வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 3.1


மெட்ரோவில் இருந்து இறங்கி வெளியில் வந்தவளை அழைத்து செல்வதற்காக காத்திருந்தான் கதிர்வேலன். மகாலட்சுமியின் இரண்டாவது அண்ணன்.

திருமணத்திற்கு முன்பானால் அவர்கள் கம்பெனியின் கேப் அவளை பிக்கப் செய்து கொள்ளும். ஆனால் இப்போது மகா கருவுற்றிருக்கும் நிலைமையில் முதல் ஐந்து மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் அல்லவா! 

அதனால் அங்கே ரிஷி அவளை மெட்ரோவில் ஏற்றி விட இங்கே கதிர் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்வான். 

“என்னென்ன பேக்ல?”

“அம்மா இன்னைக்கு உனக்காக வெஜிடபிள் பிரியாணி, காலிஃப்ளவர் பக்கோடா கொடுத்திருக்காங்க மகா..” என்றான். 

இன்று மட்டுமல்ல அவள் கருத்தரித்த முதல் மூன்று வாரங்கள் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்க வேண்டும் அலைச்சல் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் மகாவை லீவ் போட சொல்லி கண்டிப்பாக சொல்லி விட்டனர் தினகரனும் கதிரும். 

“மெடிக்கல் லீவ்” என்றாலும் ஏற்கனவே திருமணத்திற்காக அவள் விடுமுறைகளை பயன்படுத்தி விட்டதால் இப்போது அரை சம்பளத்தில் தான் விடுப்பு எடுக்க முடியும்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, தினமும் நானே பத்திரமா கூட்டிட்டு போறேன் மாமா..” என்று ரிஷி எத்தனையோ பேசி பார்த்து விட்டான் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. 

அதேநேரம் ‘என்ன ஆச்சரியம்?!’ இந்திராவே மகா விடுமுறை எடுக்க ஒப்புக்கொண்டார். 

“ம்மா எதுக்கு அனாவசியமா லீவ் எடுத்துட்டு, பாதி சம்பளம் பிடிச்சுடுவாங்க, நானே சீக்கிரம் எந்திரிச்சு கூட்டிட்டு போறேன்” என்றான் தாயிடம்.

“கரு உருவானது பெருசு இல்ல வரதா, அது தங்கறது முக்கியம். முதல் மூணு மாசம் கவனமா இருக்கணும், கொஞ்சம் அலட்சியமா இருந்தாலும் கரு கலைய வாய்ப்பு இருக்கு. நம்ம குடும்ப வாரிசுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று சொல்லிவிட விடுப்பு எடுக்க சம்மதித்தான்.

ஆனால் மகளை மூன்று வாரமும் தங்கள் வீட்டில் வைத்துக் கொள்கிறோம் என்று தினகரன் பாக்கியா சொன்னதற்கு இந்திரா சம்மதிக்கவில்லை. 

“நான் இப்படி படுக்கையோடு இருக்கிறப்போ மூணு வாரம் நீங்க வச்சு சீராட்டினா எங்க குடும்ப பொழப்பு என்னாகிறது? ஆசைக்கு ரெண்டு நாள் வச்சுருந்து அனுப்பிடுங்க…” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். 

“புரியுது சம்பந்தியம்மா, இந்த நேரத்துல ஆனாலும் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யக்கூடாது, கனமான பொருள் தூக்கக்கூடாது” என்று பாக்கியா சொல்ல, “நாங்களும் புள்ள பெத்தவங்க தான் மா, எங்க குடும்ப வாரிசை எப்படி பாத்துக்கணும்னு நீங்க சொல்லி தெரிய வேண்டியதில்லை..” என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட பாக்கியாவிற்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

பொதுவாகவே மகாலட்சுமியின் கம்பெனியில் மூன்று வேளை உணவு இலவசம் தான். அனைத்து வகையான சுவையான உணவுகளும் அங்கு சுட சுட வழங்கப்படும், திருமணத்திற்கு முன்னர் பெரும்பாலும் கேண்டினில் தான் சாப்பிடுவாள். ஆனால் கருவுற்று இருக்கும் நிலைமையில் ‘கேண்டின் சாப்பாடு வேண்டாம் நான் சமைத்துக் கொடுக்கிறேன்’ என்று விடுமுறை முடிந்து மகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த போதே பாக்கியலட்சுமி சொல்லிவிட்டார். 

ஆனால் அவளுக்கு பாக்கியா கொடுத்தாலும் ரிஷிக்கும் மற்றவர்களுக்கும் அவள் சமைத்து தானே ஆக வேண்டும்.. 

தன்னால் எதற்கு அவர்களுக்கு சிரமம் என்று, “உங்களால முடியும் போது கொடுத்து விடுங்கம்மா, ஏதாவது ஸ்பெஷலா பண்ணும் போது அனுப்புங்க மத்தபடி நான் வீட்ல சமைச்சு தானே ஆகணும் அதையே எடுத்துக்கிறேன்..”  என்று சொல்லிவிட்டாள். 

அதோடு அங்கு அவள் அண்ணி காயத்ரியும் கர்ப்பமாக இருக்கிறாளே… அவளையும் அவர்கள் பார்க்க வேண்டும். சுமதிக்கு காலை வேளையில் பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவுகள் சமைத்து அவர்களை பள்ளிக்கு அனுப்பவே நேரம் சரியாக இருக்கும்.  

சுமதி வேலைக்கு செல்வது கிடையாது ஆனால் காயத்ரி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியிலேயே டீச்சராக பணிபுரிகிறாள். இந்த குழந்தை உருவான போதே மகாவின் திருமண வேலைகளும் சேர்ந்து கொண்டதால் அப்போதே வேலையை விட்டு நின்று விட்டாள்.

அதோடு சம்பாதித்து தான் ஆகவேண்டும் என்று காயத்ரிக்கு எந்த கட்டாயமும் கிடையாது. அவள் விருப்பத்தின் பேரில் தான் செல்கிறாள். 

முதல் குழந்தைக்கு அவள் வேலைக்கு செல்லாமல் குழந்தையோடு நேரம் செலவிட்டாள் அதன் பின்னர் இரண்டு மூன்று வருடங்கள் வேலை செய்திருப்பாள் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து கர்பகாலத்தை அனுபவித்து குழந்தையோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார்.

அதனால் கதிர் தவிர்த்து அனைவருக்கும் மதிய உணவு சுடசுட செய்து கொள்வது தான். இருந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் நான்கு அடுப்புமே பாத்திரங்களால் நிரம்பி இருக்கும்.

அந்த நேரத்தில் தனக்காக அன்னை சிரமப்படுவதை தவிர்க்கவே “வேண்டாம்” என்று மறுத்து விட்டாள். 

கதிரோடு பேசியபடி ஐடி வளாகத்திற்குள் நுழைந்தவள் “அண்ணா இன்னைக்கு நாங்க டாக்டர் கிட்ட போகணும். ராதி வீட்ல பூஜை முடிச்சுட்டு கிளம்பறோம் என்னை பிக்கப் பண்ண அவர் வந்துருவாரு நீங்க வர வேண்டாம்” என்றாள்.

அவளுக்கு வேலை முடியவே சில நேரம் மாலை ஆறு மணி ஆகிவிடும்.

அதற்கு மேல் அவள் வீடு சென்று சேர குறைந்தது 8 மணி ஆகிவிடும். ரிஷி ஓரளவு சமையல் கற்று இருந்தாலும் அவனை அதிகமாக கிச்சனுக்குள் வர விட மாட்டார் இந்திரா. 

மகா வந்த பின்னர் இரவு எத்தனை நேரம் ஆனாலும் அவள் தான் சமைந்து கொடுக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். 

அலுவலகத்திலும் நுழைந்து தன் இடத்தில் அமர்ந்தவளிடம் ஒரு ஆசுவாச பெருமூச்சு.

“என்ன மஹா இன்னிக்கு இவ்வளவு அழகா இருக்க?” என்றபடி அங்கே வந்தாள் ஜெயசித்ரா.

“ஈவினிங் ஒரு ஃபங்ஷனுக்கு போகணும் ஜெய்.. அதுதான்..” என்றாள் புன்னகையோடு.

“சரி இந்தா உனக்கு பிடிச்ச கேரட் அல்வா..” 

“என்ன திடீர்னு இன்னைக்கு?”

“நீ கன்சிவா இருக்கிற விஷயத்தை அம்மாகிட்ட சொன்னேன். இப்போ உனக்கு பிடிச்சது சாப்பிடனுமாமே அதுதான் எனக்கு தெரிஞ்சு உனக்கு பிடிச்சதெல்லாம் சொன்னேன்..” முதல்ல ஸ்வீட்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு கொடுத்து விட்டாங்க..” என்ற ஜெயசித்ராவும் மகாலட்சுமி கல்லூரி கால தோழிகள்.

அந்த நட்பு எப்போது அலுவலகத்திலும் தொடர்கிறது. ஜெயசித்ராவிற்கு பெரிதாக திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அப்படியே செய்து கொள்வதாக இருந்தாலும் தன்னுடைய எண்ண அலைவரிசைக்கு ஏற்றார் போன்ற ஒருவனை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டாள்.

அவர்களும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘எப்படியாவது மகளுக்கு திருமணமானால் சரி’ என்று அவள் போக்கிற்கு வந்துவிட்டனர்.

“எடுத்துக்கோ..” என்று பாக்ஸை திறந்து அவள் முன் கொடுக்க நெய்யின் மனம் அவள் நாசியை நிறைத்தது. சட்டென ஒரு ஒவ்வாமை முகத்தில் தோன்ற கண்களை இறுக முடி மூச்சை இழுத்து பிடித்தாள்.

சில நொடிகளிலேயே எடுத்த மூச்சை வெளியிட மீண்டும் நெய்யின் மணம் அவளை என்னவோ செய்தது. 

“எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி சொல்லு..” என்று ஸ்பூனில் எடுத்து அவள் கொடுக்க ‘வேண்டாம்’ என்று மறுக்க முடியவில்லை மகாலட்சுமியால். 

“ஜெய், இஃப் யூ டோன்ட் மைண்ட் நான் வீட்டுக்கு போய் சாப்பிடட்டுமா?!”  

“ஏன் மஹா?”

“என்னமோ தெரியல கொஞ்ச நாளாவே எனக்கு நெய் ஸ்மெல் ஆக மாட்டேங்குது..” என்று சொல்லும் போதே அவளுக்கு குமட்டிக் கொண்டு வர வாயை மூடியபடி எழ முயன்றாள்.

சட்டென அங்கே இருந்த கவரை எடுத்து கொடுத்து “இதுல வாமிட் பண்ணு மஹா, வாஷ்ரூம் தூரம், எப்பவும் வாந்தியை அடக்க கூடாது..” என்றதும் வேகமாக கவரை வாங்கியவள் கடகடவென வாந்தி எடுத்திருந்தாள்.

ஒரு பெருமூச்சோடு தளர்வோடு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு அப்படி ஒரு சோர்வு.

“மவுத் வாஷ் பண்ணிட்டு வந்து உட்காந்துப்ப வா..” என்றதில் மெல்ல எழுந்து கொண்டவள் ஜெயசித்ராவோடு வாஷ்ரூம் சென்று திரும்ப அவளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.

நல்லவேளை அருகே இருந்த ஜெயசித்ரா அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்டு தன் மீது சாய்த்துக்கொள்ள அங்கிருந்த மற்ற ஆண்கள் நாற்காலி கொண்டு வந்து போட்டு தண்ணீர் கொடுத்தனர். 

“ஆர் யூ ஓகே மஹா?” என்று ஆளாளுக்கு அவளிடம் நலம் விசாரிக்க, யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. ஜெயசித்ராவின் மடியில் படுத்திருந்தவளை மெல்ல எழுப்பி தண்ணீர் கொடுத்தாள். 

சிலர் இன்னும் அங்கேயே இருப்பதை கண்டு, “ஓகே கைஸ், நான் இவளை பார்த்துக்கிறேன் நீங்க மீட்டிங்க்கு ப்ரிப்பேர் பண்ணுங்க..” என்று அவர்களின் டீம் மெம்பர்ஸை அனுப்பி வைத்தாள்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3