வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 27.1

 

சென்னையில் இருந்து திரும்பிய அபய் ஸ்ரீவத்ஸனை அன்று புகழ்பெற்ற நகைக்கடைக்கு அழைத்து வந்திருந்தாள் நயனிகா வர்ஷி.

"நகை எடுக்கணும்னு சொல்லி கூட்டிட்டு வந்து இப்படி ஃபோனை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் நயனி? உனக்கு என்ன மாதிரி வேணும் சொல்லு எடுக்க சொல்றேன்.." என்றான்.

"ஒரு நிமிஷம் இருங்க.." என்றவள் தங்கையை வீடியோ காலில் இணைத்து விட்டு நகைகளை எடுக்க சொன்னாள்.

முதலில் அவளுக்கு பிடித்தது போல வளையல் எடுக்க, "க்கா உன் கையில் போட்டு காட்டு அப்போ தான் நான் சரியா சூஸ் பண்ண முடியும்.." என்றதும் வளையலை தன் கையில் போட்டு  காண்பித்தவள் அடுத்து அட்டிகையை எடுத்து போட முயல அவளால் சரியாக கொக்கியை மாட்ட முடியவில்லை.

"அபய் இதை கொஞ்சம் மாட்டிவிடுங்க.." என்றதும் அபய் அவளுக்கு உதவி செய்ய அடுத்த ஒருமணி நேரத்தில் தங்கைக்கான நகைகளை அவளுக்கு பிடித்த விதத்தில் தேர்வு செய்திருந்தாள்.

தேர்ந்தெடுத்தவற்றை பில் போட அனுப்பியவள் பணம் செலுத்துவதற்காக தன் காட்டை எடுத்துக் கொடுக்க, "ஏன் நயனி நான் பணம் கொடுக்க மாட்டேனா? அப்போ உனக்கு இன்னும் கோபம் குறையலையா?..” என்றான்.

கோபமா?” என்று புரியாமல் கணவனை பார்த்தாள்.

ஆமா உன்னோட கோபம் குறையாததால தானே என்னை நீ அக்செப்ட் பண்ணாம ஒதுக்கி வைக்கிற" 

"என்ன பேசறீங்க அபய்? நான் எப்போ உங்களை ஒதுக்கி வச்சேன்?"

"இதோ, இப்போ, இப்படி.." என்று அவளுடைய கார்டை எடுத்துக் காண்பித்தான்.

இவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..என்றால் புன்னகையோடு.

ஏன் அப்போ இது முக்கியமானது கிடையாதா?” 

அப்படி இல்லை அபய். ஆனால் இது என் தங்கச்சிக்கு வாங்கக்கூடிய நகை. இதுக்கும் நான் உங்களை அக்செப்ட் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்? இதை என் புருஷன் கிட்ட தன்மானம் பார்த்து செஞ்சுக்கிற விஷயமா நீங்க எடுத்துக்கிட்டாலும் அதுல தப்பு ஒன்னும் இல்லைங்கறது தான் என்னுடைய அபிப்பிராயம்.."

"நயனி..."

"எஸ் அபய்! பொண்ணுங்களுக்கு ஃபினான்ஷியல் டிபெண்டன்ஸி ரொம்ப ஆபத்தானது. அது புருஷனாவே இருந்தாலும்..."

"நயனி நான் அப்படியில்லை.."

"குறிப்பிட்டு உங்களை சொல்லலை அபய். பட் ஸ்டில் நாம சம்பாதிக்கிற பணத்தின் மேல நமக்கு இருக்கிற உரிமை புருஷனோட சம்பாத்தியத்தில் கிடைக்கிறது இல்லை. நீங்க ஏத்துக்காம போனாலும் எத்தனை அன்னியோன்யமான தம்பதியா இருந்தாலும் இது தான் நிதர்சனமான உண்மை..."

"அதுக்காக என் புருஷனோட பணத்தை தொட மாட்டேன்னு சொல்லை பட் என் தங்கச்சிக்கான நகைகளை நானே வாங்கி கொடுக்க நினைக்கிறேன் அவ்வளவு தான்! இதுல உங்களை ஒதுக்கி வைக்கிறது சத்தியமா என்னோட நோக்கம் கிடையாது அபய்…"

"ஹே நயனி ஏன் இவ்ளோ எமோஷனாகுற? உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு நாம சேர்ந்து செய்ய போறதா தான் நினைச்சேன், பட் யூர் விஷ்.." என்று தோள்களை குலுக்கினான்.

அபய் நான் நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு பார்க்கலை.. நான் எடுத்தா என்ன நீங்க எடுத்தா என்ன அது நம்மோட கிஃப்ட் தானே! ஒருவேளை என்னோட கார்ட் கொடுத்தது உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா ஐம் ரியலி ஸாரி..என்றவள்,

"இப்ப என்ன உங்களுக்கு நகை வாங்கி கொடுக்கணும் அவ்வளவுதானே! வேணும்னா மொத்த கடையையும் வாங்கி கொடுங்க நான் எடுத்துக்கறேன். வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..." என்றாள் தீவிரக்குரலில்.

வாட்?”

எஸ் பாஸ்! 10 20 சவரன்கள் எல்லாம் வேண்டாம் கடையில் இருக்கிற மொத்த நகையும் வாங்கி கொடுங்க..

அடிப்பாவி! அதுக்காக மொத்த கடையுமா?"

"அட ஷாக்கை குறைங்க பாஸ். நம்ம பர்ஸ் நிறைஞ்சு இருந்தாலும் புருஷனோட பர்ஸை காலி பண்றதே தனி சுகம்னு சொல்லி கேள்வி பட்டிருக்கேன்.. இன்னைக்கு அது நிஜம் தானான்னு பார்த்துடலாம்.." என்று இரு கைகளையும் பரபரவென தேய்த்து விட்டுக்கொண்டவள்,

"எங்க உங்க பர்ஸ், கார்ட் எல்லாம் கொடுங்க பார்க்கலாம்.. அதை வச்சு முதல்ல ஒரு நூறு சவரன் தேத்த முடியுதான்னு பார்ப்போம் அப்புறம் சொத்து வீடெல்லாம் அடமானம் போட்டுக்கலாம்.." என்றதில் அரண்டு போனான் அபய்.

"நயனி ஆர் யூ சீரியஸ்?"

"ஆமா அபய், என் புருஷன் வாங்கி கொடுக்கிறது எனக்கு கசக்குமா என்ன? அதுவும் நீங்க இவ்வளவு சென்டிமென்ட்லா ஃபீல் பண்ணின பிறகு எப்படி சும்மா இருக்க?! சரி கடையை விடுங்க அட்லீஸ்ட் ஒரு நூறு சவரன் எனக்காக வாங்கி போட மாட்டீங்களா என்ன?.." என்று கண்சிமிட்டியவள் இதழ்களை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கினாள். 

"கொஞ்ச நேரத்துல எப்படி பயமுறுத்திட்ட.. சேட்டை கூடிப்போச்சுடி உனக்கு!!" என்று அவள் காதை பிடித்து திருகியவன், அடுத்து மனைவிக்கான ஜமிக்கியை தேர்ந்தெடுத்து, "பிடிச்சிருக்கா நயனி..." என்றான்.

"யூ ஆர் ஸோ ஸ்வீட் அபய்! ரொம்ப பிடிச்சிருக்கு" என்றிட மேலும் அவளுக்கு பிடித்த நகைகளை தேர்ந்தெடுத்து பரிசளித்தான்.

நயனி நிதிஷாவிடம் பேசிக்கொண்டு இருக்க பணம் செலுத்தி நகைகளை மனைவியிடம் கொடுத்தவன், “நீ வைட் பண்ணு நான் கார் எடுத்துட்டு வரேன்…என்று கார் எடுக்க சென்றான். 

அபய் வரவும் நயனி அவனருகே அமர்ந்திட, “சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு என் ஃப்ரெண்ட் ரிசெப்ஷன் இருக்கு நயனி அதுக்கு இந்த ஜுவல்ஸ் போட்டுக்கோ..என்றான். 

ஷூர்!!என்றவள் அடுத்த நாள் மாலை கல்லூரியில் இருந்து திரும்பியதும் குளித்து முடித்து தயாராக தொடங்கிட அபய் நிர்மலாவோடு பேசிக்கொண்டு இருந்தான். 

"அபய் கொஞ்சம் ரூமுக்கு வாங்க" என்று கணவனை அலைப்பேசியில் அழைத்தாள் நயனிகா வர்ஷி.

"சொல்லு நயனி.." என்றபடி அறையினுள் நுழைந்தான் அபய்.

"என்னங்க கொஞ்சம் இந்த ஃப்ளீட்ஸ் அட்ஜஸ்ட் பண்றீங்களா? நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் முடியலை.."

"நானா?" என்று திகைத்து நின்று விட்டான்.

ஆமா நீங்க தான்! நீங்க தானே பாஸ் என் புருஷன்?!” என்ற போதும் அபய்யிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, “என்ன பாஸ் யோசனை?” என்றாள்.

"நிஜமாவா? உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?!" என்றான்.

"ஹான் என்ன கேட்டீங்க?"

"இல்ல நான் புடவை கட்ட ஹெல்ப் பண்றதுல உனக்கு அப்ஜெக்ஷன் இல்லையான்னு கேட்டேன்.."

"இதென்ன இப்படி ஒரு கேள்வி?! பாஸ் நீங்க இப்ப தான் என்னை லவ் பண்ற ப்ராசஸ்ல இருக்கீங்க ஆனால் நான் உங்களை எப்போ இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு தெரியும் தானே! அப்புறம் எப்படி எனக்கு அப்ஜெக்ஷன் இருக்கும்னு நினைக்கறீங்க?!"

"நீங்க என் புருஷன்! உங்களை தவிர்த்து வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. ஒருவேளை சேலஞ்ல தோத்துடுவீங்கன்னு உங்களுக்கு பயமோ?! என்று புருவம் உயர்த்திட அபய் சட்டென சிரித்துவிட்டான்.

"இப்படியெல்லாம் சிரிச்சு மழுப்பக்கூடாது.. அன்னைக்கு நீங்க ரொம்ப ஸ்டெடி எப்பவும் உங்க கண்ட்ரோல்ல இருப்பேன்னு சொன்னீங்க." என்று சீண்டியவளை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்தவன்,

அன்னைக்கு கோபத்துல நான் ரொம்பவே அதிகமா நடந்துக்கிட்டேன் தானே?”

ரொம்பன்னு சொல்ல முடியாது பட் கொஞ்சம் அதிகம் தான். நிச்சயம் நீங்க என்னை ரூமுக்குள்ள தள்ளி வைப்பீங்கன்னு தான் எதிர்பார்த்தேன் பட் எல்லாரும் பார்க்க...என்றவளின் இதழ்களை ஒற்றை விரல் கொண்டு மூடியவன், 

என் அப்பா மேல இருந்த கோபத்தையும் சேர்த்து உன் மேல் காட்டிட்டேன். ஸாரிடி! இதுக்கு நீ ரிவெஞ் எடுக்கிறதா இருந்தாலும் எனக்கு ஓகே தான்..என்றான் சிரிப்போடு.

ரிவெஞ்ஜா? யூ மீன் ஸ்வீட் ரிவெஞ்!

அது உன்னோட இஷ்டம் ஆனால் இனி என்னை உன் கண்ட்ரோல்ல எடுத்துக்கோன்னு சொல்றேன்..என்று அவள் நெற்றி முட்டி சிரிக்க அதிர்ந்த நயனியின் விழிகள் தன் போக்கில் சதிராடியது.

என்ன பேச்சைக் காணோம்? பிடிக்கலையா? நயனிக்கு நான் வேண்டாமா?” என்று தன் ஒட்டுமொத்த காதலையும் விழிகளில் தேக்கி கேட்டவனின் குரல் அவளை மொத்தமாக வாரி சுருட்டிக் கொண்டது. 

நெஞ்சம் தடதடக்க நயனிகா கணவனை பார்க்க, “ஆனா ரொம்ப நாளைக்கு தள்ளி வைக்காத..என்றவனின் குரலில் மெல்ல தன்னை மீட்டுக்கொண்டவள்,

"பாஸ்.. அப்போ உங்க சபதம் என்னாச்சு? நான் கூட அன்னைக்கு நீங்க பேசினதை வச்சு நீங்க பெரிய ஆன்ட்டி ஹீரோவா வரப்போறீங்க.. உங்களுக்காக சில்லறையை சிதற விட நினைச்சிருந்தேன்.. ஆனா இப்போ டோட்டலா சரண்டர் ஆகுறன்னு சொல்றீங்க" என்று சிரிப்போடு கணவனை கட்டிக்கொள்ள, "அது போன மாசம்!!"  என்று கண் சிமிட்டினான்.

"ஓஓ!! அப்போ இது?" என்று அவர்களின் நிலையை கண்களால் சுட்டி காண்பித்தவளின் நெற்றியில் தன் உதடுகளை பொருத்தியவன்,

"இது இந்த மாசம்.. இப்போ நான் என் பொண்டாட்டி கிட்ட தோற்க தயாரா இருக்கேன்.."

"ரியலி?!"

"ஆமா.." என்று அவள் நெற்றி முட்டி சொன்னவனை இன்னும் இன்னும் பிடித்தது நயனிகா வர்ஷிக்கு..

"என்கிட்டே தோற்கிறது உங்களுக்கு பெருமையா இருக்கலாம் ஆனா என் புருஷனை யார்கிட்டயும் என்னைக்கும் நான் தோற்க விட மாட்டேன்" என்றவளின் உரிமை உணர்வில் சுகமாக வீழ்ந்தவன் அணைப்பு இன்னுமே இறுக்கம் கொண்டது.

பாஸ் இப்படியே இருந்தா உங்க பிரண்டு ரிசப்ஷனுக்கு போன மாதிரி தான்..என்றவளின் சிரிப்பில் அவளை விடுவித்தவன்,

எனக்கும் உனக்கு ஹெல்ப் பண்ண ஆசை தான் ஆனா எனக்கு ஃப்ளீட்ஸ் எடுக்க தெரியாதே நயனி..." என்றான்.

பாஸ் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண நைட் அவுட், டின்னர், கிஃப்ட்ஸ் மட்டும் போதாது அப்பப்போ இந்த மாதிரி ஹெல்ப் பண்ணனும் அதுவும் நான் கேட்காமலே!!"

"கேட்காமலே எப்படிடி பண்ண முடியும்?"

"அதுதான் இப்ப சொல்றேனே! எப்பவுமே பட்டு புடவையை தனியா கட்டறது ரொம்ப கஷ்டம் யாராவது ஒருத்தர் ஹெல்ப் பண்ணினா தான் அழகா கட்டி முடிக்க முடியும். ஸோ இதுபோல பங்ஷன் கிளம்பும்போது ஒவ்வொரு முறையும் நான் கூப்பிடனும்னு எதிர்பார்க்க கூடாது.."

"அது சரி!!என்று அபய் புன்னகைக்க, “இப்போதைக்கு நீங்க எடுக்க வேண்டாம் நான் எடுத்திருக்கிறதை கரெக்ட் பண்ணீங்கன்னா போதும். போகப்போக நான் ஒவ்வொன்னா கத்துக் கொடுக்கிறேன்" என்றதும் அவள் முன் மண்டியிட்டவன் புடவை மடிப்புகளை அவள் சொன்னது போல நேர்த்தியாக எடுத்து விட்டான்.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1