வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 5


ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக கணவனின் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த மகாலட்சுமியின் விரல்கள் கையில் இருந்த ஸ்ட்ராவை அழுத்திப் பிடிப்பதும் விடுவிப்பதுமாக இருந்தது.

“என்ன யோசனை லச்சு? ஜூஸ் குடி” என்றவன் “என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே, என்ன?” என்றான்.

“பேசணும்..” என்று முணுமுணுத்து ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள்.

‘அவள் தான் பேச வேண்டும்’ என்று சொன்னால், ஆனால் இப்போது ‘பேசலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம். 

இன்று பேச தயங்கினாலும் என்றேனும் ஒருநாள் இதை பற்றி பேசி தானே ஆக வேண்டும்?! அதுவும் அவள் படும் அவஸ்த்தைக்கு நிச்சயம் எக்காரணம் கொண்டும் இனியும் தள்ளிப்போட கூடாது.. என்ற உறுதி இருந்தாலும் கணவன் எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற கேள்வி அவளை சட்டென பேச விடவில்லை.

பல கட்ட யோசனைகளில் ஆழ்ந்திருந்தவளுக்கு இப்போது என்றால் மாமியார் அருகில் இல்லாத நிலையில் தன் பேச்சை கணவன் சரியாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு என்ற எண்ணம் பிறக்க அவள் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது.

மெல்ல குரலை செருமி, “என்னங்க நான் பேப்பர் போடலாம்னு இருக்கேன்” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லி விட்டு அவன் முகத்தை பார்த்தாள்.

கைபேசியில் கவனமாக இருந்தவனுக்கு அவள் வார்த்தைகள் சரியாக சென்று சேர்ந்திருந்தாலும் அதை நம்ப முடியாத பாவம் அவன் முகத்தில். 

“ரிஷி..”

“என்ன சொன்ன? திரும்ப சொல்லு..” என்றான் புருவங்கள் நெறிபட..

“பேப்பர் போடலாம்னு இருக்கேன் ரிஷி. இப்ப போட்டா தான் இன்னும் டூ மந்த்ஸ்ல ரிலீவ் ஆக முடியும்..” என்றதும் தான் தாமதம் சட்டென நாற்காலியில் இருந்து எழுந்து விட்டான்.

“என்ன ஆச்சு?” என்று பதறிக்கொண்டு அவளும் எழுந்து நிற்க “யாரைக் கேட்டு இந்த முடிவுக்கு வந்த?” என்றான் அடிக்குரலில்.

“ரிஷி ப்ளீஸ், சொல்றேன் பட் உட்காருங்க..” என்றாள் சுற்றிலும் பார்த்தபடி. 

“ஏய், யாரை கேட்டு இந்த முடிவுக்கு வந்தன்னு கேட்டேன்..” என்ற அதே நிலையில்.

“சொல்றேன் அதுக்கு முன்னாடி உட்காருங்க..”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி?” என்றான் முகம் இறுக..

“ரிஷி, எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க.. ப்ளீஸ் உட்காருங்க, சொல்றேன்” என்றதில் தான் சுற்றம் உணர்ந்து தன் கோபத்தை கட்டுபடுத்தியபடி அமர்ந்தவன்,

“சொல்லுடி..” என்றான் கைகளை மேஜையில் கோர்த்தபடி.

“ரிஷி என்னால இதுக்கு மேலயும் தொடர்ந்து ஒர்க் பண்ண முடியும்னு நம்பிக்கை இல்ல. என்னோட அண்ணிகள் இரண்டு பேரோட ப்ரக்னன்சி பீரியட் நான் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன் ஆனா அவங்க யாருக்குமே இந்த அளவுக்கு மோசமா இருந்தது இல்ல…”

“ரொம்ப ஜாலியா பிடிச்சதை சாப்பிட்டு, நல்லா தூங்கி எந்திரிச்சு, வாக்கிங், மெடிடேஷன்னு சந்தோஷமா இருந்தாங்க ஆனா ஏன்னு தெரியலை எனக்கு ரொம்பவே கஷ்டப்படுத்துது… இரண்டு குழந்தைகள் என்னை நம்பி இருந்தும் என்னால அவங்களுக்கு சரியா சாப்பாடு கொடுக்க முடியலை..”

“வீட்ல மட்டுமில்லாம ஆஃபிஸ்லயும் பிரெண்ட்ஸ் கூட சாப்பிடும் போது சிலரோட ஃபூட் ஸ்மெல் ஒத்துக்காம பலமுறை வாமிட் பண்ணிட்டேன். இரண்டு முறை ஜெய் கூட இருந்தப்போ தலை சுற்றல் வந்ததால அவ என்னை பத்திரமா பிடிச்சுகிட்டா…”

“ஆனா அவ என்னோடு இல்லாதப்ப, மெட்ரோல ஏறும் போதும் இறங்கும் போதும் தலைசுற்றல் வந்தா என்னோட நிலைமை என்னாகும்னு யோசிச்சு கூட பார்க்க முடியலை..”

“இந்த ஸ்டேஜ்ல குழந்தைகள் முக்கியமா? வேலை முக்கியமா? என்று யோசிக்கிறப்போ எனக்கு குழந்தைகளும் என்னோட ஹெல்த்தும் தான் முக்கியமா இருக்கு..”

“அதனால இனி வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லலை பட் குழந்தைங்க பிறந்து ஓரளவு நடக்கத் தொடங்கின பிறகு கூட நான் திரும்ப அங்கேயே ஜாயின் பண்ணிப்பேன், அது ஒன்னும் ப்ராப்ளம் இல்லை..” என்று பேசிக்கொண்டே செல்ல “வாய மூடுடி!!” என்றான் எல்லையில்லா கோபத்தோடு.

அதில் திகைத்தவள் அதிர்வோடு கணவனை பார்க்க, “இதுக்கு மேல இதை பற்றி ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது..” என்றான் கண்டிப்பான குரலில்.

“ரிஷி ப்ளீஸ் உங்களுக்கு இதுல எந்தளவு விருப்பம் இருக்கும்னு எனக்கு தெரியல ஆனாலும் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மை ஸிச்சுவேஷன். பேப்பர் போடறது பற்றி நான் இன்னும் எந்த மூவ்வும் பண்ணலை. உங்க கிட்ட சொல்லிட்டு உங்க சம்மதத்தோடு தான் செய்யலாம்னு இருக்கேன்..” என்று தவிப்புடன் அவன் கையை பிடித்தாள்.

“விடுடி!!” என்று கையை உதறியவன், “நீ ஒன்னும் என் சம்மதத்துக்காக காத்திருக்கிறவ மாதிரி தெரியல, எல்லா முடிவையும் எடுத்துட்டு என்கிட்டே ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ற..” 

“அப்படி கிடையாது ரிஷி.. ஒரு வாரமாவே என் மனசுல இது தான் ஓடிட்டு இருக்கு.. ஆனாலும் அவசரப்பட வேண்டான்னு தான் காத்திருந்தேன் பட் இரண்டு நாளா ஆஃபிஸ்ல என்னால சுத்தமா கான்சன்ட்ரேட் பண்ண முடியலை. கடைசியில எனக்கு பதிலா ஜெய்யும் மற்றவங்களும் தான் முடிச்சு கொடுத்தாங்க..”

“அதை பார்க்கிறப்போ இப்படியே எத்தனை நாளைக்குன்னு தான் தோனுச்சு.. அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்..” 

“ஹே, அதுதான் உனக்கு மெட்டர்னிட்டி லீவ் இருபத்தி ஆறு வாரம் இருக்கே அப்போ ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியது தானே?!” 

“ரிஷி நீங்க போஸ்ட் டெலிவரி பற்றி சொல்றீங்க ஆனா நான் இப்போதைய என் நிலைமையை சொல்லிட்டு இருக்கேன், நீங்களே பார்க்கறீங்க தானே போன வாரம் தொடர்ந்து மூணு நாள் நைட் தூங்க எவ்ளோ அவஸ்த்தை பட்டேன்னு..”

“அது நீ சாப்பிட்டதும் படுத்ததால வந்தது..”

“நான் ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து சமைச்சு சாப்பிடவே ஒன்பது மணிக்கு மேல ஆகிடுது. இதுவே வீட்ல இருந்தா ஏழு மணிக்கு சாப்பிட்டு கொஞ்ச நேரம் வாக் பண்ணிட்டு படுப்பேன்..”

“அதுமட்டுமில்லை பேஸிக் எக்ஸர்சைஸ், யோகா அதோடு ஆறு மாசத்துக்கு அப்புறம் டாக்டர் வாக்கிங் போக சொல்லி இருக்காங்க.. என்னால சண்டே தவிர்த்து மற்ற நாளில் எதுவுமே செய்ய முடியாம போகுது. ட்வின்ஸ் என்றாலே சிசேரியன்னு நினைக்க வேண்டாம் சுகப்பிரசவம் ஆகவும் வாய்ப்புகள் அதிகம்னு சொல்லி  இருக்காங்க..”

“சிசேரியன் அப்போதைக்கு வலி இல்லாமல் போனாலும் அதுக்கப்புறம் வலி இருக்கத்தான் செய்யும். அதோடு காலம் முழுக்க அதனுடைய சைட் எஃபெக்ட்ஸ் இருக்கும்னு சொல்லி இருக்காங்க.. லாஸ்ட் சான்ஸ்ல தான் சிசேரியன் எடுப்பேன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நானும் ப்ரிப்பேர் ஆகணுமே ரிஷி ஏன் உங்களுக்கு இது புரிய மாட்டேங்குது..” 

“இதோ பார் நீ சொல்ற இதே ட்வின்ஸோடு எட்டு மாசம் வரைக்கும் ஒர்க் பண்ணினவங்களை நான் பார்த்திருக்கேன்.. அதுதான் இந்த வாமிட், தலைசுற்றல் எல்லாமே நார்மல்னு ஆன்ட்டி சொன்னாங்களே! என்னமோ நீ மட்டும் தான் இப்படி அவஸ்த்தை படர மாதிரி பில்ட் அப் பண்ணாதே..” 

“என்ன சொன்னீங்க? பில்ட் அப் பண்றேனே?! வாட் டூ யூ மீன் ரிஷி?..” என்றாள் கோபத்தோடு. 

“பின்னே என்னடி, என் அம்மா உன் அம்மாவில் இருந்து எல்லாருமே இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பாங்க. இன்னும் உனக்கு என்னென்ன ப்ராப்ளம்ஸ் இருக்குன்னு சொல்லு.. திரும்ப டாக்டரை போய் பார்க்கலாம்..”

“தேவையான மெடிஸன்ஸ் வாங்கி கொடுக்கிறேன், எடுத்துக்கோ ஆனா எக்காரணம் கொண்டும் வேலையை விடறதை பற்றி யோசிக்க கூட கூடாது நீ! உன்னோட ஒரு மாச சம்பளம் கூட நிற்க கூடாது, அதுக்கு நான் எப்பவுமே சம்மதிக்க மாட்டேன்..” என்றான் கடுமையான குரலில்.

“அப்போ உங்களுக்கு என்னை விட நம்ம குழந்தைகளை விட உங்களுக்கு வேலையும் சம்பளமும் தான் முக்கியமா?” என்று ஆதங்கத்தோடு கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 

அதில் அவன் கோபம் கரையை கடக்க, “என் பிள்ளைங்கள் மேல இருக்கிற அக்கறையை உனக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் உனக்கு இல்லைடி,” என்று எழுந்து கொண்டவன், “இதுக்கு மேல எதுவும் பேசாத, அமைதியா கிளம்பு..” என்றான் உச்சபட்ச கோபத்தோடு.

"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், ரிஷி. அதிகபட்சம் ஒன்றையிலிருந்து ரெண்டு வருஷம் தானே?! எதுவா இருந்தாலும் நம்ம சமாளிக்கலாம்…” என்று இதழ்களை அழுந்த மடித்து கேவலை கட்டுப்படுத்தியவள், 

“டெ.. டெலிவரி அம்மா வீட்ல தான். குழந்தைகள் வளரும் வரைக்கும் அங்க.. எனக்கு முடிஞ்சா எட்டாம் மாசம் அங்கிருந்த படியே நான் வேலையில ஜாயின் பண்ணிக்கிறேன்.." என்று வார்த்தைகள் முழுமை பெறாமல் உடைந்து வெளியேறியது.

"எதுவும் பேசாதன்னு சொன்னேன் மகாலட்சுமி" என்று அழுத்தி சொன்னவனின் கோபத்தின் அளவு  அவள் பெயரை முழுமையாக உச்சரித்த விதத்திலே புரிந்து போனது. 

அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை எதிர்பார்க்காத ரிஷி வாசலுக்கு நடக்க தொடங்கி விட்டான்.

எப்போதுமே அவன் இப்படி செய்தது கிடையாது. மருத்துவமனைக்கு வந்து செல்லும் போதெல்லாம் அவள் கையை பிடித்துக்கொண்டு அல்லது தோள்களை அழுந்த பிடித்து மனைவியை பத்திரமாக பாதுகாப்பான். 

இப்போது அவன் விட்டு சென்றதை எதிர்பாராத மகாலட்சுமிக்கு மீண்டும் கண்கள் கலங்கி விட்டது.

கோபத்தில் ரிஷி கொண்டு வந்திருந்த பை அனைத்தையும் அப்படியே விட்டுச் செல்ல, அதை எடுத்துக் கொண்டு வேகமாக எழுந்தவள் கண்களை துடைத்தபடி வெளியில் சென்றாள்.

அங்கே பைக்கின் ஆக்சிலிட்டரை முறுக்கிக் கொண்டு காத்திருந்தான் ரிஷி.

அமைதியாக ஏறி அமர்ந்தவளுக்கு அவன் தோளை பிடிக்க கூட அச்சமாக இருந்தது. ‘எங்கே மற்றவர் பார்க்க தட்டி விட்டு விடுவானோ’ என்று. அதனால் பக்கவாட்டில் இருந்த கைப்பிடியை பிடித்தபடி பத்திரமாக அமர்ந்து கொண்டாள்.

ட்ராஃப்பிக்கை கடந்து ஓரளவு வாகன நெரிசலில் இருந்து விடுபட்டதுமே, "ரிஷி, எல்லாருக்கும் ஒரே மாதிரி மசக்கை இருக்காதுன்னு டாக்டர் சொன்னாங்க தானே? கொஞ்சம் அதை யோசிச்சு பாருங்க.." என்று கணவனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில் சொல்ல அவனிடம் கனத்த மௌனம்.

"ரிஷி, நான் உங்களை கோபப்படுத்தணும்னு பேசல. அப்படி நினைச்சிருந்தா ஐ’ம் ஸாரி. ஆனா என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட பெஸ்ட் நான் ட்ரை பண்ணிட்டேன்.. முடியாத ஸ்டேஜ்ல தான் இந்த முடிவுக்கு வந்தேன்.." என்ற போதும் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

கணவன் மௌன விரதத்தை அனுஷ்டிப்பது மகாலட்சுமிக்கு புரிந்து போனது. 

இது அவளுக்கு பழக்கம் தான் என்றாலும் இம்முறை அவன் கோபத்தின் அளவில் இந்த மௌனம் நிச்சயம் நாட்களை கடக்கும் என்று புரிந்தாலும்  எத்தனை வாரங்களுக்கு நீடிக்கும் என்று தான் தெரியவில்லை. 

‘ஒருவேளை மாதங்களை தொட்டு விடுமோ?’ என்ற எண்ணமே அவள் நெஞ்சில் குளிர் பரவ செய்தது. அவன் மௌனத்தை எப்போதுமே அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. அதைவிட அவன் விலகல்!! 

“ஏன் எனக்கு அண்ணிகள் போல இல்லாம போச்சு? எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ அவஸ்த்தை? எத்தனை பேருக்கு குழந்தை இருக்கிறதே தெரியாத அளவுக்கு பிரசவ காலம் சந்தோஷமா இருக்கு. எனக்கு ஏன் அந்த கொடுப்பனை இல்லாம போச்சு?” என்று மனதார கடவுளிடம் கேட்டுக்கொண்டு இருந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. 

இப்போது வீட்டில் விசேஷத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இதுநாள் வரை இருவருக்கும் இடையில் சிறு சிறு உரசல் இருந்தாலும் எதையும் பெற்றவர்களிடம் பெரிதாக பகிர்ந்து கொள்ளமாட்டாள். 

முதலில் தன் கணவனை தானே அடுத்தவர்கள், அது தன்னை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் விட்டு கொடுத்து விட கூடாது என்ற எண்ணம். அடுத்து அலுவலகத்தில் அத்தனை பேரோடு இணைந்து வேலை செய்பவள் எத்தனை பிரச்சனைகளை கையாண்டு தீர்த்து இருப்பாள். 

அப்படியிருக்கையில் தன்னால தன் குடும்ப பிரச்னைகளை தீர்க்க முடியாமல் மற்றவர்களிடம் எடுத்து செல்லவும் அவள் விரும்பவில்லை. அதனால் தானே சமாளிக்கும் முடிவில் இருந்தாள். 

இதை அவள் கற்றுக்கொண்டதே அவள் அண்ணிகளிடம் தான். திவாகரன், கதிரோடு ஏதேனும் பிரச்சனை இருந்து அதை தீர்க்க முடியாமல் போனால் அவள் தந்தையிடம் தான் தீர்வு காண வருவார்களே தவிர்த்து பெற்றோரை இதுவரை அழைத்து வந்தது கிடையாது. 

அதோடு தேவையில்லாமல் பெற்றவர்களை கலவரப்படுத்த வேண்டாம் என்பதும் முக்கியமான காரணம். 

இப்போது ரிஷி இப்படி மௌனம் காப்பதும் விலகிச் செல்வதும் ‘மற்றவர்களின் கேள்விகளுக்கு வழி வகுத்து விடுமே இதை எப்படி தவிர்ப்பது?’ என்ற அச்சம் அவளைக் கவ்வி பிடித்தது. வீடு சென்று சேரும் முன் கணவனை சமாதானப்படுத்தி விட முடிவு செய்து மீண்டும் பேச தொடங்கினாள்.

"ரிஷி, நம்ம பிரச்சனை நம்மளோட இருக்கட்டும். இன்னொரு நாள் பேசி தீர்த்துக்கலாம் பட் இப்போ அப்பா, அம்மா எல்லாருமே வந்திருக்காங்க. அவங்க கிட்ட எதுவும் காமிச்சிடாதீங்க ப்ளீஸ்.." என்றதற்கும் அவனிடம் பதில் இல்லை. 

அத்தனை அழுத்தமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனிடம் பேசப்பேச மகாலட்சுமிக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

"ரிஷி, எனக்காக!! என் மேல இருக்கிற கோபத்தை  அப்பா அம்மா கிட்ட காமிச்சுடாதீங்க. இன்னைக்கு நாளே ஸ்பாயில் ஆகிடும், யாருக்கும் கஷ்டம் வேண்டாம்.. நான் நாளைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் போறேன்.." என்ற பதில் கூட அவனை சமாதானப்படுத்தவில்லை.

அடுத்து அவள் ஏதோ பேச முயல வெறிச்சோடி இருந்த தெருவில் ஹாரனை சப்தமாக ஒலிக்க விட்டான்.

அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது. ஆனால் மற்றவர்கள் எதிரில் எப்படி நடந்து கொள்வானோ என்ற பதைபதைப்போடு கண்ணாடியில் கணவன் முகதத்தை பார்த்தபடி மகா இருக்க அடுத்த பத்து நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

வாசலிலேயே தினகரனும் கதிரும் அவர்களுக்காக காத்திருந்தனர்.

மகாவின் விழிகளில் கண்ணீரின் வரத்து நின்று போய் இருந்தாலும், அதன் தடம் கன்னங்களில் வியாபித்திருந்தது. 

சிவந்து போயிருந்த அவள் விழிகளே எதுவும் சரியில்லை என்று சொல்லாமல் சொன்னது.

வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு, "வாங்கப்பா, வாங்க ண்ணா" என்று க்ஷண நேரத்தில் வரவேற்று “வாமிட்டிங் சென்சேஷன் இருக்கு வந்துடுறேன் இருங்க..” என்று பாதி முகத்தை மூடியபடி அவர்களைத் தாண்டி உள்ளே சென்றாள். 

வாசலை தாண்டி சென்றவளின் நெஞ்சம் தடதடக்க, துடித்த இதழ்களை பற்களால் அழுந்த பற்றியபடி, ‘ரிஷி அவர்களிடம் தன் கோபத்தை காண்பித்து விடக்கூடாதே’ என்ற பரிதவிப்போடு கணவனை பார்த்து நின்றாள் மகாலட்சுமி.

பைக்கை நிறுத்திவிட்டு இறுகிய முகத்தோடு திரும்பிய ரிஷியிடம் புன்னகையோடு சென்றான் கதிர்வேலன்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1