வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 26.2

 

 

இரு மனங்களும் அந்நொடி தங்கள் இடைவெளியை குறைத்து உரசி நின்றதில் மனமெங்கும் பனிசாரல் தூவ தேனினும் தித்திப்பான அந்நிலையை விட்டு பிரிய இருவருக்குமே மனமில்லை. 

நயனியின் கரங்களும் கணவனின் முதுகில் அழுத்தமாக பதிந்திட இருவரின் பார்வையும் தழுவி சென்ற நொடி உயிர் சிலிர்த்தடங்கியது.

கைபேசி ஒலியில் மீண்ட அபய் அவள் தேர்ந்தெடுத்த டிஷர்ட்டை அணிந்து கொண்டு தயாராக நயனியும் ஜீன்ஸ் டாப்ஸ்ஸில் கிளம்பி வந்தாள்.

நிர்மலாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியில் வர அபய் கார் எடுக்க சென்றான்.

"பாஸ் நைட் அவுட் போறதுன்னு முடிவு பண்ணியாச்சு அதுக்கு எதுக்கு கார்ல போகணும்..?"

"கார் வேண்டாமா?"

"அது சுத்த போர் அபய். பொண்டாட்டியை ரொமான்டிக் டேட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க ஆனா இப்படி கார்ல ஒருத்தருக்கு ஒருத்தர் இடையில நாலு அடி சோஷியல் டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணியா கூட்டிட்டு போவீங்க? சரியான பூமரா இருக்கீங்களே.." என்றாள் சிரிப்போடு.

"இப்ப தான் காதலிக்க கத்துகிறேன், கூட குறைய இருந்தாலும் காப்பாத்தி கரையேற்றி விட்டிடுடி. இப்படி காலை வாரி விடாத.." என்றான் அவளுக்கு குறையாத சிரிப்போடு.

"என்னது புதுசா காதலிக்கிறீர்களா? பாஸ் இப்படி எல்லாம் டக்குனு உருட்டாதிங்க பிஞ்சு மனசு சட்டுன்னு பதறிப் போகுது..!" என்றவளின் தலையில் செல்லமாக தட்டியவன்,

"ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்கும் கட்டின பொண்டாட்டியை காதலிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. அப்படி பார்க்க போனா என் பொண்டாட்டியை காதலிக்க கத்துகிறது புது விஷயம் இல்லையா?!" என்று அபய் ஒற்றை கண் சிமிட்டிய அழகில் சொக்கி நின்றவள்,

"பார்றா! லாஜிக்கல் ரீசனிங்ல பட்டைய கிளப்புறீங்க போங்க... நிஜமாவே நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்.." என்று அவன் தோளில் தட்டி கொடுத்தாள்.

நான் மட்டும் தனியாவா?”

ஏன் அது உங்களுக்கு பழக்கம் தானே?!” என்றவளின் குரலில் தூக்கிவாரிப்போட திரும்பிய அபய் அவள் முகத்தில் கூத்தாடிய குறும்பை கண்டு, 

இனி உன்னை விட்டுட்டு எங்கயும் போறதா இல்லை. அதுக்கு முன்னாடி நைட் அவுட் போகணும் நிறைய பிளான் வச்சிருக்கேன் கிளம்பலாமா?”

"அஃப்கோர்ஸ்!! உங்க கிட்ட டூ வீலர் இருக்கு தானே அதை எடுத்துட்டு வாங்க.." என்றதும் அபய் தன் டூவீலரோடு அவள் முன்னே நிற்க, "சிங்கிள் சைடா? டபுள் சைடா?.." என்றதில் அபய் நெறித்த புருவங்களோடு அவனை பார்க்க, 

இல்லை பாஸ் டபுள் சைட் என்றால் கொஞ்சம் ரிஸ்க்.. அதுவும் உங்களோட சபதம் உடையவும் வாய்ப்பு இருக்கு..என்றாள் நமட்டு சிரிப்போடு..

அவள் பேச்சு புரியாமல், “என்ன சபதம் நயனி?..” என்று கண்கள் இடுங்க அபய் பார்த்தான். 

இல்லை நீங்க நம்மோட ஃபர்ஸ்ட் நைட்ல பேசினதெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. அப்போவேகண்ணை தொறக்கணும் சாமி கையை பிடிக்கணும் சாமின்னு பாட நினைச்சேன்..என்று கண் சிமிட்டிட, 

காட்!! யூ ஆர் அன்பிலிவபில் நயனி..என்ற அபய்யின் சிரிப்பு நிற்க வெகு நேரம் பிடித்தது. 

நயனியும் சிரிப்போடு அவனை பார்த்து நிற்க, “இந்த பாட்டெல்லாம் நம்மோட பெட்ரூம்ல வச்சுக்கோ இப்போ பார்த்த முதல் நாளேன்னு பாடிட்டே உட்கார்..என்று சிரிப்போடு சொன்னவனுக்கு இருப்புறமாக காலிட்டு அமர்ந்தவள் கணவன் தோள்களை பிடித்துக் கொண்டாள்.

"போகலாமா?"

"ஹ்ம்ம்..."

"எனக்கு சின்ன வயசுல இருந்தே டூவீலரில் போக ரொம்ப பிடிக்கும் ஆனா வாய்ப்பு கிடைத்தது இல்ல. பட் என்னோட ஆசையை சொன்னதுமே அடுத்த நாள் சஞ்சு என்னை அவளோடு டூவீலரில் கூட்டிட்டு போனா.." என்று நயனி சொல்லிக்கொண்டு வர அபய் தலையசைத்து அவள் பேச்சை கேட்டுக்கொண்டான்.

அன்று நயனி சொன்னது போல அவர்களே நினைத்தாலும் சஞ்சுவின் பெயரை அவளுடனான நிகழ்வுகளை அவர்களாலேயே தவிர்க்க முடியாது என்ற புரிதலுக்கு வந்திருந்த அபய் இப்போதெல்லாம் அவள் குறித்த செய்திகளை இயல்பாக ஏற்க, பேச கற்றுக்கொண்டிருந்தான்.

மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தவன் முக்கிய சாலை வரவும் சற்று வேகமெடுக்க, "முதல்ல எங்கே அபய்?" என்றாள்.

"மூவி!!"

"மூவியா?!"

"என்னடி நீ எல்லாத்துக்கும் இவ்ளோ ஷாக்காகுற?"

"இல்லை நீங்க மூவி பார்ப்பீங்களா? உங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கான்னு கேட்டேன்.." என்றவளுக்கு பதிலளித்தபடி தியேட்டருக்கு வந்து சேர்ந்திருந்தான்.

இருவரும் சென்று அமர படம் தொடங்கியது. 

யாரிடம் கேட்டிருப்பான்என்று தெரியாது ஆனால் இப்போதும் நயனிக்கு பிடித்த கதாநாயகனின் படத்திற்கு தான் அழைத்து வந்திருந்தான்.

இடைவெளியில் அவளை அழைக்க, "நீங்க போயிட்டு வாங்க எனக்கு ஒரு கால் பேசணும்" என்றிட தான் மட்டுமே சென்று கை நிறைய ஸ்நேக்ஸ்சோடு திரும்பினான் அபய்.

அவன் கையில் இருப்பவற்றை ஆராய்ந்தவள், "என்ன ஐஸ்கிரீம் மட்டும் ஒன்னே ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க?" என்றாள்.

"ஏன் ஒரு ஐஸ்கிரீமை ரெண்டு பேரும் சாப்பிட கூடாதா?" என்றதும் சட்டென சிரித்து விட்டாள் நயனி.

"இதெல்லாம் உங்களுக்கு சுத்தமா செட் ஆகல அபய்.." என்றவள் சிரிப்பு இன்னுமே அதிகரிக்க,

"ஏன்டி இப்ப தான் நானே என் பொண்டாட்டியை லவ் பண்ற பிராசஸ்ல இறங்கி இருக்கேன்.. தப்பும் தவறுமா தான் கத்துக்க முடியும் அதுக்குள்ள கலாய்க்கிற பாத்தியா?!"

"ஓகே, ஓகே சில்! நான் ஒன்னும் கலாய்க்கல.. பட் நான் உங்களை இப்படியெல்லாம் எதிர்பார்க்கலை..

இப்படின்னா எப்படி?”

நீங்க செய்யறதெல்லாம் டீன் ஏஜர்ஸ் செய்யறது போல இருக்கு ஸோ என்னையும் மீறி சிரிப்பு வருது. நான் என்ன செய்ய?.."

"நீ ஒன்னும் செய்ய வேண்டாம் முதல்ல என் கையில் இருக்கிறது எல்லாம் வாங்கிக்கோ.." என்றதும் அவன் கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வாங்கி மடியில் வைத்தவள்,

"சரி ஐஸ்கிரீம் எடுங்க மெல்ட் ஆகுறதுக்குள்ள சாப்பிடுவோம்.." என்றதும் ஐஸ்க்ரீமை இருவருமே பகிர்ந்து கொள்ள அபய்க்கு எப்படியோ ஆனால் நயனிக்கு மனமெங்கும் அத்தனை குளுமையை விதைத்தது ஒற்றை ஐஸ்க்ரீம்!!

மீண்டும் படம் தொடங்கிய சில நிமிடங்களில் அபய் புறமாக சரிந்த நயனிகா, "என்ன அமைதியா இருக்கீங்க?" என்றாள்.

"படம் பார்த்துட்டு இருக்கேனே வேற என்ன செய்யணும்?"

"பாஸ் தியேட்டர்க்கு வந்து இருக்கோம் ஒரே ஐஸ்கிரீம், கார்னர் சீட், லைட்ஸ் ஆஃப், ஹ்ம்ம் ஜமாய்க்கிறீங்க போங்க.., என்ன ஒன்னு என் மேல கை போடுவீங்கன்னு  நினைச்சேன், கொஞ்சம் டிஸப்பாயின்ட் பண்ணிட்டீங்க.."

"என்ன சொல்ற நீ?!"

"என்ன சொல்லிட்டேனாம்?" என்றாள் புன்னகையோடு..

"எனக்கு பப்ளிக் டிஸ்ப்ளே ஆஃப் அஃபெக்ஷன்ல உடன்பாடு இல்லை நயனி... நாம இருக்கிறது இந்தியா! பீ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம் இல்லையா?" என்றவனின் பேச்சில் நயனியின் முகத்தில் மென்னகை.

"ஐ லவ் திஸ் அபய்!!"

"பட் நீ நிஜமா தான் கேட்கறியா?" என்றதில் அவளிடம் கனத்த மௌனம்.

"உன்னை தான் கேட்கிறேன் நயனி.. நிஜமாவே தான் கேட்டியா?"

"ஆமா. எனக்குமே உடன்பாடு கிடையாது, ஆனா இப்போ உங்க கை கோர்த்துட்டு தோள் சாயணும்னு தோணுது. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் வேண்டாம் விட்டுடுங்க.." என்றதில் ஆச்சர்யமாக மனைவியை பார்த்தான் அபய்.

"ரொம்ப அதிகமா எதிர்பார்க்கிறேனோ?! லைக் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற மாதிரி.."

"இல்லை. ஆனா நீ இப்படி கேட்பன்னு நான் எதிர்பார்க்கலை.."

"உங்க கிட்ட எதுவும் எதிர்பார்க்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. ஆனாலும் முடியலை. இத்தனைக்கும் ஹாஸ்டல் சேர்ந்த ஒரு வயசுக்கு பிறகு யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்கிறதே விட்டுட்டேன்... அதனால தான் எங்க அம்மாவை விட்டுட்டு இருக்க முடிந்தது.."

"இப்பவும் எதிர்பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனாலும் நீங்க என்னை தேட வைக்கிறீங்க அபய்.." என்ற மனைவியை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

நான் உங்களை தேட வைக்கிறேனா?” என்று எதிர்பார்ப்போடு கணவனின் முகம் பார்க்க அவள் முகத்தை தன் மார்பில் அழுத்திக்கொண்டவன், "முதல்ல படத்தை பாருடி.." என்றான்.

திரைப்படம் முடிந்த பின்னர் இருவரும் உணவகத்திற்கு சென்று வீடு திரும்ப நள்ளிரவு இரண்டை தாண்டி விட்டிருந்தது.

உடை மாற்றிக்கொண்டு நயனிகா தன் இடத்தில் வந்து படுக்க அடுத்த சில நிமிடங்களில் அவள் பின்னிருந்து நயனியை மென்மையாக அணைத்த அபய், "உன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றியா?!" என்றான்.

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இன்னைக்கு நீ என்னை தேடலை.. உன் அப்பாவை தான் என் மூலமா தேடினன்னு புரிஞ்சது நயனி..."

"இன்னைக்கு அப்பாவோட பிறந்தநாள்! அவருக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம், எனக்குமே அப்படி தானாம். என்னோட இரண்டு வயசு வரை தான் அவர் என்னோடு இருந்தார் அதுக்கப்புறம் தான் அசம்பாவிதம் நடந்தது..."

"நீங்க நம்ப மாட்டீங்க அது வரைக்குமே நான் என் அம்மாவோடு தூங்கின நாள் ரொம்ப கம்மியாம். பசிக்காக அம்மாவை தேடுவேனே தவிர்த்து மற்றபடி அப்பாவோட தோளில் தான் என்னோட வாசம்னு அம்மா சொல்லுவாங்க.."

"என்னமோ இன்னைக்கு அப்பாவோட தோளில் சாஞ்சுக்க தோனுச்சு அதுதான் உங்களை கேட்டேன்.." என்றவளை இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தட்டி கொடுத்தபடி, "இப்போ தூங்கு.." என்றான்.

கணவனை பார்த்தபடி இருந்தவளின் விழிகள் கண்ணீரில் நனைந்திருந்த போதும் அன்றைய இரவை அத்தனை அழகானதாக, மறக்க முடியாததாக மாற்றி இருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1