வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 16.1

 


“என்னம்மா சொல்ற?” என்று இந்திரா சொன்னதை நம்ப முடியாமல் கேட்டாள் வனிதா. 


“ஏன்டி இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன் திரும்ப இதென்ன கேள்வி.. இவ்ளோ நேரமா காதை எங்க வச்சிருந்த?” 


“ம்மா சத்தியமா நம்ப முடியல… ஆனா எனக்கு அப்பவே தெரியும் என் பொண்ணுக்கு எதையுமே உன் மருமகள்  ஆக விட மாட்டான்னு..”

 

“அவ யாருடி அதை முடிவு பண்றதுக்கு? நேத்து வந்தவளுக்கு என்ன தெரியும்?! என் பேத்திக்கு எல்லாமே நான் ஜாம் ஜாம்னு செய்வேன்..” 


“அதுக்கு அவ விட்டா தானே ம்மா..” என்று ஆற்றாமையோடு கேட்டவள், 


“பார்த்தியா எப்படியெல்லாம் நாடகம் நடிச்சு சரியான நேரத்துல வீட்டை விட்டு கிளம்புறா..” 


“என்னடி சொல்ற?”’


“பின்னே என்னம்மா?! இவ ஹாஸ்பிடல் போனேன்னு சொன்னது உண்மையா பொய்யான்னு யாருக்கு தெரியும்? போகாமலே போயிட்டு வந்ததா நாடகமாடி வேலையை விடப்போறேன்னு ஏழரையை கூட்டி என் தம்பியை ஏமாத்தி இருக்கவும் வாய்ப்பு இருக்கு..”


“ஆனா ரொம்ப நாளாவே என் உள் மனசு சொல்லிட்டே இருந்துச்சு கண்டிப்பா இப்படி ஏதாவது ஒரு தடங்கல் வரும்னு.. இப்போ அது உண்மையாகிடுச்சு பார்த்தியா ம்மா..” என்று ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டாள் வனிதா. 


“ஹே வனிதா அழாதடி. நல்ல காரியம் நடக்க போகுது சொன்னா கேளுடி..” என்ற போதும் அவள் அழுகை நிற்காமல் தொடர்ந்தது. 


“அடியே முதல்ல அழறதை நிறுத்து. அவ என்ன தடுத்தாலும் நான் அப்படியே விட்டுடுவேனா என்ன? என் பேத்திக்கு சேர வேண்டியது யார் தடுத்தாலும் வந்து சேரும்..” 


“எப்படி மா சொல்ற? நான் கூட அவ நகையை சிந்துவுக்கு போடுவீங்கன்னு நினைச்சேன் ஆனா ரிஷி வேற ஏற்பாடு பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? ஆனா இப்ப எல்லாமே நாசமா போச்சு…”


“நான் என்ன எவனையாவது இழுத்துக்கிட்டு போயிட்டேனா இல்லை உங்க வார்த்தையை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? நீங்க சொன்னவரை தானே கட்டிகிட்டேன். ஆனா இந்த மனுஷனை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்? என் பொண்ணுங்களாவது நல்லா இருக்கணும்னு நினைச்சேன் ஆனா என் வாழ்க்கையை தான் கந்தல் கோலமாக்கிட்டிங்கன்னு பார்த்தா இப்போ என் பொண்ணுங்க வாழ்க்கையும் அவ்ளோதானா?” 


“இதுக்கு மேல எதுக்கு நான் உயிரோட இருக்கணும்? மானங்கெட்டு வாழறதுக்கு பேசாம என் ரெண்டு பொண்ணுங்களையும் சாகடிச்சுட்டு  நானும் செத்துப் போறேன்.. நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்க..”  


“அறிவு கெட்டவளே! என்ன வார்த்தை பேசுற.. இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு சாகவா உன்னை பெத்தேன்? நீ எதை பத்தியும் கவலைப்படாதே சிந்துவுக்கு சேர வேண்டியதை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு!!” என்று மகளை தேற்றினார்.  


அதேநேரம், “அம்மாடி லட்சுமி அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.. வனிதா கொடுத்த நெருக்கடியிலும் கண்மூடித்தனமான கோபத்துலயும் புத்தி கெட்டு பேசிட்டு இருக்கான்.. நீயும் சரிக்கு சரியா இருக்க வேண்டாமே.. கொஞ்சம் பொறுமையா இரு மா..” என்றார் சிவபாலன். 


“கோபமா இருந்தா, நான் எந்த நிலையில இருக்கேன்னு கூட அவருக்கு தெரியாம போயிடுமா மாமா.. நெருக்கடி கொடுத்தாங்கன்னு என்ன வேணும்னாலும் பேசலாமா? அவர் இஷ்டத்துக்கு கை நீட்டலாமா?..”


“அம்மாடி, அப்படி செய்திருக்க கூடாது தான்…” என்றவரை இடையிட்டு,


“நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது மாமா. இது இதோட நிற்காது சிந்துவோட பங்க்ஷன் வரைக்கும் நிச்சயம் தொடரும்… ஆல்ரெடி டாக்டர் பிரஷர் அதிகமாகி இருக்கு தேவையில்லாத ஸ்ட்ரெஸ் எடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்க.. இதுக்கு மேலயும் இங்கிருந்தா நிச்சயம் அவரோடு என்னால போராட முடியாது..” 


“இல்லம்மா அப்படி இல்லாம நான் பார்த்துக்கறேன்.. விசேஷத்துக்கு இன்னும் நாலு நாள் இருக்கே நான் சொந்த பந்தத்தில், தெரிஞ்சவங்க கிட்ட பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்…


“உன்னோட சொத்து பத்திரத்தை கொடுக்க வேண்டாம். உன் விருப்பப்படி அது என் பேரன் பேத்திக்கு சேரட்டும் வேற யாருக்கும் போக வேண்டாம்….” என்ற சிவபாலனுக்கு இப்போது பேத்தியின் சடங்கை விட மகன் மருமகள் வாழ்க்கை குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமாகப்பட்டது.


“என்ன பேசுறீங்க நீங்க? யாரை கேட்டு இந்த முடிவுக்கு வந்தீங்க?” என்ற இந்திரா, “வயித்துல இரண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு இருக்கிறவளுக்கு இவ்வளவு ஆணவம் கூடாது… புருஷனுக்கு கட்டுபடாம படி தாண்டி போறவளுக்கு இனி என் வீட்ல இடம் இல்லை..” என்றார் பாக்கியலட்சுமியிடம்.


“என்னங்க..” என்று அவர் தினகரனை பார்க்க, “என் பொண்ணை நான் இங்க திரும்ப அனுப்ப போறதா எப்போ சொன்னேன்?” என்றதில் சிவபாலன் அதிர்ந்து நிற்க, 


“ஓஒ அப்படியா? உங்க பொண்ணை அனுப்ப சொல்லி நானும் கேட்கலை ஆனா அவ வயித்துல இருக்கிறது என்னைக்கு இருந்தாலும் எங்க குடும்ப வாரிசுங்க எங்களுக்கு தான் சேரனும்.. வீட்டை விட்டு போனா…” என்றவரை இடையிட்டு, 


“என்னமா பண்ணிடுவீங்க? உங்களால என்ன முடியுமோ அதை பண்ணுங்க, எனக்கு என் பொண்ணு முக்கியம்..” என்ற தினகரன் மேலும் பேசும் முன் “என்னங்க கொஞ்சம் அமைதியா இருங்க.. அவங்களுக்கு சரிக்கு சரியா பேசாதீங்க.. குழந்தைகளை பாருங்க..” என்று அவரை தடுத்து தூர அழைத்து சென்றார் பாக்கியலட்சுமி. 


“ஏய் என்னடி..” என்று இந்திரா ஆரம்பிக்கவுமே அவர் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்த சிவபாலன், “இன்னொரு வார்த்தை பேசின கன்னம் பழுத்துடும்.. அக்கம் பக்கம் யார் இருக்கான்னு பார்க்க மாட்டேன்.. பிரச்னையை தீர்க்க பார்த்தா நீ ஊதி பெருசாக்கிட்டு இருக்க, உள்ளே போடி!!” என்று அவரை அனுப்பி வைத்தவர் மீண்டும் மருமகளிடம் வந்தார். 


“லட்சுமி இனி சிந்துவோட சடங்கு சம்பந்தமா யாரும் உன்கிட்ட பேசாம நான் பார்த்துக்கிறேன்.. நீ உன்னையும் குழந்தைகளையும் பார்த்துகிட்டு இரு மா.. வீட்டை விட்டு போக வேண்டாம்..”


“மாமா ப்ளீஸ் என்னை சங்கடபடுத்தாதீங்க..சடங்குக்கு இன்னும் நாலு நாள் இருக்கலாம் ஆனா இவர் என்னை நாலு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டார். திரும்பத் திரும்ப அதே பேச்சை எடுத்து எனக்கு தேவையில்லாத மன உளைச்சல் கொடுக்க தான் பார்ப்பார்…”


“ஒருவேளை உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு என்னை கட்டாயபடுத்தாம இருந்தாலும் என்கிட்ட இருந்து ஒதுங்கி, பேசாம என்னை இன்னுமே கஷ்டப்படுத்த தான் பார்ப்பாரே தவிர்த்து மாறுவாருங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை..”


“அம்மாடி!!”


“மாமா என் அண்ணிகளோட பிரசவ காலத்தை பக்கத்துல இருந்து பார்த்தவ நான்! எங்க அம்மா அப்பா அண்ணான்னு யாருமே அவங்களை ஒரு வேலை செய்ய விட்டது கிடையாது..  குழந்தை பிறக்கும் வரை எப்படி தாங்கியிருப்போம் தெரியுமா? அவங்களுக்கு வளைகாப்பு பண்ணி அனுப்பும் போது எங்களை விட்டு பிரியறதை நினைச்சு வருத்தப்பட்டு அழுதாங்க..”


“சின்ன அண்ணி கர்ப்ப காலத்தில் அண்ணாவால பல நேரம் பக்கத்தில் இருக்க முடியாம போனாலும் நான், அம்மா பெரிய அண்ணி யாருமே அவங்களை தனியா விட்டது கிடையாது அவங்க மனசு சின்னதா கூட வாட விட மாட்டோம். வெளியில் போனாலே அவங்களுக்கு பிடிச்சது வாங்காம யாருமே வீட்டுக்கு வர மாட்டோம். சாப்பிட முடியாமல் திணறி போவாங்க…”


“சாயங்காலத்தில் அண்ணி கூட நான் தான் துணைக்கு வாக்கிங் போவேன் பகல்ல பெரிய அண்ணியும் அம்மாவும் சுகப்பிரசவம் ஆகணும் என்பதற்கான எக்சர்சைஸ், வேலைகள் மட்டும் தான் செய்ய வைப்பாங்களே தவிர்த்து என்னைக்குமே அவங்களுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது..” 


“யாரோட விஷயமா இருந்தாலும் சின்ன பிரச்சினையை கூட அவங்க கிட்ட கொண்டு போக மாட்டாங்க, பெரிய அண்ணா அண்ணி கன்சீவான முதல் ஏழு மாசத்துக்கு ஊர்ல இல்ல. அதுக்கப்புறம் ரெண்டு மாசம் லீவ்ல வந்தவர் குழந்தை பிறக்கிற தேதி வரைக்குமே இருக்க முடியல..”


“அவசரம்னு கிளம்பிட்டார். பட் அன்னைக்கு அந்த கஷ்டம் தெரியாத அளவுக்கு நாங்க அவங்களை சந்தோஷமா வச்சுக்கிட்டோம். ஆனா இங்க எனக்கு அப்படியா இருக்கு? நீங்களே சொல்லுங்க..” என்று கேட்க சிவபாலனால் பதில் அளிக்க முடியவில்லை


“உங்க பிள்ளைக்கு பொண்டாட்டியோட அருமையே தெரியல மாமா. ரத்தத்தை உறிஞ்சுற அட்டைப்பூச்சி மாதிரி புருஷன் என்கிற பெயரில் என்கிட்ட இருந்து எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா உறிஞ்சிட்டு இருந்திருக்கார். அவர் மேல வச்ச கண்மூடித்தனமான பாசத்துல எனக்கு இவ்வளவு நாள் அது தெரியாம போயிடுச்சு..” என்றவளுக்கு என்ன முயன்றும் தன்னை மீறி கண்ணீர் பெருக்கெடுத்தது. 


“கல்யாணமான இத்தனை மாசத்துல இப்ப தான் இந்த விஷயமே எனக்கு புரிஞ்சிருக்கு. புரிஞ்ச பிறகும் நான் முழிச்சுக்கலைன்னா எப்படி மாமா?”


“லட்சுமி அவன் அப்படி கிடையாது ம்மா.. ஆனா சூழ்நிலை தான்..”


“இல்லை மாமா எந்த சூழ்நிலையா இருந்தாலும் அன்னைக்கு அவ்வளவு சுலபமா நீ யாருடின்னு கேட்டிருக்க மாட்டார். அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் இப்போ வரை உயிரை அறுத்துகிட்டு இருக்கு மாமா.. நீங்களே சொல்லுங்க உங்களை பார்த்து இந்த கேள்வி கேட்டிடுவாரா?” என்று கசந்த புன்னகையோடு பார்த்தவள், 


“தொட்டு தாலி கட்டினவருக்கு என்னை யாருன்னு தெரியலையா? உங்களுக்கு தெரியாம இருக்காது இந்த வீட்ல நான் யாருன்னு அதே கேள்வியை அவர்கிட கேட்டதுக்கு சட்டுன்னு பதில் வரல.. பல நாள் கழிச்சு பத்திரத்துக்காக பொண்டாட்டிங்கிற பதில் வந்தது…”


“ஆனால் அதுக்கான முழுமையான அர்த்தத்தை நான் சொல்லவும் தான் என்னை அடிச்சார்…”


“அம்மாடி நீ இந்த வீட்டு மருமகள், மகாலட்சுமி எனக்கு இன்னொரு மகள்.. உனக்கு இந்த வீட்ல சகல உரிமையும் இருக்கு, அதை அவன் சொல்லி தான் உனக்கு தெரியனுமா? நான் சொல்றேன் மா..” என்றவருக்கு தன் வீட்டில் வாழ வந்த பெண் இப்படி மனம் நொந்து செல்வதை தாங்க முடியவில்லை.


 பெண்களின் கண்ணீர் சக்தி வாய்ந்தது. எப்பேர்பட்ட சாம்ராஜியத்தையும் தகர்க்க வல்லது. அப்படியிருக்கையில் அவர் குடும்பம் எம்மாத்திரம்?! முடிந்தவரை மருமகளின் கண்ணீர் துடைத்து அவளை தேற்ற முற்பட்டார். 


“இந்த வீட்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம் மாமா.. ஆனா உங்க யாரோட அனுமதியும் இல்லாம இங்கிருந்து ஒரு குண்டூசியை நான் எடுத்து அடுத்தவங்களுக்கு கொடுத்திட முடியுமா சொல்லுங்க மாமா?” என்றதில் பதிலற்று நின்றார். 


“முடியாது தானே?! என் புருஷனுக்கும் என்கிட்டே எல்லா உரிமையும் இருக்கு. நான் இல்லைன்னு மறுக்கலை ஆனால் எனக்கு கொடுத்த சொத்தை அடமானம் வைக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்கணும்னு கூட அவருக்கு தோணல.. அது தப்பு தானே?!  தோணலையா இல்ல புரியலையான்னு எனக்கு தெரியலை..”


“ஒருவேளை நான் இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் போட யாரையும் கேட்காம தனியா முடிவெடுத்தா என்னை சும்மா விட்டுடுவாரா மாமா?” என்றவளின் எந்த கேள்விக்குமே அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 


“எப்படி இருந்தாலும் அவருக்கு நான் ஒன்றுமே இல்லை என்பதை மட்டும் தெளிவா புரிஞ்சுகிட்டேன். அவர் என்னை எப்போ புரிஞ்சுக்கிறாரோ அன்னைக்கு நான் திரும்ப வரேன். இப்போ  நீங்க எனக்காக ஏதாவது செய்யணும்னு விரும்பினா தயவு செஞ்சு என்னை தடுக்காதீங்க.. சந்தோஷமா அனுப்பி வைங்க.. உங்களை கஷ்டபடுத்திட்டு கிளம்ப எனக்கும் மனசில்லை..” என்று சொல்ல அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். 


Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - டீசர்