வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 14.1

காலை சிவபாலனுக்கு அழைத்த வனிதா உடனே தம்பிக்கும் அழைத்து விஷயத்தை சொல்லி விட்டாள்.


நகை, சீர் பற்றி ரிஷி வீட்டிற்கு வந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று சிவபாலன் சொன்னதை கேட்காத இந்திராவும் மகனுக்கு அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசினார். 


அனைத்தையும் கேட்டு முடித்த ரிஷிக்கு உண்மையில் மண்டை சூடேறி போனது.


அதேநேரம் வனிதாவின் மிரட்டலில் ஏற்கனவே இதற்கு தயாராக இருந்த ரிஷி சிந்துவிற்கு செய்யும் சீருக்கான பணத்திற்கு என்ன செய்வது என்றும் முடிவெடுத்து இருந்தான். 


அதை இப்போது செயல் படுத்த வேண்டிய நிலை வந்ததில் நொடியும் தாமதிக்காமல் நண்பனுடன் கிளம்பி சென்றான். 


“ண்ணா, என் ப்ரெண்ட் பத்தி ஏற்கனவே சொல்லி இருந்தேனே..” என்று ராம் ரிஷியை மகேந்திரனுக்கு அறிமுக படுத்தினான். 


“ஏற்கனவே ராம் விஷயத்தை சொன்னான். பணத்தை பற்றி கவலை பட வேண்டாம் என்ன ஒன்னு ஜாமீன் கையெழுத்து போட்டாலும் எந்த பிடிப்பும் இல்லாம நான் தொழில் செய்யறது இல்லை..” என்றார்.


“தெரியும் ஸார் ராம் சொல்லி இருக்கான்…” 


“இன்னைக்கு பத்திரத்தோடு வந்தாலும் எனக்கு சரி தான் தம்பி. நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ் ஆரம்பிச்சுட சொல்றேன் நாளை மறுநாள் ரிஜிஸ்ட்ரேஷன் முடிச்சுட்டு பணத்தை வாங்கிக்கோ..”


“நீயும் உன் பொண்டாட்டியும் சம்பாதிக்கிறதா ராம் சொன்னான்.. இரண்டு வருஷத்துல பதினஞ்சு லட்சத்தை அடைக்கிறது உங்களுக்கு ஒன்னும் கஷ்டமா இருக்காது..”


“ஸார் எனக்கு குழந்தைங்க பிறக்க போகுது..”


“அதனால என்னப்பா உன் பொண்டாட்டி லீவுல இருந்தாலும் ஆறு மாசமும் சுளையா சம்பள பணம் பேங்க்குல வந்து விழுந்துட தானே போகுது…அப்புறம் எதுக்கு மூணு வருஷம்?.. தேவையில்லாம இன்னும் பன்னெண்டு மாசம் நீ வட்டி கட்டனும் எனக்கும் நஷ்டம்..”


“ஸார், பாதி வட்டி முதல்ல பிடிச்சுட்டு மீதி வட்டியை நான் கடைசியா செட்டில் பண்றதா சொல்லி இருந்தேன்.. அதனால..”


“எப்படி கட்டுறங்கிறதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை தம்பி. நூர்த்துக்கு எல்லாரும் அஞ்சு ரூபா வாங்குறாங்க ராம் முகத்துக்காக தான் உனக்கு மூணு ரூபாய்க்கு கொடுக்க சம்மதிச்சேன்.. பாதி வட்டி பணத்தை பிடிச்சுட்டு தான் கொடுப்பேன் ஆனா மீதியை ஒரு வருஷம் கழிச்சு மாசம் ஒன்னாம் தேதியான நாற்பத்தி அஞ்சாயிரம் வட்டி எனக்கு வந்தாகணும்..”


“பொதுவாவே நான் ஒரு வருஷம் தான் அக்ரிமென்ட் போடுறது. ஆனா ராம் சொன்னதால தான் உங்களுக்கு மட்டும் அக்ரிமென்ட் பீரியட்டை ரெண்டு வருஷமாக்கி இருக்கேன்  அதுக்குள்ள பணத்தை முழுசும் திரும்ப கொடுத்துடணும் இல்லை இடம் எனக்கு சொந்தமாகிடும், புரியுதா?” என்று சொல்லிவிட்டார். 


ஏற்கனவே இதை பற்றியெல்லாம் ராம் அவனுக்கு சொல்லி இருந்தாலும் இப்போது அவர் வாய் வார்த்தையாக கேட்கும் போது எப்படி கடனை அடைக்க போகிறோம் என்ற பயம் நெஞ்சில் எழாமல் இல்லை. 


எங்கே இது அவனையே மூழ்கடித்து விடுமோ என்ற எண்ணம் எழுந்த போதிலும் அவனுக்கு வேறு வழியில்லாததால் அனைத்திற்கும் சம்மதித்த ரிஷி நண்பனிடம் அடுத்து செய்ய வேண்டியதை கலந்தாலோசித்து விட்டு மாலை நான்கு மணி போல வீட்டிற்கு வந்தான். 


ஆனால் அவனுக்கு முன்பாகவே மகா அங்கு வந்து சேர்ந்தது மட்டுமல்லாமல் ‘இனி வேலைக்கு போக போவதில்லை’ என்றும் சொல்லிக்கொண்டு இருந்தாள்..


ஆம், வேலையை விட வேண்டிய சூழல் உருவாகி விட்டது.


வழக்கத்திற்கு மாறாக மதியம் இரண்டு மணி போல மகா வந்த போது தனியாக வரவில்லை. 


ஜெயசித்ராவும் இன்னும் இருவரும் அவளை அழைத்து வந்திருந்தனர்.


‘வந்தது மட்டுமல்லாமல் முடியாத நிலையில் அவளை எதற்கு வேலைக்கு அனுப்புகிறீர்கள்? முடிந்தவரை பிரசவம் முடிந்து ஒரு வருடம் கழிந்த பிறகு தான் அவள் அலுவலகத்திற்கு வர வேண்டும்.. அவளுக்கும் குழந்தைகளுக்குமான கவனிப்பு  தேவை. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..” என்று ஏகத்திற்கும் அறிவுரை சொல்ல சிவபாலன் ஒன்றும் புரியாமல் மருமகளை பார்த்தார். 


நல்லவேளை இந்திரா அந்நேரம் வெளியில் சென்றிருந்ததார். இல்லையென்றால் அவர்கள் பேசிய பேச்சிற்கு ரசாபாசமாகி போயிருக்கும். 


அதிலும் ஜெயசித்ரா கிளம்பும் முன் மீண்டும் மகாவிடம், “யார் சொன்னாலும் கேட்காத, உன்னோட ஹெல்த் குழந்தைகளோட க்ரோத் தான் இப்போதைக்கு முக்கியம் ஸோ யோசிக்காம பேப்பர் போட்டுடு..” என்று உறுதியாக சொல்லி விட்டு கிளம்பினாள்.


அவர்கள் கிளம்பவும் “என்ன ஆச்சு லட்சுமி?” என்று சிவபாலன் விசாரிக்க, “இன்னைக்கு லிஃப்ட்ல இருந்து வெளியில வந்து நடக்கும் போது திடீர்னு தலை சுற்றல் அதிகமாகி மயங்கி விழ போயிட்டேன் மாமா…”


“நல்லவேளை இதை கவனிச்ச என் டீம் மெம்பர் உடனே ஓடி வந்து பிடிச்சதால கீழ விழாம போனேன் இல்லைனா நான் விழ இருந்த வேகத்துக்கு வயிறு தரையில மோசமா இடிச்சு இருக்குமாம்.. ஏற்கனவே என் நிலைமையை பார்த்துட்டு எல்லாரும் லீவ் போட சொல்லி சொன்னாங்க ஆனா நான் தொடர்ந்து வந்ததுல ஜெய்க்கு கோபம்..”


“என்னமா இந்தளவுக்கா?”


“ஆமாம் மாமா, வழக்கம் போல தலை சுற்றல்னு நினைச்சு சமாளிச்சுடலாம்னு இருந்தேன் ஆனா கண்ணு இருட்டிடுச்சு, என்ன நடந்ததுன்னு எனக்கு எதுவுமே தெரியலை.. கூட இருந்தவங்க சொன்னதுல தான் தெரிஞ்சது. உடனே என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டாங்க.. ட்ரிப்ஸ் போட்டாங்க, ரொம்ப வீக்கா இருக்கிறதால ஃபுல் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க..”


“சம்மந்திக்கு தெரியுமா ம்மா..” 


“ஏற்கனவே ஜெய் அப்பாவுக்கு கால் பண்ணட்டா வெளியில இருக்காங்களாம் வரேன்னு சொன்னாங்க மாமா..” என்று சொல்லிக்கொண்டிருக்க, 


“என் பையனும் புருஷனும் உன் வேலையை இழுத்து போட்டு செய்துட்டு இருக்கிறது நீ வீட்ல ஹாயா கால் ஆட்டிட்டு உட்கார்ந்துட்டு இருப்பியா?” என்று  இந்திரா மருமகளை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்.


அப்போது தான் ரிஷி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. 

“என்ன ம்மா இவ்ளோ சத்தம்?” என்று வாசல் வரையில் கேட்ட இந்திராவின் குரலில் எரிச்சலுடனே உள்ளே வந்தான். 

“உன் பொண்டாட்டி வேலையை விட்டு நிற்க போறாளாம். அவ தோஸ்த்துங்க வந்து இங்க நாட்டாமை பண்ணிட்டு போயிருக்காங்க இவளும் அவங்க தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடிகிட்டு இருக்கா..” என்று அங்கலாய்த்தார்.

பத்திரம் எடுக்க வந்தவன் இந்திராவின் பேச்சில் அதிர்ந்து போனான். 

“அம்மா சொன்னது உண்மையாடி?”

“ஆமா ரிஷி, ஆனா இன்னைக்கு நானே எதிர்பார்க்காத விதமா..” என்றவளின் விளக்கத்தை கூட கேட்க அவன் தயாராக இல்லை. 

மகா வேலையை விடப்போகிறேன் என்றதிலேயே அவன் கொதி நிலைக்கு சென்றிருந்தான். 

“அப்போ எதுக்குடி அன்னைக்கு ஒத்துக்கிட்ட?” என்று சீறினான்.

“ரிஷி ப்ளீஸ் என்னோட நிலையை புரிஞ்சுக்கோங்க. பொதுவாவே ப்ரெக்னேன்சி ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா, பீஸ்ஃபுல்லா, சந்தோஷமா இருக்கணும். அது குழந்தைகளோட..” என்றவளை இடையிட்டு,

“நிறுத்துடி! அன்னைக்கே உன் கிட்ட தெளிவா பேசினேன் தானே?! அப்போ மட்டும் பூம்பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு இப்போ முடியாதுன்னு சொல்ற? என்ன என்னை பார்த்தா இளிச்சவாயன்னு நெத்தியில எழுதி ஒட்டி இருக்கா? இல்லை எவனாவது கிடைச்சா போதும்னு காத்திருந்தவ என்னை ஏமாத்த பார்க்கிறியா?” என்றதில் நொறுங்கிப் போனாள் மகாலட்சுமி.

“என்ன பேசுறீங்க நீங்க?”

“பின்ன என்னடி? அன்னைக்கே தெளிவா குழந்தையை காரணமா வச்சு வேலையை விடுறது இருக்க கூடாதுன்னு நான் சொன்னேன் தானே? அப்படி இருந்தும் இப்பவே வேலையை விட்டு நிற்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“நீங்க நினைக்கிற மாதிரி ஒரு அர்த்தமும் இல்லை. என்னால நிஜமாவே முடியலைங்க. அதிகமான தலைச்சுத்தல் இருக்கு. அதுக்கு மேல வாந்தி. தண்ணி குடிச்சா கூட உடனே கொமட்டிக்கிட்டு வருது. என்னால தொடர்ந்து வேலை பார்க்க முடியலை.. சொன்ன நேரத்துக்கு முடிக்க முடியல. என்னோட கலீக்ஸ் எவ்வளவுதான் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுவாங்க?”

“எனக்கு திரும்ப திரும்ப அவங்க கிட்ட போய் நிற்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. இப்ப புது ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குது ஓ.டி பார்க்க சொல்லி இருக்காங்க.. ஆனா நான் இப்போ இருக்கிற நிலைக்கு..” என்றவளை முழுதாக முடிக்க கூட விடாமல், 

“ஏய் நிறுத்துடி. டெலிவரி ஆகறதுக்கு முதல் நாள் வரைக்கும் ஆஃபீஸ்க்கு வந்த பொண்ணுங்களை பார்த்திருக்கேன்.. ஆனா நீ என்னமோ ஆறு மாசத்துக்கே இல்லாத வித்தை காட்டுற…”

“கடவுளே! உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு புரியல ரிஷி…”

“ஏய் இப்ப நீ வேலைய விட்டு நின்னுட்டா அறுபத்தி ஐந்தாயிரம் மாசம் மாசம் சுளையா உன் அப்பனா கொடுப்பான்?” என்றான் அடக்க முடியாத ஆத்திரத்தோடு.

“ரிஷி, மைண்ட் யோர் லாங்குவேஜ். பலமுறை சொல்லிட்டேன், இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசாதீங்க. பேச்சு உங்களுக்கும் எனக்கும் தான் அதுக்கு இடையில எதுக்கு என் அப்பாவை இழுக்குறீங்க?” என்று மருமகள் மகனை பேசியது இந்திராவுக்கு தாங்கவில்லை.

“என் புள்ள சரியா தானடி கேட்கிறான்... ஏன் எங்களுக்கெல்லாம் மசக்கை இருந்ததில்லையா? அதையும் தாண்டி நாங்க சோறாக்கி போட்டு வீட்டு வேலை செஞ்சு, காட்டு வேலையும் செஞ்சிருக்கோம். ஒரு நாளும் இப்படி புருஷனை எதிர்த்து கிட்டு நின்னது கிடையாது..”

“வாந்தி, தலைச்சுத்தல் இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து எழுந்து நாங்க செஞ்சிருக்கோம். உன்னை மாதிரி நொண்டி சாக்கு சொன்னது கிடையாது..”

“அத்தை, உங்க காலம் வேற, இந்த காலம் வேற… என் நிலைமை புரியாம பேசாதீங்க..” என்று மகா சற்று குரல் உயர்த்திய மறுநொடியே "வாய மூடுடி!!" என்று மனைவியை அடக்கினான் ரிஷிவரதன்.


Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3