வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 22.2

 

 

"எனக்கு ஞாபகம் இருக்கு நயனி. நான் சுதர்ஷன் அப்புறம் விவேக் மூணு பேரும் காலேஜ் லெவல் டோர்னமென்ட்ல பார்ட்டிசிபேட் பண்றதுக்காக சென்னைக்கு நீ சொல்ற அதே பஸ் தான் வந்தோம்…

ஆனா சுதர்ஷன் ஸ்போர்ட்ஸ் பேக்கை பஸ்ல மறந்து விட்டுட்டு வந்துட்டான். நாங்க ரூமுக்கு போன பிறகு தான் தெரிஞ்சது.. உடனே அந்த பஸ்ஸை தேடி வந்தோம்.. அப்போ அங்கிருந்த பொண்ணு நீதானா?!”

"ஆமா! அவன் என்னை வெளியே வரக்கூடாதுன்னு சொன்னான் ஆனா எனக்கு அவன் சொல் பேச்சை கேட்கிறது எனக்கு தான் ஆபத்துன்னு புரியவும் உடனே சீட்ல இருந்து எழுந்து காப்பாத்துங்கன்னு சொல்லி கத்தி கூச்சல் போட்டேன்..

பேக் எடுத்துட்டு இருந்த நீங்க எல்லாரும் ஒன்னும் புரியாம என்னை பார்த்தீங்க… ஆனா நான் இப்படி செய்வேன்னு எதிர்பார்க்காத அவங்க ரெண்டு பேருக்கும் தூக்கி வாரி போட்டுடுச்சு. உங்க கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு கண்ணாலயே என்னை மிரட்டினாங்க.."

யார் இந்த பொண்ணுன்னு அவங்க கிட்ட கேட்ட நீங்க, உனக்கு தெரிஞ்சவங்களான்னு என்கிட்டயும் கேட்டீங்க.. 

அப்போ நான் அவங்க பண்ணின எதையும் சொல்லாம இல்லை எனக்கு தெரியாதுன்னு மட்டும் சொன்னேன்..

 ஏன் நயனி அப்போவே அந்த அய்யோக்கியங்களை காட்டி கொடுத்திருக்கலாமே..

செய்திருக்கலாம், ஆனா அப்போ எனக்கிருந்த பயத்துலயும் பதட்டத்துலயும் முதல்ல அங்கிருந்து தப்பிச்சு போனா போதும்னு தான் தோனுச்சு..." 

"ஒருவேளை அன்னைக்கு நாங்க இல்லாம வேற எவனாவது இவங்களை விட மோசமானவங்க வந்திருந்தா என்ன செய்திருப்ப?.."

"நீங்களும் நானும் ஒரே பஸ்ல தான் திருப்பூர்ல இருந்து சென்னை வரை வந்திருக்கோம்.. ஆனா எனக்கு அதுகூட தெரியலை. அந்தளவு அந்த ஆள் கிட்ட இருந்து தப்பிச்சு வந்ததை பற்றியும் அம்மா தேடுவாங்களே என்ற யோசனை நிறைய இருந்தது…

அதை விட சென்னை வந்தது தப்போ?! அடுத்து என்ன செய்யறதுன்னு புரியமா இறங்கி போயிட்டு இருந்த எல்லாரையும் பார்த்தேனே தவிர எதுவுமே என் கருத்துல பதியலை..." 

"ஒருவேளை உங்களை நான் அப்போவே பார்த்திருந்தா ஹெல்ப் கேட்டிருப்பேனோ என்னவோ ஆனா அன்னைக்கு நிலையில் நீங்க இல்லாம வேற யார் வந்திருந்தாலும் அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு ஆராயும் அவகாசம் கூட எனக்கு இல்லை அபய்..

அதனால் எனக்கு உதவ இருந்த உங்க கிட்ட எனக்கு திருப்பூர் போகணும் இந்நேரத்துக்கு பஸ் இல்லைன்னு சொன்னங்கன்னு மட்டும் சொன்னேன்..

 அப்போ தான் என்னை பார்த்த நீங்கஏன் கண்ணு சிவந்திருக்கு முகம் ஒரு மாதிரி இருக்குன்னு கேட்டுட்டு.. ஏன் இந்த பொண்ணை இங்க வச்சிருக்கீங்கன்னுடிரைவர் கண்டக்டரை கேட்டீங்க..

ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பாராதவங்க சரியான பதில் சொல்லாமல் முன்னுக்கு பின் முரணா பேசவும், எங்க ஊர் பொண்ணு நான் கூட்டிட்டு போறேன்னு நீங்க சொன்னீங்க.. அப்போதான் எனக்கு என் உயிரே திரும்ப கிடைச்சதுன்னு சொல்லணும்…

ஆனாலும் அவனுங்க வயசு பொண்ணை பசங்க கூட எப்படி அனுப்பறது?! எங்க வீட்ல தங்க வைக்கிறோம்னு சொல்லவும் நீங்க அதுக்கு ஒத்துக்கலை.. நானும் உங்களோடு வரேன்னு அழுத்தமா சொல்லவும் அவனுங்க திரும்ப என்னை மிரட்ட பார்த்தாங்க..

 

"ஆனா நான் அவங்க பக்கமே திரும்பாமல் என்னை கூட்டிட்டு போயிடுங்கன்னு உங்க கிட்ட ரொம்ப திடமா சொன்னேன்.. நீங்களும் ஏதோ தப்பா இருக்குன்னு புரிஞ்சுகிட்டு என்னை கூட்டிட்டு போக தயாரானீங்க..

ஆனா அவங்க லேசுல ஒத்துக்கலை..

கடைசியா நீங்க போலீசை கூப்பிடுறேன் பேசிக்கலாம்னு சொல்லிட்டீங்க.. அதோடு நிற்காம உடனே ஃபோன் எடுத்தீங்க அதை பார்த்து பயந்தவங்கநீ கூட்டிட்டு போப்பாஎன்று சொல்லிட்டாங்க.."

 

"வெளியில வந்ததும் சுதர்ஷன் என்னை பற்றி விசாரிச்சுட்டு போலீஸ்ல கொண்டு போய் விட்டுடலாம்னு சொன்னார்.. உங்க இன்னொரு ஃபிரெண்ட் பஸ்ல அனுப்பி விட்டுடலாம்னு சொன்னார்.. ஆனா உங்களுக்கு இது இரண்டிலும் உடன்பாடு இல்லை..."

 

இந்த பெண்ணை நம்மோடு எப்படிடா ஸ்டே பண்ண வைக்க முடியும்னு?” சுதர்ஷன் கேட்கவும், 

இவளை பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடலாம்னு சொன்னீங்க.. நாளைக்கு மேட்ச் வச்சுட்டு எப்படின்னு திரும்ப உங்களுக்குள்ள பேசிக்கிட்டீங்க..

"நீங்க தான் மெயின் ப்ளேயர் என்பதால் சப்ஸ்டிட்யூட் பண்ண வந்த இன்னொருத்தரோடு என்னை பத்திரமா பஸ்ல அனுப்பி வச்சீங்க.."

ஹ்ம்ம் நியாபகமிருக்கு. விவேக் உன்னை ஊருக்கு கூட்டிட்டு போனப்போ வீட்டு அட்ரெஸ் கேட்டதுக்கு கொடுக்காமல் உன்னை ஹாஸ்டல்ல விட சொன்னியாமே ஏன்?”

எனக்கு திரும்ப வீட்டுக்கு போக விருப்பமில்லை. அதோடு அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்க மாட்டங்க…

நீ இல்லைன்னு உன்னை தேடி இருப்பாங்களே?!”

ஆமா தேடினாங்க, அந்த ஆள் கிட்ட கேட்டதுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லியிருக்கான். என் அம்மா என்னை தேடாத இடமில்லை.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போற முடிவோடு இருந்தவங்க காலையில ஹாஸ்டல்ல இன்னொரு முறை பார்த்துட்டு போகலாம்னு இருந்திருக்காங்க.."

 

"ஆனா அதுக்குள்ள நான் ஹாஸ்டல் போயிட்டேன், ஏன் சொல்லாம கொள்ளாம போன நைட்டெல்லாம் எங்கிருந்தன்னு கேட்டு அழுதவங்க நான் சொல்லலைனாலும் அவன் தான் காரணம்னு கண்டு பிடிச்சுட்டாங்க.." 

"நீ என்ன சொன்ன?!"

"ஒத்துக்கிட்டேன்.. அதுல அவங்க அழுகை நிற்கவே இல்லை உடனே வீட்டுக்கு போய் அவன் சட்டையை பிடிச்சு கேட்டிருக்காங்க ஆனா அவன் அதுக்கும் அம்மாவை அடிச்சு உதைச்சு அவங்க கையை உடைச்சு விட்டுட்டான்..."

"ராஸ்கல்!! அவனை ஏன் நயனி சும்மா விட்ட? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தள்ள வேண்டியது தானே?!"

"சொல்றது ஈஸி அபய் பட் பிராக்டிகலா ரொம்ப கஷ்டம். அதுவும் என் தம்பி தங்கச்சிங்க இருக்கிறப்போ.. இதனால இன்னுமே குடும்பத்துக்குள்ள மனக்கசப்பும் குழப்பமும் தான் அதிகரிக்கும்.."

"அதுக்காக அவனை..." என்றவனை இடையிட்ட நயனி,

"ஒரு நிமிஷம் அவனை யார் சும்மா விட்டான்னு நினைக்கறீங்க?!" என்று கேள்வியாக பார்க்க அபய்க்கு புரியவில்லை.

"அவனுக்கான தண்டனையை நான் கொடுத்துட்டேன்..."

"நிஜமாவா? எப்படி?"

"அன்னைக்கு நடந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் கொஞ்சம் அடக்கி வாசிச்சவன் நான் பிளஸ் டூ முடிச்சு காலேஜ் சேர இருந்த சமயத்துல திரும்ப ஒருமுறை அவனோட வேலையை காண்பிச்சான்.."

 

"நீ தனியா இருந்த போதா? இவ்ளோ நடந்தும் உன் அம்மா எப்படி தனியா விட்டாங்க?" 

"அவங்க விடலை. நானே தான் அன்னைக்கு தனியா இருக்க முடிவு செய்து அவங்களை வெளியே அனுப்பி வச்சேன்.."

"வாட்?!"

"எஸ், யூ ஹேர்ட் இட் ரைட் அபய்! தப்பு பண்ண பார்த்தவன் அவன், ஆனா பயந்து ஓடினது நான்! ஏன் எதிர்த்து நிற்காம போனேன்னு என்னை நானே பல நாள் கேட்டுக்கிட்டதின் விளைவு தான் அவங்களை வெளியே அனுப்பினது..

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு இல்லாத தைரியம் அன்னைக்கு இருந்தது. அவனுக்கு சரியான பாடம் கத்து கொடுக்க முடிவு பண்ணி காத்திருந்தேன்..

நான் எதிர்பார்த்தது போலவே அவங்க கிளம்பிய கொஞ்ச நேரத்துல கதவை சாத்திட்டு அந்த நாய் என்னை தேடி வந்துச்சு. கிட்சன்ல இருந்த என்கிட்டே ஏதோ பேச்சு கொடுத்துக்கிட்டே மேல கை வைச்சான்..

ஆனா மறுநிமிஷமே கொதிச்சுகிட்டு இருந்த தண்ணியை எடுத்து வெந்து சாகட்டும்னு அவன் அடிவயித்துலயே ஊத்தினேன்.." என்றதில் அபய் திகைத்து போனான்.

"என்ன சொல்ற? நிஜமாவா?!"

"ஆமா. இதை அவன் சத்தியமா என்கிட்ட இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டான். அன்னைக்கு அந்த நாயால வீட்டை விட்டு போய் நான் பட்ட கஷ்டம் எனக்கு சொல்லி கொடுத்த பாடத்துல இருந்து அவன் தொல்லைக்கான தீர்வையும் கண்டுபிடிச்சேன்..."

 

"அவன் மேல ஊத்துறதுக்காகவே கொதிக்க வச்சுகிட்டு இந்த தண்ணி.. எவ்ளோ நேரம்னு எனக்கே தெரியலை. துடிதுடிச்சு போய் அப்படியே கீழ உட்கார்ந்தவன் உருண்டு பொரண்டு கதறின கதறல் அரை மணி நேரத்துக்கும் மேல நீடிச்சது..." 

"நீ என்ன பண்ணின? ஐ மீன் அவன் உன்னை எதுவும் செய்துடலயே.." 

"செய்யற நிலைமையிலயா அவன் இருந்தான்? நான் அவனுக்கு கொடுத்த வலியை மீறி அவனால என்னை என்ன செய்துட முடியும்?! எந்திரிச்சு கூட நிற்க முடியலை.. காப்பாத்த சொல்லி என் காலுல விழுந்தான். ஆனா நான் அசராம அவனை பார்த்துட்டு இருந்தேன்.."

"அப்புறம் அக்கம் பக்கம் இருக்கிறவங்க சத்தம் கேட்டு கதவை தட்டிட்டே இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு கதவை திறக்க அவன் துடிச்சதை பார்த்து என்னை எங்க போனான்னு கேட்டாங்க..

பாத்ரூம்ல இருந்தேன் சத்தம் கேட்டு தான் வந்தேன்னு சொல்லி அவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன்.."

"எப்படி ஆச்சுன்னு அங்கே டாக்டர் கேட்ட போதும் தண்ணீர்  சுட வச்சவன் கை தவறி தன் மேல ஊத்திக்கிட்டான்னு நான் சொன்னதை ஆமோதிப்பதை தவிர அவனுக்கு வேற வழியில்லை..." 

"திருடனுக்கு தேள் கொட்டின நிலை, இல்லையா?!"

"ஆமா. வீடு திரும்பின அம்மாவுக்கும் நான் ஏன் தனியா இருந்தேன் என்ற காரணம் புரிஞ்சுடுச்சு.. என்னை விட்டுட்டு போனவங்களுக்கு வழி எல்லாம் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சாம்.. அவன் நிலையை கண்டு என் அம்மா முகத்துல என்னைக்கும் இல்லாத நிம்மதியை அன்னைக்கு நான் பார்த்தேன்.."

"கிரேட் ஜாப் நயனி!! வேறென்ன சொல்லன்னு தெரியல. இதுக்கு அப்புறம் அவனுக்கு உன்னை திரும்பி பார்க்கிற தைரியம் கூட இருந்திருக்காதே.."

"ஆமா, ஆனா சமயம் கிடைக்கிறப்போ மத்தவங்க எதிரில் 'அப்பா' என்ற போர்வையில் என்னை திட்டுறதை, அடிக்கிறதை, மட்டம் தட்டி பேசுறதை வாடிக்கையா வச்சுருந்தான். ஆனா நான் தனியா இருக்கிற இடத்துல அவன் இருக்க மாட்டான். அந்த பயம் இப்போ வரை இருக்கு.." என்றாள் புன்னகையோடு. 

"சரி நம்ம கதைக்கு வருவோம். நீ ரெண்டு முறை என்னை பார்த்ததா சொல்லி இருந்தியே இன்னொரு முறை எங்கே எப்போ?" என்றான்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1