நயனியோடு பார்கவ் தனலட்சுமியை தன் வீட்டிற்கு
அழைத்து வந்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
அன்று ‘சேதுராமனை பிரிவது’ என்ற முடிவை எடுத்த
போதே மகளுக்கும் மருமகனுக்கும் சொல்லி விட்டிருந்ததால் அபய் தன் வீட்டினரை
இவர்களின் வரவிற்காக ஏற்கனவே தயார்படுத்தி விட்டான்.
அப்படி இருந்தும் சக்கரவர்த்தி ஏதோ பேச முற்பட, "டாட், மாமா இத்தனை வருஷமா
குடும்பத்தோடு இந்த வீட்ல இருக்கிறப்போ என் பொண்டாட்டியோட அம்மாவும் தம்பியும்
இங்கே இருந்தால் என்ன தப்பு?”
"ஒருவேளை இதுலயும் உங்க கௌரவம்
பாதிக்கப்படும்னு நீங்க நினைச்சா நான் என் மனைவி மாமியார் மச்சானோடு வெளியே
போயிடுறேன்.. உங்க கௌரவத்தை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க.." என்ற பிறகு மகனின் முடிவை சக்கரவர்த்தியால் மறுத்து பேசி விட முடியுமா
என்ன?!
சேதுராமனை போலீஸார் கைது செய்யும் முன்னமே சேது
கட்டியிருந்த தாலியில் கழற்றி அவரிடமே கொடுத்து விட்டார் தனலட்சுமி.
"இனி இது என் கழுத்துல இருக்கிற காரணத்தை
சாக்கா வச்சு கூட என்னை தேடி வந்துடாத.. அப்படி வந்தா நான் மனுஷியாவே இருக்க
மாட்டேன்.." என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வீட்டிற்கு வந்தது முதலே தன்னை விட்டு நீங்காமல்
தன் கைகளை பிடித்துக்கொண்டு தோளில் சாய்ந்திருந்த மகளை கண்ட தனலட்சுமிக்கு வாள்
கொண்டு அறுத்தார் போல மனமெங்கும் அப்படி ஒரு வலி பெருகியது.
‘தன் ஸ்பரிஸத்திற்காக எத்தனை நாட்கள் இப்படி
ஏங்கி இருப்பாள்?’ என்று நினைக்க நினைக்க தனலட்சுமிக்கு கண்ணீர்
நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
நிர்மலா அவர்களுக்கு காஃபி கொண்டு வந்து கொடுக்கவும், “அத்தை அம்மாவுக்கு பாதி சக்கரை தான்..” என்றாள் நயனிகா.
“பார்கவ் சொன்னான் நயனி, பாதி
தான் போட்டு இருக்கேன்..”
“அம்மா ரொம்ப சூடா குடிக்க மாட்டாங்க அத்தை.. நீங்க
இருங்க...” என்றவள் மற்றொரு டம்ளர் கொண்டு வந்து அவருக்கு
காஃபியை “நான் பாவி!!” என்று கதறிவிட்டார்
தனலட்சுமி.
“ம்மா எதுக்கு அழற?” என்று
நயனி தாய் அருகே அமர, “உன்னை இத்தனை வருஷம் பிரிஞ்சு நான்
ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன் வர்ஷி..”
“அவனை விட்டு அப்போவே வந்திருந்தா நீ என்னை
விட்டு தள்ளி போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனா இந்த பாவியால அப்போ முடியலையே
வர்ஷி.. என்னை மன்னிச்சுடு..” என்று மகளிடம் கைகூப்பினார்.
“என்னம்மா பண்ற நீ?!” என்ற
நயனிக்குமே கண்கள் குளம் கட்டிப்போனது.
“இதோ இவனும் நிதியும் என்னை நம்பி இருந்தாங்க..
இவங்களை பார்த்து உனக்கு நான் அநியாயம் பண்ணிட்டேன்.. நீ சாப்பிட்டியா, தூங்கினியா, என்ன பண்ற, எப்படி
இருக்கன்னு உன் நியாபகத்துல எத்தனை நாள் தூங்காம இருந்திருப்பேன் தெரியுமா?”
என்று மகளை கட்டிக்கொண்டு உரத்த குரலில் கதறினார்.
"இன்னும் என்ன தனா பழசை பேசிக்கிட்டு?!
இத்தனை வருஷம் இழந்ததை இனியும் ஈடு கட்ட முடியும். உன் மகளை வளர்க்க
முடியாட்டி என்ன உன் பேரன் பேத்தியை வளர்த்து அழகு பாரு.." என்ற நிர்மலா வார்த்தையில் அவர் அழுகை சற்று மட்டுப்பட்டது.
"பொதுவாவே ஒரு பொண்ணுக்கு பிரசவ காலத்துல
தான் அம்மாவோட இருப்பு அதிகமா தேவைப்படும். இத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தா என்ன
நல்லவேளை ஆண்டவனா பார்த்து உன் மகளோட பிரசவத்துக்கு முன்னாடியே உன்னையும் அவளையும்
சேர்த்து வச்சதா நினைச்சுக்கோ.."
“ஆமாம்மா அத்தை சொல்றது ரொம்ப சரி, இழந்தையை பற்றி யோசிக்கறதை விட இனி கிடைக்க போற சந்தோஷத்தை யோசிக்கலாமே!”
என்றாள்.
“என்ன இருந்தாலும் நான்..” என்ற தனலட்சுமியை இடையிட்டு,
“முடிஞ்சு போனதை பேசி ஆக போறது என்ன? இப்படியே விட்டா அழுதுட்டு இருப்ப, மாடியில
உங்களுக்கு ரூம் ரெடி பண்ணி இருக்கு போய் கொஞ்ச நேரம் படுத்து எழு” என்ற நிர்மலா, “நயனி ரூம் சரியா இருக்கான்னு பாரு.
தனாவுக்கு தேவையானதெல்லாம் எடுத்து வை..” என்றிட மாடிக்கு
சென்றாள்.
“அண்ணி இங்க பக்கத்துல ஏதாவது வீடு வாடகைக்கு
கிடைக்குமா?” என்றார்.
“எதுக்கு மா?”
“மாப்பிள்ளையோட பெருந்தன்மை என்னை இங்க
கூட்டிட்டு வந்தார், அதுக்காக நான் இங்கேயே இருந்திட
முடியுமா? எனக்கு துணைக்கு பார்கவ் இருக்கான்.. ஒரு வீடு
மட்டும் பிடிச்சு கொடுத்துட்டா போதும் நாங்க இருந்துப்போம்.."
“இதுவும் உன் வீடு மாதிரி தான் மா.. இங்கேயே
உன் பொண்ணு கூட இரு அவளுக்கு சந்தோஷமா இருக்கும்..”
“இருக்கட்டுமே அண்ணி! என்ன இருந்தாலும் பொண்ணு
வீட்ல எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆனாலும் அவளை விட்டு
இனியும் தள்ளி இருக்க முடியாது அதனால பக்கத்துலயே இருந்தா என் மகளை காலையிலயும் சாய்ந்திரமும்
பார்த்துக்க வசதியா இருக்கும்"
"அவ்ளோ தானே கவலையை விடுங்க... இங்க
பக்கத்துலயே நம்ம பழைய வீடுஒன்னு இருக்கு. நாங்க இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி அங்க
தான் இருந்தோம்.. வாடகைக்கு இருந்தவன் அடுத்த வாரம் காலி பண்ண போறாங்க..”
“ரொம்ப நன்றி அண்ணி..” என்று
கைகளை பிடித்துக்கொண்டவரை தேற்றினார் நிர்மலா.
அன்று இரவு அறைக்கு திரும்பிய அபய்யை ஓடி சென்று
கட்டிக்கொண்டாள் நயனிகா.
முதலில் புரியாமல் நின்றிருந்தவன் அவள்
விசும்பலில் மெல்ல மனைவியின் முகம் நிமிர்த்தி, "என்னாச்சு நயனி?" என்றான்.
"தேங்க்ஸ்!! தேங்க் யூ ஸோ மச் அபய்!!"
"எதுக்கு?"
"என் அம்மாவை எனக்கே எனக்காக திருப்பி
கொடுத்ததுக்கு.."
"இது அத்தையோட முடிவு. இதுல நான் பெருசா
என்ன செய்துட்டேன்னு இப்போ தேங்க்ஸ் சொல்ற?!"
"அம்மா இந்த முடிவு எடுத்திருந்தாலும்
அவங்களை தயங்காம செயல்பட வச்சது நீங்களும், நீங்க அவருக்கு
கொடுத்த நம்பிக்கையும் தானே!" என்ற நயனியின்
வார்த்தைகள் நூறு சதவிகிதம் சரியே!!
ஆம் தனலட்சுமி தன் முடிவை சொன்ன போது தான் கொண்ட
அதிர்ச்சியில் நயனிக்கு பேச்சு வரவில்லை.
பின்னே இத்தனை நாட்கள் தாயை தம்பி தங்கைக்கு
விட்டு கொடுத்து விட்டவளுக்கு இப்போது அவர் முழுவதுமாக தனக்கே தனக்கு கிடைக்க
போகிறார் என்பது எத்தனை பெரிய பேரு!!
அதீத மகிழ்ச்சியை தாள முடியாது தவித்தவள் தம்பி தங்கையை பார்க்க அவர்களோ
“இனி அம்மா முழுக்க உனக்கே உனக்கு தான் க்கா நாங்கள் பங்கு போட வர
மாட்டோம்” என்பது போல மகிழ்ச்சியோடு நயனியை
பார்த்திருந்தனர்.
"நிதியும் பார்கவ்வும் ரொம்ப ஸ்வீட் அபய்.
ஆனா அவங்களுக்கு கொடுக்காம அம்மாவை நான் மட்டுமே வச்சுக்க மாட்டேன். அவங்களுக்கும்
அப்பப்போ கொடுப்பேன்.." என்றாள் புன்னகையும்
கண்ணீருமாக.
"சரி.." என்று
புன்னகையோடு அவள் உச்சியில் நாடி பதித்து சொன்னான்.
"அம்மா சொன்ன மாதிரி முதல்ல அவங்களுக்கு
நல்ல வீடு பார்க்கணும்..."
"அந்த கவலை உனக்கு வேண்டாம். ஆல்ரெடி
அவங்களுக்கு வீடு ரெடியா இருக்கு.."
"ரியலி!" என்று
கணவனின் நெற்றியில் இதழ் பதித்தவள்,
"இனி நான் எப்போ வேண்டுமானாலும் அம்மாவை
பார்க்க வரலாம் தானே?! அம்மா கூடவே இருக்கலாம் தானே?!
அம்மாவோடவே தங்கலாம் தானே?! அவங்க எனக்கு
பிடிச்சதெல்லாம் சமைச்சு கொடுப்பாங்க தானே?!"
"ஏன் இல்லாம தினமும் உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட்,
லஞ்ச் எல்லாமே அத்தை செய்து கொடுப்பாங்க.. அவங்களை எப்போ
வேண்டுமானாலும் நீ பார்க்கலாம் அவங்களோடவே தங்கலாம்.."
"என்னால இன்னுமே நம்ப முடியலை அபய்.
இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அம்மாக்கு
கெஸ்ட் ரூம்ல இருக்கிற ஃபெசிலிட்டி போதுமான்னு தெரியலை? புதுசா
வாங்கியிருந்த போர்வையை எங்கே வச்சேன்.." என்று கப்போர்டை
திறந்தவள் முழங்கை
சுவரில் பலமாக இடித்துக்கொண்டது.
"ஸ்ஸ்ஸ்ஆஆ.." என்றவளின்
குரலில் அபய் மனைவியிடம் வர முகம் சுணங்க அவனை பார்த்தாள்.
"இனி யாருக்காவும் நான் அம்மாவை விட்டு
தள்ளி இருக்க வேண்டியது இல்லை தானேங்க..”
“ஆமா!!”
“யாருமே எங்களை பிரிக்க முடியாது, எங்களுக்கு இடையில வர முடியாது தானே அபய்?!" என்று
எதிர்பார்ப்போடு கணவனை பார்த்தாள்.
“ஆமாடி! ஆனா தலை கால் புரியாம ஓடினா இப்படி
தான் அடிபடும். அப்படி என்ன அவசரம் உனக்கு? மெதுவா தான்
செய்யேன்..”
“இல்லைங்க அம்மாவுக்கு வசதியா இருக்கான்னு
கேட்காம விட்டுட்டேன்..” என்று பரபரக்க,
“நயனி ஜஸ்ட் ரிலாக்ஸ்! இனி அத்தை முழுக்க
உனக்கு தான் அவன் வெளியே வர முடியாதளவு ஸ்ட்ராங் செக்ஷன்ஸ்ல கேஸ் போட்டிருக்கு..."
என்றவன் ஐஸ் கட்டிகளை கொண்டு வந்து வீக்கம் கண்ட இடத்தில் ஒற்றடம்
கொடுத்தான்.
“என்ன சொல்றீங்க அவன் வெளியே வர முடியாதா?”
என்றாள் மகிழ்ச்சியோடு.
“ஆமாடா, அதுமட்டுமில்லை
மாமியார் வீட்ல அவனை கவனிக்கற பொறுப்பை விஜயகுமார் எடுத்துட்டு இருக்கான். அவனோட
ஜாதகத்தையே கொடுத்துட்டேன் இனி ஒவ்வொரு நாளும் அவனுக்கு அங்கே நரகம் தான்..”
“நிஜமாவா சொல்றீங்க?”
“பின்னே! அந்த நாய் செஞ்ச காரியத்துக்கு அவனை ஜெயில்ல
உட்கார வச்சு மூணு வேலையும் விருந்தா போடுவாங்க..” என்றான்
புன்னகையோடு.
"இன்னைக்கு நீங்க அவனை போலீஸ்ல பிடிச்சு
கொடுத்ததை நான்
என்னைக்கோ செய்திருக்கலாம் ஆனா என் தம்பி தங்கச்சிக்காக செய்யாம இருந்தேன்.. தப்பு
பண்ணிட்டேனா?"
"ப்ச், அதெல்லாம்
ஒண்ணுமில்லை.. சுயநலமா இல்லாம உன் தங்கச்சி தம்பியை யோசிச்சிருக்க இது ஒன்னும்
தப்பு கிடையாதே!" என்றவனை இறுக்கமாக கட்டிக்கொண்டவள்
அவன் கன்னத்தில் இதழ்களை பதிக்க,
“இவ்ளோ சந்தோஷமா இருந்தும் இங்கேயா கொடுப்ப?”
என்றவனின் இதழ்களை மென்மையாய் சேர்ந்தாள் நயனிகா வர்ஷி.
Comments
Post a Comment