வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 5

 

நிச்சயத்தின் போது தேவதையாய் ஜொலித்தவளின் கைகளை  நிறைத்திருந்தது என்னவோ தங்கத்திற்கு பதிலாக கண்ணாடி வளையல்கள் தான்.. அன்று நிச்சயம் முடித்து தன் அக்கா தங்கைகளின் கலாட்டாவில் அவனுக்கு ஊட்டிவிட வந்தவளின் விரல்களை முந்திக்கொண்டு அவன் அதரங்களை தீண்டியதும் அவள் வளையல்களே..!!

ஆம் நிச்சயம் முடிந்து மணமக்களை ஒன்றாக சாப்பிட அமர்த்தியிருந்தனர். வைஷுவோடு தன் வகுப்பு  குழந்தைகள் சிலரும்  உடனிருக்க சுஜி, நிவி, தென்றல் அனைவரும் சேர்ந்து கேலி செய்ததில் யாரையும் பார்க்காமல் இலையை பார்த்தவாறே உதய்க்கு ஊட்ட முயன்றவளின் விரல்கள் அவன் முகத்தை தாண்டி செல்ல  அவன் உதடுகளோடு உறவாடியது என்னவோ அவள் வளையல்கள் தான். 

'அண்ணி யாருக்கு ஊட்டிட்டு இருக்கீங்க எங்கண்ணாவை பார்த்து ஊட்டுங்க' என்று நிவி சொல்லி முடிக்கும்முன் யாருமறியாமல் தன் உதட்டோடு உறவாடிய அவள் வளையல்களில் உதய் முத்தமிட வளையலை தாண்டி ஊடுருவிய அவன் ஸ்பரிசத்தில் சிறு அதிர்வோடு அவனை பார்த்த தளிர் தன் கையை இழுத்துகொள்ள மீண்டும் அவனுக்கு இனிப்பை ஊட்டும்வரை சுற்றியிருந்தவர்கள் தளிரை விடவில்லை அத்தனை கலாட்டா செய்திருந்தனர். 

வைஷு வேறு  பெரிய மனுஷியாக சுஜி நிவியை முந்திக்கொண்டு தளிரின் அருகே வந்து, 'மாமி நானே என் தம்பிக்கு சிந்தாம ஊட்டிவிடுவேன், பார்த்து ஊட்டுங்க மாமா ட்ரெஸ் ஸ்பாயில் ஆகிடும் என்று அவள் கரத்தை சற்று பின்னே இழுத்தவள் எங்க மாமா வெரி குட் பாய்! என் தம்பி மாதிரி பேட் பாய் இல்லை' என்று கூற தளிருக்கு ஒன்றும் புரியவில்லை. 

"சம்டைம்ஸ் கௌஷிக் நான் ஊட்டி விடறப்போ என் கையை கடிச்சு வச்சுடுவான் ஆனா மாமா அப்படி செய்யமாட்டார் குட் பாய் நீங்க தைரியமா ஊட்டிவிடுங்க" என்று சொல்ல அன்றைய நாளின் நினைவில் எழுந்த புன்னகையோடு வளையல்களை பார்த்திருந்தவன் மழை குறையவுமே நேரே எதிரில் இருந்த கடைக்கு சென்றான்.  

ரகரகமாய் அடுக்கபட்டிருந்த வளையல்களை கண்டவனுக்கு எதை வாங்குவது எதைவிடுவது என்ற நிலை..  அவர்கள் வளையல் சைஸ் என்னவென்று கேட்கவும் கைபேசியை திறந்து தளிரின் புகைப்படத்தை காண்பித்து ஓரளவு தோதான சைஸில் அவள் வழக்கமாக அணிவது போலவே பலநிறங்களில் கண்ணாடி வளையல்களை வாங்கி அதை அழகாக பேக் செய்து கொண்டவன் மறக்காமல் வைஷு மற்றும் தென்றலுக்கும் பரிசு வாங்கிக்கொண்டு வேலூர் திரும்பினான்.

                           ****************************

நகைக்கடையில் இருந்து வீடு திரும்பிய நிவியும் சுஜியும் நேரே அண்ணாமலை அன்னபூரணியின் அறைக்குள் நுழைந்தனர்.

"சாப்ட்டீங்களா தாத்தா.. நீங்க மாத்திரை எடுத்துட்டீங்களா பாட்டி..?" என்றவாறே சுஜி அவர்கள் மேஜையில் இருந்த மருந்த பெட்டியை ஆராய,

"எங்களுக்கு அதைவிட வேற என்ன வேலை இருந்துட போகுது எல்லாம் நேரமே முடிச்சுட்டு உன் தாத்தாவை கூட்டிட்டு காலாற நடந்துட்டு இதேதான் வந்தோம் நீங்க போன வேலை நல்லபடியா முடிஞ்சதா ராஜாத்தி"

"ஆச்சு பாட்டி இதோ பாருங்க இதெல்லாம் தளிருக்கு எடுத்தது இது எங்களோடது, இது வைஷுகுட்டிக்கு" என்று நிவேதா நகைகளை அவரிடம் கொடுக்க அனைத்தையும் பார்வையிட்டவர் கணவரிடமும் காண்பிக்க,

"நல்லா இருக்கு சாமிகிட்ட வச்சு கும்பிட்டு எடுத்து உள்ள வைங்க... கூறைப்புடவை எடுக்க போகணுமே உங்க அத்தை சித்திங்களுக்கு எல்லாம் தகவல்  சொல்லியாச்சா எத்தனை மணிக்கு கிளம்பறீங்க..?" என்றவருக்கு சுஜி பதிலளித்து கொண்டிருந்த  அதேநேரம் தங்கள் அறையினுள் நுழைந்த கணவரிடம்,

"என்னங்க கல்யாணத்துக்கு இவ்ளோ நகை எடுக்கணும்னு அவசியமா..? பொதுவாவே மருமகளுக்கு அதிகபட்சம் பத்து சரவன் வைச்சுதான் பழக்கம் நீங்க என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி.." என்று முடிக்கும் முன்னமே,

"எப்படி..?" என்று  சட்டையை கழற்றிக்கொண்டு கேட்டார் அம்பலவானன்.

"இல்லைங்க இது தகுதிக்கு மீறி.." என்று ஆரம்பித்துவிட்டாரே தவிர எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஜெகதீஸ்வரி விழித்து நிற்க,

"யாரோட தகுதியை சொல்ற ஈஸ்வரி..?" என்று கைலிக்கு மாறிய அம்பலவானன் இப்போது கட்டிலில் அமர்ந்து கொண்டு தீவிர குரலில் கேட்டிருந்தார்.

"..."

கணவரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் ஜெகதீஸ்வரி திண்டாடி கொண்டிருக்க அங்கே வந்த சுஜி அன்னையிடம் பையை கொடுத்து, "ம்மா நான் தான் சொன்னேனே தாத்தா பாட்டிக்கு எங்களோடது விட தளிர் நகை ரொம்ப பிடிச்சிருக்கு... எல்லாரோடதும் பார்த்துட்டாங்க நான் பாக்ஸ்ல வச்சுட்டேன் குட்டி பையனுக்கு எடுத்த நகைகளை  மட்டும் அவருக்கு காட்டுறதுக்கு எடுத்துட்டு கிளம்புறேன் உள்ளே வச்சுடும்மா.. குட் நைட் ப்பா" என்று கிளம்பவும் கதவை சாற்றிவிட்டு வந்தார் ஜெகா.

"சொல்லு ஈஸ்வரி உன்னை தான் கேட்கிறான் ஒருவேளை  இதே தளிர் இடத்துல வசதியான வீட்டு பெண் இருந்தா இதையெல்லாம் தகுதிக்கு மீறினது இல்லைன்னு சொல்லவரியா..?" என்ற அம்பலவானன் மனைவியை கூர்மையாக பார்த்தார்.

"கண்டிப்பா ! அவங்கெல்லாம் பிறந்ததுல இருந்தே தங்கமும் வைரமுமா  வளர்ந்திருப்பாங்க  அதோட அருமை தெரியும் ஆனா இந்த பொண்ணு அப்படியில்லையே.. நீங்க முடிவு பண்ணினதால ஏத்துகிட்டோம் எப்பவும் நீங்க சரியான முடிவு தான் எடுப்பீங்க ஆனா ஆதி கல்யாண விஷயத்துல  நீங்க அவசரபட்டிருக்க கூடாதோன்னு ஒரு எண்ணம்.., என்ன இருந்தாலும்  நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு.." என்ற மறுநொடியே,

"இதே ஸ்டேடஸ நான் பார்த்திருந்தா நீ எனக்கு பொண்டாட்டியாகியிருக்க மாட்ட ஈஸ்வரி" என்றதும் தூக்கிவாரி போட கணவரை பார்த்த ஜெகதீஷ்வரியின் கையிலிருந்த பை நழுவியது சட்டென அதை பிடித்து மெத்தையில் வைத்த அம்பலவாணன்,

"இத்தனை வருஷ வாழ்க்கைக்கு  அப்புறம் இப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வர வச்ச பெருமை முழுக்க உன்னையே சேரும்.. நம்ம பையன் கல்யாணம் முடியறதுக்குள்ள இன்னும் எத்தனை பெருமையை தேடி தரபோறன்னு தெரியலை  நீ சொல்ற ஸ்டேடஸ், பணம், நகையை விட மனுஷனுக்கு நிம்மதி முக்கியம்!!”

“உன்னை கட்டிக்கிட்ட நாளில் இருந்து இந்த ரூமுக்கு வந்த உடனே நிம்மதியா தூங்கியிருக்கேன் ஆனா இனி அது வாய்க்குமான்னு தெரியலை" என்ற அம்பலவானனின் வார்த்தைகளில் கண்ணீர் உடைப்பெடுத்தது ஜெகதீஸ்வரிக்கு..

"என் பையனுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்.. அதேபோல தான் என் மருமகளுக்கும்.. உனக்கு நியாபகம் இருக்கா சுஜி நிவியோட கல்யாணத்துக்கும் நான் இப்படிதான் நகை எடுத்தேன் அப்போ இந்த கேள்வியை கேட்கலை இப்போ மட்டும் ஏன்..?" என்ற கணவரின் கேள்விக்கு அவரும் என்ன பதில் சொல்ல..?

"எப்படி நீ மகனையும் மருமகன்களையும் வித்யாசம் இல்லாம நடத்துறியோ அதேபோல தான் எனக்கும் மகள்கள்  மருமளுக்கு இடையில எந்த வித்யாசமும் இல்ல" என்ற கணவரை மெளனமாக பார்ப்பதை தவிர ஜெகதீஸ்வரிக்கு வேறு வழியில்லாது போனது.

பின்னே அவர்களது மூத்த மருமகன் அவர்களது சொந்தம் ராகவன் தன் மகனின் நண்பன் என்பதால் சிறுவயதில் இருந்தே அவன்மீது பிரியமுண்டு.. வேறு ஆளான ராகவனை மாப்பிள்ளையாக உதய் கொண்டு வந்த போது எதிர்ப்பு முழுக்க அண்ணாமலையிடமிருந்து தான் கிளம்பியது.

ஆனால் சிறுவயது முதலே பழகிய பிள்ளை மட்டுமல்லாது அவர்களது வசதிக்கு சற்றும் குறையாதவன் என்பதால் ஜெகதீஸ்வரி ராஜேஸ்வரிக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி.. அம்பலவானன் தந்தையை சம்மதிக்க பெரும் போராட்டமே நடத்திவிட்டார்.

இறுதியில் இதுபோல இன்னொரு நிகழ்வு தன் குடும்பத்தில் நடைபெறகூடாது தன் பேரனுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் பெண் தான் மருமகள் என்று தீர்மானமாக கூறிவிட்டார். கல்லூரிகாலம் தொட்டே தன் இலக்கில் தெளிவாக இருந்த உதயனுக்கும் பெரிதாக எந்த பெண்ணின் மீதும் ஆர்வம் இல்லாததால் தாத்தாவிடம் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துவிட்டான்.

ஆனால் தளிரை கண்ட பின்னர் அவன் எண்ணம் மாற்றம் பெற அதை தந்தையிடம் தெரிவித்தவன் தளிரை அவர் பார்த்து வைத்த பெண்ணாக தாத்தாவிடம் கொண்டு சென்று அவர் சம்மதத்தோடு தளிரை கைபிடிக்கவிருக்கிறான். ஆனால் இது தந்தை மகனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் மற்றவர்களை பொறுத்தவரை தளிரை அம்பலவானன் தான் உதயாதித்தனுக்கு தேர்ந்தெடுத்ததாக நினைத்து கொண்டிருந்தனர்.

அன்று தங்கள் வசதிக்கு குறையவான இடத்தில் இருந்த ஜெகதீஸ்வரியின் குணத்தை பார்த்து மட்டுமே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை இப்போதும் தளிரின் குணத்தை கொண்டு மட்டுமே பேரனுக்கு தேர்ந்தெடுத்திருந்தார்.

"இல்லைங்க நான் சொல்ல வந்தது.." என்று ஜெகதீஸ்வரி தன்னை நியாபடுத்த முற்படவும்,

"எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் ஈஸ்வரி ஆனா இன்னொருமுறை இந்த பேச்சை நீ எடுக்கும் பட்சத்தில் இந்த ரூம்குள்ள வரனுமான்னு நான் யோசிக்க வேண்டியிருக்கும்.." என்ற அம்பலவானன் பேச்சு முடிந்தது போல விளக்கணைத்து படுத்துவிட ஜெகதீஸ்வரி அசைவற்று போனார்.

                      *******

"நிஜமாவே டைமன்ட்டா வைஷு..?" என்றாள் இன்னுமே அவள் சொன்னதை நம்பமுடியாமல் ரித்திக்கா.

மதர் ப்ராமிஸ் ரித்து..!! எனக்கும் மேம்க்கும் சேம் டிசைன் வேணும்னு நான் கேட்டதுமே எங்க தாத்தா எனக்காக செய்ய சொல்லிட்டார் தெரியுமா..?”

ரியலி!! ஆனா சின்ன பசங்க கோல்ட் போட்டுட்டு வரகூடாதுன்னு ஸ்கூல்ல ரூல்ஸ் இருக்கே.. நீ எப்படி டைமன்ட் போடுவ..?"

ஹே லூசு நான் என்ன டைமென்ட் போட்டுட்டு ஸ்கூல்க்கா வரபோறேன் எங்க மாமா ரிசெப்ஷன்ல தானே போட்டுக்க போறேன்..”

அப்போ காலைலயும் நீயும் தளிர் மேம்மும்  சேம் டு சேம்மா வைஷு..” என்றாள் ப்ரியஷனா.

ஆமா ப்ரி..! மாமியோடது போலவே எனக்கு குட்டியா எடுத்துட்டார் எங்க தாத்தா.. உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா..?”

என்னது..?” என்றவர்களுக்கு தினமும் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் வைஷு மூலமாக தளிர்புராணம் கேட்பதில் அலாதி ப்ரியம். வைஷுவும் அவர்களை ஏமாற்றாமல் 'மாமி எனக்கு சான்வெஜ், கட்லெட் செய்து கொடுத்தாங்க யம்மியா இருந்தது, நீங்க டேஸ்ட் பண்ணினா உங்களுக்கும் பிடிக்கும்..' என்று தளிருடனான நிமிடங்களை பகிர்ந்து தன்னையறியாமலே அவர்களின் ஏக்கம் கூட்டிவிடுவாள்.

இன்னும் என்ன சொல்லு வைஷு.."

"நானும் தளிர் மேம்மும் ஜூவல்ல மட்டும் சேம் பின்ச் இல்ல டிரஸ்கூட எங்க இரண்டு பேருக்கும் சேம் கலர் தெரியுமா..?” என்பவள் மேம் மாமி இரண்டுக்கும் இடையில் அல்லாடி கொண்டிருக்கிறாள்.

அப்படியா? ஏய் என்ன கலர் சொல்லுப்பா நானும் மம்மி டேடிகூட வரும்போது சேம் கலர் போட்டுட்டு வரேன்” என்று ஆவலோடு கேட்க..,

மேம் உனக்கு மாமியா எனக்கு மாமியா..? நீ எதுக்கு போட்டுட்டு வரணும்..? நான் தான் மாமி பக்கத்துலயே ஸ்டேஜ்ல இருப்பேன்” என்றதில் ரித்திகாவின் முகம் வாடிப்போனது.

ப்ளீஸ் வைஷு சொல்லுப்பா நாங்க உன் ப்ரெண்ட்ஸ் தானே நாம எல்லாரும் சாட்டர்டே சேம் கலர் ட்ரெஸ் தானே போடுவோம் இப்போ ஏன் இப்படி பேசுற..? அப்போ நீ எங்க பிரெண்ட்ஸ் இல்லையா..??” என்று ப்ரியஷனா கேட்கவும்,

சொல்லு வைஷு நீ எங்க பிரெண்ட் இல்லையா..? இப்போ நீ என்ன கலர்ன்னு சொல்லலைன்னா உன் பேச்சு டூ...! நாம இனி பிரெண்ட்ஸ் கிடையாது.." என்ற ரித்திகா தனியே சென்று அமரவும் ப்ரியஷனா அவளை தொடர்ந்தாள்.

உடனே அவர்கள் பின்னே சென்ற வைஷு, “ஸாரி ஸாரி ரித்து நாம எப்பவும் பிரெண்ட்ஸ் தான்.. நீங்க ஸ்டேஜ்ல இருக்க மாட்டீங்கல்ல அதான் அப்படி சொன்னேன்.."

ஸ்டேஜ்ல ரொம்ப நேரம் இல்லைன்னாலும் எங்க மம்மிகிட்ட சொல்லி கொஞ்ச நேரம் நானும் உன்கூட இருப்பேன் நாம போட்டோஸ் எடுப்போம் தானே..? இப்போ சொல்லு”

சரி சொல்றேன் ரித்து” என்றதும் இருவரும் ஆர்வமாக கேட்க தொடங்கினர்.

மாமிக்கு எடுத்த லெஹெங்கா பர்ப்பிள் கலர்ல ஸ்டோன்ஸ் வச்சு செம்ம கிரான்ட்டா இருக்கும்..  அம்மாவும் சித்தியும் எனக்கும் அதேபோல ஃப்ராக் எடுத்திருக்காங்க. நாளைக்கு மாமிக்கு கல்யாண ஸாரீ எடுக்கறப்போ எனக்கும் சேம் கலர் பாவாடை சட்டை எடுப்பாங்க..” என்ற அதேநேரம் உதயாதித்தனும் ராகவனும் பள்ளியினுள் நுழைந்தனர்.

அவர்களை கண்ட வாட்ச்மேன் “வணக்கம் ஐயா பாப்பாவை கூட்டிட்டு வரட்டுங்களா..?” என்று கேட்க,

இருக்கட்டும்.., பசங்க எல்லாரும் கிளம்பியாச்சா..?”

ஆச்சுங்கையா இன்னும் பத்து பதினஞ்சு பசங்களோட அப்பாம்மா வரலை..”

'சரி' என்ற உதய் மேலும் சில கேள்விகளை கேட்டுவிட்டு  கிரவுண்டை தாண்டி பள்ளியின் முகப்பிற்கு செல்ல அங்கே ஆசிரியர்களின் பொறுப்பில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர்..

உதய்யை கண்டதும், “மேம் மை மாமா ஹாஸ் கம்! ஷால் ஐ கோ..” என்று உதயனின் வருகையில் எழுந்து நின்ற ஆசிரியரின் அனுமதி பெற்று தோழிகளிடம் விடைபெற்ற வைஷு “மாமா” என்று உதய்யிடம் ஓடி சென்றாள்.

மெதுவா.. மெதுவா வா வைஷு”

என்ன மாமா இன்னைக்கு நீங்க வந்திருக்கீங்க.. அப்பா வரலையா..?”

இல்ல கண்ணா அப்பாக்கு அவசர வேலை அதான் நீ சித்தப்பா கூட கிளம்பு..”

அப்போ நீங்க வரலையா மாமா..?”

எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் அப்புறம் வரேன்” என்றவன் வைஷ்ணவியை நண்பனுடன் அனுப்பிவிட்டு ஆஃபிஸ் அறைக்கு சென்றவன் அங்கிருந்த கிருஷ்ணனிடம் பேசிவிட்டு முதல் தளத்திற்கு சென்றான்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1