வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 6

 

அன்று உள்ளூர் விசேஷத்தை முன்னிட்டு பள்ளி அரை நாள் மட்டுமே இயங்கியது. தன் வகுப்பறையில் அமர்ந்திருந்த தளிர் வாட்ஸப்பில் வீட்டுப்பாடத்தை அனுப்பி விட்டு மாணவர்களின் வினாத்தாள்களை வரிசை எண்படி சரிபார்த்து கட்டி வைத்து  நிமிர "ஹாய் தளிர்.." என்று அவளெதிரே முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தான் உதயாதித்தன்.

அவனை எதிர்பாராது "நீங்க..?" என்றவளின் முன்னிருந்த பெஞ்சில் அமர்ந்து,

"ஹப்பா இத்தனை நாள் கழிச்சு ஒருவழியா உன்னை இங்க பிடிச்சுட்டேன், எப்படி இருக்க தளிர்..? வொர்க் முடிஞ்சதா..? திஸ் இஸ் ஃபார் யூ" என்றவாறே பரிசு பெட்டியை நீட்டினான்.

தளிர் யோசனையாய் பார்க்க.. "என்ன பார்க்கிற உனக்காகதான் வாங்கிட்டு வந்தேன் வாங்கிக்கோ"

"இல்ல வேண்டாம்" என்ற முனுமுனுப்பு பெண்ணிடம்..,

"ஏன்..?" என்றவனின் பார்வை நீட்டியிருந்த  பரிசின் மீதேயிருக்க வாயிலை பார்த்திருந்த தளிரோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.

"உன்னை தான் கேட்கிறேன் தளிர் ஏன் வேண்டாம்..?" என்று உதய் கேட்கவும் அவள் கைபேசிக்கு குறுஞ்செய்தி வரவும் சரியாக இருக்க 'ஒன் செக் உதய்' என்றவள் மறுபுறம் கேட்டிருந்த தகவல்களை சரி பார்த்து அனுப்பிவைத்து நிமிர முழுதாக மூன்று நிமிடங்கள் பிடித்திருந்தது.

அதேவேளை அவளெதிரே அமர்ந்திருந்தவனின் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல காற்றில் கலந்த கற்பூரமாக கரைந்து கொண்டிருந்தது.. அதை அறியாத பெண், "இங்க எதுக்கு வந்தீங்க..?" என்றாள்.

அவள் கேள்விக்கு பதிலளிக்காது "ஏன் வேண்டாம்னு கேட்டேன்" என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழவும் மௌனமாக அவன் கையில் இருந்த பரிசை வாங்க முற்பட்டாள் தளிர்.

அதுநேரம் வரை   நீட்டியிருந்த பரிசை எதிரில் இருந்த மேஜையில் வைத்த உதயாதித்தனின் கோபத்தின் அளவை தளிர் அறிந்தாளோ இல்லையோ அவன் வைத்த வேகத்தில் குலுங்கிய மேஜையும் உள்ளேயிருந்த கண்ணாடி வளையல்களும் நன்கு அறிந்திருந்தன..

தளிரின் பார்வை பரிசின் மீதிருக்க "நான் பேசுறது கேட்குதா..?" என்றவனின் உரத்த குரல் அவளிடம் எடுபட 'ஹ்ம்ம்' என்றாள்.

"ஓகே பிரிச்சு பார்" என்ற உதய் சட்டென கோபப்படும் ரகமில்லை என்றாலும் இப்போதைய அவள் செய்கைகள் அவன் கோபத்தை கிளறியிருந்தது.

தளிர் மெளனமாக அவனை பார்க்க பொறுமை இழந்தவன், "பிரிச்சு பார் தளிர்" என்று கட்டளையிட அதற்குமேல் மறுக்க முடியாதவள்  பரிசை பிரிக்க அதனுள் பலவண்ணங்களில் கண்ணாடி வளையல்கள் வீற்றிருந்தது.

"இப்போ என்ன திடீர்ன்னு வந்திருக்கீங்க என்ன விஷயம்..? எதுக்கு வளையல்..?" என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாது மெளனமாக உடைந்த வளையல்களை ஓரம் ஒதுக்கியவன் இன்று அவள் கட்டியிருந்த சேலைக்கு பொருத்தமான வளையலை தேர்ந்தெடுத்து, "உன் கையை நீட்டு" என்றான்.

"எதுக்கு..?" என்றதில் உதயனின் புருவமத்தி முடிச்சிட்டது.

அழுத்தமாக அவளை பார்த்திருந்தவனிடம் "கொடுங்க நானே போட்டுக்கிறேன்" என்றதில் அவன் புருவமுடிச்சு மேலும் இறுகிட  மேஜை மீது கோர்த்திருந்த அவள் கரத்தை உதய் பிடிக்கவும் சட்டென அதை பின்னால் இழுத்துகொண்டாள்.

"என்ன பண்ணிட்டிருக்க தளிர் நீ..? ஏன் நான் போட்டுவிட்டா என்னாகிடும்..?"

"....."

"உன்னைத்தான் கேட்டுட்டு இருக்கேன் காதுல விழுதா..?"

"ஹும் ஆனா உங்களை யார் இங்க வரசொன்னா..? குழந்தைங்க வந்து போற இடம் வீட்டுக்கு வந்திருக்கலாமே..?"

"எப்படி ராத்திரி பத்து மணிக்கு உன் ரூமுக்கு வந்தா ஓகேவா..?" என்றதில் தளிர் அவனை திகைத்து பார்க்க,

"என்ன பார்க்கிற? அதுதானே நீ எல்லா வேலையும் முடிச்சுட்டு தனியா இருக்க நேரம் உன்கிட்ட பேச வீட்டுக்கு வரணும்னா நான் அந்த நேரத்துக்கு தான் வரணும்... கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஓகேவா இருக்கலாம் ஆனா எனக்கு சரிவராதுன்னு தான் இங்க வந்தேன்..”

“கவலைபடாத எனக்கும் இது ஸ்கூல், குழந்தைங்க வரபோற இடம்னு தெரியும் அதான் எல்லாரும் கிளம்பின பிறகு வந்தேன்.. அண்ட் நான் உன்னை பார்க்க வரும் முன்ன கிருஷ்ணன் கிட்ட இந்த ஃப்ளோர்க்கு யாரும் வரவிடாதன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.."

“...”

நம்ம கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு உனக்கு நியாபகமிருக்கா..?”

“....”

வளையல் வாங்க போயிட்டேனே தவிர எனக்கு உன்னோட சைஸ், பிடிச்ச கலர், டிசைன் எதுவுமே தெரியலை, அதேபோல தான் உனக்கும்.. உன்னோட வொர்க் லோட் எனக்கு புரியுது இல்லைன்னு சொல்லலை அதை பார்த்துட்டு இருந்தா நமக்கான நேரம் எப்போ தளிர்..?

“நம்ம ரிசெப்ஷன்க்கு இன்னும் எனக்கு நான் எதுவும் சூஸ் பண்ணலை உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போய் உனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கலாம்னு வைட் பண்ணிட்டிருக்கேன் புரியுதா உனக்கு..?"

"உதய் ப்ளீஸ் எதுக்கு கோபப்படறீங்க நாம.. ஐ மீன் நான் உங்ககிட்ட அப்புறம் பேசறேன் இப்போ.." என்று தயக்கத்தோடு பார்க்க,

"உன்னோட அகெடமிக்கு லேட் ஆகுது அதானே ஐ காட் இட்..! கிளம்பும்மா கிளம்பு" என்று உதய் எழுந்துகொள்ள தானும் எழுந்துவிட்டாள்.

"அப்படியில்ல ப்ளீஸ் உட்காருங்க..!! எனக்கு இன்னும் ஒன் ஹவர்ல  மீட்டிங் இருக்கு அட்டென்ட் பண்ணனும் அதான் அப்புறம் பொறுமையா பேசலாம்னு சொன்னேன்" என்றதும் சற்று தணிந்து அமர்ந்தவன்.

நீயும் உட்கார்” என்று அவள் அமர்ந்ததும், “அந்த அப்புறம் எப்போன்னு கொஞ்சம் நீயேதான் சொல்லேன்” என்று கேட்க பதிலின்றி அவனை பார்த்தாள்.

லிசென் தளிர் எனக்கும் ஷோரூம் சேல், நீயூ கார் பேப்பர் இஷ்யூஸ், கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் இன்டீரியர்னு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு அதையெல்லாம் மீறி தான் உனக்கான நேரம் ஒதுக்க ட்ரை பண்றேன் ஆனா நீ..? இது நம்மோட லைஃப் தளிர்..! வீ ஆர் கோயிங் டூ லீட் திஸ் ஃபார் தி ரெஸ்ட் ஆஃப் அவர் லைஃப் உனக்கு அந்த அக்கறை இல்லாம போனா எப்படி..?" என்று கேட்க அவளிடம் பதிலில்லை.

பின்னே அவன் கேட்பதை யோசிக்கும் நிலையில் தளிர் சுத்தமாக இல்லாத போது அவளும் என்னவென்று பதிலளிக்க..? இப்போதைக்கு அவள் நினைப்பெல்லாம் திருமணத்திற்கு பின் தன்னுடைய  வருமானம் இல்லாமல் தாயும் தங்கையும் எப்படி சமாளிப்பார்கள் என்பது தான்..

திருமணத்திற்கு பின் அவள் வருமானத்தை எதிர்பார்க்கும் நிலையில் நிச்சயம் உதய் இல்லை என்றாலும் இப்போது போலவே அவளன்னை மகளின் சம்பளத்தை வாங்கிகொள்வாரா என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்வியே..!

அம்பலவானன் குடும்பத்தோடு அவளை திருமணத்திற்கு கேட்டு வந்தார். இருவருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை எண்ணி இது சரிவருமா..? என்று தளிர் யோசித்திருந்த நிலையில் அன்னைக்கும் தங்கைக்கும் சம்மதம் என்றதில் அவளுக்கு பெரிதாக உதயாதித்தனை மறுக்க காரணமில்லை.

இருவரையும் தனியே பேசி முடிவை சொல்லுமாறு அம்பலவாணன் சொல்லவும் தயக்கத்தோடு தான் தளிர் அவன் பின்னே சென்றது.. ஆனால் ராஜியை போல எந்த பகட்டும் இல்லாமல் சகஜமாக நாற்காலியில் அமர்ந்தவன் அவளையும் அமர செய்து வெகு எதார்த்தமாக பேசிய உதயனை தளிருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

என்னதான் ராஜி அதிகளவு அலப்பறையை கூட்டியிருந்தாலும் அவையெல்லாம் உதயனின் எளிமை, தன்மையான பேச்சின் பின் தள்ளப்பட்டு தளிர் மனப்பூர்வமாக திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள்.

ஆனால் நிச்சயம் முடிந்த பின்னர்கூட இன்னும் எதையும் அவள் மனம்விட்டு உதய்யிடம் பேசவில்லை.., பேசவில்லை என்பதை விட பேசுமளவு அவளுக்கு நேரமில்லை என்பது தான் நிஜம்.

காலை நான்கு மணிக்கு தொடங்கும் அவள் நாள் அகடெமி வகுப்புகளுக்கு சென்று வந்த பின் உணவை முடித்துக்கொண்டு பள்ளி அதன்பின் மீண்டும் அகடெமியின் மாலை வகுப்புகள் பின்னர் டியூஷன் அதை முடித்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கான தயாரிப்புகளில் அமர்பவளுக்கு இதற்கிடையில் கரெக்ஷன், அவள் பாடங்கள், கேள்வித்தாள் தயாரிப்பு என்று ஆறஅமர மூச்சுவிட கூட நேரமின்றி இருப்பவளுக்கு கல்யாண கனவு காண்பதற்கு மட்டும் நேரம் எங்கிருக்கும்..?

தளிரின் சூழல்  புரிந்து அவளுக்கு தொந்தரவில்லாத நேரத்தில் உதய் அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துகொள்வாள். திருமணத்திற்கு பின் உதய் வேலையை தொடர சொல்லிவிட்ட போதும் டியூஷன் அகடெமியை புகுந்த வீட்டினர் ஏற்றுகொள்வது சற்று கடினமே..! அவளும் அவர்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. சொல்லபோனால் இவை இரண்டுமே அவர்களின் பணத்தேவைக்காக தளிர் செய்து கொண்டிருப்பது.

திருமணத்திற்கு பிறகும் அதை செய்வது நிச்சயம் அவள் திருமண வாழ்விற்கு ஒத்துவராது என்ற புரிதல் கொண்டிருப்பவளுக்கு குறைந்தபட்சம் திருமணத்திற்குள் ஒப்புக்கொண்ட பாடத்திட்டங்களை  நடத்தி முடித்து தேர்வு வைக்கும் முனைப்பில் இருக்கிறாள். திருமணம் முடிவானதில் இருந்தே அகடெமியில் கூடுதலாக  அதிகாலை  ஒரு வகுப்பு மாலையில்  இரண்டு மணி நேர வகுப்புகளையும் எடுத்து வருகிறாள்.

திருமணம் முடிந்த பிறகு தான் கணவனுடனான வாழ்க்கை குறித்து கனவு காண அவளுக்கு நேரம் கிட்டும், அதுவரை ஓட்டம் தான்.

அதனாலேயே உதய் விருப்பம் போல அவளால் எடுத்ததும் எங்கும் கிளம்பிவிட முடியவில்லை. இதை அவனிடம் ஆற அமர பேசுவதற்கு  கூட நேரமின்றி இருப்பவளுக்கு அவன் ஆதங்கம்  புரியாமல் இல்லை அதற்காக இப்படி பள்ளியில் வந்தமர்ந்து கேள்வி கேட்டால் அவள் என்னவென்று பதில் சொல்ல..?

"உதய் நான்.." என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே மேஜையில் இருகரங்களையும் கோர்த்து கொண்டு அவள்புறம் குனிந்தவன், "உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு" என்றான்.

"...."

"தளிர்"

"அப்படி எதுவும் ஸ்பெசிஃபிக்கா இல்லங்க"

"சரி என்ன பிடிக்காது..?"

"அப்படியும் எதுவுமில்ல எனக்கு எல்லாமே பிடிக்கும்" என்றவளின் வார்த்தைக்கு பின்னே இருக்கும் நிஜம் அவனுக்கு புரிய வாய்ப்பில்லை.

பின்னே ரகுபதி இருந்தவரை தளிருக்கும் பிடித்தங்கள் பல இருந்தது.. அவளுக்கு ஈரல் பிடிக்கும் என்பதற்காகவே ஒவ்வொரு ஞாயிறு காலையும் அவர்கள் வீட்டில் ஈரல் குழம்பு தான். அதேபோல அவளுக்கு தலைக்கறி பிடிக்காது என்பதால் அவளுக்காக தனியே வாங்கி வந்து தன் கையாலேயே மகளுக்கு சமைத்து கொடுப்பார் ரகுபதி.

ஆனால் அவர் தவறின பிறகு தளிருக்கு எதிலும் பிடித்தமற்று போனது. பிடித்தமற்று என்பதை விட தன் பிடித்தங்களை எல்லாம் அவள் மொத்தமாக ஒதுக்கிவிட்டு இருப்பதை ஏற்றுகொள்ள கற்றுகொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.

என்னதான் சீதா கணவர் இல்லாத குறையை தெரியாத வகையில் பிள்ளைகளை அரும்பாடுபட்டு வளர்த்தினாலும் ஒற்றை பெண்மணியின் சம்பளம் குடும்பத்தையும் நிர்வகித்து பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும் சமாளித்து இருபிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும்  தீர்க்கும் அளவிற்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அதை கண்டுகொண்ட தளிர் அன்னையின் வருமானத்தில் தன்னை பொருத்தி கொள்ள பழகிக்கொண்டாள். தந்தையின் கைகோர்த்து பல கடைகள் ஏறி இறங்கி அவளுக்கு பிடித்த ஃப்ராக்கை வாங்கி கொண்டு வருபவள் அன்னையோடு செல்லும் போது 'எனக்கு ட்ரெஸ் இருக்கு நீங்க தென்றலுக்கு பாருங்கம்மா' என்று பிடிவாதம் பிடிக்கும் தங்கைக்கு விட்டுகொடுத்து விடுவாள்.

தந்தை இல்லையென்றான பின்னர் அவள் விருப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி ஒருகட்டத்தில் காணாமலே போய்விட்டது. வயதிற்கே உரிய ஆசைகள் மேலோங்கினாலும் தேவைக்கு மட்டுமே செலவு செய்ய கற்றுகொண்டவள் அன்னையின் பாரம் உணர்ந்து அவருக்கு தோள் கொடுத்த பின்னர் தான் சீதாலக்ஷ்மிக்கு சிறிது ஓய்வு கிட்டியது.

இரு பெண் குழந்தைகளை தனியே விட்டு வேலைநேரத்திற்கும் அதிகபடியாக வேலை செய்து வந்தவர் தளிர் வேலைக்கு சென்ற பின்னரே அதையெல்லாம் விட்டுவிட்டு வேளையோடு வீடு வந்து சேர்வார்.

இரு பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு இரவு ஒன்பதற்கு வீடு திரும்புவது என்பது மீனாக்ஷி அவருடன் இல்லையென்றால் சீதாவிற்கும் சாத்தியபட்டிருக்காது.. ஆம் சீதா வேலைக்கு செல்ல குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் மீனாக்ஷி பார்த்து கொண்டார்.. ஆனால் நல்லவர்களை நெடுங்காலம் கடவுள் விட்டுவைப்பதில்லையோ என்ற சீதாவின் எண்ணம் கடந்த வருடம் மெய்யாகி போனதில் மீனாக்ஷி இல்லாத நகர்விற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள சில மாதங்கள் பிடித்தது அன்னை மற்றும் மகள்களுக்கு.

"பிடிக்காததுன்னு எதுவுமே இல்லையா..?"

"இல்லைங்க"

"அப்போ என்னையும் பிடிக்கும் அப்படிதானே..?" என்றவன் கேள்விக்கு உடனே "ஆம்" என்று தளிர் சொல்லவும்.,

"அப்புறம் ஏன் இப்படி இருக்க..? சூன் வீ ஆர் கோயிங் டூ பி கப்பிள்ஸ் தளிர்! ஆனா நம்ம நிச்சயம் முடிஞ்சு இதுவரை நாம எத்தனை முறை பேசினோம்னு விரல் விட்டு எண்ணிடலாம் .. நானும் உன்னை மீட் பண்ண எத்தனையோ முறை ட்ரை பண்ணிட்டேன், எனக்கு உன்னோட கமிட்மென்ட்ஸ் புரியறதால தான் பெருசா எதுவும் எதிர்பார்க்கலை அதுக்காக தினம் ஒரு பத்து நிமிஷம் என்னோட பேச முடியாதா..? அட்லீஸ்ட் சண்டேலயாவது எனக்கான நேரம் ஒதுக்குவன்னு பார்த்தா அதுவும் இல்லை.. சரி வாங்கிட்டு வந்த வளையலை போட்டுவிட கையை கேட்டா இவ்ளோ யோசிக்கிற..?"

நாம இரண்டு பெரும் காலம் முழுக்க கை கோர்த்து  போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு ஆனா நான் ஸ்கூல்ல வச்சு உன்னை என்ன பண்ணிடுவேன்னு நீ இப்படி ரியாக்ட் பண்ற..? டூ யூ தின்க் இட்ஸ் ரைட்..?” என்று கேட்க பதிலில்லை.

பின்னே பள்ளியில் வைத்து அவன் கையை கேட்கவும் ஒருநொடி பின்னிழுத்து கொண்டாளே தவிர அவளுக்குமே அது அபத்தம் என்று புரிய என்ன பதில் சொல்வது என்று மௌனித்திருந்தாள்.

ஸோ இப்பவும் நீ பேச மாட்ட..? என்னை நீ என்ன நினைச்சுட்டு இருக்க..?" என்று கோபமாக எழுந்துகொண்டவன்,

உன்னோட நினைப்பு என்னன்னு தெரியாது பட் இங்க ஸ்கூல்ல வச்சு.." என்று ஒருகணம் தன் பேச்சை நிறுத்தியவன் ஆற்றாமையுடன் கண்களை மூடி திறந்து,

"ஐ ஆம் நாட் தட் சீப்!” என்று உதய் முடிக்கும் முன்னமே.,

ப்ளீஸ் ஸ்டாப் உதய்! நான் அப்படி எதுவும் நினைக்கலை அது ஏதோ ஞாபகத்துல என்னையும் அறியாம செய்துட்டேன்.., இட்ஸ் நாட் இன்டென்ஷனல்! ப்ளீஸ் ஐம் ஸாரி அகைன் மன்னிச்சிடுங்க..” என்று தளிர் தவித்து நிற்க,

"அதேதான் நானும் சொல்றேன் உன்னோட ஞாபகத்துல என்னை தவிர மத்ததெல்லாம் தான் இருக்கு.. ஏன்டி உன்னை ஆசைப்பட்டு கட்டிக்க போற என்னை ஒரு நிமிஷம்கூட உனக்கு தேட தோணலையா..? ஆனா எனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் உன்னோட ஞாபகத்தை ஒதுக்க முடியலை ஏதோ ஒருவகையில என்னை நீ டிஸ்டர்ப் பண்ற தளிர்.." என்று அவன் பேசிக்கொண்டே செல்ல தளிரிடம் மௌனம்.

"...."

"ஏதாவது பேசு தளிர்"

"நீங்க தப்பா எடுக்காட்டி நான் நாளைக்கு பேசவா..? உங்களுக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லையே.."

"உன் இஷ்டம்" என்றவன் வேறெதுவும் பேசாமல் அமைதியாக கிளம்ப ஆழ்ந்த மூச்செடுத்து தளர்ந்து அமர்ந்துவிட்டாள்.

சிலநொடிகள் அவன் சென்ற திசையையே பார்த்திருந்தவள் பின் மேஜையில் இருகரங்களையும் கோர்த்து தலையை சாய்க்க அவள் பார்வையில் விழுந்தது உதய் வாங்கிய வளையல்கள்.

இதழ் மடித்து கலங்கிய விழிகளுடன்  அன்னிச்சையாய் நீண்ட அவள் கரம் வளையல்களை எடுத்து அவன் மனதறிந்தறிந்தார் போல வருடி கொடுத்தது. தளிர்க்கு அழைப்பு வரவும் அதை மீண்டும் பெட்டியில் அடுக்கி பத்திரபடுத்திவிட்டு மீட்டிங்கிற்கு சென்றாள்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1