வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 26.1

 

ரம்யமான சூழலில் அமைந்திருந்த கார்டன் ரெஸ்டாரண்டுக்கு நயனியை அழைத்து வந்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.

இது உங்களோட ஃபேவரெட் ஸ்பாட் இல்லையா அபய்?”

எஸ். நானும் சஞ்சுவும் அடிக்கடி இங்க தான் வருவோம். திஸ் பிளேஸ் இஸ் க்ளோஸ் டூ மை ஹார்ட்! என்னமோ தெரியலை உன்னை முதல்முறை உன்னை கூட்டிட்டு இங்க தான் வர தோனுச்சு. உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?”

எனக்குமே இந்த பிளேஸ் பிடிக்கும் அபய்..என்றிட புருவத்தை கீறியபடி, “நீயும் இரண்டு முறை வந்திருக்க தானே?!..” என்றான்.

ஆமா, சஞ்சுவோட பர்த்டே செல்ப்ரெட் பண்ண இங்க வந்தப்போ, அதுக்கு முன்னாடி ஒருமுறைன்னு கரடியா உங்களுக்கு இடையில் இருந்திருக்கேன்…என்றாள் சிரிப்போடு.

எங்களோட கெஸ்ட் நீ! உன்னை நான் ஒன்னும் அப்படி நினைக்கலை.. கார் பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்...என்று அவளை இறக்கி விட்டு கிளம்பினான்.

கணவனுக்காக காத்திருந்த நயனிக்கு இறுதியாக சஞ்சுவோடு இங்கே வந்த நியாபகங்கள் படை எடுத்தது.

அதிலும் அவளின் இறுதி பிறந்த நாளை கொண்டாடியது, அன்று இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்த இடங்கள், பேசிய பேச்சுக்கள், சிரிப்பு, எதிர்காலம் குறித்த திட்டமிடல் என்று நினைவலைகள் அவளை சிறுக சிறுக சிதறடித்து கொண்டிருந்தது. 

அபய் அங்கே வந்த போது நயனியின் விழிகள் சிவந்து கண்ணீர் தடங்கள் முகமெங்கும் வியாபித்திருந்தது. 

கணவன் அருகே வரவும் முகத்தை அழுந்த துடைத்து தன்னை கட்டுபடுத்தி எழுந்து கொண்டவள், “கிளம்பலாம்என்று லிஃப்ட் நோக்கி அவனுக்கு முன்பாக நடந்தாள்.

முகத்தை மறைத்தாலும் அவள் குரல் காண்பித்து கொடுத்து விட, “நயனி ஆர் யூ ஓகே?” என்ற ஸ்ரீவத்ஸன் அவளுக்கு ஈடு கொடுத்து நடக்க லிஃப்ட் திறந்து உள்ளே சென்றாள் நயனி. 

நயனி உன்னை தான் கேட்கிறேன், ஆர் யூ ஓகேஎன்று அவனை பார்க்காமல் கைபேசியை பார்த்திருந்தவளை கேட்க, உதடுகளை கடித்தபடி கண்ணீரை விழுங்கினாள்.

அடுத்த பிறந்தநாளுக்கு அபய்யின் மனைவியாக அவர் குழந்தையை சுமந்து கொண்டு இங்கே வர வேண்டும் அவர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை இங்கு தான் கொண்டாட வேண்டும்என்று நயனியின் தோளில் சாய்ந்தபடி அத்தனை ஆசையோடு பேசியவளின் குரல் இன்னுமே அவள் செவியில் சுழன்று கொண்டே இருந்தது.

நயனி லுக் அட் மீ!என்று அபய் அவள் முகத்தை நிமிர்த்த விழிகளில் திரண்டிருந்த கண்ணீரில் ஒரு துளி அவன் கையில் விழுந்தது. 

என்னாச்சு நயனி? சஞ்சு ஞாபகமா?” என்றதற்கு உள்ளம் வெதும்ப மெல்ல தலையசைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 

நயனி..என்று அபய் அவள் கண்ணீரை துடைத்த போதும் அழுகை மட்டுப்படவில்லை. 

ஸ்டே ஸ்ட்ராங் நயனி..என்றவன் மென்மையாய் அவளை அணைத்துக்கொண்டு தலையை வருடிய படி, “நாம வேற ரெஸ்டாரன்ட் போகலாமா?” என்றான்.

அதற்கு பதிலளிக்கும் நிலையில் நயனி இல்லாமல் போக, “கம் லெட்ஸ் கோ சம்வேர்..என்றபடி நின்ற லிஃப்ட்டை மீண்டும் கீழ்நோக்கி செலுத்த, “பரவால்ல அபய், ஐ கேன் அட்ஜஸ்ட்..

இல்லை, இந்த இடம் உன்னை இந்தளவு ப்ரேக் பண்றப்போ நமக்கு வேண்டாம் நயனி.. வேற இடத்துக்கு போகலாம்..என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், 

ப்ளீஸ், அப்படி பார்த்தா நாங்க அதிகமா ஸ்பென்ட் பண்ணின இடம் காலேஜ் பட் இங்க அன்னைக்கு அவ பேசினது.. ப்ச்,  நான் தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்...என்று அவன் கையை பிடித்துக்கொண்டவள், 

நம்மோட ஃபர்ஸ்ட் டின்னர் உங்க ஆசைப்படியே இருக்கட்டும். ப்ளீஸ் வாங்க..

ஷூர்!!

சென் பர்சென்ட்! ஐம் ஓகே நவ்..என்ற போதும் அபய் பார்வை அவள் மீது ஆராய்ச்சியாய் படிந்தது. 

அதுதான் சொல்றேனே, இன்னும் என்ன யோசனை? அதிகம் யோசிக்காம சீக்கிரம் வாங்க பாஸ் பசிக்குது..என்று புன்னகையோடு அழைத்து சென்றாள்.

இருவருக்கும் பிடித்ததை அபய் ஆர்டர் செய்ய நயனி முகத்தை கழுவி பொட்டிட்டு கொண்டு வந்து அமர அனைத்தும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

நான் ஒரு விஷயம் கேட்கலாமா அபய்?” என்றாள் சப்பாத்தியை எடுத்த படி. 

கேளு நயனி..

அன்.. அன்னைக்கு என்னை போலவே சஞ்சுவுக்கும் ஆச்சுன்னு சொன்னீங்களே! எப்படி? எதனால? யார் காரணம்?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.

அபய் கரம் தன் செய்யலை நிறுத்தி, “கண்டிப்பா தெரியனுமா?” என்றான். 

தெரிஞ்சுக்கணும். ஏன் என்கிட்டே இருந்து மறைச்சான்னு தெரியலை ஆனா எனக்கு தெரியனும் அபய். அவங்களை சும்மா விடக்கூடாதுஎன்றவளின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்!!

அதுக்கு அவசியமில்லை நயனி. அவங்களுக்கான தண்டனையை கடவுளே கொடுத்துட்டார்.. 

என்ன சொல்றீங்க?” என்றவளிடம் சன்சுவின் நிலைக்கு காரணமானவர்கள்எப்படி இறந்தார்கள்?’ என்பதை சொல்லி முடிக்க அங்கே கனத்த அமைதி. 

சஞ்சுவை எதனால?” என்று நயனி குரலை செருமிக்கொண்டு கேட்க, 

ட்ரக்ஸ்! நம்ம காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் சிலர் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் உனக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..என்றதற்கு அவளிடம் மெல்லிய தலையசைப்பு. 

என் சஞ்சுவை என்ன பண்ணினாங்க?” 

வேண்டாம் நயனி. நீ தாங்க மாட்ட, உனக்கு சொல்ல வேண்டான்னு சஞ்சு ரிக்வெஸ்ட் பண்ணியிருக்கா.. வேண்டாமே!!என்றிட அதன்பின் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். 

அடுத்த நாள் காலை நயனி தன் க்ளிப்பை தேடிக்கொண்டு இருக்க, தனலட்சுமி மகளுக்கு அழைத்தார்.

"சொல்லு மா.." என்று கல்லூரிக்கு கிளம்பும் பரபரப்பில் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

"நயனி நாளைக்கு நிதிஷாவுக்கு முகூர்த்த புடவை எடுக்க போறோம் நீயும் மாப்பிள்ளையும் வாங்க.." என்றார்.

"நாளைக்கா?!"

"ஆமாடா.."

"பார்க்கிறேன் ம்மா, முடிஞ்சா லீவ் போடறேன்.."

"மாப்பிள்ளை காலேஜ்ல உனக்கு லீவ் இல்லைன்னு சொல்லிடுவாங்களா? நீ கண்டதையும் யோசிக்காம கிளம்பி வா, நாளைக்கு அந்த ஆள் அவன் தோஸ்த் பையன் நிச்சயத்துக்கு போயிடுவான். கடையில ரொம்ப நேரம் கூட இருக்க மாட்டான். எனக்கு உன்னோடு இருக்கணும் ப்ளீஸ்..." என்ற தாயின் ஏக்கம் அவளை உருக்கியதில் அடுத்த நாள் அபய் ஸ்ரீவத்ஸனோடு கிளம்பிவிட்டாள்.

ஆனால் நேராக கடைக்கு செல்லாமல் அருகே இருந்த வேறொரு கடையில் அவளுக்கு புடவை பார்த்திருந்தாள்.

சேதுராமன் புடவை கடையில் இருந்து கிளம்பிய செய்தி கிடைக்கவும், "போகலாம் அபய்.." என்று புடவையில் இருந்த கணவனின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

"ஹே! இரு மா.. புடவையை பேக் பண்ணி பே பண்ணிட்டு வரேன்.."

"அதெல்லாம் வேண்டாம்..."

"வேண்டாமா?! நீதானே இந்த புடவை பிடிச்சிருக்குன்னு சொன்ன?!"

"ஆமா அனா இப்போ பிடிக்கலை. வாங்க நிதுக்கு புடவை எடுக்க போகலாம்.." என்று பரபரத்தவளை இழுத்து நிறுத்தியவன்.,

"அவன் கிளம்பறதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்தன்னு எனக்கு புரியாமல் இல்லை ஆனா எனக்கு உனக்கு புடவை  கிஃப்ட் பண்ண தோணுது. ஸோ லெட்ஸ் ஃபினிஷ் திஸ்" என்றதில் அதற்கு மேல அவளால மறுக்க முடியவில்லை.

புதுரக பட்டுப்புடவைகளை அவர்கள் முன் பரப்பியிருக்க அதில் ஐந்து புடவையை தேர்ந்தெடுத்து அவளிடம் நீட்டினான் அபய்.

நயனிகாவும் அதில் இருந்து ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்க, "எல்லாமே உனக்கு தான் நயனி.." என்றான்.

"வாட்?! இவ்வளவுமா?" என்ற அதிர்வுடனே அனைத்தையும் ஏற்று கொண்டவள், தங்கைக்கும் புடவை எடுத்து விட்டு வீடு திரும்ப மாலையாகி போயிருந்தது.

அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவள் பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு நிர்மலாவிற்கு உதவ சமையலறைக்கு சென்றாள்.

"நீ போய் ரெஸ்ட் எடு நயனி!!"

இருக்கட்டும் த்தை கொடுங்க நான் கட் பண்றேன்..என்று வாங்கிக்கொள்ள அபய் ஸ்ரீவத்ஸன் அங்கு வந்து சேர்ந்தான்.

"ம்மா நாங்க வெளியில போறோம்.. வர நேரமாகும்.." என்றான்.

"அப்படியா எங்கே? சொல்லவே இல்லையே நீங்க?!..."  என்றாள் நயனி ஆச்சர்யமாக.

"என்ன மா இது வெளியில கூட்டிட்டு போறேன்னு சொன்னா இத்தனை கேள்வி கேட்கிறி?"

"இல்லத்தை எப்பவும் அவரோட ஸ்கெட்யூல் என்கிட்டே முன்னாடியே சொல்லிடுவாரு.. நாளைக்கு அவர் சென்னை கிளம்ப வேண்டியது இருக்கு பட் இப்போ திடீர்னு வெளியே கிளம்பறோம்னு சொன்னதால கேட்டேன்..."

"ஓஒ அப்படியா?! சரி.." என்று நிர்மலா சொல்லி கொண்டிருக்க மனைவியின் கையை பிடித்து தங்கள் அறைக்கு வந்தான்.

"என்ன இது சின்ன குழந்தையை இழுத்துட்டு வர மாதிரி கூட்டிட்டு வரீங்க?" என்று புரியாமல் அவளை பார்க்க "இதுல எந்த டீஷர்ட் நான் போடட்டும்?.." என்றதில் நயனி அசந்து போய் அவனை பார்த்தாள்.

"என்ன என்னைக்கும் இல்லாத திருநாளாக என்னை கேட்டு ட்ரெஸ்ஸப் பண்றீங்க?!"

"டேட் நைட்ல நம்ம பார்ட்னருக்கு பிடிச்ச மாதிரி இருக்கிறதுல தப்பில்லையே?!"

"டேட்டா!!"

"ஆமா, நேத்து நிறைய ப்ளான் பண்ணி இருந்தேன் பட் ரொம்பவே சொதப்பிடுச்சு அதனால இன்னைக்கு நைட் அவுட் போறோம். கிளம்பு.. அதுக்கு முதல்ல எனக்கு செலெக்ட் பண்ணு.." என்றதில்,

"வேற லெவல் பாஸ் நீங்க!! என்னால நம்பவே முடியலை..." என்றவளின் கன்னங்களை பிடித்து தன்னை நோக்கி இழுக்க விரிந்த விழிகளோடு நயனி கணவனை பார்த்தாள்.

எனக்குமானே தேனேன்னுஉன் அளவு பாட தெரியாது ஆனா கட்டிக்க தெரியும்…என்றவனின் கரங்கள் மனைவியை சுற்றி வளைத்து இறுக்கமாக கட்டிக்கொள்ள, அவன் உதடுகளோ அவள் நெற்றியோடு அழுத்தமாக உறவாடியது.  

இருவரின் முதல் அணைப்பு! முதல் முத்தம்! 

ஆனால் அதை எதிர்பாராத நயனியின் நயனங்கள் இன்னுமே பெரிதாக விரிய "இப்போ நம்ப முடியுதா?" என்றான் இன்னுமே இறுக்கத்தை கூட்டி.

"அபய்.." என்றவளின் முகம் பரந்து விரிந்த அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்திருந்தது.

"உனக்கு நைட் அவுட் பிடிக்கும் தானே?!"

"ஹ்ம்ம்!" என்றவளின் இதழ்கள் அவன் மார்பில் உரசியது. 

தனக்கான அவன் அனுசரணைகள் நயனியை அடியோடு வீழ்த்த பாவை மனம் கணவனின் காதலில் கசிந்துருகி சிக்கி தவித்தது. 

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1