வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 4

 

உதயாதித்தன் புதிதாக கட்டிகொண்டிருக்கும் கார் ஷோரூமின் மேல்தளத்தை பார்வையிட்டு கொண்டிருக்க அவனருகே இருந்த அரவிந்தன் அன்றைய நாளில் முடிக்கப்பட்ட வேலைகள் குறித்த தகவல்களை அவனுக்கு விவரித்தவாறு உடன் சென்றான். 

விஸ்தாரமான கட்டிடத்தின் கீழ்த்தளம் முழுதாக முடிந்துவிட்ட நிலையில் உள்பூச்சு நடைபெற்று கொண்டிருக்க ஃபால்ஸ் சீலிங், பிளைவுட், ஏசி இன்ன பிற இன்டீரியர் டிசைனிங்கிற்காக ஆள்களை வர சொல்லியிருந்தவன் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தான் உதய். 

அவர்கள் கொண்டு வந்த புகைப்படங்களை பார்வையிட்டவன் தனக்கு எப்படி வேண்டும் என்று தீர்மானித்து முடித்த நேரம்  "ப்ரீஸீ" என்று கைப்பேசியின் டிஸ்ப்ளேயில் மின்னவும் அருகேயிருந்த அரவிந்திடம்,

"கொட்டேஷன் வாங்கிட்டு அனுப்பிடு அரவிந்த் அடுத்த மீட்ல பைனலைஸ் பண்ணிக்கலாம்" என்றவன் அழைப்பை ஏற்று,  "ஹலோ ப்ரீஸீ என்ன இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்க எனி ப்ராப்ளம்" என்று கல்லூரி நேரத்தில் அழைத்திருப்பவளிடம்  கேட்கவும், 

"ப்ராப்ளம் இருந்தா தான் கால் பண்ணனுமா..? விட்டா என் அத்தானுக்கு கால் பண்ணி பேச  ஒவ்வொருமுறையும் ப்ராப்ளமை வெற்றிலை பாக்கு  வச்சு அழைக்க சொல்லுவீங்க போல" என்று தென்றல் சிரிக்கவும்,

"ஏய் வாலு இது உன்னோட காலேஜ் டைமிங்காச்சே எப்பவும் இந்நேரத்துல கூப்பிட மாட்டியேன்னு கேட்டேன் ? நீ எப்போ வேணும்னாலும் எனக்கு கூப்பிடலாம் ஆனா இதே வார்த்தையை உன் அக்கா சொன்னா எவ்ளோ நல்லா இருக்கும்.." என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி, 

"ஹும் எங்க எப்போ கால் பண்ணினாலும் கிளாஸ்ல இருக்கேன் டியூஷன்ல இருக்கேன் அகாடெமில இருக்கேன்னு கால் அடென்ட் பண்ணாம மெசேஜ் அனுப்புறா.. நானும் அந்த டைம் தவிர்த்து மத்த நேரம் அவளை பிடிச்சு ஒரு வார்த்தை பேச வைக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆகிடுது... என்ன ப்ரீஸீ உங்கக்கா இப்படி இருக்கா..?"

"நீங்க தானே பெண் கேட்டு வந்தீங்க? நீங்களே சொல்லுங்க எங்கக்கா எப்படி இருக்காத்தான்..?" என்றவள் குரலில் இருந்த கேலியை கண்டுகொண்டவன்,

"அதை நான் என் வாயால் சொல்லி கேட்கிறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷம் அப்படிதானே..?"

"அப்படியும் சொல்றதுகில்ல ஆனா ஒருவகையில அப்படிதான் த்தான்" என்றவள் சப்தமாக சிரித்துவிட..,

"என் பாடு உனக்கு சிரிப்பா இருக்கில்ல? சிரிம்மா சிரி,  அக்காவும் தங்கச்சியும் எந்த விதத்துல ஒண்ணா இருக்கீங்களோ இல்லையோ என்னை புலம்பவிட்டு ரசிக்கிறதுல ஒத்துமையா இருக்கீங்க.. என்ன நீ வெளிப்படையா சிரிச்சிடுற ஆனா உங்கக்கா உள்ளுக்குள்ள ரசிக்கிறாளான்னு கூட கண்டுபிடிக்க முடியலை..." என்று சுகமாய் அலுத்துக்கொண்டவன்,

"எதையும் வாயை திறந்து சொல்ல மாட்டேங்கிறா முகத்தை பார்த்து தெரிஞ்சுக்கலாம்னா அதுக்கும் வழியில்ல..  ப்ச் உங்கக்கா என்னை அநியாயத்துக்கு சுத்த விடறா ப்ரீஸீ.. சரி உன்னளவுக்கு இல்லைனாலும் உங்ககாக்கு கொஞ்சம் பேச சொல்லிக்கொடேன்.."

"ஹலோ அத்தான் எங்கக்கா டீச்சர் அவளுக்கு நான் பேச சொல்லிக்கொடுக்கணுமா..? இது நல்ல கதையா இருக்கே? நான் நல்லா இருக்கிறது பிடிக்கலயா உங்களுக்கு..? தேவையில்லாம என்னை உங்க இரண்டு பேருக்கு இடையில இழுக்காதீங்க சொல்லிட்டேன்.." என்று தென்றல் அலறிட.,

"நான் வேற என்ன செய்ய ப்ரீஸீ  நீ நூறு வார்த்தை பேசுற இடத்துல அவ ஒரு வார்த்தை தான் பேசுறா.. நான் ஸ்டாப்பா பேசுற உனக்கும் அவளுக்கும் எவ்ளோ வித்யாசம். உங்கக்காவை பெண் பார்க்க வந்த போதுதான் உன்னை பார்த்தேன் நீ எவ்ளோ ஜாலியா, உரிமையா பேசுற ஆனா உங்கக்கா ரொம்ப இண்ட்ரோவெர்ட்டா இருக்கா.. ஒருவேளை என்கிட்டதான் இப்படி இருக்காளா இல்ல எல்லார்கிட்டயும் இப்படியா எனக்கு உங்கக்காவை புரிஞ்சுக்கவே முடியலை.."   

"அப்படி எல்லாம் இல்லத்தான் பொதுவாவே அக்கா அதிகம் பேசமாட்டா தனிமை விரும்பின்னு சொல்லலாம்.. பெரும்பாலும்  அவ அவளோட புக்ஸ்ன்னு தனி உலகத்துல இருப்பா.. ஆனா  நீங்க அவங்க க்ளாஸ்ல போய் உட்காந்து பாருங்க நேரம் காலம் பார்க்காம நான் ஸ்டாப்பா டீச் பண்ணுவா... அதைவிட முக்கியமா டவுட்ன்னு கேட்டுட கூடாது நாமலே போதும் புரிஞ்சதுன்னு சொன்னாலும் காதுல ரத்தம் வந்தாலும் விடமாட்டா" என்று தென்றல் பேசிய விதத்தில் எழுந்த புன்னகையோடு,

"நீ சொல்றது ஒருவிதத்தில் உண்மை தான்"

"அப்புறம் எதுக்கு எங்கக்காவை குறை சொன்னீங்கலாம்..?" என்று வம்பிழுக்க.,

"ஏய் வாலு சொல்லவரதை முழுசா கேளு.. என் மாமனார் உனக்கு ப்ரீஸீன்னு பேர் வச்சதுக்கு பதிலா இளம்புயல்னு வச்சிருக்கணும்" என்று சிரிக்க,

"சரி சரி இனி குறுக்க வரமாட்டான் இந்த கௌசிக் நீங்க ஆரம்பிங்க த்தான்"

"ப்ரீஸீ  நான் உன் அக்காவை முதல்முறை  வைஷுவோட மீட்டிங்ல  பார்க்க போனபோது அவளோட ஸ்டடீஸ், ஆக்டிவிட்டீஸ், பிஹேவியர் பற்றி என்கிட்டே எவ்ளோ அழகா பேசினா.. ஆனா அதே எங்க  கல்யாணம் பேசின பிறகு வார்த்தையை எண்ணி செலவு பண்றா நிச்சயம் முடிஞ்சு வெளியில கூட்டிட்டு போகலானாலும் இரண்டு பேரோட ஸ்கெட்யூல் ஒத்துபோகலை...”

“அவளா கூப்பிடுவான்னு நான் தினமும் பத்து முறையாவது ஃபோன் எடுத்து செக் பண்ணிடுவேன் ஆனாலும் எங்க மேடம் இதுவரை அவளா கால் பண்ணினதே கிடையாது..  அதான் ஏன் இப்படின்னு உன்னை கேட்டேன்..?"

"ஏன்னா! நான் என்ன த்தான் சொல்றது..? அவ அப்படித்தான் ஆனா சின்ன வயசுல சென்னையில இருந்தப்ப நல்ல படிப்பானாலும் பிரெண்ட்ஸ் எல்லாம் அவாய்ட் பண்ணினதில்ல ஏனோ அப்பா தவறினதுக்கு அப்புறம் அவளை நான் பெரும்பாலும்  புக்கும் கையுமா தான் பார்த்திருக்கேன்..  என்னோட போர்ட் எக்ஸாம்க்கு கூட நான் சீக்கிரம் தூங்க போயிடுவேன் ஆனா அவ அப்படி கிடையாது சின்ன சின்ன டெஸ்ட்க்கு கூட வெறித்தனமா படிப்பா த்தான்.."

"காலேஜ்ல அப்படி இருந்திருக்கலாம் ஆனா இப்பவுமா..?"

"என்னமோ தெரியலத்தான் இப்பவும் அந்த பழக்கத்தை விடல கவர்ன்மென்ட் எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருக்கா.. எம்ஏ முடிச்சதும் எம்ஃபில் க்கு அப்ளை பண்ணிடுவா அடுத்து பிஎச்டின்னு படிப்புக்கு என்ட் கார்ட் போடமாட்டான்னு தான் நினைக்கிறேன்.."

"நான் என் பிரெண்ட்ஸ்கூட வெளியில மூவி, பார்லர்ன்னு நிறைய இடம் சுத்துவேன் ஆனா அவ பெருசா எங்கயும் வரமாட்டா.. அவளுக்கு பிடிச்சது டீச்சிங்! அவ சரியான bookaholic த்தான் ஸோ நிறைய தேடி தேடி படிப்பா, பெருசா பிரெண்ட்ஸ் கூட கிடையாது சொந்த தங்கச்சி என்கிட்டயே அவுட் ஆஃப் சிலபஸ் போக மாட்டான்னா பார்த்துக்கோங்க.. எப்பவும் படிப்பை பற்றி தான் பேசிட்டு இருப்பா.. அந்தளவு  ஸ்கூல், புக்ஸ், பேப்பர், கரெக்ஷன், டீச்சிங் தவிர வேற ஒன்னும் தெரியாதுத்தான்.."

"என்னது அவுட் ஆஃப் சிலபஸ் போகமாட்டாளா..? நீ சொல்றதை பார்த்தா என் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கும் போலவே..!! ஒருவேளை உங்கக்காவோட பேச்சை கேட்க நான் ஸ்டுடென்ட்டா மாறினா தான் உண்டுங்கிற நிலைமை வந்துடுமோ..." என்று உதய் சிரிப்போடு சொல்லவும்,

"அஃப்கோர்ஸ் அஃப்கோர்ஸ்! மறக்காம யூனிஃபார்ம் போட்டுட்டு லன்ச் பாக்ஸ் எடுத்துட்டு சமத்துகுட்டியா டைமுக்கு போயிடுங்க த்தான்  எங்கக்காக்கு பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.. நான் வேணும்னா உங்களுக்கு ஸ்னேக்ஸ்க்கு குச்சு மிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கி கொடுத்துவிடுறேன்" என்றவளுக்கு என்ன முயன்றும் எழுந்த  கற்பனையில்  கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க தொடங்கிவிட்டாள்.

அவளோடு இணைந்து சிரித்தவனும், "ஏன்ம்மா ஏன் உனக்கு இந்த கொலைவெறி..! என்னை யூனிஃபார்மோடு நிறுத்தி நீ சிரிக்கிறது இல்லாம ஸ்கூலே என்னை பார்த்து சிரிக்கவா..?"

"ஏன் த்தான் அப்படி சொல்றீங்க? ஸ்கூல் யூனிஃபார்ம்ல நீங்க ஒன்னும் அவ்ளோ மோசமில்ல கியூட்டா தான் இருக்கீங்க.. ஆனா நான் சிரிச்சது அதுக்கில்ல..."

"வேற எதுக்கு..?"

"அது ஒண்ணுமில்லத்தான் எங்கக்கா சின்ன குழந்தைகளுக்கு க்ளாஸ் எடுக்கறப்போ அவங்களை மடியில் உட்கார வச்சு கையை பிடிச்சு எழுத சொல்லிக்கொடுப்பா நீங்க அவ ஸ்டுடென்ட்டான பிறகு  உங்களுக்கும் அப்படி சொல்லி கொடுப்பாளோன்னு நினைச்சு சிரிச்சேன்.." என்றவள் கண்களில் நீர் ததும்பியது. 

"ஹே ப்ரீஸீ  போதும் போதும் உன் கற்பனைக்கு கடிவாளம் போடு.. ஏதோ உன்கிட்ட சொன்னா  உங்கக்கா கிட்ட எனக்காக ரெக்கமென்ட் பண்ணி அவளை பேச வைப்பன்னு பார்த்தா நீ என் காலை வாரிவிடற.." என்றவனுக்கே தளிரின் மடியில் அவன் என்பதை நினைத்து சிரிப்பு தாளவில்லை.

பின்னே நிச்சயம் முடித்த பின்னர்கூட அவனிடமிருந்து சில அடித்தூரத்தில் நின்று பேசுபவளாவது தன்னை மடியில் அமர்த்துவதாவது என்ற நினைப்பில் அப்படி ஒரு சிரிப்பு அவனிடம். தன்னிடம் அரிதிலும் அரிதாக பேசுபவளின் முகபாவத்திலும் குரலின் இனிமையிலும் லயித்து கிடப்பவனுக்கு என்றுமே இருவருக்கிடையிலான இடைவெளி பெரிதாக தெரியாத போதும் இப்போது அவள் மடியில் எனும் போது அதையடுத்த சிந்தனையில் மனம் சிக்கி தவிக்க மெல்ல குரலை செருமி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் "சரி சரி அந்த டாபிக்கை விடு, உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு..?" என்றான்.

"அய்யோ அத்தான் கல்யாண பொண்ணு  நானில்லை எங்கக்கா!!.." என்ற தென்றல் ‘பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டார்’ என்ற ரீதியில் உதயனை எண்ணி மீண்டும் சிரிக்க தொடங்கிவிட்டாள்.

"ப்ச் வாலு என் பொண்டாட்டியை எனக்கு தெரியாதா..? மனமேடையில கண்ணை கட்டி தாலி கட்ட சொன்னாலும் சரியா உங்கக்கா கழுத்துல தான் கட்டுவேன் போதுமா..? இப்போ உன்னை தான் கேட்கிறேன் உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு"

"எதுக்கு கேட்குறீங்க..? என்ன த்தான் எங்கக்காவை கரெக்ட் பண்ண எனக்கு லஞ்சமா..?" என்று மீண்டும் அவன் காலை வாரவும்.,

"உனக்கு லஞ்சம் கொடுத்தெல்லாம் எனக்கு கட்டுபடியாகாது என் பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நான் அவகிட்டயே படிச்சுக்குறேன் .., வைஷுகுட்டிக்கு  கிஃப்ட் வாங்க போறேன் உனக்கும் கிஃப்ட் பண்ணனும்னு தோனுச்சு சொல்லு ப்ரீஸீ உனக்கு என்ன பிடிக்கும்..?" என்ற  உதயாதித்தனுக்கும் தென்றலுக்கும் இந்த சில மாதங்களில்  உறவை தாண்டி அப்படி ஒரு நட்பு.

தென்றல் கலகலப்பானவள் என்றாலும் தந்தை இல்லாமல் வளர்ந்ததில் உடன் படிக்கும் மாணவர்களிடம் எல்லையோடு பழகுபவள் தான் ஆனால் ஏனோ உதயனை முதல்முறை பார்த்த போதே அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

தங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வந்த போது அவன் நடந்து கொண்ட விதமா இல்லை பேசிய பேச்சுக்களா இல்லை அத்தனை வசதி இருந்தும் துளிகூட பந்தா காண்பிக்காதவனின் குணமா எதுவென்று தெரியாது ஆனால் தென்றலுக்கு அவனை மிகவும் பிடித்து போனது.

அம்பலவாணனின் குடும்பம் அவர்கள் வீட்டில் குழுமியிருந்த போது தன் அறையில் யோசனையில் இருந்த தளிரிடம் "அக்கா ப்ளீஸ்க்கா ஓகே சொல்லு. இவர் தான் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பார் ரொம்ப ஸ்வீட் எவ்ளோ ஜாலியா பேசுறார் பணக்காரர்ங்கிற பந்தாவே இல்ல.. ரொம்ப இயல்பா மாடியில இருந்து அவங்க உட்கார சேர் கொண்டு வந்த என்கிட்டே இருந்து வாங்கி அவரே போட்டுவிட்டார் தெரியுமா..?

“நீங்க இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்! சேர்ந்து வந்தா ஒருமுறைக்கு இரண்டுமுறை எல்லோருமே உங்களை திரும்பி  பார்ப்பாங்க அம்மாக்கும் பிடிச்சிருக்கு, இவர்தான் எனக்கு அத்தான்னு நான் முடிவு பண்ணிட்டேன் ப்ளீஸ் ஓகே சொல்லுக்கா" என்று கெஞ்சியிருந்தாள்.

ஆனால் தளிருக்கு தங்கள் வசதிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சம்பந்தம் குறித்த கேள்விகள் எழுந்தாலும் அம்பலவாணன் மீதான நம்பிக்கையில் சம்மதித்திருந்தாள்.

                            ***************************

தென்றலிடம் பேசி முடித்தவன் இப்போது இரண்டாம் தளத்தை அடைந்து முகப்பில் வந்து நின்று பார்க்க மழை பெய்து கொண்டிருந்தது. உதயன் ராணிபேட்டையை அடைந்த போதே மேகமூட்டமாக இருந்தது தென்றலின் அழைப்பை ஏற்ற போது  லேசான தூறலாக  ஆரம்பித்து இப்போது வலுபெற்றிருந்தது.

வேலையாட்கள் கட்டுமான பொருட்களை மழையில் படாதவாறு எடுத்து அறையினுள் எடுத்து வைத்து கொண்டிருக்க உதய்க்கு தொடர் அழைப்புகள் வந்த நிலையில் மழையில் கிளம்ப பார்த்தான்..

ஆனால் அர்விந்த் உட்பட அங்கிருந்தவர்கள் "புது மாப்பிள்ளை அவசரம் வேண்டாம் மழை நின்ன பிறகு கிளம்புங்க" என்றதில் ஷோரூமிற்கு அழைத்து பேசியவன் ராகவனுக்கும் பேசிவிட்டு மீண்டும் முகப்பில் நின்று இருகரங்களையும் மார்பின் குறுக்கே கோர்த்து கொண்டு மழையை ரசிக்க உதயனுக்கு தந்தையிடம் இருந்து அழைப்பு.

"சொல்லுங்கப்பா"

"வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு உதய் சொன்ன தேதியில் முடிச்சிடுவாங்க தானே..? மார்பிள்ஸ்க்கான  கொட்டேஷன் உனக்கு அனுப்பி இருந்தேனே பார்த்துட்டியா..?"

"ஹ்ம்ம் பார்த்துட்டேன் ப்பா, நீங்க ஜூவலரி ஷாப்ல இருந்து கிளம்பிட்டீங்களா..?"

"சுஜியும் நிவியும் உன்னோட ஒப்பினியன் இருந்தா நல்லாயிருக்கும் சொன்னாங்க தளிருக்கு எடுத்து வச்சுருக்க செட்டோட பிக்சர்ஸ் வாட்ஸப் பண்ணியிருக்கேன்.. உனக்கு பிடிச்சதை செலெக்ட் பண்ணி அனுப்பு பைனல் பண்ணிடுறோம்"

"சரிப்பா"

"மருமகளுக்கு நீ ஏதாவது தனியா கிஃப்ட் பண்ற ஐடியா இருக்கா..? கலெக்ஷன்ஸ் நிறைய இருக்கு  உனக்கு தேவைன்னா பிக்சர்ஸ் அனுப்பட்டா.."

"இல்லப்பா நீங்க எடுங்க நான் நேர்ல வந்து பார்த்துக்குறேன்"

"என்ன சத்தம் உதய் அங்க..! மழையா..?"

"ஆமாப்பா வந்த வேலை முடிஞ்சது கிளம்பலாம்னா மழை ஆரம்பிச்சுடுச்சு..? குறைஞ்சதும் வந்துடுறேன்.." என்ற உதயனின் பார்வையோ பூஞ்சிதறலாக உருமாற்றம் பெற்றிருந்த மழையினூடே எதிரில் வண்ண விளக்குகளால் ஜொலித்த வளையல் கடையின் மீது பதிந்திருந்தது.

இத்தனை மாதங்களாக வந்திருக்கிறான் ஆனால் அப்போதெல்லாம் இல்லாது இன்று அக்கடையில் பொருத்தபட்டிருந்த அலங்கார விளக்குகளின் உதவியில் கண்ணை பறித்த கண்ணாடி வளையல்கள் அவன் கவனத்தை ஈர்த்திருந்தது உடன் தளிரின் நினைவும்.

பின்னே பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் தளிரை சந்தித்தவனின் கவனத்தை முதலில் பெற்றது என்னவோ அன்று மெல்லிய கரையிட்ட பச்சை வர்ண புடவைக்கு தோதாக அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் தான்.. அதுவும் கழுத்திலும் காதிலும் அதிக கனமில்லாததாக  மெல்லிய சங்கிலியும் காதோடு உறவாடிய சிறு ஜிமிக்கியும் அணிந்திருந்தவள் கைகளில் மட்டும் குறைந்தது அரை டஜன் வளையல் அணிந்திருந்தாள். அதை கண்டதும் அவனுக்கு பெரும் ஆச்சர்யம்.

பின்னே அவன் அன்னை அக்கா தங்கைகள் யாருமே பெரும்பாலும் கண்ணாடி வளையல்கள் அணிந்து பார்த்ததில்லை.. தங்க வளையல்கள் அல்லது ப்ரேஸ்லெட் கைகடிகாரம் என்றே இருப்பவர்களை பார்த்து பழக்கபட்டவனை கொள்ளைகொண்டதே அவளணிந்திருந்த வளையல்கள் தான்.. அதன் பின்னர் அவளுடனான சந்திப்புகளிலும் அவன் பார்வை தவறாமல் அவள் கைகளில் கவனம் கொள்ளும்.

தென்றலிடம் தளிரின் பிடித்தத்தை கேட்ட போது புத்தகத்தை தவிர்த்து அவள் ஆர்வத்தோடு வாங்கும் ஒரே பொருள் கண்ணாடி வளையல்கள் தான் என்றிருந்தாள்.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17