வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - 27.2

 

"பரவாலயே பாஸ் கற்பூரம் நீங்க! டக்குன்னு பண்ணிட்டீங்க... இதே போல நெக்ஸ்ட் டைம் நான் கூப்பிடாமலே செய்யணும் அப்ப தான் நீங்க பக்காவான ஹஸ்பண்ட் மெட்டீரியலா மாற முடியும்..என்று சிரிப்போடு தன் முன்னே இருந்தவனின் முன்னுச்சி முடிகளை கலைத்துவிட்ட படி சொன்னாள்.

அடுத்து என்ன?”

பின் பண்ணனும்இதோ இந்த மாதிரி..” என்று அவள் முந்தானையை பின் செய்து இருந்ததை காண்பித்தது “இதே மாதிரி பின்னாடி ஒரு பின் பண்ணனும்” என்றிட முதலில் தடுமாறினாலும் பின் நயனியின் வழிகாட்டுதலில் சில நிமிடங்கள் செலவழித்து செய்து முடித்தான். 

தேங்க்யூ பாஸ்” என்றவள் கண்ணாடியின் முன் நின்று தலை சீவ அவளை பின் இருந்து கட்டிக்கொண்ட ஸ்ரீவத்ஸனின் உதடுகள் அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக பதிந்து,

"இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு நயனி...என்று முத்தமிட அவளையும் அறியாது சிறு வெட்கக்கீற்று முகத்தில் படர்ந்தது.

இருவரையும் கண்ணாடியில் பார்த்தபடி நின்றிருந்தவளிடம், "அவ்வளவு தானா இல்ல வேற ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?" என்றதும் புன்னகையோடு அவன் கன்னம் இழைந்தவள்,

"நீங்க எடுத்து கொடுத்த ஜூவல்ஸ் நீங்களே போட்டு விட்டா ஐல் ஃபீல் மோர் ஹாப்பி..." என்று அவன் கன்னத்தில் முத்தமிட, நயனிகாவை அமர்த்தி ஒவ்வொரு நகையையும் பொறுமையாக அணிவித்து திருமணத்திற்கு கிளம்பினான்.

மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மகன் மருமகள் இருவரின் பொருத்தத்தையும் கண்ணெடுக்காமல் பார்த்து நின்ற நிர்மலா அவர்களை நெட்டி முறித்து வழி அனுப்பினார். 

அவர்கள் திருமணத்தில் இருந்து திரும்பவும் சமையலறையில் வேலையாக இருந்தவர் அரவம் கேட்டு அவசரமாக ஹாலுக்கு வந்தார். 

அபய் நயனி இருவரும் பேசியபடி மாடி ஏறி சென்று கொண்டிருக்க, “ஸ்ரீ ஒரு நிமிஷம்என்றார். 

சொல்லுங்க ம்மா..

இங்க வாப்பா, நீயும் வாம்மா..என்றதில் ஒன்றும் புரியாமல் இருவரும் இறங்கி வர, “இங்கேயே நில்லுங்க..என்றார். 

என்ன விஷயம் அத்தை?” என்று நயனி கேட்க, “ஒரே நிமிஷம், வந்துடுறேன்..என்று அவசரமாக சமையலறைக்கு ஓடியவர் கைப்பிடி மிளகாய், உப்போடு திரும்பினார். 

என்ன விஷயம் அத்தை சொல்லாம சஸ்பென்ஸ் வைக்கறீங்க?” என்று சிரிப்போடு மாமியாரை பார்க்க, “முதல்ல ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கஎன்று அவர்களை ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தார். 

நீங்க கிளம்பின போதே உங்க ஜோடி பொருத்தத்தை பார்த்து என் கண்ணே பட்டுடுச்சு, இப்போ கல்யாணத்துல எத்தனை கண்ணு பட்டிருக்குமோ அதுதான் திருஷ்டி கழிச்சேன்..என்றவர், “என்னைக்கும் இதேபோல சந்தோஷமா இருக்கணும்..என்று ஆசிர்வதித்தார்.

நயனிகா மாமியாரோடு பேசிக்கொண்டிருக்க அறைக்கு சென்ற அபய் உடை மாற்றி புத்தகத்தோடு அமர்ந்திருந்தான். 

அறைக்கு திரும்பிய நயனிகாசேன்ஜ் பண்ணிட்டீங்களா?” என்றாள்.

ஏன்?”

அத்தை சொன்னது நிஜம் தான் போல..

என்ன?”

நம்மோட பொருத்தம்!என்று புன்னகையோடு கணவனை பார்த்தவள், “அத்தை மட்டுமில்ல இன்னைக்கு கல்யாணத்துல உங்க ஃப்ரெண்டோட அம்மா இன்னும் சிலரும் சொன்னாங்க.. அதுதான் பிக்சர் எடுக்கலாம்னு இருந்தேன் பட் நீங்க சேன்ஜ் பண்ணிட்டீங்கஎன்றபடி ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்தாள். 

இட்ஸ் ஓகே இன்னொரு முறை எடுக்கலாம்..

ஏன் இப்பவும் எடுக்கலாம். கேஷுவல்ஸ் அவ்ளோ மோசமாவா இருக்கேன்?” என்ற கேள்வியோடு நயனி பின்னே வந்து நின்றான். 

அப்படியெல்லாம் இல்லை, எடுக்கலாம்..என்றவள் எழுந்து நிற்க அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன் செல்ஃபி எடுக்க தொடங்கினான். 

போதும் அபய்! இன்னும் எவ்ளோ போஸ் தான் கொடுக்க சொல்லுவீங்க? நாம என்ன போட்டோஷூட்டா நடத்துறோம்..

கல்யாணத்துல மிஸ் ஆகிடுச்சு. அதுக்கென்ன நம்மோட வளைகாப்புல ஷூட் நடத்திடலாம்..என்று புன்னகைக்க சட்டென அவன் பேச்சில் தோன்றிய அதிர்வோடு நாற்காலியில் அமர்ந்தாள்.

மெல்ல நயனி தன் நகைகளை கழற்ற முனைய, “நானே!என்று அவள் கரத்தை தடுத்து பிடித்தான் அபய் ஸ்ரீவத்ஸன். 

அபய்..என்று திரும்பியவளின் பார்வை க்ஷணப்பொழுதில்  கணவனின் முகத்தில் நிறைந்திருந்த உணர்வை கண்டு ஸ்தம்பித்து போனது. அதோடு அபய்யின் கரம் அவளை பிடித்திருந்த இறுக்கமே அவன் நிலையை எடுத்து காட்டியது. 

கணவனின் விருப்பத்தை உணர்ந்திருந்தளுக்கு சட்டென பேச்சு வரவில்லை. அமைதியாக அவனுக்கு தலையசைத்து அமர்ந்து கொண்டாள்.

இன்னைக்கு எதுவும் பாடலையா நயனி?” என்றவனின் குரல் அவள் காதோரம் கிசுகிசுப்பாய் ஒலிக்க அவன் கரங்களோ நயனியின் செவியை மென்மையாய் வருடி அதை அலங்கரித்து இருந்த ஜிமிக்கியை கழற்றியது.

எனக்கு கொஞ்சம் டைம் கொடுஎன்று கேட்டிருந்தவனின் மாற்றங்களை அவளும் அவதானித்து கொண்டிருக்கிறாளே! எதிர்பார்த்த தருணத்தை எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டவளுக்கு கணவனின் ஒற்றை பார்வையே மூச்சடைக்க செய்தது. 

ஜிமிக்கிகளை அகற்றியவனின் கரம் அவள் பின்னங்கழுத்தில் அலைபாய தென்றலாய் வருடி சென்றவனின் தீண்டல்களில் சருகாய் மிதந்து தீயாய் தகித்தாள் பெண். 

உன்னை தான் கேட்கிறேன் நயனி..என்றவனின் சன்ன சிரிப்பிலும் காதோரம் உரசிய அவன் உதடுகளின் வெம்மையிலும் சிக்கி தவித்தவள்என்.. என்ன.. பா.. பாடணும்?” என்றாள் காற்றாகி போன குரலில்.

நான் சொல்லி தான் தெரியனுமா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தியவனின் கரங்கள் அவள் கழுத்தில் இருந்த ஆபரணத்தை கழற்றுவதை விடுத்து மென்மையாய் உறவாடிட அவன் மெய் தீண்டலில் நொடிக்கு நொடி சிலிர்த்து அடங்கினாள் நயனிகா. 

கணவன் கரங்களின் ஆதிக்கத்தில் நயனி நெகிழ்ந்திருந்த நேரம் கரங்களோடு அவன் உதடுகளும் கைகோர்க்க இன்னுமே தவித்துப் போனாள் நயனிகா.

அபய் பிளீஸ்...என்று அவன் கரத்தை பிடித்து கொண்டவளின் குரல் வெகுவாக குழைந்து மெலிந்து கணவனின் அழுத்தமான தீண்டலில் முற்றிலுமாக கரைந்து கொண்டு இருந்தது.

கண்ணை தொறக்கணும் சாமின்னு இப்போ பாட வேண்டிய அவசியமில்லை நயனி..’’ என்று அவள் கன்னக்கதுப்பில் அழுத்தமாக முத்தமிட்டவனின் அட்டகாச சிரிப்பில் நயனி முகத்திலும் புன்னகை ததும்பியது.

அபய்!!என்றவளின் இதழ்கள் சிணுங்கலோடு முணுமுணுக்க, “சரி நானே சொல்றேன்..என்றவனின் வலக்கரம் அவள் விரல்களோடு கோர்த்து கொள்ள, மற்றொரு கரத்தால் அவளை அனாயசமாக அள்ளிக்கொண்டவன், 

ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா? பாடு நயனிஎன்றவன் உதடுகளின் உஷ்ணத்திலும் மீசையின் குறுகுறுப்பிலும் முற்றிலும் தளர்ந்து விட்டாள் பெண்.

அபய் ஸ்ரீவத்ஸன் புன்னகையோடு அவளை மெத்தையில் அமர்த்திட நயனிக்கோ அவன் பேச்சிலும், பாட்டிலும், சிரிப்பிலும் உள்ளே மத்தளம் கொட்டியது.

இரு கரங்களையும் கோர்த்தபடி ஏற்கனவே கணவனின் நெருக்கத்தில் நெகிழ்ந்திருந்தவளை மேலும் நெகிழ்த்தியது அபய்யின் மென் தீண்டல்கள். 

எவ்ளோ அழகா பாடுற நீ! எனக்கு பிடிச்ச சாங் நீ பாடி கேட்கணும் எனக்கு.. எனக்காக!..என்றவனின் பேச்சு ஒருபுறம் அவளிடையோடு உறவாடிய அவன் விரல்களின் ஆதிக்கம் மறுபுறம் என்று அபய் முழுதாக அவளை பந்தாட பெண்ணின் உணர்வுகள் எரிமலையாகி போயிருந்தது. 

கணவனால் உயிர்பிக்கபட்ட உணர்வுகளை கையாள முடியாமல் அவஸ்தைக்குள்ளாகி போயிருந்தாள் நயனிகா வர்ஷி.

இத்தனை நாள் அவனை சீண்டி, விளையாடி, இயல்பாக எதிர்கொண்டவள் இன்றைய அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வெகுவாக திணறி போனாள். 

அவள் தவிப்புகளை ரசித்திருந்தவன் புன்னகை இன்னும் அழகாய் விரிய, “ப்ளீஸ் அபய், ஐ காண்ட்என்று அவன் டீஷர்ட் காலரை இறுக்கமாக பிடித்து கொண்டு ஒருவழியாக நயனி திக்காமல் திணறாமல் சொல்லி முடித்தாள்.

குங்குமமாய் சிவந்து போயிருந்த மனைவியின் முகத்தை கையிலேந்தி, “ஏன்?” என்றான் விஷம சிரிப்போடு ரகசிய குரலில். 

ஒற்றை வார்த்தை தான்! ஆனால் அவன் அதை கேட்ட விதத்தில்அத்தனை எளிதாக அவளால் அதற்கு பதில் சொல்லி விட முடியுமா என்ன?’ எத்தனை பரிகாசமாய் அவளை வளைத்து பிடித்தது அந்த ஒற்றை வார்த்தை!!

லெக்சரருக்கு பேச்சு மட்டும் தானா?” என்றவனின் விஷம குரல் அவளை திகைக்க செய்ய அதை தொடர்ந்த அவன் இதழொற்றலோ அவளை உறைய செய்தது. 

மென்மையாய் அவள் இதழ்களை சேர்ந்தவனின் தீண்டல் நொடிக்கு நொடி அழுத்தம் பெற்று வன்மையில் தடம் பதிக்க இறுதியில் மூச்சிரைக்க விலகினான் அபய். 

நீண்ட நெடிய ஆழ்ந்த முத்தம் அவனை போதையேற்ற மனைவியை அவன் கரங்கள் இன்னுமே இறுக்கிக்கொள்ள இருவருக்கும் இடையிலான இடைவெளி இப்போது முற்றிலுமாக விடைபெற்றது. 

மனைவியின் இதழ்களில் சங்கமித்த போதே அபய் வேறு உலகிற்கு பயணமாகி கொண்டிருந்தான் என்றால் நயனிகாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா? உணர்வுகளின் கணம் தாளாது இதழ்களை மடித்தபடி கணவனின் மார்பில் பாந்தமாய் அடங்கினாள்.

இன்னும் நயனி பாடலையே!!என்றவன் அனலின் வடிவாய் மாறியிருக்க நயனிக்கு உள்ளே தடதடத்தது. 

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும்..என்று பாடியவனின் அதரங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் இதழ்களை முற்றுகையிட அனலுக்கும் புனலுக்கும் இடையில் சிக்கித் தவித்தாள் பெண்!

சேர்ந்து பாடலாமா?” என்று முத்தமிட்டவனின் குறுஞ்சிரிப்பில் கட்டுண்ட நயனி கணவன் வசத்தில் தன் வசமிழக்க மீண்டும் அதே வரிகளை பாடியபடி அபய் மனைவியை முத்தத்தால் அர்ச்சிக்க, தன்னையறியாமல்இரவே நீளுமா?!” என்று அவனோடு சேர்ந்து பாடிவளின் இறுதி வார்த்தை அவன் உதடுகளுக்குள் முற்று பெற்று மோட்சம் பெற்றது.

காதலும் மோகமும் போட்டி போட ஆட்கொண்டவன் நயனியை மட்டுமல்ல அவள்  சிந்தனையையும் சேர்த்து தன் வசப்படுத்தி சிறுக சிறுக சிதறடித்து கொண்டிருந்தான் அபய். 

என்னை உன்னோட கண்ட்ரோல்ல எடுத்துக்க சொன்னேனே?! மறந்துட்டியா?..” என்று மெல்லிய சிரிப்போடு அவளை ஆக்கிரமித்தவனின் முழு கட்டுப்பாட்டில் எப்போது  நயனிகா வந்து சேர்ந்தாள் என்பதை அவளே அறியாள்!

கணவனின் உயிர் தீண்டலில் நெகிழ்ந்து உருகி அவன் விரல்களின் அசைவிற்கு ஏற்ப இசைந்து கொண்டிருந்தவளிடம், “கண்ட்ரோல் எடுத்துக்க மாட்டியா நயனி?” என்றான் ரசனையுடனான ரகசிய புன்னகையோடு. 

ப்ளீஸ் அபய்..என்ற வெட்கத்தோடான நயனியின் சிணுங்களில் சிக்கி கொண்டவன் உணர்வுகள் துள்ளாட்டம் போட வேலியிட்டிருந்த அவன் கட்டுபாடுகள் அந்நொடி மொத்தமாக தகர்ந்தது. 

ஆடவனின் உணர்வுகள் வெடித்து சிதற, "இப்போ நான் முழுக்க உன் கண்ட்ரோல்ல.." என்று கண் சிமிட்டி முழுதாக நயனியின் கட்டுபாட்டுக்குள் வந்து சேர்ந்தான் அபய் ஸ்ரீவத்ஸன். 

இருவருக்கும் இடையிலான காதலும் நேசமும் விருட்சம் பெற அவர்களின் உறவும் அதன் உன்னதத்தை நோக்கி நகர்ந்தது. 

மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்..

மரணம் வரையில் என் நெஞ்சில் தாங்கும்..

உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன்..

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1