வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 6.1

 


மகாலட்சுமி பயந்தது போல் இல்லாமல் பைக்கை நிறுத்தி விட்டு திரும்பிய ரிஷி தன்னை எதிர்கொண்ட கதிரை அணைத்து விடுவித்து, “ரொம்ப நேரமாச்சா கதிர்?” என்றான். 

“இல்லை ரிஷி, அரை மணி நேரம் தான். அதுவும், வந்ததும் தட்டு வரிசை அடுக்கி மற்ற ஏற்பாடு பார்த்துட்டு இருந்தோம்..” என்றவனுக்கு தலையசைத்தவன்,

“நல்லா இருக்கீங்களா மாமா?” என்று தினகரனிடம் நலம் விசாரித்து அப்படியே அவர்களோடு பேசியபடி அங்கேயே நின்று விட்டான்.

அன்றைய விசேஷத்திற்காக வீட்டில் எளிமையான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஹாலில் கிழக்கு நோக்கி மனை போடப்பட்டு விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. சுமதியும் காயத்ரியும் கொண்டு வந்திருந்த சீர்வரிசைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

மகாலட்சுமி நுழைந்த போது ஹாலில் உறவினர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். வாயை பொத்தியபடி வந்தவளை கண்டதும் பாக்கியம் எழுந்து கொள்ள “வா.. வாமிட், வந்துடறேன்” என்று பொதுவாக அனைவருக்கும் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அண்ணனும் அப்பாவும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் அவள் தாயும் அண்ணிகளும் கண்டு கொள்வார்கள். அதனால் அவர்கள் வரும் முன்பாக வேகமாக முகத்தை அடித்து கழுவி கொண்டு வெளியில் வர மகா நினைத்தது போலவே அவளுக்காக காத்திருந்தனர்.

“மகா இன்னைக்கு முகூர்த்த புடவை கட்டனும்..” என்று பாக்கியலட்சுமி சொல்ல, “ஒரு ரெண்டு நிமிஷம், வந்துடுறேன் ம்மா..” என்று வெளியில் வந்தவள் அனைவரையும் புன்னகை முகமாக வரவேற்று விட்டு சமையலறைக்கு சென்றாள்.

“ஹாஸ்பிட்டல் போய் வர இவ்ளோ நேரமா? உறவுக்காரங்க வருவாங்கன்னு தெரியாதா? வந்ததும் போய் அம்மா கிட்ட சீராடனுமா?”

“அத்தை எனக்கு வாமிட் அதுதான் நேரா பாத்ரூம் போயிட்டேன். வேணும்னு லேட் பண்ணலை... அவங்களும் விசேஷத்துக்கு வந்திருக்கவங்க தான், அவங்களை வாங்கன்னு வரவேற்கிறது ஒன்னும்  தப்பில்லை..”

“இவ்ளோ வியாக்கியானம் பேச தெரியுது ஆனா நாத்தனாரை மதிக்க தெரியுதா?”

“அண்ணியா? அவங்களை நான் பார்க்கலையே! வந்திருக்காங்களா?”

“ஏன் என் பொண்ணுக்கு அவ தம்பி மேல அக்கறை இருக்காதா? அக்கறையை எல்லாம் உன் குடும்பத்தாரா குத்தகைக்கு எடுத்திருக்காங்க?”

“அத்தை புரியற மாதிரி பேசுங்க..”

“என் பொண்ணு தன் தம்பி பொண்டாட்டிக்காக லீவு போட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கா. அவளை ஒரு வார்த்தை கேட்கல நீ.." என்று குற்றம் சாட்டினார் இந்திரா.

“ப்ச் அண்ணியை எங்கேயும் காணுமே அத்தை?” என்றாள் வந்திருந்தவர்களை பார்த்தபடி.

“முன்னாடியே வந்துட்டா, மாடியில இருக்கா..”

“சரி..” என்றவள் கைபேசியை எடுக்க, “என்ன பண்ணிட்டு இருக்க நீ? என் பொண்ண ஒரு வார்த்தை விசாரிக்காமல் இப்போ எதுக்கு ஃபோனை எடுக்கிற?"

“அண்ணிக்கு தான் அத்தை கால் பண்றேன்…”

“ஏன் மகாராணிக்கு நேர்ல போய் விசாரிக்க முடியாதா? ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு ஃபோன் போடுவியா?”

“அத்தை, டாக்டர் மாடி ஏறக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. அப்படி ஏறிட்டா எனக்குமே மூச்சு வாங்குது..”

“ஏன் ஆஃபிஸ்ல ஏழு மாடி கட்டடத்துல போய் வேலை செய்ய முடியுது? இங்க ஒரு மாடி ஏற முடியலையா?”

“அங்க லிஃப்ட்ல போவேன் அத்தை..” என்றாள் களைப்போடு.

“உனக்காக இங்க லிஃப்ட் போட முடியாது. வந்தவங்களை நேர்ல போய் அழைக்கிறது தான் முறை.. மெதுவா போய் கூப்பிடு..” என்று இந்திரா சொல்லிக் கொண்டிருக்க, அவள் அதிர்ஷ்டம் வனிதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

“எப்போ வந்தீங்க அண்ணி? நல்லா இருக்கீங்களா? தாரணி அண்ணா வரலையா?” என்று கேட்க அது காதில் விழாதது போலவே அவளை கடந்து சென்றாள் வனிதா.

ஒன்றும் புரியாமல் பார்த்திருந்த மகாலட்சுமி ஜூசை கொண்டு போய் கொடுத்து “நீங்க மட்டும் தான் வந்தீங்களா அண்ணி?” என்று மீண்டும் கேட்டாள். 

பக்கத்தில் வனிதாவின் பெரியம்மா இருக்கவும் “ஆமா, நான் மட்டும் தான் வந்தேன்..” என்று பட்டுக் கொள்ளாமல் சொன்னவளுக்கு மகா மீது அப்படி ஒரு கோபம்.

இருக்காதா பின்னே?! இவர்கள் மருத்துவமனை கிளம்பவுமே வனிதாவுக்கு அழைத்த சிந்து, மகாலட்சுமி நெய் ரோஸ்ட் போட்டுக் கொடுக்காதது பற்றி அழுகையோடு சொல்லி விட்டாள். 

அதை கேட்டதில் இருந்தே உள்ளுக்குள் கொந்தளித்து கொண்டிருப்பவளை “எதுவா இருந்தாலும் விசேஷம் முடிஞ்சு பேசிக்கலாம, அவளை உன்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றேன்..” என்று இந்திரா தான் அமைதி படுத்தி இருந்தார். 

சிவபாலனின் உறவுகள் அவளிடம் நலம் விசாரிக்க, “ஜூஸ் நாங்க கொடுத்துக்கிறோம் நீ வா நேரம் ஆகுது தயாராகுவ..” என்று மகளை அழைத்தார் பாக்கியலட்சுமி. 

“ம்மா இது மட்டும் தான், கொடுத்துட்டு வந்துடறேன்..” 

“என்கிட்ட கொடு மஹா, நான் கொடுக்கிறேன்..” என்று சுமதி வாங்கிக்கொள்ள காயத்ரியும் பாக்கியலட்சுமியும் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றனர். 

“டாக்டர் என்ன சொன்னாங்க மஹா? ஸ்கேன் ரிப்போர்ட்ல எந்த பிரச்சனையும் இல்லையே?! உனக்கு ஏதாவது டானிக் எழுதி கொடுத்தாங்களா? இன்னைக்கு விசேஷம் இல்லைனா நானும் உன்னோடு வந்திருப்பேன்..” 

“ம்மா குழந்தைகள் நல்லா இருக்காங்க. ஒரு ப்ராப்ளமும் இல்லை, எனக்கும் டேப்லெட் கொடுத்து இருக்காங்க..”

“சரி மஹா நேரமாச்சு வா முதல்ல புடவை காட்டிடலாம்..” என்ற சுமதி கதவை அடைக்க போக, “அக்கா நீங்க பாருங்க நான் ஜடைப்பூ எடுத்துட்டு வந்துடுறேன்..” என்று காயத்ரி வெளியில் சென்றாள்.

“ஜடைப்பூவா?”

“ஆமா மஹா இன்னைக்கு பூ தைச்சு விடனும், வாங்கிட்டு வந்துருக்கோம்..” என்றிட பூமாலைகளை வைத்திருந்த தட்டில் இருந்து ஜடைப்பூவை கொண்டு வந்தாள் காயத்ரி. 

“அழகா இருக்கு அண்ணி..” என்றவளை அமர வைத்து சுமதி ஜடை பின்ன காயத்ரி முகத்திற்கு ஒப்பனை செய்ய தொடங்கினாள்.

“அண்ணி பாப்பா எப்படி இருக்கு? டெலிவரி டேட் அதேதானா? இல்லை முன்கூட்டியே வர சொல்லி இருக்காங்களா?” 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அதே டேட் தான்! வாட்டர் லெவல்லும் கரெக்ட்டா இருக்கு, என்னோட பிபி, சுகர் லெவல் எல்லாமே பக்கா.. அதனால ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. வலி வந்ததுனா கிளம்பி போக வேண்டியது தான்..”

“உங்களால தூங்க முடியுதா அண்ணி?”

“அப்பப்போ கொஞ்சம் முடியாம போகும். மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை.. உனக்கு ரெண்டு பேர் இருக்காங்களே, தூங்க விடறாங்களா? இல்லை சண்டை போட்டு உன்னை எழுப்பி உட்காத்தி வச்சுடுறாங்களா?” என்றாள் புன்னகையோடு.

“தூக்கம் இப்போ ஓரளவுக்கு பரவால்ல சரியா சாப்பிட முடியலை, வாமிட்க்கு டேப்லெட் கொடுத்திருக்காங்க..” என்று டாக்டர் சொன்னதை சொல்ல,

“அதுவே போதும், என் ஃப்ரெண்ட் ஒருத்திக்கும் இப்படி தான் இருந்தது, கடைசியில டேப்லெட் தான் கை கொடுத்தது. கண்டிப்பா வாமிட் சென்சேஷன் குறையும், டோன்ட் வொரி…” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க சுமதி அவளுக்கு ஜடை பின்னி பூ தைத்து விட்டார்.

ஒப்பனை முடித்த காயூ, “அண்ணா எங்கே ஆளையே காணோம்? அவரையும் பட்டு வேட்டி சட்டை போட்டுக்க சொல்லு மஹா, மாமா விசேஷத்தை கேப்சர் பண்ண கேமரா மேன் அரேஞ்ச் பண்ணி இருக்கார்..” என்றவளுக்கு  சட்டென பதில் சொல்ல முடியாத நிலை மகாவுக்கு. 

“வெளியே இருப்பார்னு நினைக்கிறேன் அண்ணி..”

“சரி, நான் போய் அண்ணாவை அனுப்பி வைக்கிறேன்..” என்று காயத்ரி சொல்ல கலங்கிய மனதோடு தன் புடவைக்கு ஏற்ற நிறத்தில் ரிஷிக்கு வேஷ்டி சட்டையை எடுத்து வைத்தாள். 

“சரி நாங்க வெளியே இருக்கோம் சீக்கிரம் வாங்க..” என்று அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் உள்ளே வந்தவன் குளியலறைக்கு சென்று முகத்தை துடைத்தபடி திரும்பினான். 

அவன் உடை தேடுவதை கண்டு, “ரிஷி உங்களுக்கு ஆல்ரெடி எடுத்து வச்சுருக்கேன். வேஷ்டி சட்டை போட்டுக்கோங்க..” என்றாள் மெல்லிய குரலில்.

நிச்சயம் இதற்கு அவனிடமிருந்து பதில் வராது என்று தெரிந்தாலும் குறைந்தபட்சம் எடுத்து வைத்திருக்கும் ஆடையை அணிந்து கொள்வான் என்று எதிர்பார்த்திருந்தாள்.

ஆனால் அவள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக வேறொரு பேண்ட் சட்டையை அணியத் தொடங்கினான். 

“ரிஷி, ப்ளீஸ் ஃபங்ஷனப்போ வேஷ்டி சட்டை போடுங்க..” என்றதை அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. 

“இதெல்லாம் லைஃப்ல ஒரு முறை தான். மிஸ் பண்ண வேண்டாமே..” என்றிட அவனோ அவள் புறம் திரும்பாமல் ஆடையை அணிந்து கொண்டு தலை சீவ தொடங்கினான்.

மகாலட்சுமிக்கு கண்கள் வெகுவாகவே கலங்கி போனது. டிஷ்யூவை எடுத்து மேக் அப் அழியாத வண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அறையில் இருந்து வெளியேறிய கணவனை செயற்கை புன்னகையோடு தொடர்ந்தாள்.

“நல்ல நேரத்துல ஆரம்பிக்கணும் ரெண்டு பேரும் கும்பிட்டுட்டு உட்காருங்க..” என்று பெரியவர் சொல்ல ரிஷி மகா இருவரும் அப்படியே செய்து அமர்ந்தனர். 

முதலில் வந்த பாக்கியலட்சுமி மகள் மருமகன் இருவருக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மகாவிற்கு பூ வைத்து, கொண்டு வந்த சாதத்தை ஊட்டி விட்டார்.

மகாவின் இதழ்கள் பெரிதாக விரிந்தாலும் அதில் உயிர்பில்லாததை கண்டு கொண்ட பாக்கியலட்சுமி உடனே மருமகனை பார்க்க அவன் முகம் இறுகி கிடப்பதில் ‘ஏதோ சரி இல்லை’ என்பதை புரிந்து கொண்டார். 

அடுத்து வயதில் பெரியவர்கள் நலங்கிட்டு முடிக்க சுமதி, காயத்ரி என்று ஒவ்வொருவராக நலங்கிட்டு வளையல் அணிவித்து சாதம் ஊட்டி விட்டனர். 

ஆனால் வனிதா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றிருந்தாள். 

“என்ன வனி இங்க நின்னுட்ட? போ, போய் நலங்கு வை..” என்றார் சிவபாலன் மகளிடம்.

“நான் எதுக்கு ப்பா? உங்க மருமகளுக்கு என் பொண்ணு முக்கியம் இல்லாதப்போ எனக்கும் அவ முக்கியமில்லை..” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு. 

‘மகள் எதை சொல்கிறாள்?’ என்பது சாதாரண நேரமாக இருந்திருந்தால் அவருக்குமே புரிந்திருக்காது ஆனால் பேத்தி அவரின் கைபேசியை வாங்கி சென்று 'வனிதாவிற்கு அழைத்தது எதற்காக?' என்று இப்போது நன்கு புரிந்தது. 

“வனிதா என்ன பேச்சு இது? அதுவும் நல்ல விசேஷம் நடக்கும் போது. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..” என்றார் கண்டிப்பான குரலில்.

“என் மகளுக்கு ஒரு தோசைக்கு கூட இந்த வீட்ல வக்கில்லாதப்போ எனக்கு மட்டும் எதுக்கு உறவு?” என்றாள் வீம்போடு.

“நீ பேசுறது கொஞ்சமா சரியில்ல. இது உன் தம்பிக்கான விசேஷம் அதுல கலந்துக்காம நீ ஒதுங்கி நிக்கிறது ரொம்ப தப்பு. இப்படியே பண்ணிட்டு இருந்தேன்னா அப்புறம் ஆனது ஆச்சுன்னு நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியதா இருக்கும்..” என்றவரின் மிரட்டலில் தான் சற்று அடங்கியவள், 

“வச்சு தொலைக்கிறேன்..” என்ற முணுமுணுப்போடு சென்றவள், வேண்டா வெறுப்பாக சந்தனத்தை அள்ளிப் ரிஷி மகாவிற்கு பூசி பூ வைத்து விட்டு சாதம் கூட ஊட்டி விடாமல் திரும்பி விட்டாள்.

“தம்பி நீங்களும் வைங்க..” என்று பாக்கியலட்சுமி ரிஷியை அழைத்தார் 

அது நேரம் வரை புன்னகையோடு அமர்ந்திருந்த மகா, ‘என்ன செய்வானோ? ஏது சொல்வானோ..’ என்று பரிதவிப்போடு கணவனை பார்க்க நல்லவேளை எதுவும் மறுத்து பேசாமல் சந்தனத்தை அள்ளிக்கொண்டவன் அவள் கன்னங்களில் பூசி நெற்றியில் திலகமிட்டான். 

“அண்ணா மகாவுக்கு பிடிச்ச சாதம் கொடுங்க..” என்று காயத்ரி சொல்லவும் அதையும் ஊட்டி விட்டவன் வெளியில் கிளம்பினான். 

“ஒரு நிமிஷம் இருங்க தம்பி ஆரத்தி எடுக்கனும்..” என்று இருவருக்கும் ஆலம் எடுத்து முடிக்க அங்கு வந்தவர்களுக்காக ஆர்டர் கொடுத்திருந்த உணவுகள் வந்து சேர்ந்தது. 

கதிர் ஏற்கனவே மாடியில் டேபிள் சேர் போட்டு தண்ணீர் முதற்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து வந்திருந்த உணவுகளை மேலே ஏற்றிக் கொண்டிருந்தான். 

ரிஷியும் அவனோடு இணைந்து கொள்ள உணவு பரிமாற பட்டது.

அறையினுள் அமர்ந்திருந்த மகாவின் முகத்தில் கலவையான உணர்வுகள்.  அவளது கலக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும் முழுதாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை 

“நீங்க போய் சாப்பிடுங்க..” என்று மருமகள்களை அனுப்பி வைத்த பாக்கியலட்சுமி மகளை தேடி சென்றார். 

“ஏன் மஹா உன் முகமும் மாப்பிள்ளையோட முகமும் ஒரு மாதிரி இருந்தது. ஏதாவது பிரச்சனையா?” என்றவருக்கு மருத்துவர் மகளின் உடல்நிலை அல்லது குழந்தைகள் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரோ என்ற தவிப்பு.

மகாலட்சுமிக்கு தந்தை மீது மரியாதை கலந்து பயம் உண்டு அதேநேரம் பாக்கியலட்சுயிடம் அவளுக்கு எப்போதும் எந்த ஒளிவு மறைவும் இருந்தது கிடையாது. 

பள்ளி காலம் தொட்டே எதையும் அன்னையிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்பவளுக்கு ரிஷி அவள் பயந்த அளவு இல்லாததில் இப்போது இதை பெரிது படுத்தவோ அவர்களை கலவரப்படுத்தவோ விருப்பம் இல்லை. 

மெதுவாக அவனிடம் பேசி புரிய வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

“சொல்லு மஹா குழந்தைக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னாங்களா?” 

“ம்மா.. என்னம்மா நீங்க? அப்படி எதுவும் இல்லை. குழந்தைகள் ரொம்பவே ஆரோக்கியமா இருக்காங்க எனக்கு தான் கொஞ்சம் முடியலை..”

“அப்போ மாப்பிள்ளை முகம் ஏன் ஒரு மாதிரி இருந்தது..” 

“தெரியலையே ம்மா, ஏதாவது ஆஃபிஸ் டென்ஷனா இருக்கும் நான் பேசிக்கிறேன்.. நீங்க கவலையை விடுங்க.. முதல்ல சாப்பிடுவீங்க வாங்க..” என்று அன்னையை சாப்பிட அனுப்பி வைத்தாள்.

மீண்டும் அறைக்கு திரும்பி உடை மாற்றிக்கொண்டு நகைகளை கழற்றி வைத்து ஒப்பனை களைத்து சாதாரண சுடிதாரில் வர அனைவரும் கிளம்புவதற்காக காத்திருந்தனர். 

அவர்களை வழி அனுப்பிவிட்டு வீட்டினுள் திரும்பியவளுக்கு அத்தனை அசதியாக இருந்தது. 

சற்று நேரம் படுத்து நன்றாக தூங்கி எழுந்தால் தான் அடுத்து அவளால் எது ஒன்றும் செய்ய முடியும் என்ற நிலை.

“சாப்பாடு மீந்து இருக்கு பாரு, அதையெல்லாம் வேற பாத்திரத்துக்கு மாத்திட்டு இதை கழுவி வச்சுடு.. எடுத்துட்டு போக ஆளுங்க வந்துடுவாங்களாம்..” என்றார் இந்திரா அதிகாரமாக. 

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1