வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

உயிர் கேட்கும் அமுதம் நீயடா FINAL 1

  

நயனியின் வளைக்காப்பை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது சக்கரவர்த்தியின் பங்களா. வீடு முழுக்க சக்கரவர்த்தி நிர்மலா மட்டுமல்ல தனலட்சுமியின் உறவுகளும் நிறைந்திருக்க பரபரப்பாக காணப்பட்டார் சக்கரவர்த்தி. 

சக்கரவர்த்தி பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை விசேஷத்திற்காக தேர்ந்தெடுக்க அபய் தங்கள் வீட்டில் தான் நடத்த வேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான். 

அதனால் தோட்டத்தில் மேடை அமைக்கப்பட்டு விருந்தினர்கள் அமர்வதற்கான நாற்காலிகள் ஒருபுறம் போடப்பட்டு அவர்களுக்கான குளிர்பானங்கள், பழங்கள் எல்லாம் ஒருபுறம் அடுக்கபட்டு என்று ஏற்பாடுகள் ஜோராக நடை பெற்று கொண்டிருந்தது. 

அபய் மற்றும் சுதர்ஷன் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க, நிர்மலா மற்றும் ராகவி நலங்கிற்கான ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தனர். 

“அத்தை வளையலை தாம்பூலத்தில வச்சு கொடுக்கிறதா இல்லை இங்கேயே கொடுக்கவா?” 

“தாம்பூலத்துக்கு தனியா எடுத்து வச்சாச்சு ராகவி இது இப்போ கொடுக்க, தனியா தட்டுல பூ, குங்குமம், வளையல் எடுத்து வச்சுடு..” என்றவரை முரளி அழைக்க தம்பியோடு சென்றார்.     

“என்ன சக்கரவர்த்தி ஏற்கனவே ரெண்டு பேரன். நீயும் உன் பிள்ளைகளும் சம்பாதிச்சு இருக்கிற சொத்தை செலவழிக்க இந்த முறையாவது பேத்தி எதிர்பார்க்கலமா?” என்று கிண்டலாக கேட்டார் சக்கரவர்த்தியின் நண்பர் தேவராஜ்.

“எனக்குமே அதுதான் ஆசை தேவா. நிச்சயம் நிறைவேறும்னு நம்பறேன்..” என்று குரல் கமற சொன்னவரின் மனதில் அன்று சஞ்சு அவரை தேடி வந்து தன் மகன் மீதான காதலை சொன்ன நாள் நிழலாடியது.

“என் நயனி தவிர்த்து யாருக்காகவும் வளையாதவ இப்போ என் ஸ்ரீமாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நீங்க என்ன கண்டிஷன் போட்டாலும் ஏத்துக்க தயாரா இருக்கேன் அங்கிள்..” என்று தொடங்கி எத்தனை ஆத்மார்த்தமாக தான் அபய் கொண்டிருக்கும் காதலையும் அதன் ஆழத்தையும் எடுத்து சொன்ன சன்சுவின் பேச்சு இன்றுமே அவர் மனதில் பசுமையாய். 

சஞ்சு குணத்திலும், அழகிலும், வசதியிலும் சற்றும் குறைந்தவலல்ல. அதிலும் ஒரே பெண் என்பதால் சக்கரவர்த்தியின் அந்தஸ்திற்கு ஏற்றபடி அவள் பெற்றோர் செய்திருப்பார்கள்.

ஆனால் அதை எல்லாம் விட ஜாதி தான் முக்கியம் என்ற அவரின் பிடிவாதமான முடிவு அவளின் நிலைக்கு ஒரு காரணமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுவது உண்டு. 

அன்று அவள் காதலை, தன் மகன் மீதான தூய நேசத்தை துச்சமாய் நினைத்து அலட்சியபடுத்தியவர் இப்போதெல்லாம் அன்று அவர் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வெட்கி போகிறார். 

அபய் தன் விருப்பத்தை சொன்ன போதே சஞ்சுவை அவனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் இந்த நிகழ்வு நடக்காமல் போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.

சஞ்சு எழுதியிருந்த கடிதங்களை படித்தவருக்கு கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது. சஞ்சுவிற்கு நடந்த கொடுமையை ஜீரணிக்க முடியாத மனிதர் என்றுமில்லாதளவு உடைந்து போய் விட்டார். 

அபய் தான் அவரிடம் ‘கட்டாயம் படிக்க வேண்டும்’ என்று கடிதத்தை கொடுத்தது. ஆனால் கண்ணீரோடு கலந்திருந்த சன்சுவின் ஒவ்வொரு எழுத்தும் ஈட்டியாய் மாறி அவர் நெஞ்சை துளைத்தது. 

கையில் இருந்த கடிதம் அத்தனை கனமாகி போக படித்து முடிப்பதற்குள் அனலில் இட்ட புழுவாக துடிதுடித்து போனார். அவளின் ஆசை, ஏக்கம், தவிப்பு, இயலாமை அனைத்தையும் அவரை உருகுலைந்து போட்டது.

அதிலும் இறுதியாக ‘தன் மகனுக்கு மகளாக பிறக்க வேண்டும்’ என்ற வரிகளை கண்ணீரோடு உள்வாங்கியவர் அன்று முதலே அவர் அவராகவே இல்லை.

ஒரு பெண்ணின் வலி, வேதனை, ஏக்கம், பல வருட ஆசை நீராசையானது, தன் மகனை சேர முடியாத ஆற்றாமை அனைத்திற்கும் மேலாக தன் உயிரை அவளை எடுத்துக் கொண்டது, என்று அந்த ஆன்மாவின் துயரங்கள் அவர் அவர் உறக்கத்தை பறித்திருந்தது.

தன் முட்டாள் தனத்தை அவர் நொந்து கொள்ளாத நாளில்லை. 

எந்த கௌரவத்திற்காக சஞ்சுவின் காதலை ஏற்காமல் போனாரோ அந்த கௌரவத்தை விட்டு தன் அந்தஸ்த்தை விட்டு மனைவி அழைத்து சென்ற கோவில்களில் எல்லாம் தான் செய்த பாவத்திற்கான பரிகாரங்களை செய்து கொண்டிருக்கிறார்.

எக்காரணத்தைக் கொண்டும் சஞ்சுவின் தீரா ஆசையும், வேதனையும் தன் குடும்பத்தை பாதிக்க கூடாது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவள் எதிர்பார்த்தபடியே புனர்ஜென்மம் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அவரின் வேண்டுதல்கள். 

“நயனி சாப்பிட்டாச்சா நிம்மி?” என்றார் அங்கு வந்த மனைவியிடம்.

“இன்னும் இல்லைங்க..”

“அதைக் கூட கவனிக்காம என்ன பண்ணிட்டு இருக்க நீ? இன்னும் அரை மணி நேரத்துல ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகிடும் அது முடிஞ்சு அதுக்கப்புறம் எப்ப சாப்பிடுறது ரெண்டு பேருக்கும் பசிக்காதா?”

“ஏங்க, மேக்கப் போடுற பொண்ணுங்க வந்துட்டாங்க, அதனால ஜூஸ் மட்டும் போதும்னு சொன்னா.. கொடுத்துட்டேன்.”

“ஜூஸ் எவ்ளோ நேரத்துக்கு தாங்கும்? வயித்துல இருக்கிற பிள்ளைக்கு பசிக்காதா? நயனி கூட இல்லாம இங்க என்ன பண்ற?”

“உங்க சித்தப்பா சித்தி வந்துட்டு இருக்கிறதா வினோதன் சொன்னான் அதுதான் அவங்களை ரிசீவ் பண்ண வந்தேன்..”

“ஏன் குத்துகல்லு மாதிரி நான் இங்க வாசல்லையே தானே இருக்கேன். அவங்களை நான் ரிசீவ் பண்ணி பார்த்துக்க மாட்டேனா அதுக்கு நீ மருமகளை தனியா விட்டுட்டு வருவியா?”

“இல்லைங்க தனா நயனி கூட இருக்கறதுனால..” என்றவரை இடையிட்டு, 

“தனலட்சுமி கூட இருந்தா என்ன? அதுக்காக நீ பார்க்க கூடாதா? பக்கத்துலயே இருந்து அப்பப்போ ஒரு வார்த்தை என்ன வேணும்னு கேட்க கூடாதா? இதெல்லாம் இரண்டு பிள்ளை பெத்த உனக்கு தெரியாதா?”

“அடடா! என்ன இன்னைக்கு ரொம்ப தான் விரட்டுறீங்க?! அவ்ளோ அக்கறை இருக்கிறவர் நீங்களே கொண்டு போய் கொடுக்க வேண்டியது தானே?” என்று நிர்மலா எளிதாக சொல்லிவிட்டாலும் சக்கரவர்த்தி அனாவசியமாக மருமகள் முன்னே சென்று நிற்க மாட்டார். 

நிறை மாத பிள்ளைதாச்சி எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயங்களை பேசுவதோ நபர்களை சந்திப்பதோ இருக்க கூடாது என்று மருத்துவர் சொல்லி இருப்பதால் அனாவசியமாக பேச முயற்சிக்க மாட்டார். 

“நான் கொடுக்கிறதை பற்றி இல்லை நிம்மி ஆனா..” என்றவரின் குரல் வெகுவாக கலங்கி போனது. அவருக்குமே நயினியையும் சஞ்சுவையும் கவனித்துக் கொள்ள ஆசைதான்.

தன்னை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்து நயனியின் நம்பிக்கையை இழந்து அவளை தனியே தவிக்கவிட்டு குற்ற உணர்வில் இருந்து வெளிவர முடியாமல் உரிமை கொள்ள முடியாமல் எட்ட நிற்கிறார்.

“சரி சரி நானே பார்க்கிறேன். தேவையில்லாம நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்றவர் புளியோதரை, தயிர் சாதம் புதினா சாதம், வெஜிடபிள் என்று மருமகளுக்காக அனைத்தையும் எடுத்துக்கொண்டு நயனிகாவை தேடி சென்றார்.

“இன்னுமா முடியல?! எவ்ளோ நேரம் தான் அலங்கரிப்பீங்க? என் மருமக இயற்கையாவே அழகு தான்.. போதும் விடுங்க மா..” என்றார் புன்னகையோடு.

“அவ்வளவுதான் மேம். லாஸ்ட் மினிட் டச்அப்..” என்று மூன்று பெண்கள் சுற்றி நின்று நயனிகாவின் புடவை, முகம் மற்றும் தலை அலங்காரத்தை சரிபார்த்து கொண்டிருந்தனர்.

“சரி நீங்க பண்ணுங்க நான் அப்படியே ஊட்டி விட்டுடுறேன்.. உனக்கு பசிக்கலையா?” என்றார் மருமகளிடம்.

“இல்லத்தை. மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு.. ரொம்ப சந்தோஷமா எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. அதுல பசி இல்லை..”

“என்ன பசி இல்ல? நானும் ஒரு மணி நேரமா மேக்கப் கலையாம ஊட்டி விடுகிறேன்னு சொல்லிட்டு இருக்கேன் கேட்டியா? ஜூஸ் மட்டும் போதும்னு சொல்லிட்டா அண்ணி” என்று நிர்மலாவிடம் குறை படித்தார்.

“ம்மா நிஜமாவே எனக்கு சந்தோஷத்துல பசியே தெரியல.. நீங்க வேணும்னா அத்தை கிட்ட கேட்டு பாருங்க நைட் டின்னர் முடிச்சுட்டு திரும்ப பத்து மணிக்கு எல்லாம் பசிக்குதுன்னு சொல்லி இன்னொரு ரவுண்டு சாப்பிடுவேன்…” என்றிட அங்கே வந்து சேர்ந்தால் 5 மாத கர்ப்பிணியான நிதிஷா.

“ஹேய் வா நிதி..” இன்று தங்கையை நோக்கி இரு கரங்களையும் விரிக்க அழகாக அவளுக்குள் அடங்கிய நிதிஷா, “சாரிக்கா நானும் சீக்கிரம் வர எவ்வளவோ முயற்சி பண்ணேன் அப்படி இருந்தும் லேட் ஆகிடுச்சு…”

“உன்னோட வளைகாப்புக்கு நான் தான் மேக்கப் பண்ணனும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் ஆனா டாக்டர் முக்கியமான டெஸ்ட் எடுக்கணும் ஸ்கேன் எடுக்கணும்னு காலையிலேயே வர சொல்லிட்டாங்க… தள்ளி போடலாம்னு பார்த்தா இன்னும் ஒரு மாசத்துக்கு அவங்க ஊர்லயே இல்ல..” என்று வேகமாக பேசிக் கொண்டே சென்றாள். 

“ஏய் மெதுவா மெதுவா பேசுடி.. அதுதான் ஏற்கனவே சொல்லிட்டியே இந்த வளைகாப்பு மிஸ் பண்ணினா என்ன அடுத்த வளைகாப்புக்கு நீ பண்ணிடு..” என்று புன்னகைத்தவள், 

“சரி டாக்டர் என்ன சொன்னாங்க? பாப்பா எப்படி இருக்கு?”

“அதெல்லாம் ஜம்முனு இருக்கா. நான் தான் கொஞ்சம் வீக்கா இருக்கேன்னு டேப்லெட் டானிக் கொடுத்திருக்காங்க..”

“இவ்வளவு நேரம் பேசினதுல பசி எடுத்து இருக்கும் ‘ஆ வாங்கிக்கோ’” என்ற நிர்மலாவே மெல்ல அவளுக்கு ஸ்பூனில் ஊட்டி விட தொடங்கினார்.

நிதிஷா தன் பேக்கை வைத்துவிட்டு நயனியின் புடவை தலைப்பை சரி செய்ய, “அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க நீயும் சாப்பிடு” என்று நிதிஷாவுக்கும் சேர்த்து ஊட்ட தொடங்கினார்.

“அத்தை போதும்..”

“உனக்கு பிடிச்ச புதினா சாதம் சாப்பிடவே இல்லையே?! அது மட்டும் ஒரு ரெண்டு வாய் வாங்கிக்கோ..” என்றிட புன்னகையோடு வாங்கிக் கொண்டால்.

இருவருக்கும் கொடுப்பதை கண்ட தனலக்ஷ்மி இன்னுமொரு பிளேட் எடுத்து வந்து கொடுத்தார். 

பாதி பிளேட் காலியான நிலையில், “நிஜமாவே இப்ப போதும் இதுக்கு மேல சாப்டா முடியாது..” என்றவளுக்கு எளிதில் ஜீரணமாகும் விதமாக கஷாயம் வைக்க சென்றார் தனலட்சுமி. 

“உடனே வா..” என்று நயனிகா பார்க்க,

“இன்னும் கொஞ்ச நேரத்துல மேடைக்கு போகணும்.. அப்படியே போய் உட்கார்ந்தா மந்தமா இருக்கும்.. சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேர் இல்ல ஏழு பேர் சாதம் ஊட்டி விடுவாங்க..”

“அப்படியா?” என்றால் நிதிஷா. 

“ஆமா நிதி..” என்று நிதிஷாவிடம் சொன்ன நிர்மலா, “மெல்ல எந்திரிச்சி நட தனலட்சுமி கசாயம் கொண்டு வர பத்து நிமிஷமாவது ஆகும்..” என்றார்.

அவர் சொன்னபடி செய்தவள் தங்கையோடு பகிர்ந்து கசாயத்தை ஒரே மூச்சில் குடிக்க முற்பட.. “கொஞ்சம் கொஞ்சமா குடி.. புரை ஏறப்போகுது..” என்றார் நிர்மலா.

“கசக்குது த்தை. அம்மா இன்னும் கொஞ்சம் வெல்லம் கொண்டு வரியா?” என்றவள் கசாயத்தை குறித்து முடித்து மெல்ல பால்கனியில் நடந்தால். 

பத்து நிமிட நடையில் “இப்போ பெட்டரா இருக்கு மா..” என்று சொல்ல அங்கே வந்து சேர்ந்தான் அபய் ஸ்ரீவத்சன். 

இருவரும் அமர்ந்திட அவர்களுக்கு மாலை அணிவித்து நலங்கிட தொடங்கினார் நிர்மலா.

அவரைத் தொடர்ந்து தனலட்சுமி நிதிஷாவும் அவளுக்கு வளையலிட்டு நலங்கு வைத்தனர்.

சந்தனம் குங்குமம் கை நிறைய வளையல் என்று கணவன் அருகே பூரித்து போய் அமர்ந்திருந்தாள் நயனிகா வர்ஷி.

விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்த சக்கரவர்த்தி தூரத்தில் இருந்தே மகன் மருமகளின் மகிழ்ச்சியை கண்டு ரசித்திருந்தார்.

அனைவரும் நலங்கு வைத்திருந்ததில் நேரம் செல்ல இறுதியாக ஐந்து பெண்கள் சேர்ந்து நயனிக்கு ஆலம் சுற்றி அறைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பித்து விட்டது. 

“இன்னும் நாள் இருக்கே..” என்று ராகவி சொல்ல, நயனி முக மாற்றத்தை கண்ட தனலட்சுமியும் நிர்மலாவும் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.

மனைவியை பத்திரமாக காரில் அமர்த்திய அபய் அடுத்த நாற்பது நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான்.

லேபர் வார்டிற்கு நயனியை கொண்டு செல்ல மருத்துவமனை சம்பிரதாயங்களை முடித்த அபய் உரிய பாதுகாப்போடு பிரசவ அறைக்கு செல்ல அங்கே அவன் மனைவியை அதிகம் கஷ்டபடுத்தாமல் அவர்களின் பூமகள் பூமியில் அவதரித்து இருந்தாள்.

ஆம் சஞ்சனா ஆசைப்பட்டபடியே ஸ்ரீவத்ஸன் நயனிகா மகளாக பிறந்திருந்தாள்.

அதுவும் சஞ்சனா பிறந்த அதே தேதி மட்டுமல்ல அதே மணித்துளிகளில்!!

மகளை கண்ட அபய் முகத்தில் எல்லையில்லா ஆனந்தம்! 

"நயனி நம்ம சஞ்சு வந்தாச்சு.." என்று குண்டு குண்டு கன்னங்களோடு சிப்பியில் இருந்து கண்டெடுத்த முத்தை போல ஜொலித்த மகளை மயக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்த மனைவியிடம் காண்பித்து அவள் மார்பில் கிடத்த நயனியின் இமையோரம் நீர் கசிந்தது.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1