வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - PREFINAL 2

 

மேலும் சில மாதங்கள் கழிந்த நிலையில்:

அன்று நேரம் நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருக்க அபய் ஸ்ரீவத்ஸன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

ஆனால் உறக்கம் வராத நயனிகா மெதுவாக  எழுந்தமர்ந்து எட்டு மாதத்தின் முடிவில் இருந்த தன் வயிறை சுற்றி கரங்களை படர விட்டாள்.

"தூக்கம் வரலையா சஞ்சு? என்ன இன்னைக்கு ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்க?" என்று உள்ளிருக்கும் மகளோடு பேச தொடங்கிட குழந்தையும் காலை உதைத்து தன் இருப்பை உறுதி செய்தது.

"இன்னும் ரெண்டு நாளுல வளைகாப்பு! உனக்கு பிடிச்ச கலர்ல தான் வளையல் அடுக்கனும்னு சொல்லிருக்கேன்.. உனக்கு பிடிச்ச மெனு தான் செய்யணும்னு சொன்னேன் ஆனா அபய் அதுக்கு ஒத்துக்கவே இல்லை.. எனக்கு பிடிச்சதை தான் செய்யணும்னு சொல்லிட்டார்.."

"ஏன்னு கேட்டதற்கு நம்ம ரெண்டு பேருக்குமான விசேஷத்துல ரெண்டு பேருக்கு பிடிச்சதும் இருக்கணும்னு  சொல்லிட்டார்.. அவருக்கு மனைவியும் மகளும் ரெண்டு கண்கள்னு சொல்றார் சஞ்சு.."

"உனக்கு தெரியுமா?! அவரை விட எனக்கு தான் நீ எப்போ என் கைக்கு வருவன்னு இருக்கு சஞ்சு... நீ சீக்கிரம் வரணும் உன்னை என் மடியில போட்டு பாலூட்டனும், தாலாட்டனும், சீராட்டனும், உன்னை அழகா அலங்கரிக்கணும்.. நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே ஒரே மாதிரி ட்ரெஸஸ் தான் அபய் கிட்ட சொல்லிட்டேன்.."

"உனக்கு நியாபகமிருக்கா?! அந்த தீபாவளிக்கு போட்டுக்கிறதுக்காக நாம ரெண்டு பேரும் ஃப்ளாரசென்ட் கிரீன்ல ஒரே மாதிரி ட்ரெஸ் எடுத்து வச்சோமே. ஆனா அதை நாம போடவே இல்லடி.. அந்த தீபாவளி மட்டுமில்ல அதுக்கு அப்புறம் வந்த எந்த தீபாவளிக்கும் நான் புது ட்ரெஸ் போடறதே இல்லை தெரியுமா?!" என்று கண்ணீரை துடைத்தவள்,

நீ வந்த பிறகு நாம செலிபரேட் பண்ண போற முதல் தீபாவளியில தான் நான் புது ட்ரெஸ் போட போறேன்.. என் மனசு கஷ்டப்படும்னு அபய் என்கிட்டே சொல்லலைனாலும் அவரும் உனக்காக எந்தளவு காத்துகிட்டு இருக்கார்னு எனக்கு புரியுது சஞ்சு..

ஆனா இப்போ வரையிலும் நீ ஏன் எங்களை விட்டு இல்லாம போனன்னு அவர் சொல்லவே இல்லை.. அப்படி என்ன நான் தெரிஞ்சுக்க கூடாத ரகசியம்?! இதுவரைக்கும் சொல்லாம மெயின்டெயின் பண்றார் தெரியுமா?" என்று கண்ணீரோடு கோபித்தவள்,

"சரி அது ரகசியமாவே இருந்துட்டு போகட்டும் ஆனா நீ எங்க கைக்கு வந்த பிறகு உன்னை நாங்க பத்திரமா பார்த்துப்போம்.. உன் மேல சின்ன துரும்பு கூட பட விட மாட்டோம்.. நீ ஆசைப்பட்ட மாதிரி எங்களோடு வாழ நினைச்ச வாழ்க்கையை வாழலாம்.." என்று அறையினுள் நடந்து கொண்டே பேசியவள்,

"இன்னொரு விஷயம் கவனிச்சியா சஞ்சு..?!" என்று மகளை வருடியபடி அபய் அருகே அமர்ந்தாள்.

"என்னோட வளைகாப்பை உன் பிறந்தநாள் அன்னைக்கு குறிச்சிருக்காங்க.. இது எதேர்ச்சையா நடந்ததா இல்லை நீ நடத்துறியான்னு தெரியலை ஆனா எனக்கு ஒரு ஆசை இருக்கு.." என்ற போதே மனைவியின் பேச்சிலும் அசைவிலும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த அபய் அவள் அமர்ந்திருப்பதை கண்டு,

"என்ன ஆச்சு நயனி பெயின் ஸ்டார்ட் ஆயிடுச்சா? ஏன் உட்கார்ந்திருக்க? பாப்பா முழிச்சிருக்காளா?.." என்று அவள் வயிற்றை காதை வைத்தான்.

ஆனால் இத்தனை நேரம் விழித்திருந்த அவர்களின் மகள் நயினியின் ஸ்பரிசத்தில் மெல்ல உறக்கத்தை தழுவி இருந்தாள். 

"அச்சோ அபய் தூக்கம் வராம உட்காரந்திருந்தா உடனே பெயின் ஸ்டார்ட் ஆகிட்டதா அர்த்தமா? இப்ப எதுக்கு நீங்க இவ்ளோ ஹைப் ஆகறீங்க?”

பாஸ் இப்போ தான் ஒன்பது ஆரம்பிக்க போகுது பொதுவாவே பெண் குழந்தைகள் ஒன்பது மாதத்தை நிறைவு செய்துட்டு தான் பிறப்பாங்கன்னு சொல்லுவாங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நம்ம பொண்ணு வர இன்னும் நாளிருக்கு" என்றாள் சிரிப்போடு.

"உள்ள மேடம் ரொம்ப சேஃப்பா இருக்காங்களாம் நம்ம அவசரத்துக்கு எல்லாம் வர மாட்டாங்களாம் உங்க கிட்ட சொல்லி வைக்க சொன்னா.. ஆனா நீங்க என்னடானா இப்பவே லேபர்ல கொண்டு போய் சேர்த்துடுவீங்க போல"

"எங்கே பெயின் வந்துடுச்சோன்னு பயந்துட்டேன் நயனி.. உனக்கு கால் வலி ஒன்றும் இல்லையே?! போன வாரம் நடக்க முடியாம தூங்க முடியாம அவஸ்தப்பட்டியே..." என்றபடி அவள் கால்களை பிடித்து விட்டான்.

அவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  

தன்னால் நயனிகா அளவிற்கு காதலிக்க முடியுமா? என்ற சந்தேகத்தோடு அவளை காதலிக்க முயற்சி செய்தவனின் காதலில் ஒவ்வொரு நாளும் திளைத்து கொண்டிருந்தாள் நயனிகா.

சஞ்சு பற்றிய நினைவுகள் இருவருக்குமே அவ்வப்போது எழுந்தாலும் அவர்கள் அதை ஆரோக்கியமாக பகிர்ந்ததில் உள்ளம் தெளிந்த நீரோடையாக இருந்தது. அபய் மனதில் மெல்ல மெல்ல நயனிகா நீக்கமற நிறைய தொடங்கினாள்.

கர்ப்பமான நாள் முதலே அவள் கால்களை தரையில் பட விடுவதில்லை அபய். 

கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டவன் தினமும் தானே காலையில் சென்று தனலட்சுமியை அழைத்து வந்து விடுவான். 

என்ன தான் நிர்மலா மருமகளை மகள் போல பார்த்துக்கொண்டாலும்தனலட்சுமியை தான் மனைவியின் மனம் தேடும்என்பதை நன்கு அறிந்திருந்தவன் அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தான்.

அதனால் அவர்கள் முரளிதரன், சக்கரவர்த்தி குறித்த எந்த அச்சமும் இல்லாமல் வந்து செல்கின்றனர். 

நயனியை முதல் மூன்று மாதங்கள் எங்குமே ட்ராவல் செய்ய வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி விட்டதில் பத்து நிமிட தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு கூட அவளை அனுப்ப மறுத்து விட்டான் அபய். 

கணவன், தாய், மாமியார் என்று அனைவரின் கவனிப்பிலும் தாய்மையின் பூரிப்பிலும் மிளிர்ந்து கொண்டிருந்த நயனி தன் எதிரே இருந்த கணவனிடம், 

"அபய் எவ்வளவு கால் வலி இருந்தாலும் நீங்க பிடிச்சு விடும் போது அது மாயமா மறைஞ்சு போயிடுது" என்று  மற்றொரு காலையும் எடுத்து அவன் மடியில் வைக்க இரு கால்களையும் இதமாக பிடித்து விட்டான்.

"மணி பன்னிரண்டை தாண்டிடுச்சு இன்னுமாடி உனக்கு தூக்கம் வரலை? என்னை எழுப்பி இருக்கலாமே ஏன் தனியா உட்கார்ந்திருந்த?"

"நான் எங்கே தனியா இருக்கேன்?! அதுதான் நம்ம பொண்ணு என் கூட இருக்காளே! இவ்ளோ நேரம் அவகிட்ட தான் பேசிட்டு இருந்தேன். போதும் அபய் கால் வலி தெரியலை ஆனா இப்போ லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு"

"சரி ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு நான் சமைச்சு  எடுத்துட்டு வரேன்..." என்று அறைக்கதவை திறக்க போனவன்,

 

"இன்னைக்கும் ஸ்வீட் கார்ன் தானே?!" என்றான். 

"பரவால்ல பாஸ் ரொம்பவே தேறிட்டிங்க" என்று சிரித்தாள் நயனி.

 

"ஏன்டி, இத்தனை மாசமா எத்தனை மணிக்கு பசிச்சாலும் நீ கேட்கிறது ஸ்வீட் கார்ன் மட்டும் தான்! நான் எத்தனை வகை கொண்டு வச்சாலும் ஸ்வீட் கார்ன் சாப்பிடாமல் உனக்கு பசி அடங்காது…

அதனால தான் இப்போ எல்லாம் முதலிலேயே ஸ்வீட் கார்ன் கொண்டு வந்துடுறேன்.." என்று சமையலறைக்கு சென்றவன் சுட சுட ஸ்வீட் கார்னோடு வந்து சேர்ந்தான்.

அறையில் நடந்து கொண்டிருந்த நயனிகா துள்ளி குதிக்காத குறையாக அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வேகம் வேகமாக சாப்பிட தொடங்கினாள்.

"நயனி இந்த நேரத்துல கார்ன் அதிகமா சாப்பிட கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க.. அவங்களுக்கு தெரியாம தான் நான் கொண்டு வந்து இருக்கேன் மெதுவா சாப்பிடு.." என்றவன் கையோடு கொண்டு வந்திருந்த வெந்நீரையும் ஊற்றி கொடுத்தான்.

"அதெல்லாம் ஒன்னுமாகாது அபய். ஸ்வீட் கார்ன் இஸ் குட் ஃபார் ஹெல்த்.. லாஸ்ட் டைம் செக்கப் போன போதே டாக்டர் கிட்ட கார்ன் க்ராவிங் இருக்குன்னு சொன்னேன்.. அவங்க சொன்னது போல தான் டயட் எடுத்துக்கிறேன். டோன்ட் வொரி"

"நான் சமையல் அறை பக்கமே போனது கிடையாது, இந்நேரத்துக்கு என் அம்மா மட்டும் என்னை பார்த்திருந்தா.." என்று அபய் முடிக்கும் முன்னமே.,

"என்ன பண்ணிடுவாங்க? என் மருமகளுக்கு இது எல்லாம் பிடிக்கும், வாப்பா ராஜா சொல்லி கொடுக்கிறேன்னு என் மாமியார் உங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்க.. அவ்ளோ தான்!! இதுக்கு போயி அலட்டிக்கலாமா பாஸ்!!" என்றாள் புன்னகையோடு. 

"எல்லாம் நேரம் தான்டி! என் அப்பா உட்பட மொத்த குடும்பத்தையும் உன் விரல் அசைவுல ஆட்டி வைக்கிற.. எப்படி நயனி உன்னால முடிந்தது? அதுவும் எங்க அப்பா இப்போலாம் எந்த விஷயமா இருந்தாலும் அம்மா மூலமா இல்லை என் மூலமாக உன்னோட அபிப்பிராயத்தை கேட்காமல் செய்யறதே கிடையாது.. அந்தளவுக்கு அவரை பயமுறுத்தி வச்சிருக்க நீ!!" என்றான் சிரிப்போடு.

"அதை பார்த்தா உங்களுக்கு பயம் மாதிரியா தெரியுது?" என்று முறைத்தாள்.

"நிச்சயம் அவருக்கு உன் மேல மரியாதை இருக்கு, குற்ற உணர்ச்சி இருக்கு அதனால அப்படியும் சொல்லலாம். ஆனால் ஒன்னு சொல்லணும் நயனி நாம இந்த வீட்டை விட்டுப் போய் இருந்தா கூட அப்பா கிட்ட இந்த மாற்றம் வந்து இருக்குமான்னு தெரியாது..."

"ஆனா இங்கேயே இருந்து அதுவும் அவரோடு ஒரு வார்த்தை பேசாம அவரை எவ்வளவு மாத்தி வச்சிருக்க நீ!! அவருக்கான தண்டனையே உன்னை பார்க்கிறப்போ எல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகனும்னு அன்னைக்கு நீ சொன்னது சரி!!" 

"அப்ப கூட அவர் இப்படி மாறுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... அதேநேரம் அவரோட உணர்வை புரிஞ்சுகிட்டு குழந்தையை பற்றி உன்னோட உடல்நிலை பற்றி கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ற, முன்ன மாதிரி அவரை மொத்தமா அவாய்ட் பண்ணிடலை.. 

ஆம் குழந்தையின் வரவிற்கு பின் நயனியிடம் பெரும் மாற்றம். முன்பு மாமனாரை மன்னிக்க தயாராக இல்லாதவள் இப்போது தாய்மை கொடுத்த மகிழ்ச்சியில், பூரிப்பில் மற்றவர்களை விட குழந்தை மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டாள்.

அதோடு சக்கரவர்த்தி அவளுக்கு அளிக்கும் முக்கியத்தும், எங்குமே அவளை விட்டு கொடுக்காதது, தங்கள் மகளின் வரவை கொண்டாடுவதாகட்டும், நயனியின் பத்திரத்தை உறுதி செய்வதாகட்டும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் நயனி அவருக்கு செவி மடுக்கா விட்டாலும் தன் தவறுக்கு அவளிடம் வருந்துவது என்று சக்கரவர்த்தியிடம் பல மாற்றங்கள். 

அதனால் மாமனாரை முன்பு போல ஒதுக்கி வைப்பதில்லை. 

நீ அவருக்கு கொடுத்த மன்னிப்பு அவரோட பேச்சை, செயல்பாடுகளை மாத்தி இருக்கு. முன் இருந்த செருக்கு அவருக்கு இப்போ இல்லை. இந்த மாற்றத்துக்கு உன்னை தவிர வேற யாரும் காரணமில்லை, கிரேட் ஜாப் நயனி!!" என்றதற்கு அவளிடம் மெல்லிய புன்னகை மட்டுமே.

 

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17