வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 22.1

 

"அம்மா கிளம்பினப்போவே மணி சாயந்திரம் அஞ்சு இருந்திருக்கும் நானும் ஹோம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்"

"உன் அம்மா தான் கூட்டிட்டு போகனுமா? ஏன் அவன் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக மாட்டானா?" 

"செய்ய மாட்டான் அபய். பேருக்கு தான் புருஷனா இருந்தான் மற்ற படி வீட்டு வேலை குழந்தைங்க கவனிப்பு தொடங்கி ரேஷன், பால், காய்கறின்னு எல்லாமே அவங்க தான் பார்த்துக்கணும்.."

"...."

"அன்னைக்கு படிக்கிறியா வர்ஷின்னு கேட்டு என் பக்கத்துல உக்கார்ந்த ஆள் என்ன படிக்கிறேன்னு பார்க்கிற மாதிரி என்னை உரசிட்டு உட்கார்ந்தான்…

நான் அமைதியா இருக்கவும் சொல்லி கொடுக்கிறேன்னு சொல்லி புக்கை திருப்பும் சாக்கில் தப்பா இடிச்சான், பதறி போன நான் உடனே தள்ளி உட்கார்ந்தேன்…

ஆனாலும் என்னை நெருங்கி உட்கார்ந்தவன் மெல்ல என் கையை பிடிச்சு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா.. ஒரு கட்டத்துல ரொம்ப தப்பா..என்றவள் ஒருநொடி நிதானித்து, 

நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நம்பறேன் அபய்..என்றிட விழிகள் சிவிக்க கண்களை மூடி திறந்தவன், “நீ ஏன் நயனி அவ்ளோ நேரம் பொறுமையா இருந்த அப்படியே கையில் கிடைக்கிற எதையாவது வச்சு குத்தி இருக்க வேண்டியது தானே!

செய்திருக்கலாம். ஆனா நானும் அவனும் மட்டும் தான் வீட்ல. நிச்சயமா கதவை சாத்தி வச்சுட்டு தான் வந்திருப்பான்னு இப்போ புரியுது பட் அப்போ, அந்த மொமென்ட் எனக்கு பயம் தான் அதிகமா இருந்தது…

என்ன செய்யறதுன்னு புரியாமல் அங்கிருந்து தப்பிச்சா போதும்னு உடனே ஓடி வெளியில வந்துட்டேன்.. வந்துட்டேனே தவிர்த்து அடுத்து என்னன்னு புரியாம வீட்டு வாசல்ல அப்படியே நின்னுட்டேன்..

ஆனால் அவன் என்னை தேடி வருவது தெரிஞ்சதும் அவன் கையில் சிக்காம பக்கத்து வீட்டுக்கு போயிட்டேன். அங்க  இருந்த போதும் என்னால சகஜமா இருக்க முடியலை.. கண்ணுல இருந்து தண்ணி கொட்டிட்டே இருந்தது..."

"என்னாச்சுன்னு எல்லாரும் கேட்டுட்டே இருந்தாங்க, எனக்கு அதை பற்றி சொல்ல பயம்.. சொன்னா எத்தனை பேர் நம்புவாங்க என்று தெரியாது.. அதனால வயிறு வலின்னு ஏதேதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிச்சேன்.."

ஆனா அங்க மட்டும் எவ்ளோ நேரம் இருந்திட முடியும்? திரும்ப வீட்டுக்கு வந்த போது அவன் என்னை பார்த்த பார்வையை என்னால ஆயுளுக்கும் மறக்க முடியாது… 

அம்மா இன்னும் வரலை. வரும் போதே பக்கத்து வீட்டு அக்காவையும் கூட்டிட்டு வந்ததால உடனே என்னோட பேக் எடுத்துக்கிட்டு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லி பஸ் ஸ்டாப்புக்கு போயிட்டேன்..

எதுக்கு பஸ் ஸ்டாண்ட் போன? உன் ஹாஸ்டல் இல்லை அம்மாவை தேடி போயிருக்கலாமே!

இத்தனை நாள் இல்லாத விதமா அந்த ஆள் இப்படி நடந்துக்கவும் எனக்கு அதுக்கு மேல அங்கிருக்க ரொம்ப பயமா இருந்தது. நான் ஊர்ல இருந்தா தானே வீட்டுக்கு வரணும்னு சொல்லுவாங்க?!”

"எங்கேயாவது கண் காணாத தூரத்துக்கு போயிட்டா இவனை பார்க்காம இவனோட பார்வை, பேச்சு, தொடுகை இல்லாமல் இருக்கலாமேன்னு நினைச்சேன்.. அதனால எதை பற்றியும் யோசிக்காமல் சென்னை போற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துட்டேன்..

"சென்னையில யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"

"இல்ல, எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் ஊர்ல இருக்க கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணி கிளம்பிட்டேன்..."

"உன் அம்மா வர வரைக்கும் பொறுமையா இருந்திருக்கலாமே நயனி.. இல்லை தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்டிருக்கலாம் அதை விட்டுட்டு இப்படி ஒரு முடிவு, அந்த சின்ன வயசுல தப்புன்னு உனக்கு தோணலையா?"

"இல்லை அபய். முதல்ல எதுவும் தெரியலை, ஆனா பாதி தூரம் போகும் போது தான் நாம எடுத்த முடிவு தப்புன்னு தோணுச்சு.. ஆனாலும் அந்த வண்டி அதுக்கப்புறம் இடையில எங்கேயும் நிற்காது. இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னை போயிடும்னு சொன்னாங்க அதனால அமைதியா உட்கார்ந்து இருந்தேன்..."

"சென்னைல நான் போய் இறங்கும் போது மிட் நைட் ஆகிடுச்சு.. அப்போ தான் நானே எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துடுச்சு.." என்றவளின் உடலில் நடுக்கம் பரவ முகத்திலும் வியர்வை முத்துக்கள் அரும்பியது.

"ஏன் உனக்கு இப்படி வியர்க்குது? ரிலாக்ஸ் நயனி.. அங்க தானே நீ என்னை சந்திச்சதா சொன்ன?" என்றதற்குஆம்என்ற தலையசைப்பு அவளிடம். 

"அப்போ சென்னையில அப்படி என்ன நடந்தது? சொல்லு.."

 

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அன்னைக்கு சென்னை போய் சேர மிட்நைட் ஆகிடுச்சு... சென்னை நெருங்க நெருங்க தான் அடுத்து என்ன செய்ய போறோம் என்ற பயம் எனக்கு அதிகமாச்சு.. அதே நேரம் பஸ்ல இருந்த எல்லாரும் கீழ இறங்கிட்டாங்க எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.."

கடைசியா இறங்கினவர் வரைக்கும் பார்த்துட்டு இருந்தேன்.. வெளியே ஆங்காங்கே பஸ் நின்னுட்டு இருந்தது, கொஞ்சம் வெளிச்சமும் இருந்தது. ஆனா இவங்க நிறுத்தியிருந்த இடத்துல அதிக வெளிச்சம் இல்லை. 

அதோடு மற்ற பஸ்க்கும் இந்த பஸ்க்கும் இடையில ரொம்ப தூரமிருந்ததால எனக்கு இறங்கி போகவும் பயமா இருந்தது. அதனால இதே பஸ்ல வீட்டுக்கு திரும்ப போயிடலாம்னு முடிவு பண்ணேன்... ஆனா பஸ் திரும்ப எப்போ கிளம்பும் என்று தெரியலை. அப்போ தான் அந்த கண்டக்டர் என்கிட்டே வந்தான்.."

என்ன பாப்பா இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க இறங்கலையான்னு கேட்டவன் ரொம்ப நேரமா என்னை வாட்ச் பண்ணி இருக்கான் என்று அப்போ எனக்கு தெரியலை..

ஸ்ட்ரேஞ்சர்ஸ் பொதுவாவே டேஞ்சரஸ்னு உனக்கு தோணலையா நயனி?”

இல்லை அபய் அவன் ரொம்ப தன்மையா பேசினான்.. நான் எனக்கு திரும்ப ஊருக்கு போகணும்னு சொல்லவும்.. ஏன் தனியா? வந்த எதுக்கு இப்போ திரும்ப போகணும்னு கேட்டாங்க..

நானும் எனக்கு அவங்களை விட்டா ஹெல்ப் பண்ண வேற யாரு இருக்கான்னு நடந்ததை சொன்னேன். இங்க உட்காராத பாப்பா ரொம்ப குளிரும் கடைசி சீட்ல போய் உட்காரு நான் வரேன்னு சொல்லி போயிட்டான்..

 

திரும்ப அந்த பஸ் டிரைவரோடு வந்தவன் எங்க பஸ் காலையில் தான் கிளம்பும்னு சொன்னான்..

சரி வேற பஸ் இருந்தாலும் நான் கிளம்பறேன்னு சொன்னேன்.. அதுக்கு அவங்க விடலை..

ஏன்?”

இந்நேரத்துக்கு வேற எந்த பஸ்ஸும் இல்லை. எல்லா பஸ்ஸும் விடியற் காலையில் தான் கிளம்பும்னு சொன்னவங்க ரெண்டு பேருக்கும் எப்படியும் 45, 50 வயசு இருக்கும்…

"கிட்டத்தட்ட அப்பா வயசு என்பதால் எனக்கு சந்தேகம் வரலை.. அதோடு ரொம்ப அன்பா பேசினாங்க எனக்காக அந்நேரம் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்தாங்க.."

என்ன நயனி உனக்கு அப்பான்னு சொல்லிக்கிட்டே நாயே தப்பா நடந்திருக்கு அப்படி இருக்கப்போ எப்படி அவங்களை நம்பின? முன்ன பின்ன தெரியாதவங்க கொடுத்ததை எதுக்கு சாப்பிட்ட?” என்றான் ஆற்றாமையோடு.

 நிஜமாவே அதையெல்லாம் யோசிக்கிற நிலைமையில் அப்போ நான் இல்லை அபய். அதோடு அவங்களும் சாப்பிடலைன்னு சொல்லி அங்கிருந்த ஹோட்டல்ல மூணு பேருக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்ததுல எனக்கு சந்தேகம் வரலை…

எனக்கும் சரியான பசி அதனால் அவங்களோடு சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டேன்.. அடுத்து நீ படுத்துக்கோம்மா காலையில் எழுப்புறோம் என்று சொல்லி எல்லா ஜன்னல் கதவையும் அடைச்சாங்க..

ஏன் சாத்தறீங்கன்னு கேட்டதுக்கு ரொம்ப குளிரும்னு சொன்னதால அவங்களோட வார்த்தையை நம்பி பின்னாடி படுத்துகிட்டேன், ஆனா…என்றவளின் குரல் உடைய கண்களில் நீர் ததும்பியது. 

ஆனா.. என்ன நயனி சொல்லு..

கொஞ்ச நேரத்திலேயே பஸ் எடுத்து ஒதுக்கு புறமான இடத்துக்கு கொண்டு போனவங்க கத்தி முனையில என்னை கீழ படுக்க சொல்லி பலவந்தப்படுத்த ஆரம்பிச்சாங்க.. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை வெளியே பார்க்கவும் முடியாத சூழல் எங்கே கத்தினா என்னை சாகடிச்சுடுவாங்களோன்னு பயம்..

வாணலிக்கு பாய்ந்து அடுப்புல விழுந்த கதையாகி போச்சு.. வீட்ல இருந்த மிருகத்துக்கு பயந்து ஓடி ஒளிய நினைச்சா இப்போ ஒன்னுக்கு ரெண்டு பேர் கிட்ட மாட்டிகிட்டேன்..

ப்ளீஸ் என்னை விட்டுடுங்கன்னு கெஞ்சவும் என் வாயில டேப் போட்டு துணியால கையையும் கட்டிட்டாங்க…என்றவளுக்கு அன்றைய நாளின் தாக்கத்தை இன்னுமே கடக்க முடியாதளவு வலி பரவி நெஞ்சை அழுத்தியது.

"ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்துட்டு என்னை தப்பா தொட ஆரம்பிச்சாங்க..என்று சொல்ல அபய்யின் தாடை இறுகியது. 

அப்போ தான் அங்க நீங்க வந்தீங்க, என்னை பொறுத்த வரையில் என்னை காப்பற்ற கடவுள் உங்களை அனுப்பி வச்சதா தான் நினைச்சேன்.."

பஸ் கதவை லாக் பண்ணி இருந்ததால வெளியே இருந்து தட்டுற சத்தத்துல அதுல ஒருத்தன் மட்டும் இறங்கி போனான். இன்னொருத்தன் கிட்ட இருந்து நான் திமிர ஆரம்பிக்கவும் கத்தியை எடுத்து என் கழுத்துல வச்சு அசையக்கூடாதுன்னு சொல்லிட்டான்..

"எனக்கு அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கன்னு தெரியலை. அப்போ தான் வெளியே இருந்தவன் கிட்ட இருந்து இவனுக்கு ஃபோன் வந்தது..

“...”

அந்த பக்கம் அவன் என்ன சொன்னானோ தெரியலை பட் உடனே என் கட்டெல்லாம் கழட்டி விட்டுட்டுஇப்போ சிலர் உள்ள வருவாங்க அவங்க திரும்பி போற வரைக்கும் சத்தம் போடாம இங்கேயே இருக்கணும்னுகடைசி சீட்டுக்கு கீழ என்னை உட்கார வச்சுட்டான்.." 

"எனக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. ஆனா அவன் அப்படி சொல்லிட்டு போன சில நிமிஷத்துல நீங்களும் இன்னும் ரெண்டு பேரும் பஸ் உள்ள வந்தீங்க?" என்றவள், “உங்களுக்கு நியாபகம் இருக்கா அபய்?” என்றாள்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1