வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - EPILOGUE

 மேலும் ஐந்து வருடங்களுக்கு பிறகு… 

சஞ்சனா தங்களின் கரம் வந்து சேர்ந்த மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்தவர்களுக்கு அடுத்த குழந்தையை பற்றி யோசிக்கும் அவகாசம் கூட இல்லாமல் போனது அவளின் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து ரசித்திருந்ததில்.

‘அது எந்தளவு என்றால்..’ சஞ்சனாவாக தனக்கும் தன் தோழி வினுவை போலவே ஒரு தம்பி வேண்டும் என்று கேட்கும் வரை. 

வாழாமல் போன வாழ்வை அபய், நயனியோடு அத்தனை அனுபவித்து ரசித்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் சஞ்சனா.

உருவத்தில் இருவருக்கும் வேறுபாடு இருந்தாலும் உள்ளத்தில் இரண்டு சஞ்சனாவிற்குமே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. 

அதில் மகிழ்ச்சியும் கண்ணீரும் ஒரு சேர முகிழ்க்கும் பெற்றவர்களுக்கு. 

அவர்களுக்கு இது வரமா? சாபமா? என்று மற்றவர்கள் நினைக்க சஞ்சுவின் வரவு நிச்சயம் அவர்களுக்கு வரம் தான். 

தாய் தந்தையின் கண்ணீரை என்றுமே சஞ்சுவால் சகித்து கொள்ளவே முடியாது. “நான் தான் உங்க கூட இருக்கேனே?! அப்புறம் யாரை  நினைச்சு அழுறீங்க?” என்று ஒருநாள் மகள் கேட்கவும் தான் தங்களை உணர்ந்தனர்.

“ம்மா எப்பவுமே லிவ் தி மொமென்ட்ன்னு நீதானம்மா சொல்லுவ! இப்போ நான் உங்க கூட இருக்கேன் அந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல் எதை நினைச்சு அழுற?” என்ற மகளின் மழலை பேச்சில் அதிர்ந்து போனாள் நயனி. 

‘அபய்யோடு சேர முடியாதோ?!’ என்ற தவிப்பிலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த சஞ்சனாவை தேற்றி ‘லிவ் தி மொமெண்ட்ஸ்’ என்று சொல்லி அன்று அபய்யோடு வெளியில் சென்றது, சேர்ந்து உணவு அருந்தியது, பேசியது சிரித்ததை மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்க சொல்லி அவளை தேற்றும் நயனியின் வார்த்தைகளை இப்போது அவளிடமே திருப்பி படித்திருந்தாள் அவள் மகள். 

சில நேரம் இவர்கள் அவளைப் பெற்றார்களா? அல்லது இவள் அவர்களை பெற்றவளா? என்று கேட்கும் அளவிற்கு தாய் தந்தை இருவரையும் அத்தனை பாசத்தோடு பார்த்துக் கொள்பவள். 

நயனியின் மாதவிலக்கு நாட்களில் எப்படி உடனிருந்து அவளை அரவணைப்பாளோ அது போலவே இப்போதும் மகள் காட்டும் கனிவும் அனுசரணையும் சஞ்சனாவை அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

முதலில் அவளின் அதீதங்களை உணர்ந்து உள்வாங்க பெரிதும் திணறி போனவர்கள் இப்போது மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் அளவிற்கு மனதளவில் பக்குவப்பட்டிருந்தனர்.

அபய் நயனிக்கு சஞ்சுவின் வரவு வரம் என்றால் சக்கரவர்த்திக்கு ஒரு வகையில் சாபம் என்று சொல்ல வேண்டும். 

எத்தனை தூரம் அவளை எதிர்த்தாரோ அந்தளவு இப்போது சஞ்சனாவோடு தான் அவரின் மீதி வாழ்க்கை என்று முடிவாகி இருக்கிறதே!!

ஆனாலும் மனிதர் சில நேரம் கலங்கி ஒடுங்கி போனாலும் பேத்தி மீது தன் ஒட்டு மொத்த பாசத்தையும் காண்பித்து கொண்டிருக்கிறார். 

சஞ்சனா பள்ளிக்கு கிளம்புகிறாள் என்றால் வீடு இரண்டு பட்டு போகும் அளவிற்கு இருக்கும் சக்கரவர்த்தியின் செயல்கள். இதோ இப்போதும் மணி ஏழரையை நெருங்கி கொண்டிருப்பதை கண்டவர், 

“குட்டிமாவோட ஷூ எங்க வச்ச? சாக்ஸ் தோய்க்க சொன்னேனே?! இது தோய்ச்சது தானே! நேத்து கட்லெட் வேணும்னு கேட்டாங்களே முடிச்சுடுச்சா?” என்று மனைவியை கேள்விகளால் துளைத்தெடுத்து விரட்டி கொண்டிருந்தார். 

“போட்டு வச்ச டியை குடிக்க கூட நேரமில்லாம உங்க பேத்திக்கு கட்லெட் செய்துட்டு இருக்கிறதை பார்க்கறீங்க தானே?! அப்புறம் என்ன கேள்வி?” என்று முறைத்தார் நிர்மலா. 

“அண்ணா எல்லாமே எடுத்து வச்சாச்சு நீங்க கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன்” என்று தனலட்சுமி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்தார். 

“ஆனாலும் உங்க அண்ணன் இவ்ளோ பாசக்கரரா இருக்க கூடாது தனா..” என்றவர் “நாளையில் இருந்து கூக்கிங் கிளாஸ் சேர்ந்து உங்க பேத்திக்கு பிடிச்சதை நீங்களே செய்து கொடுங்க” என்றார். 

“சீனி தாத்தா..” என்ற பேத்தியின் குரலில் சமையலறையில் இருந்து ஹாலுக்கு ஓடி வந்தார் மனிதர். 

ஸ்கூல் யூனிபார்மில் இரட்டை குடுமி கட்டி புன்னகையோடு இரண்டிரண்டு படிக்கட்டாக தாவி வந்தவளை கண்டு, “விழப்போற சாமி..” என்று ஓடி சென்று அவளை கீழே அழைத்து வந்தவர் தானே காலை உணவை பேத்திக்கு கொடுத்தார். 

நயனியும் இப்போது வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதால் குழந்தையை தனலட்சுமியிடம் கொடுத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள். வீட்டில் இரண்டு டிரைவர்கள் இருந்தாலும் தானே பேத்தியை காரில் அழைத்து செல்வதை தான் சக்கரவர்த்தி மட்டுமல்ல சஞ்சுவுமே விரும்புவாள்.

அன்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒரு வயது விஷாகனை உறங்க வைக்க போராடி களைத்து போயிருந்தாள் நயனி. 

சரியான உறக்கம் பிடிபடாமல் குழந்தை அடிக்கடி எழுந்து கொண்டே இருந்தான். மகனை அருகே போட்டுக்கொண்டு பால் கொடுத்தபடி உறங்க வைக்க முயன்ற தாயுடனே அமர்ந்திருந்தாள் சஞ்சனா. 

“நீ தூங்குடா செல்லம்” என்று மகளை மறு புறம் படுக்க சொல்ல “நீங்க தூங்குங்க ம்மா. தூங்கறதுக்கு கூட தம்பி உங்களுக்கு எவ்வளவு டென்ஷன் கொடுக்கிறான்? அவனால தானே நீங்க இவ்ளோ நேரம் தூங்காம போனீங்க.. முதல்ல தூங்குங்க” என்று மெல்லிய குரலில் சொல்லி அவள் தலையயை வருடிட நயனிக்கு தொண்டையை அடைத்து இதழ்கள் துடித்தது. 

“பசிக்குதாம்மா? பாட்டி உங்களுக்காக பால் வச்சுருக்காங்க.. கொண்டு வரட்டுமா?” என்ற மகளை வாரி அணைத்து கொண்டவள் சஞ்சுவின் முகமெங்கும் தன் முத்தத்தை பதித்தாள்.

அபய் ஸ்ரீவத்ஸன் அன்று வெளியூர் பயணம் சென்று இருந்தான். இரவு வர வெகு நேரம் ஆகும் என்பதால் தனக்காக காத்திருக்காமல்  குழந்தைகளை உறங்க வைத்து மனைவியையும் உறங்க சொல்லி இருந்தான். 

கணவன் இருந்திருந்தால் விஷாகனை வைத்துக்கொண்டு அவள் இத்தனை திண்டாடி போயிருக்க மாட்டாள். எப்போதும் மகனை தோளில் போட்டுக்கொண்டு நடப்பவன் எளிதாக அவனை உறங்க வைத்து விடுவான். அதுவே நயனி என்றால் பால் கொடுக்க வேண்டும் என்று அவளை ஒரு வழியாக்கி விடுவான். 

இத்தனைக்கும் நிர்மலா அரை மணி நேரம் வரை பேரனை தோளில் போட்டு உறங்க வைக்க முயன்று இறுதியில் அவன் கண் அசரவும் தான் கொடுத்து விட்டு சென்றிருந்தார். அப்படி இருந்தும் நயனியை படுத்தி எடுத்துவிட்டான். 

சஞ்சு குரலை கேட்டால் உறக்கத்தை விட்டு அவளோடு ஆட்டம் போட தொடங்கி விடுவான் என்பதால் அவள் அமைதியாக நயனியோடு அமர்ந்து கொண்டாள்.

“இருங்கமா வந்துடுறேன்..” என்றவள் டேபிளில் இருந்த பாலை கொண்டு வந்து இருவருக்கும் ஊற்றி நயனியோடு சேர்ந்து தானுமே குடித்தாள்.

“போதும், இவ்ளோ நேரம் முழிச்சிருந்தது. நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் தூங்குடா பட்டு” என்று நா தழுதழுக்க மகளை கட்டிக்கொண்டு உறங்க வைக்க முற்பட்ட சஞ்சனாவோ அவளிடம் பள்ளியில் நடந்த கதைகளை பேசியபடி அவளை உறங்க வைத்திருந்தாள். 

ஸ்ரீவத்ஸன் கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் பூனை பாதம்  வைத்து வந்தவள், “ஸ்ரீமா அம்மா தூங்கிட்டு இருக்காங்க டியூப் லைட் போடாதீங்க, குட்டி லைட் போடுங்க, மெதுவா சத்தம் போடாம வாங்க..” என்று தந்தையை வழி நடத்தி அவன் கை பிடித்து அழைத்து சென்றாள்.

இப்போதும் சஞ்சனாவின் அபய்கான பிரத்யேக அழைப்பு “ஸ்ரீமா” என்பது தான்.

“அப்பாவை என்ன “மா” போட்டு கூப்பிடற, “ஸ்ரீபா” ன்னு  கூப்பிடு செல்லம்..” என்று தனலட்சுமியும் நிர்மலாவும் ஒரு முறை பேத்தியை திருத்த முயல “அம்மா சஞ்சு சரியா தான் கூப்பிடுறா. அவ அப்படியே கூப்பிடட்டும் விடுங்க..” என்றாள் நயனிகா. 

“என்ன கண்ணா நீங்க தூங்கலையா?” என்றான் அவனும் மெல்லிய குரலில்.

“இல்ல ஸ்ரீமா, உங்களுக்கு தெரியுமா?! தம்பி இன்னைக்கு ரொம்ப சேட்டை! சாப்பிட அடம்,  மம்மு குடிக்க அடம்,  தூங்குறதுக்கு அடம். பாவம் அம்மா,  தம்பி தூங்கவும் அவங்களை இப்ப தான் தூங்க வச்சேன்..”

“நீங்க தூங்க வச்சீங்களா பட்டு?..” என்றான் மென்னகையோடு.

“ஆமா ஸ்ரீமா. நீங்க சேஞ்ச் பண்ணிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அபய் குளிப்பதற்காக டவல் எடுத்து வைத்தவள் கீழே ஓடினாள். 

அவளுக்கு பயம் என்பதே கிடையாது.

இரவு நேரம் என்பதால் வீட்டில் அதிக விளக்குகள் கூட எரியவில்லை. ஆனாலும் செல்லும் வழி நெடுக விளக்குகளை உயிர்ப்பித்துக் கொண்டே சென்றவள் கிச்சனுக்கு சென்று ஹாட் பாக்ஸில் இருந்து உணவுகளை தட்டிற்கு மாற்றி மாடிக்கு கொண்டு சென்றாள். 

அபய் குளித்து முடித்து வரவும் அவனுக்கு உணவை கொடுத்தவள், பள்ளியில் நடந்த அன்றைய நிகழ்வுகளை பற்றி அவனிடம் விவரித்து கொண்டிருந்தாள். 

என்றும் போல இன்றுமே மகளின் பேச்சில் லயித்திருந்தவன் அவளுக்கு ஊட்டிய படியே தானும் உண்டு முடித்தான்.

“சாப்ட்டதும் தூங்கக்கூடாது, வாங்கப்பா வாக் போகலாம்..” என்றவள் அவனை அழைத்து கொண்டு கீழே சென்றாள்.

நேரம் போனதே தெரியாதளவு இருவரும் ஹாலிலேயே பேசியபடி நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதற்கு பேச்சுக்களா இல்லை?! வார்த்தைகள் தீர்ந்து போகுமளவு பேசுவார்கள். 

அபய்யின் கையை பிடித்தபடி இருந்த சஞ்சுவின் விழிகள் சொக்கியது.

"தூக்கம் வருதாடா அம்மூ?" என்று மகளின் உடல்மொழியை கண்டு கொண்டு கேட்டான். 

“ஆமா ஸ்ரீமா..” என்றதும் அப்படியே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து மகளை தன் மடியில் சாய்த்துக்கொண்டு தட்டி கொடுத்தான்.

“என்ன இன்னும் பேச்சு முடியலையா?” என்றபடி அங்கே வந்தாள் நயனி. 

பாதி உறக்கத்தில் எழுந்த குழந்தையை மீண்டும் உறங்க வைத்தவளுக்கு மகள் அருகில் இல்லை என்றதும் அபய் வந்து விட்டது புரிந்தது. 

எப்போதும் இது வழக்கம் தான் என்பதால் பேசிக்கொண்டே கணவன் அருகே வர, “ஷ்ஷ்ஷ்!! சஞ்சு தூங்கியாச்சு, காலையில பேசிக்கலாம்...” என்றவன் மகளை மெல்ல தன் தோளில் போட்டுக்கொண்டு மாடிக்கு சென்றான்.

சஞ்சனாவை படுக்க வைத்து விளக்கை அணைத்து விட்டு வந்த ஸ்ரீவத்ஸன் கைகள் நயனியை சுற்றி வளைத்து கொண்டது.

“காலையில பேசலாம் சொன்னீங்க? தூக்கம் வரலையா?”

“இல்லை, குழந்தை ரொம்ப படுத்திட்டானா நயனி?” என்றான்.

“சஞ்சு சொன்னாளா?”

“ஆமா, ஆனா அம்மாவும் பேசின போது சொன்னாங்க..” 

“எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அபய். சஞ்சு சமத்துன்னா இவன் சேட்டை. அதுவும் உங்களை மாதிரியே கொஞ்சம் முரட்டு பிடிவாதம்.. அதனால என்ன இந்த வயசுல இதுவும் அழகு தான்!! ரசிக்க கத்துக்கோங்க பாஸ், எதுவும் கஷ்டமா இருக்காது..” என்றாள் சிரிப்போடு.

“தூங்கவே விடலையாமே, ஓயாம அழுதுட்டு இருந்தான்னு சொன்னாங்க. ஆனா நீ எப்படிடி எல்லாத்தையும் இவ்ளோ அசால்ட்டா டீல் பண்ற?” என்று மனைவியின் நெற்றி முட்டியவனுக்கு இன்று வரையிலுமே நயனி மீதான ஆர்ச்சர்யமும் பிரம்மிப்பும் அகலவில்லை.

‘உயிர் கேட்கும் அமுதமாக’ அவன் வாழ்வில் நுழைந்து ‘உயிர் காக்கும் அமுதமாக’ மாறி இன்று அனைத்து கசப்புகளையும் களைந்து “எதுவுமே முடிவு அல்ல, நீளும் வாழ்க்கை தடத்தில்  கோர்த்திருந்த கரம் மாறி இருந்தாலும் பயணத்தில் மாற்றமில்லை..” என்ற நம்பிக்கை கொடுத்திருப்பவள் குறித்து என்றுமே அவனுக்கு வியப்பு தான். 

கணவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் மூக்குரசியவள், “பாஸ் நான் உங்களையே டீல் பண்ணினவ உங்க பையனை பண்ண மாட்டேனா? அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்று புன்னகையோடு கண்சிமிட்டினாள்.

நயனியின் புன்னகை காதல் மொழியாக, உயிரை தொடும் உணர்வாக, நம்பிக்கையின் முகவரியாக இன்று மட்டுமல்ல என்றுமே அவர்கள் வாழ்வை செம்மை படுத்தும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்தி விடைபெறுவோம். 

நிறைந்தது



Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1