வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 8

 

ஒரு முடிவோடு கைபேசியை திறந்து ‘ஸடன்னா லீவ் எடுக்க முடியாது உதய்.. நாளைக்கு இல்லைனாலும் இன்னொரு நாள் யாரையாவது ஆல்டர் பண்ண ட்ரை பண்றேன்..’ என்று அனுப்பிட மறுபுறம் அவள் மெசேஜை பார்த்தவன் 'போடி' என்பதாக அமர்ந்திருக்க அடுத்த குறுஞ்செய்தி வந்தது..

"உங்களுக்கு எந்த இடம் பிடிக்குமோ அங்கேயே நாம போகலாம்" என்று புன்னகைக்கும் பொம்மையையும் சேர்த்து அனுப்பியிருந்தாள்.

அதில் அவன் கோபம் சற்று குறைந்தாலும் விடாமல் இழுத்து வைத்து கொண்டவன்.. ‘எதுக்கு போகணும்..?’ என்று சற்று கோபமாகவே வாய்ஸ் நோட் அனுப்பினான்.

தளிர் திறந்து பார்த்ததற்கான அறிகுறி தெரிந்த இருநிமிடங்களுக்கு பின்பும் எந்த பதிலும் இல்லாது போனதில் கடுப்பானவன், ‘போடி பெருசா மெசேஜ் பண்ண வந்துட்டா’ என்று கைபேசியை மெத்தையில் எரிய மீண்டும் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டபோதும் உதய் எடுக்கவே இல்லை.

சில நொடிகளுக்கு பின் மீண்டும் ஒரு மெசேஜ் அதில் தேன் மற்றும் நிலவின் எமொஜியை சேர்த்து அனுப்பியிருந்தாள்...இப்போதும் அவன் எதையும் திறந்து பார்க்காமல் இருக்க தளிர் உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள் ஆனால் மறுபுறம் அவளது தொடர் அழைப்புகள் எதுவும்  ஏற்கபடவே இல்லை.

என்னக்கா பேப்பர் பண்டில் எடுத்து வச்சுட்டு ஃபோனை பார்த்துட்டு இருக்க நான் ஹெல்ப் பண்ணட்டா..?” என்று தென்றல் பேப்பர் கட்டை பிரிக்கவும்,

"ஒருநிமிஷம் உன் ஃபோன் கொடு" என்று வாங்கிக்கொண்டவள் "ஏன்க்கா உன்னோடதுல பேலன்ஸ் இல்லையா..?" என்ற தங்கையின் கேள்விக்கு பதிலளிக்காது மற்றொரு அறைக்குள் நுழைந்து உதய்க்கு அழைத்தாள்.

முதல் அழைப்பு முடியும் முன்னமே அழைப்பை ஏற்றவன் "சொல்லு ப்ரீஸீ சாப்ட்டியா..? தூங்காம  என்ன இந்நேரத்துக்கு ஃபோன்..?" என்றான்.

"நான் தளிர் பேசுறேன்" என்றதும் மறுப்புறம் கனத்த அமைதி.

"உதய் கேட்குதுங்களா..?" என்றிட மெளனமாக கைபேசியை பார்த்திருந்தான்.

"உதய் நம்மோட ஹனிமூனுக்கு எனக்கு எந்த இடமா இருந்தாலும் ஓகே"

"இதை சொல்ல இவ்வளவு யோசனையா..? உனக்கு என்கிட்டே என்ன தயக்கம் தளிர் எதுவா இருந்தாலும் சொல்லு நான் புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.." என்று சற்று காட்டமாகவே கேட்கவும்,

"இல்ல அப்படி எதுவுமில்ல.." என்றவளுக்கு அவனை போல இயல்பாக பேச்சு வரவில்லை. பேச எத்தனையோ இருந்தாலும் அவளிருக்கும் மனநிலையில் அவையெல்லாம் தொண்டையோடு அமிழ்ந்து போனது.

"வேற என்ன தான்டி பிரச்சனை உனக்கு..? லிசன் தளிர் அகடெமில வேணும்னா நான் பேசுறேன் நீ அதிக ஸ்ட்ரெஸ் எடுக்காத அதுவும் கல்யாணத்தை பக்கம் வச்சிக்கிட்டு.. அண்ட் தேர் ஈஸ் எ ஆல்டர்னேட்டிவ் ஆப்ஷன் ஆல்வேஸ்.."

"இல்லைங்க அப்படி எதுவுமில்லை"

"அப்படியா..? நீ எனக்கு  கால் பண்ணி இந்த நொடியோட பதினேழு நிமிஷம் முடிஞ்சது.. இதுவரை ஒன்னு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன இல்லை உனக்கு வேண்டிய விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகிட்ட அவ்ளோதான்.. இன்னும் நீ நான் சாப்ட்டேனான்னு கூட கேட்கலை ஏன் தளிர் இப்படி..? உனக்கு நிஜமாவே என்னை கேட்கணும்னு தோணலையாடி..?" என்று  குரல் கரகரக்க கேட்டவன் அவள் பதில் சொல்லும்முன்  கைபேசியை அணைத்துவிட்டான்.

உதய் அழைப்பை துண்டிக்கவும் சிலகணங்கள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு தந்தையை அதிகம் தேட செய்தது.. வலி கொண்ட விழிகளோடு அதே அறையில் நான்கு சட்டத்திற்குள் அடைக்கபட்டிருந்த ரகுபதியின் முகத்தையே பார்த்தவாறு மெளனமாக அமர்ந்துவிட்டாள்.

'நீங்க ஏன்ப்பா எங்களை விட்டு போனீங்க..? அப்படி என்ன அவசரம்..?' என்று மனதார தந்தையை கேட்டவளின் கண்களில் மெல்ல நீர் திரள “எனக்கு என்னைவிட அம்மாவை நினைச்சு தான்ப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு தென்றல் புரியாம பேசிட்டு இருக்கா.. என்னோட முகூர்த்த புடவையை தன்னால வாங்க முடியாம போனாலும் அது ஒரு குறையா தெரியாம இருக்கவும் யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னும் தான் அம்மா பெரிம்மா பெரிப்பாவை எதிர்பார்க்கிறாங்க...'

'அம்மா பெருசா எங்ககிட்ட சொல்லலைனாலும் என்னோட கல்யாணம் அம்மாவை கஷ்டப்படுத்துறது எனக்கு கஷ்டமா இருக்குப்பா.. கல்யாணம் நல்லபடியா நடந்து முடியனுங்கிறது தவிர வேற எதையும் யோசிக்க முடியுமான்னு தெரியலை... அவரோட ஆசை புரிஞ்சாலும் எனக்கு நிஜமா.. நான், ப்ச் என்னை அறியாமலே அவரை கோபபடுத்திட்டு இருக்கேன்.. நீங்க அம்மாகூட இருக்கீங்கன்னு அவங்க ரொம்ப நம்பறாங்க ஆனாலும் ஏன்ப்பா இப்படி அவங்களை கஷ்டப்படவிடறீங்க..? ப்ளீஸ் ஏதாவது செய்ங்க..' என்றவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது..

இத்தனை நாள் எனக்கு பெருசா தோணலைன்னாலும் இப்போ அதிகமாவே நீங்க என்கூட இருக்கணும் போல இருக்குப்பா.." என்று தன் மனதில் இருப்பதை எல்லாம் தந்தையிடம் கொட்டி ஒருமூச்சு அழுது முடித்தவள் மெல்ல தன்னை மீட்டுக்கொண்டு வெளியில் வர அடுத்த நாள் சமையலுக்கான முன்தயாரிப்புகளை முடித்துவிட்டு அவளுக்காக காத்திருந்த சீதா, "மாப்பிள்ளை என்ன சொன்னார் அம்மூ" என்று சாதாரணமாக கேட்டிட அவளும் முடிந்ததை கிளறாமல் பதில் சொன்னாள்.

"ஒண்ணுமில்லம்மா எப்போயிருந்து லீவ் போடட்டும்ன்னு கேட்டேன் என் விருப்பபடி போட்டுக்க சொல்லிட்டார்.. நீங்க சொல்லுங்கம்மா எத்தனை நாள் எடுக்கட்டும்..?"

"மாப்பிள்ளை வீட்டு பழக்கமெல்லாம் உனக்கு பழகனுமில்லையா கல்யாணத்துக்கு ஒருவாரத்துல இருந்து அதன்பிறகு ஒரு இருபது நாளாவது எடுத்துக்கோ தளிர்.."

'அவ்ளோநாளா..?' என்று ஒருநொடி திகைத்தாலும், "சரிம்மா ஆனா அகெடமி க்ளாசஸ் மட்டும் போர்ஷன்ஸ் முடிக்கணும் அதனால் போயிட்டு வந்துடட்டுமா..?"

அகடெமியா..? அது இங்கிருந்து ரொம்ப தூரமாச்சேடா கல்யாணத்தை கிட்ட வச்சுகிட்டு  அவ்ளோதூரம் போயிட்டு வரது நல்லா இருக்காது, ஸ்கூல் பக்கத்துல இருக்கிறதால பிரச்சனை இல்ல ஆனா..” என்றவரிடம்,

"ம்மா சொல்ல மறந்துட்டேனே மாமா இன்னைக்கு என்னை கூப்பிட்டு பேசினார்"

"அண்ணனா..? என்னம்மா சொன்னார்"

"உங்ககிட்ட ஏற்கனவே நமக்கு கார் அனுப்புறது பற்றி பேசினாராமே நீங்க ஓகே சொல்லிட்டதால நாளைக்கு டிரைவரோட கார் இங்க வந்துடும் கூடவே ஒரு அம்மாவை நமக்கு துணையா அனுப்பி வைக்கிறேன் சொன்னாரும்மா, நான் அகெடமிக்கு கார்ல போயிட்டு வந்துடட்டுமா..? உங்களுக்கு ஓகேவா..?"

"ஆமாமா அண்ணன் ஏற்கனவே பேசினார்.. நான்தான் மறந்தே போயிட்டேன் இதுவும் நல்ல யோசனை தான்.. சரிம்மா உனக்கு போர்ஷன்ஸ் முடிச்சு கொடுக்க எவ்ளோ நாள் தேவைப்படும்..?"

"ம்மா எப்படியும் கல்யாணத்துக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி முடிச்சுட்டு ரிலீவ் ஆகிடுவேன், நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல்ல லீவ் அப்பளை பண்ணிடுறேன்"

"சரிடா நீ போய் படு நேரமாச்சு" என்றதும் தன்னறைக்கு வந்தவள் அங்கே தென்றல் மேஜையில் தலை கவிழ்த்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிவிட்டிருக்க அவளை எழுப்பி படுக்க வைத்தவள் தானும் அவளருகே படுத்த பலநிமிடங்களுக்கு மனமெங்கும் உதய்யின் முகமே வியாபிக்க அவனை மீறி தளிரை தழுவ முடியாது உறக்கம் கண்ணாமூச்சி ஆடியது.

கைபேசியை எடுத்து வாட்ஸப்பை திறக்க உதய் இன்னும் ஆன்லைனில் இருப்பதாக காட்டவும் உடனே அவனுக்கு செய்தி அனுப்ப தொடங்கினாள்.

*************

அன்று அதிகாலையே எழுந்துகொண்ட சீதாலக்ஷ்மி மகளுக்கு முகூர்த்த புடவை எடுக்க இருப்பதால் பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தார். வழக்கமாக பெண்ணுக்கு புடவை எடுக்க பெருந்திரளான கூட்டமே செல்லும் இங்கு இளந்தளிருக்கு புடவை எடுக்க கஜபதியின் குடும்பம் வர மறுத்துவிட்ட நிலையில் மீனாட்சி வழியில் தூரத்து சொந்தத்தில் இருக்கும் இரு பெண்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் பழக்கமான இருவர் என்று மொத்தம் ஏழு பேர் செல்வதாக திட்டமிட்டிருந்தார்.

அம்மூ சீக்கிரம் எந்திரி” என்று குரல் கொடுக்கையிலே தலையில் கட்டிய துண்டுடன் வெளியில் வந்தாள் இளந்தளிர்.

"இன்னும் புடவை மாத்தலையா..? வழக்கமா கட்டுற மாதிரி காட்டன் புடவை வேண்டாம் தளிர் பட்டுபுடவை கட்டிட்டு உனக்கு எடுத்து வைச்சிருக்க நகை.." என்று அவர் பேசிக்கொண்டே போக..,

"ம்மா எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு" என்றாள் தளிர்..

"என்ன சொல்ற..? உனக்கு இன்னும் இரண்டு நாள் இருந்ததே எப்படி இன்னைக்கு..?”

"ம்மா அது போன மாச தேதி இந்த மாசம் சரியாதான் வந்திருக்கு, நீங்க என்கிட்டே  புடவை எடுக்க நாள் கேட்டபோது நான் சரியான டேட் தான் கொடுத்தேன்  அத்தைக்கு உடம்பு முடியாததால தள்ளிபோச்சு இப்போ என்னம்மா செய்யறது..?” என்று கேட்க சீதாவிற்குமே என்ன சொல்வது என்று புரியாத நிலை.

ம்மா சொல்லுங்க..?"

"ப்ச் என்ன தளிர் இது முன்னாடியே சொல்லமாட்டியா..? நமக்கு நேரமில்ல உனக்கு பீரியட்ஸ் முடிஞ்ச பிறகு நாளில்லைஇதுக்கு மேல தள்ளிபோட முடியாது.., கல்யாண பொண்ணு நீ இல்லாம புடவை எடுக்க போனா நல்லாவா இருக்கும்? இதனால சம்பந்தி அம்மா ஏதாவது நினைச்சுக்க போறாங்க.." என்றவருக்கு ஜெகாவை விட ராஜியை குறித்த அச்சமே மேலோங்கியது.

"நான் என்னம்மா செய்யட்டும்..? இது ஒன்னும் என் கையில இல்லையே..?”

ப்ச் நீ மாத்திரையாவது போட்டிருக்கலாம்டா .."

"ம்மா அதுக்கு நான் பத்து நாள் முன்னாடியிருந்தே எடுக்கணும், ஆனா நானுமே இப்படியாகும்னு எதிர்பார்க்கல.." என்று தவித்துபோனாள்.

"உனக்கு தெரியாதா ஒவ்வொரு பொண்ணுக்கும் கூறைப்புடவை அவ மனசுபடி அமையனும்டா.. உன்னை கூட்டிட்டு போய் தள்ளி நிறுத்தவும் முடியாது சாமிக்கு வச்சு படைக்கணும் தளிர்.. யாராவது ஏதாவது சொல்லுவாங்களோன்னு இருக்கு" என்று சீதா படபடக்க..,

"உங்களுக்கு அப்படி தோணினா நான் வரலம்மா.. நீங்க எனக்காக எடுத்துட்டு வாங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.." என்று தளிர் எளிதாக கூறிவிட்டாலும் அவள் மனமோ குறைந்தபட்சம் இன்று புடவைக்கடையில் உதய்யோடு செலவழிக்க இருந்த நிமிடங்களும் கைநழுவி போகிறதே என்ற ஆற்றாமையில் மருகியது.

மறுபுறம் சீதாவிற்கும் மகளிடம் கேட்டு முடிவு செய்த நாட்கள் தள்ளிபோய் இப்போது மகள் வரமுடியாமல் போனதில் அத்தனை எளிதாக மனம் ஆறவில்லை.

"உனக்கு என்ன நிறத்துல புடவை வேணும் என்ன டிசைன் வேணும் சொல்லு அங்கிருந்து ஃபோட்டோ புடிச்சு அனுப்புறோம்" என்றவர் உடனே அம்பலவாணனுக்கு அழைத்து ஜெகதீஸ்வரியிடம் கொடுக்க சொல்ல அவரோ குளியலறையில் இருந்தார்.. வர தாமதமாகும் என்னவென்று சொல்ல கேட்டவரிடம் விஷயத்தை மேலோட்டமாக சொன்னார் சீதாலக்ஷ்மி.

இதுல என்னம்மா இருக்கு அங்க கடைக்கு வரும் முன்ன எத்தனையோ பேர் கைபட்டு தான் நமக்கு புடவை வந்து சேருது..  என் மருமகள் கட்டிக்க போற புடவையில அவளோட கைபட்டா என்னவாகிடும்..? எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் கண்டதையும் யோசிக்காம தளிரை கூட்டிட்டு வா பிடிச்சதை எடுக்கட்டும்” என்றார் ஆனால் சீதாவிற்கு தான் மனம் கேட்கவில்லை,

இருக்கட்டும் ண்ணா அவளுக்கு எந்த பிரச்னையும் இல்ல... எங்ககிட்ட கலர் டிசைன் சொல்லியிருக்கா அதோட வழக்கமா நானும் தென்றலும் தான் அவளுக்கு தேர்ந்தெடுப்போம் பார்த்துக்கலாம்" என்றவர் தென்றல் கிளம்பி வரவும் மற்ற பெண்களையும் கிளப்பிக்கொண்டு அம்பலவாணன் அனுப்பியிருந்த காரில் கிளம்பி சென்றார்.

அம்பலவாணன் ஜெகதீஷ்வரி உட்பட அவர் குடும்பத்தினர் அனைவரும் அங்கே குழுமியிருக்க கடையினுள் நுழைந்த  சீதாவையும் மற்றவர்களையும் கண்டதும்  வாயிலுக்கே சென்று “வாங்கம்மா.. வாங்க..” என்று புன்னகையோடு வரவேற்ற அம்பலவாணன் "எல்லாரும் சாப்ட்டீங்களா..?" என்று நலன் விசாரித்து அருகேயிருந்த சுஜிதாவிடம், “எல்லாரையும் கூட்டிட்டு போடா சுஜி நான் வரேன்” என்றார்.

வாங்கத்தை.. வா தென்றல்.. தளிர்க்கு இப்போ பரவாலயா..? கூட்டிட்டு வந்திருக்கலாமேடா..” என்றவாறே அனைவரையும் மேல் தளத்திருக்கு அழைத்து செல்ல, இங்கே சீதா கடை முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்த அம்பலவாணனிடம் வந்தவர், “அண்ணா ஒரு நிமிஷம்” என்றழைத்தார்.

"சொல்லும்மா சீதா.." என்றவர் தன் எதிரே இருந்தவரிடம், "ஹான் சொல்ல மறந்துட்டேனே தனசேகர் இவங்க தான் என்னோட சம்பந்தியம்மா சீதாலக்ஷ்மி.. நீங்க நிச்சயத்துக்கு வராததால பார்த்திருக்க வாய்ப்பில்லை" என்று அவரை   அறிமுகபடுத்தவும்.

"வணக்கம் ம்மா  சாரோட மருமகள் என்பதாலேயே எல்லாம் லேட்டஸ்ட் கலெக்ஷன் கொண்டு வந்திருக்கோம் தயங்காம உங்க பெண் மனசுக்கு பிடிச்ச புடவையை எடுக்க சொல்லுங்க... எவ்ளோ நேரமானாலும் பரவால்ல அதிக வேலை வாங்கறதா நினைக்க வேண்டாம்.." என்றவருக்கு புன்னகையோடு தலையசைத்த சீதா,

"அண்ணா மாப்பிள்ளைக்கு பட்டுவேஷ்டி சட்டைக்கு பணம்" என்று ஐம்பதாயிரத்தை கொடுத்து,

இது போதுமாண்ணா இன்னும் தேவைன்னா சொல்லுங்க..?” என்று கேட்க  ஏற்கனவே நிச்சயத்தின் போதே தன் சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் செலவை கொடுத்துவிட்ட சீதாவின் உணர்வை  மதித்த அம்பலவாணன்,

இதுவே அதிகம் சீதா ஆம்பளை பையனுக்கு அதிகபட்சம் எவ்வளவு ஆகிடும்..? என்னதான் கோடி கோடியா பிசினஸ் பண்ணினாலும் என் பையன் எப்பவும் ப்ராண்டடா எதுவுமே யூஸ் பண்ணமாட்டான் ரொம்ப சிம்பிள்... பட்டு வேஷ்டி சட்டையை அதிகபட்சமா பத்தாயிரத்துக்குள்ள முடிஞ்சிடுவான் பாரு.."

"அது நீங்க சொல்லித்தான் தெரியனுமா முதல்முறை வீட்டுக்கு வந்தப்போதே தெரிஞ்சது.. மாப்பிள்ளை எளிமையா இருக்கலாம் ஆனா அவரோட மனசு ரொம்ப உசத்தியாச்சே ண்ணா அதுக்கு எவ்வளவும் செய்யலாம்.. நைட் மாப்பிள்ளைக்கு கோட் சூட்  எடுத்து கொடுக்கணும் அதுக்கு எவ்வளவுன்னு தெரியலை நீங்க ஆதிகமாச்சுன்னா என்கிட்ட தவறாம கேளுங்க.." என்றிட

"உன் மாப்பிள்ளையை விட்டு கொடுத்துடமாட்டியே..?" என்று சிரிப்போடு கேட்டவருக்கும் தெரியும் தன் கணவர் இருந்திருந்தால் பெண்களின் திருமண வைபவத்தை எப்படி எடுத்து செய்வாரோ அதற்கு குறையாமல் செய்துவிட துடிக்கும் சீதாவின் எண்ணம்..!

அதன் காரணமாகவே பெரிதாக அவர்களின் நிலையில் சுட்டிக்காட்டி சீதாவை மறுக்காதவர் நிச்சயத்தை அவருடைய பார்ட்டி ஹாலில் குறைந்த பொருட்செலவில்  குடும்ப நபர்களையும் சில நெருக்கமானவர்களையும் கொண்டு முடித்துவிட்டார். ஆனால் திருமணம் முழுக்க அவர் செலவு என்பதாலும் அவர்கள் குடும்பத்தில் கடைசி திருமணம் என்பதாலும் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டிருக்கிறார்.

இருமகள்களுக்கும் எந்த குறையும் இல்லாமல் ஆடம்பரமாக திருமணம் செய்தவர் ஒரே மகனை மட்டும் விட்டுவிடவா போகிறார்..? மிக மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் உதயாதித்தன்-இளந்தளிரின் திருமண பட்ஜெட் சில கோடிகளில்.. மருமகளுக்கு அவர் எடுத்திருக்கும் நகைகள் பல லட்சம் மதிப்பு கொண்டிருக்க இப்போது எடுக்கவிருக்கும் முகூர்த்த புடவையும் சில லட்சங்களில், ஆனாலும் மருமகனுக்கு செய்ய விரும்பும் சீதாவின் தன்மானத்தை மதித்து பணத்தை பெற்றுகொண்டார்.

"என் அண்ணன் பையனை எப்படி விட்டுகொடுப்பேன்" என்று சீதாவும் குறையாத சிரிப்போடு சொல்ல,  அதை ஆமோதித்த அம்பலவாணன் சீதாவிற்கும் இடையிலான பந்தம் எப்போது அம்பலவாணன் சீதாவை சந்திக்க அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று பேசினாரோ அப்போதிருந்தே தொடங்கிவிட்டது.

ஆம் உதயாதித்தன் தளிரை பிடித்திருக்கிறது என்றதுமே நேரடியாக பெண் கேட்டு சென்றுவிடவில்லை அவர். தளிரின் குடும்ப பின்னணி தந்தை இல்லாதது எல்லாமே தெரிந்தவர் என்பதால் பெண் பார்ப்பதற்கு முந்தைய நாள் சீதாவை அவர் வேலை செய்யும் இடத்தில் சந்தித்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.

"உங்க பெண் என்கிட்டே வேலை செய்திருந்தாலும் உங்களுக்கு என்னை பற்றி பெருசா தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்று தன் பேச்சை தொடங்கியவர் குடும்பம்தொழில் பற்றி சொல்லிவிட்டு,

"இதெல்லாம் பார்த்து நம்ம தகுதிக்கு மீறின இடத்துல எப்படி பெண் கொடுக்கன்னு பயந்துடாதீங்கம்மா உங்களை போல நாங்களும் மனுஷங்க தான்..! தளிரை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்களும் வரன் பார்த்துட்டு இருக்கீங்கன்னு தெரியும் அதுக்காக எதுவும் கட்டாயமில்லை.."

"என் பையனை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் பேசிப்பாருங்க பிடிச்சிருந்தா மட்டும் சம்மதம் சொல்லுங்க அடுத்து என்னன்னு முடிவு செய்யலாம் இல்ல உங்களுக்கு நேரம் தேவைன்னா எடுத்துக்கோங்க யோசிச்சு முடிவு சொல்லுங்க" என்றதில் சீதாதான் என்ன பதிலளிப்பது என்று புரியாமல் நின்றுவிட்டார்.

அதை கண்ட அம்பலவாணன், “என்னம்மா யோசிக்கிற யாரோவா இருந்தா தான் பயம் வரும் என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோம்மா பயமும் இருக்காது எந்த அந்தஸ்த்து பேதமும் தெரியாது.. இன்னைக்கு உனக்கு வாக்கு கொடுக்குறேன் என் வீட்டுக்கு வரப்போற என் தங்கச்சி பெண்ணுக்கு நான் பொறுப்பு..!! தளிரை இத்தனை வருஷமா பார்த்துட்டு இருக்கேன் ஒருவேளை சொன்னதை செய்வேனோன்னு உனக்கு சந்தேகம் இருந்தா என்னை பற்றி  என் வீட்டு மகாலக்ஷ்மியையே கேட்டு தெரிஞ்சுக்க.."

"என் பையன் என்னை மாதிரி தான் அவனுக்கு தளிரோட குணம் ரொம்ப பிடிச்சது  நம்பி பெண்ணை கொடு சீதா  நிச்சயம் தளிரை அவன் நல்லபடியா பார்த்துப்பான்  உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று தைரியமூட்டிய அம்பலவாணின் வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மையை உதயாதித்தனின் வருகையில் அவன் பண்பில் கண்டு கொண்டவருக்கு அந்தஸ்த்து பேதத்தை காரணம் காட்டி நல்ல மணமகனை இழக்க விருப்பமில்லை.

என்னதான் ராஜியும் ஜெகாவும் அவர்கள் வீட்டில் பட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தாலும்  அண்ணாமலை, அன்னபூரணி, சுஜிதா. நிவிதா என்று அத்தனை பேருமே சொந்த உறவு போல பழகியதில் சீதாவின் அச்சம் முழுதாக அகல எங்கிருந்தாலும் தன் மகள் சிறப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தார்.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1