சு பதில் சொல்ல பார்க்கறீங்களா...? ண்ணா அண்ணிக்கு இதெல்லாம் பிடிக்காது உங்களுக்கு வச்ச டெஸ்ட்டை நீங்களே தான் பாஸ் பண்ணனும் நாங்க ஹெல்ப் பண்ணினா எங்களையும் சேர்த்து வெளியில துரத்திடுவாங்க.. ஆமா தானே அண்ணி?!" என்று கேட்க தளிரும் புன்னகையோடு தலையசைத்தாள்.

"உங்கண்ணி குவெஸ்டின் பேப்பர் ரொம்ப டஃப்பா இருக்கு நிவி" என்று பெருமூச்செறிந்தவன் அவள் புறங்கையில் தன் தேடுதலை தொடங்கினான்.

"சீக்கிரம் மாமா குயிக்.." என்று குழந்தைகள் கைதட்டி மாமனை உற்சாகபடுத்தி கொண்டிருந்தனர்.. பெரியவர்களோ தேடி முடித்து அழைக்குமாறு சென்றுவிட்டனர்.

"எப்படி வைஷு நீ உங்க மாமி வைக்கிற டெஸ்ட்ல பாஸ் பண்ற ..?" என்று அக்கா மகளை கேட்டான்.

"முதல்ல மேம் எங்களுக்கு லெசன் நல்லா சொல்லி கொடுப்பாங்க எங்களுக்கு புரிஞ்சதுக்கு அப்புறம் தான் மாமா டெஸ்ட் வைப்பாங்க.. நான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுப்பேன்.. ஏன் உங்களுக்கு சொல்லி கொடுக்கலையா..?" என்றாள்.

"இல்லடா கண்ணா.. உங்க மாமி அவுட் ஆஃப் சிலபஸ் போகமாட்டாளாம்.."

"அவுட் ஆஃப் சிலபஸ்ன்னா என்ன மாமா..?"

"அதுவா..? அது எங்க இரண்டு பேரோட தனி சிலபஸ்.." என்று தளிரை பார்த்து கண்சிமிட்ட  அவளோ அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

"ஆனா உங்க மாமி பிஸியா இருக்கிறதால இன்னும் எனக்கான சிலபஸயே கையில எடுக்கல  நான் என்ன செய்ய..?" என்று  சுகமாய் சலிக்க.. முகம் சிவந்த தளிர் "குழந்தைகிட்ட என்ன பேசுறீங்க..?" என்று சன்னக்குரலில் கேட்டிருந்தாள்.

"அப்படி என்ன பேசிட்டேன்..? லவ் சிலபஸ நீ இன்னும் கையில் எடுக்கலை தானே..?"

"ஒஹ் உங்களுக்கும் சிலபஸ் இருக்கா மாமா...? எத்தனை சப்ஜெக்ட்..? மேம் இங்க்லீஷ் தானே எடுப்பாங்க..?" என்றவள் "ஏன் மேம் நீங்க என் மாமாக்கு எதுவும் சொல்லி கொடுக்கல..?" என்று வைஷு உரிமையாய் மாமனுக்காக பேச தளிரின் முகத்தில் செம்மையின் ஊர்வலம்.

"பதில் சொல்லு தளிர்" என்று உதய் சிரிக்க, "என்ன பதில்டா சொல்லணும்" என்றவாறே சுஜி, நிவி வந்தமர்ந்தனர்.

"வேலை அதிகமா இருந்தது வைஷு டைம் கிடைக்கல இனி சொல்லி கொடுக்கறேன்.." என்று தளிர் சமாளிக்க அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் அங்கே வந்த சரவணன்,

"மாப்பிள்ளை என் தங்கச்சி கையை பிடிச்சு அரைமணி நேரத்துக்கும் மேலாச்சு.., விடற எண்ணம் இருக்கா இல்லையா..?" என்று அவன் காலை வாரிவிட அங்கே மீண்டும் சிரிப்பலை.

"இல்ல மாமா.. இனி எந்த ஜென்மத்துலயும் விடறதா இல்லை.." இன்னும் அழுத்தமாக அவள் கையை பிடித்துகொண்டவன் அவள் விரல்களில் தன்னை தேட தொடங்கினான்.

"டேய் நேரமாச்சு வளையல்காரர் வந்திருக்கார் சீக்கிரம்.. அப்புறம் ரிசெப்ஷன் டிலே ஆகிட போகுது" என்று சரவணன் சொல்ல,

"ஹே அப்படி எங்க தான்டி என் பேரை எழுதியிருக்க..?" என்று அயர்ந்து போனவனிடம, "கையில தாங்க.." என்று மீண்டும் அதே பல்லவியை பாடியவளுக்குமே இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.

"தளிர் அதுதாண்ணே இதுங்கிற மாதிரி இருக்கு நீ சொல்றது.. பாவம் என் தம்பி" என்று சிரித்த சுஜியும் தம்பிக்கு உதவ இத்தனை நேரம் வலக்கரத்தை பிடித்து தன் பெயரை தேடியவன் இப்போது அவளுக்கு இடப்புறம் வந்தமர்ந்து மீண்டும் தன் தேடுதலை தொடர சுற்றியிருந்தவர்கள் "கம் ஆன் உதய் யூ கேன்" என்று உற்சாகபடுத்தினர்.

"மச்சான் மேக்னிஃபையர் கொண்டு வரட்டா..?" என்று ராகவ் சிரிப்போடு கேட்க,

"ஏன் இருக்க கொஞ்ச மானத்தையும் ஏலம் விடப்போறியா அடங்குடா.." என்று முறைத்தவன்,

"எங்கடி எழுதியிருக்க மானம் போகுது ப்ளீஸ் ஏதாவது ஹின்ட் கொடுத்து பாஸ் பண்ணி விடுடி.. சின்ன பசங்கெல்லாம் இருக்காங்க ஊரே டமாரம் அடிச்சிடுவாங்க.." என்று யாரும் அறியா வண்ணம் தளிரின் செவியோடு கிசுகிசுக்க..,

"நிஜமாவே கையில தாங்க எழுதியிருக்கேன் ஆனா உள்ளங்கையில இல்லை... கொஞ்சம் ஃபோகஸ் பண்ணினா நீங்க ஈசியா கண்டுபிடிப்பீங்க" என்று  குறையாத சிரிப்போடு குழந்தைகளை உற்சாகபடுத்துவது போலவே உதய்க்கும் சொல்லிய தளிரை "போடி" என்பதாக பார்த்தவன் சட்டென குனிந்து அவள் பாதத்தை பிடித்தான்.

உதய் அவள் பாதத்தை பிடிக்கவும் "என்ன பண்றீங்க..? ப்ளீஸ் விடுங்க.." என்று தளிர் பதற அவளுக்கு குறையாத பதட்டத்தோடு "மச்சான்.. மாப்பிள்ளை" என்று ராகவனும் சரவணனும் குரல் கொடுத்திருந்தனர்.

"என்ன மாமா என் பொண்டாட்டி காலை தானே பிடிச்சேன் ..? எதுக்கு இவ்ளோ பதட்டம் ஜஸ்ட் ச்சில்.."

"டேய் இது பப்ளிக்.. மறந்துட்டியா..?" என்று ராகவ் நக்கலாக பார்க்க,

"எப்படியும் நாளைக்கு காலையில் பப்ளிக்கா பிடிக்க தானேடா போறேன்" என்று தோள்களை குலுக்கியவன், "என் தங்கச்சி காலை இருபது நிமிஷம் விடாத நீயெல்லாம் பேசகூடாதுடா" என்று அவனுக்கு குறையாத எள்ளலோடு பார்த்தான்.

"உதய் என்ன இது..? ப்ளீஸ் கையில தான் போட்டிருக்கேன் காலில் இல்லை விடுங்க" என்று அவன் கையை பிடித்த அதேநேரம் இவர்களின் கூச்சலில் அங்கே வந்துவிட்ட பெரியவர்கள்  சிரிப்புடன் அவர்களை பார்த்து நிற்க, "பார்த்தியா ஜெகா இத்தனை பேர் முன்னாடி நம்ம பிள்ளையை கால் பிடிக்க வைச்சுட்டா.. இவளுக்காக உன் பொண்ணுங்க சாமியாடிட்டாங்க சரியான கைக்காரி.." என்று ராஜி பொறும ஜெகாவுக்குமே மகன் தளிரின் காலை பிடித்திருந்ததில் அப்படி ஒரு எரிச்சல்..!!

"டேய் அது எங்கம்மா செய்த சதி" என்ற ராகவனின் அன்னை மெட்டியின் அளவை சிறிதாக வாங்கியிருக்க அதை போடமுடியாமல் போன ராகவன் சரிசெய்து வரும்வரை பிடித்திருந்த நிவியின் வலது பாதத்தை விடவே இல்லை.

"எங்க பிடிச்சா என்ன என் பொண்டாட்டி காலை தானேடா பிடிக்கிறேன்" என்று உதய் புருவமுயர்த்த அம்பலவாணன் முதற்கொண்டு அத்தனை பேரும் சத்தமாக சிரித்துவிட்டனர்.

"அதானே! நீ பொழைச்சுக்குவ மாப்பிள்ளை.." என்றார் சரவணின் தந்தை.

"தேங்க்ஸ் மாமா.." என்றவன் அவள் பாதத்தில் விழிகளை நிலைக்கவிட, "உதய் ப்ளீஸ்" என்று சங்கடமாக சொன்ன தளிரால் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியவில்லை.

"சரி சரி நேரமாச்சு அதெல்லாம் அப்புறம் கண்டு பிடிப்ப நல்ல நேரத்துல வளையல் போடட்டும் நீ வா தளிர் .." என்று ஜெகா மருமகளை அழைக்க "சரிங்கத்தை" என்று சட்டென எழுந்து விட்டாள் இளந்தளிர்.

"ஆமாமா பசங்க விளையாட்டுல நேரம் போனதே தெரியல வந்து உட்காரும்மா வளையல் போட்டுடலாம்" என்று சுஜியின் மாமியாரும் அழைக்க அவரருகே சென்ற தளிர் 'ஏதாவது செய்ங்க அண்ணி' என்று சுஜியை பார்த்தாள்.

"நீ போ நான் கூட்டிட்டு வரேன்" என்பதாக சைகை செய்தவள், "உதய் என்ன உட்காந்துட்ட..?" என்று அம்பலவாணன் அருகே அமர்ந்தவனிடம் கேட்க 'ஏன்..?' என்பதாக உதய் தமக்கையை பார்த்தான்.

"என்ன விஷயம்மா..?"

"அது ஒண்ணுமில்ல ப்பா உதய் இங்க இருக்கிறதால அவனே தளிருக்கு வளையல் போட்டுவிடட்டுமேன்னு கூப்பிட்டேன்.."

"அதுக்கென்ன நீ போய் போட்டுவிடு உதய்" என்று அவரும் புன்னகையோடு சொல்ல உதய் எழுந்து கொண்டான்.

"இதெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும் முகூர்த்த வளையல் உடையாம போடணும்.. விளையாட்டு விஷயமில்லை.." என்று ராஜி ஆரம்பிக்க, "ஆமா ஆமா ஆதிக்கு அதெல்லாம் பழக்கமில்லை வளையல்காரரே போடட்டும்.." என்ற ஜெகாவின் வார்த்தையை ஏற்க தான் அங்கு யாரும் தயாராக இல்லை..

ஏற்கனவே கணவர் மற்றும் தங்கையிடம் சுஜி பேசிவிட்டிருந்ததில், "அதைபத்தி நீங்க கவலைபடாதீங்க ராஜிம்மா அண்ணா உடையாம போட்டுவிடறதுக்கு நான் பொறுப்பு" என்ற நிவி சோப்பும் ஜக்குமாக அங்கே வர இரு நாத்தனார்களையும் நன்றியுடன் பார்த்தாள் தளிர்.

தளிர் நாத்தனார்களை நன்றியோடு பார்க்கவும் அவள் பார்வையை கண்டுகொண்ட உதய்யின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி... 'ஏன் அனைவரையும் அழைத்து வந்தாய்..?' என்று சுஜி கேட்டபோதே 'ஒருவேளை தளிரின் கோரிக்கையின் பேரில் தன்னை வரசொல்லியிருப்பாரோ..?' என்று உதய் கொண்ட சந்தேகம் இப்போது தளிரின் பார்வையில் ஊர்ஜிதம் பெற்றது.

"அண்ணி கைக்கு சோப் போட்டுகோங்க ஈஸியா ஏறிடும் வளையலும் உடையாது.." என்ற நிவியின் வார்த்தையில் அதேபோல தளிர் செய்ய அவள் எதிரே வந்தமர்ந்த உதய் தளிரின் வலக்கையை பிடித்து மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடங்கினான்.

"டேய் நல்ல நேரம் போறதுக்குள்ள போட்டுவிடுடா அப்புறம் கண்டுபிடிப்ப.." என்று சுஜி சொல்ல அவனோ 'என்னை இங்க வரவச்சவளுக்கு சொல்ல தெரியாதா..?' என்பதாக தளிரை பார்த்தவன்,

"ஏன் இதையும் நீதான் சொல்லுவியா..?" என்று சுஜியை கேட்டுவிட்டு இரண்டு வளையல்களை கையிலெடுத்து அழுத்தமாக தளிரின் வார்த்தைக்காக காத்திருந்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவளும், "உதய் போட்டுவிடுங்க" என்றதும் புன்னகையோடு குவிந்திருந்த அவள் வலக்கரத்தை பிடித்து மெதுவாக முதல் வளையலை ஏற்றியவன் விழிகள் அது சென்று சேர்ந்த இடத்தை கண்டதும் ஆச்சர்யம் கொண்டது. 

'தான் கண்டது நிஜம் தானா..?' என்று நம்ப முடியாமல் கண்களை சிமிட்டியவன் மீண்டும் அவ்விடத்தை கூர்மையாக பார்க்க உதய்யின் உணர்வை அவதானித்து கொண்டிருந்த தளிர் சற்று குனிந்து அவனுக்கே மட்டுமே கேட்கும் விதமாக,

"நான்தான் சொன்னேனே நீங்க கண்டு பிடிப்பீங்கன்னு.." என்று புன்முறுவலோடு பார்க்க இன்னுமே நம்பமுடியாமல் மீண்டும் வளையல் சென்று சேர்ந்த இடத்தை உதய் உற்று பார்க்க அங்கு அவன் பெயரை அழகாக செந்தமிழில் எழுத செய்திருந்தாள். 

இத்தனை நேரம் அவன் அவளருகே அமர்ந்து பார்த்ததால் உதய்யால் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்போது அவளெதிரே அமர்ந்து வளையல் போடுகையில் தெரியும் வண்ணம் தான் எழுத சொல்லியிருந்தாள்.

உதய் அடுத்தடுத்து ஒன்று போலவே அமைந்திருந்த டிசைனில் இப்போது கவனம் கொள்ள அடுத்ததாக அவன் பெயர் சுந்தர தெலுங்கில் எழுதபட்டிருந்தது.. அதுமட்டுமல்ல உதய் வளையலை ஏற்றிவிட்ட இடம் தொடங்கி அவள் மணிக்கட்டு வரை உதயாதித்தனின் பெயரை வெவ்வேறு மொழிகளில் டிசைனினுள் எழுத செய்திருந்தாள் இளந்தளிர்.

அதிலும் தமிழில் தொடங்கி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, என்று கிட்டத்தட்ட பதினைந்து மொழிகளில் அவன் பெயரை எழுதியிருக்க  சிலவற்றை கண்டுபிடித்தவன் மற்றவையும் அவன் பெயரே என்பதை கண்டு கொண்டு நெஞ்சம் ததும்ப தளிரை பார்த்திட அவன் பார்வையில் சிவந்த கன்னங்களோடு துடித்த இதழ்களை கட்டுபடுத்திக்கொண்டு, "எப்படி இருக்கு..?" என்று புன்னகையோடு புருவம் உயர்த்தியிருந்தாள் இளந்தளிர்.

அதை கண்ட உதய்யின் மகிழ்ச்சியின் அளவை வார்த்தை கொண்டு வடிக்கவும் வேண்டுமா என்ன..?

அதுவும் தமிழில் தொடங்கி இறுதியில் ஆங்கிலத்தில் முடித்திருந்தவள் இடையில் கொரியன், சைனீஸ், ரஷ்யன் என்று தன் பிடித்தத்தை அறிவிக்க உலக மொழிகளையும் துணைக்கு அழைத்திருந்தாள். இத்தனை நாள்கள் தன் மீது அவளுக்கு பெரிதாக நாட்டமில்லையோ?! என்ற ஐயம் கொண்டிருந்தவனை இப்போது முழுதாக தளிர் கொள்ளை கொண்டதில் சிறுக சிறுக சிதறிய உதய்க்கு இறுதியில் மூச்சு முட்டிபோனது.

"உஃப்ப்" என்று மூச்சை இழுத்து வெளியிட்டவன் அடுத்த வளையலை போடாமல் அவன் பெயரை மேலிருந்து கீழ் மென்மையாய் வருடிட சிலிர்த்த தளிர் "உதய் என்ன பண்றீங்க..?" என்று நெளிய தொடங்கிவிட்டாள்.

"மாப்பிள்ளை என்னடா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க? வளையலை போடு" என்றவனின் குரல் உதய்க்கு கேட்கவே இல்லை.

மகனின் பார்வை தளிரை விட்டு அகலாமல் இருப்பதை கண்ட ஜெகா பல்லை கடித்துக்கொண்டு, "ஆதி அடுத்த வளையல் போடு" என்று  சப்தம் கொடுத்த போதும் மீளாதவன் அதுநேரம் வரை வருடிக்கொண்டிருந்த அவள் வலக்கரத்தை உயர்த்தி முத்தமிடுவதற்காக தன் உதட்டினருகே கொண்டு செல்ல பதறிபோனாள் தளிர்.. 

யாரும் அறியா வண்ணம் அவன் கையை பிடித்து கீழிறக்கியவள் "உதய் ப்ளீஸ் வளையல் போட்டுவிடுங்க.. எல்லாரும் நம்மை தான் பார்த்துட்டு இருக்காங்க.." என்றாள் மெல்லிய குரலில்.

ஜெகா மீண்டுமொரு முறை, "ஆதி நேரமாச்சு வளையலை போடு.." என்றபோதும் உதய் மீண்டானில்லை.

அவனை உலுக்கிய சரவணன், "என்ன மாப்பிள்ளை பேரை கண்டுபிடிச்சிட்டியா..?" என்று சந்தேகமாக கேட்க "ஆம்" என்றவன் முகம்கொள்ளா புன்னகையோடு அவள் கையை பிடித்து தன் பெயரை காண்பிக்க அனைவருக்கும் ஆச்சர்யம்.

"எங்க காட்டுங்க இவ்ளோ நேரம் தேடினோம் கிடைக்கவே இல்லையே.." என்று எல்லோரும் தளிரை சூழ்ந்து கொள்ள

"அக்கா எதிர்ல உட்காந்து பார்த்தா தெரியற மாதிரி டிசைன் பண்ண சொல்லியிருக்கா பக்கத்துல இருந்து பார்த்தா வெறும் மெஹந்தி டிசைன் மாதிரிதான் தெரியும், கண்டுபிடிக்க முடியாது இப்படி வந்து பாருங்க தெரியும்.." என்ற உதய் தள்ளி உட்கார்ந்தான்.

அதை கண்ட ராஜியின் முகம் இறுக அவருக்கு மேலாக ஜெகாவின் முகம் கருத்து சிறுத்து போயிருந்தது. நிவியும் சுஜியும் அவளெதிரே அமர்ந்து, "மலையாளத்துல கூட எழுதியிருக்கியா..? அண்ணி இது கொரியன் தானே..?" என்று நிவி கேட்க அவள் பின்னே இருந்த ராகவன்,

"இதோ இது கன்னடா, இது மராத்தி.. இது என்ன மொழி தளிர்..?" என்று கேட்க எந்தெந்த மொழி என்று முகம் மிளிர தளிர் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வந்தாள்.

அதை கண்ட ராஜி, "என்னடி இது எங்கயும் நடக்காத கூத்தால்ல இருக்கு..? ஏன் ஒரு இடத்துல எழுதுனா போதாதா..? கை ரொப்பி எழுதணுமா என்ன..? உன் பொண்ணுங்க என்ன இப்படியா எழுதி வச்சாங்க..? எழுதுனதை கொஞ்சமும் வெட்கமே இல்லாம எல்லாருக்கு காட்டிட்டு இருக்கா..? ச்சை இதையெல்லாம் கட்டிட்டு அழனும்னு நம்ம விதிடி" என்று முனுமுனுத்த ராஜியின் பார்வை மொத்தமும் தளிரிடம்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17