வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 26

 


'தளிர் தன்னோடு இரண்டு மாதங்கள் வாழ்ந்த பின்னர் காணாமல் போய்விட்டாள்' என்று சரத் சொன்னது அதன்பின் உதய் அவனை அடித்தது எல்லாமே அத்தனை வேகமாக பகிரப்பட்டதில் சோஷியல் மீடியா முழுக்க உதயாதித்தனும் இளந்தளிரும் தான் தலைப்பாகி போயிருந்தனர்.

சரத்தோடு வாழ்ந்த வாழ்க்கையை மறைத்த தளிர் குழந்தையையும் மறைத்துவிட்டாளோ..? உதய்க்கு  மாற்றான் மனைவிதான் கிடைத்தாளா..? இத்தனை வசதி இருந்தும் திருமணமானவளை மணமுடிக்க முயன்றதற்கு என்ன காரணம்..

ஒருவேளை அவனுக்கு தந்தையாகும் தகுதியில்லாததால்  ஏற்கனவே குழந்தையோடு இருக்கும் பெண்ணை மிரட்டி சம்மதிக்க வைத்திருப்பதாக என்று யூகத்திற்கு பஞ்சமின்றி ஆளாளுக்கு புதுப்புது கதை புனைந்து வீடியோ வெளியிட்டிருக்க அதை விஞ்சியது அதற்கு கிடைத்த பின்னூட்டங்கள்.

ஓரிருவர் இளந்தளிர் உதயாதித்தனின் பணத்திற்காக  அவனிடம் இருந்து உண்மையை  மறைத்திருப்பாள் என்று சொல்ல ஒரு சிலர் தளிர்  போன்ற பெண்கள் பெண் இனத்திற்கு சாபக்கேடு என்றும் அப்பாவி சரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் சரத்திற்காக போர்க்கொடி உயர்த்தி இருந்தனர்.

பின்னே அவன் கொடுத்த காணொளிகள் புகைப்படங்கள் தளிரை தவறானவளாகவும் சரத்தை நிரபராதியாகவும் சித்தரிக்க போதுமானதாக இருக்கையில் சிறுவயது முதல் பழகிய தோழனை அவன் நேசத்தை பணத்திற்காக விட்டுச் சென்றவளை தண்டிக்க வேண்டும் என்பவர்களின் கோரிக்கையில் தவறில்லை..!

இதையெல்லாம் இடுங்கிய கண்களுடன் தன் கைபேசியில் பார்த்து கொண்டிருந்த  உதயாதித்தனின் முகம் உணர்வுகளற்று போக அவன் புருவமத்தி வெகுவாக சுழிந்திருந்தது.

அவன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்த ராகவன் "மச்சான் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதடா அவங்களுக்கு உண்மை என்னன்னு தெரியுமா..? கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு பார்க்கிறதை வச்சு முடிவு பண்ணி பேசறாங்க ஒவ்வொருத்தருக்கும் நாம விளக்கம் கொடுக்க முடியாது ப்ளீஸ் நீ ஃபீல் பண்ணாதடா.. இது எதுவுமே நிஜம் இல்லை என்று நமக்கு தெரியும்! உண்மை தெரியாதவங்க இப்படித்தான்டா பேசுவாங்க ஆனா இதுவும் கடந்து போகும் மச்சான்" என்று நண்பனை தேற்ற முயன்றான்.

ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கண்களை மூடி தலை சாய்த்து கொண்ட உதய் “நீ இன்னும் தளிரை நம்பறியாடா..?" என்றான்.

என்னடா சொல்ற..? ஒரு வீடியோ ஃபோட்டோ போதுமா ஒருத்தரை நாம தப்பா நினைக்க? அதுவும் AI எல்லாம் சாதாரணமாகி போயிருக்கும் இந்த காலத்துல! யாரு என்னன்னு தெரியாதவங்களை ஃபேக்கா என்னனாலும் செய்யலாம். அந்த பொறுக்கி தளிரோட பிரெண்ட்டா இருந்திருக்கான் வலுக்கட்டாயமா தாலி கட்டியிருக்கான்...”

“இந்த வீடியோ ஃபோட்டோல்லாம் உண்மையாவே இருந்தாலும் அவன் நட்புக்கு துரோகம் செய்திருக்கான். கூட படிச்ச பெண்ணை காதல் என்ற பெயரில் கலங்கபடுத்தியிருக்கான்.. இதுக்கு எதுக்கு நான் தளிரை நம்பாமல் போகணும்" என்று காரை ஓட்டியவாறே ராகவன் பேசிக்கொண்டே செல்ல,

தளிர் அன்ட் சரத் ஆர் லீகலி வெட்டட்" (இருவரும் சட்டப்படி திருமணம் செய்திருக்கின்றனர்) என்று உதய் கண்களை திறக்காமல் கரகரத்த குரலில் சொல்லவும் சட்டென காரை ப்ரேக்கிட்டு நிறுத்திய ராகவன் அதிர்வோடு உதய் புறம் திரும்பினான்.

இப்பவும் தளிரை நம்பறியா..? என்று உதய் நண்பனை ஆழ்ந்து பார்த்தான்.

சில நொடிகளில் அதிர்வில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டவன், “த.. தளி.. இப்படி.. என்ன மச்சான் சொல்ற தளிருக்கு.. ப்ச் நிஜமா இப்படி நடக்குமா..?" என்றவனுக்கே முன்பு போல தளிர் மீதான நம்பிக்கையை அழுத்தமாக சொல்ல முடியவில்லை.

நடந்திருக்கு, அதுவும்  தளிருக்கே தெரியாம.."

என்னது தளிருக்கு தெரியாமலா..? எப்படிடா..? உனக்கு எப்படி அது தெரியும்..?"

நேற்று என்கிட்ட அவன் தாலி கட்டினதை சொன்னவ இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா மறைக்காம சொல்லியிருப்பா.. ஆனா சொல்லலை, அப்போ அதுவும் அவளுக்கே தெரியாம தானே நடந்திருக்கணும்" என்று கண்களை திறந்து தொண்டைகுழி ஏறி இறங்க  நண்பனை பார்த்தவன்,

"நேரமாச்சு அங்கிள் காத்துட்டு இருப்பார் கார் எடு” என்றான்.

மச்சான் தளிருக்கே தெரியாங்கிறதை என்னால நம்ப முடியலை.. எப்படிடா மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் பண்றது சாதாரண பிராசஸ் கிடையாதே... அப்புறம் எப்படி அவன் செய்து இருப்பான் தளிர் எப்படி கையெழுத்து போட்டிருக்க முடியும்..?” என்று ராகவ் சாலையில் கவனம் வைத்துக் கொண்டே கேட்க,

பணம்  பாதாளம் வரைக்கும் பாயும்னு தெரியாதாடா? அவன் தளிரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்ல இருக்கிறவன். ஃப்ரண்டுங்கிற டேக் யூஸ் பண்ணி எல்லாத்தையும் செய்திருக்கான்”

மச்சி என்னடா சொல்ற..? ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு இப்படியுமா ஒருத்தன் இருப்பான், தளிர் எப்படி அவனை கண்மூடிதனமா நம்பினாங்க..?” என்று தாள முடியாமல் ராகவன் கேட்க.....,

கண்களை மூடி கார் சீட்டில் சாய்ந்திருந்த உதயாதித்தன் புருவமத்தியும் வெகுவாக இறுகி கிடந்தது. அவன் நிலை புரிந்த ராகவனும் மேலும் கேள்வி கேட்காமல் அமைதியாக வண்டியை ஓட்ட துவங்கினான்.

எஸ் பிரெண்ட்ஸ் எல்லார் மேலும் தளிர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான் அவ செய்த ஒரே தப்பு”

புரியுதுடா க்ளோஸ் ப்ரெண்டை யாரும் சந்தேகபடமாட்டாங்க..”

ஆனா அவ மறைச்சது தான் இப்போ தாத்தாக்கு மத்தவங்களுக்கு தப்பா தெரியுது.. அவளையும் நம்ப விடாம தடுக்குது”

ஏன்டா, ஏன் தளிர் மேல தப்பு இல்லாதப்போ இதை மறைக்கணும்.. சொல்லியிருக்கலாமே”

தெரியலை. ஒருவேளை அவ சொல்றதை எத்தனை பேர் நம்புவாங்கன்னு பயந்திருக்கலாம்..” என்று நெற்றியை பிடித்துகொண்டவன், “மச்சான் ரொம்ப தலைவலிக்குது டா என்னன்னே தெரியலை..”

நைட் சாப்பிட்டது இந்நேரம் வரை சாப்பிடாம இருந்தா தலை வலிக்கத்தான் செய்யும். நீ இரு நான் ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று ராகவன் கீழே இறங்க,

எதுவும் வேண்டாம்டா ஒரு காஃபி மட்டும் வாங்கிட்டு வா போதும்” என்று கண்களை மூடிக்கொண்ட உதய்க்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை. அத்தனையும் கைமீறி சென்று கொண்டிருக்கிறது.. ஏற்கனவே தளிர் திருமணமானவள் என்பதையே ஏற்க முடியாமல் போனவர்களுக்கு இப்போது அவள் சட்டப்படி சரத்தின் மனைவி என்பதை மட்டும் எப்படி ஏற்க முடியும்..?

ராகவன் கொண்டு வந்த காபியை பருகிய உதய்யின் மனதில் தளிரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவளுடனான நினைவுகள் படையெடுக்க தலைவலி இன்னுமே அதிகரித்தது.  

‘என்ன விளக்கம் சொன்னாலும் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.. தளிரின் ஒப்புதல் இல்லாமல் எப்படி பதிவு திருமணம் செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்.. ஆனால் இதுவும் சரத்தின் சூழ்ச்சி என்று சொன்னால் அதை நம்புவது மற்றவர்களுக்கு சற்று கடினமே..!’ என்று உதய் மனதினுள் உழன்று கொண்டிருந்த அதேநேரம் டிஎஸ்பி அலுவலத்தினுள் ராகவன் நுழைந்திருந்தான்.

டிஎஸ்பி என்ன மாமா சொன்னாரு, உதய் ஏன் கல்யாணத்தை நிறுத்தினான்” என்று சரவணன் கேட்க மாத்திரை எடுத்துக்கொண்ட அம்பலவாணன் அப்போது தான் ஓரளவு தன்னிலை திரும்பியிருந்தார்.

தன் எதிரில் நின்றிருந்த சீதாவிடம், “என்கிட்ட இதை பற்றி முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே சீதா” என்று வேதனையோடு கேட்க அவருக்கு பதில் சொல்ல முடியாதவரின் விழிகளில் ஓயாத கண்ணீர் மழை.

ஏற்கனவே தங்களால் இங்கே மாறியிருக்கும் சூழல் அம்பலவாணனின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் எல்லாம் அவரை மீளா குற்றஉணர்வில் தள்ளியிருந்தது என்றால் இப்போது தடுமாற்றத்தோடு அமர்ந்திருந்த அம்பலவாணனின் முகத்தில் மண்டிக்கிடந்த வேதனை அவரை சுக்குநூறாக சிதற செய்திருந்தது.

'எங்கு சென்று இப்பாவத்தை நான் கழுவ..?' என்பதாக நின்றிருந்தவருக்கு சுத்தமாக வார்த்தை எழாதளவு துக்கம் தொண்டையை கவ்வி பிடித்திருந்தது.

அப்பா என்னப்பா ஆச்சு அங்கிள் என்ன சொன்னாரு..? உதய் ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னான்” என்று தளிரை ஒரு கையால் அணைத்துபிடித்தவாறு சுஜி கேட்க,

தளிருக்கும் அந்த பையனுக்கும் ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துடுச்சு சுஜி, சட்டப்படி தளிர் அவனோட மனைவி! நாம இதுக்கு அப்புறமும் இந்த கல்யாணத்தை நடத்தினா நம்... நம்மை...” என்றவரால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.

"எல்லாரும் கிளம்பலாம்" என்று தொண்டையை செருமிக்கொண்டு அவர் எழுந்து கொண்ட அதேவேளை  சீதா மயங்கி சரிந்திருந்தார்.

'அம்மா...' என்று தென்றல் ஓடிவந்து அவரை தாங்கி பிடிக்க சரவணன் உடனே சீதாவை தூக்கி சென்று அறையில் படுக்கவைக்கவும் நிவி அவருக்கு முதலுதவி அளிக்க தொடங்கினாள்.

தனக்கு பதிவு திருமணமாகி விட்ட செய்தியை கேட்டு உறைந்து போன இளந்தளிரோ  எதையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் நிலை குத்திய விழிகளோடு நின்றிருந்தாள்.

பல நிமிடங்களுக்கு பின் கூடா நட்பு தன் வாழ்வை பலி கொண்ட நிதர்சனம் மெல்ல அவள் புத்திக்கு புரிபட கசந்த  புன்னகை அவள் இதழ்களில் நெளிந்தது.

இன்றோடு அவள் வாழ்வு  அஸ்தமனமாகிவிட்டதை  உணர்ந்து கொண்ட தளிரின் விழிகள் கண்ணீர் சுரக்கவும் மறந்துபோயிற்று... ஏற்கனவே சாவின் விளிம்பை தொட்டு மீண்டவளுக்கு மனமெங்கும் விரவிய வெறுமையும் விரக்தியும் அவளை  வெகுவாக இறுக செய்தது.

அங்கே குழுமியிருந்தவர்களை ஒருகணம் பார்த்தவளின் நெஞ்சம் விம்மி வெடிக்க சொல்லிலடங்கா ரணம் வெகு தீவிரமாக அவளை ஆட்கொண்டது. இனி அவளுக்கென்று ஒரு வாழ்வு இல்லை என்ற நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைந்து அவளை கொன்று கூறு போட்டாலும் தாய் மற்றும் தங்கைக்காக அவள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

அதற்கு முதல் தன் நிலையை விலக்கி தங்களால் பாதிக்கபட்டவர்களிடம்  மன்னிப்பு கேட்டு விலகுவது மட்டுமே அவள் செய்யகூடியது என்று முடிவு எடுத்தவள் சீதாவின் அருகே சென்று அமர அவள் கரம் அவர் தலையை வருடியது.

அதேநேரம் வெளியில் இருந்த அம்பலவாணனை பிடித்து கத்தி தீர்த்திருந்தார் அண்ணாமலை.

பேசு அம்பலா ஏன் அமைதியா இருக்க? நீ கொண்டு வந்த வரன் தானே இது..! அப்பவே எல்லாம் தீர விசாரிச்சியான்னு நான் கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன, நானுமே இத்தனை வருஷத்துல எடுத்த காரியத்துல தோல்வி இல்லாம சரியா செய்து முடிக்கிறவன் என் பையன்னு ரொம்ப கர்வத்தோட என் பேரன் கல்யாண பொறுப்பை உன்கிட்ட கொடுத்தேன். ஆனா இப்படி ஏமாந்து வந்திருக்கியே இதுதான் நீ இத்தனை வருஷமா தொழில் நடத்தின லட்சணமா..?”

அப்பா தளிர் நல்ல பொண்ணுப்பா.. கண்டிப்பா அவங்க பக்கம் தப்பு இருக்காது எனக்கு சீதா மேலயும் நம்பிக்கை இருக்கு”

அப்படியா..! தப்பு பண்ணாதவங்க ஏன் அதை நம்மகிட்ட இருந்து மறைக்கணும்..? தன் பெண்ணுக்கு வலுக்கட்டாயமா நடந்த கல்யாணத்தை பற்றி சொல்லி இருக்கலாமே..! அதைவிட தளிருக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்ச பிறகும் நீ என்கிட்ட இருந்து மறைச்சது ரொம்ப பெரிய தப்பு..!"

"சொல்லு அம்பலா ஏன் என்கிட்டே சொல்லலை, என்ன காரணம்..?" என்று கேட்க அம்பலவாணன் பதிலின்றி தவித்து போனார்.

"சரி காரணம் எதுவா இருந்தாலும் அதனுடைய விளைவு நாம கனவிலும் எதிர்பாராதது.. என் பேரனோட இந்த நிலைக்கு அவங்க மட்டுமில்ல நீயும் ஒரு காரணம்"

அது.. அது.. நானுமே இதை எதிர்பார்க்கல ப்பா”  என்று இத்தனை நேரம் தளிர் மற்றும் சீதாவிற்காக துடித்து கொண்டிருந்த மனிதருக்கு இப்போது தான் மகன் குறித்த நினைவே எழ தந்தை சொல்வது போல தளிர் மீதான பிடித்தத்தில் உதய் அவசரபட்டிருந்தாலும் தான் நிதானித்து இருக்க வேண்டுமோ என்ற குற்றஉணர்வு அதிகரிக்க மகன் நிலையை எண்ணி  வெதும்பி போனார்.

"அம்பலா என்னப்பா பேசுற..? அப்பா நீ சொன்ன வார்த்தையை நம்பி தானே இந்த பெண்ணை ஒத்துக்கிட்டாரு.. உதய் நம்ம குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு! அப்பா அவன் மேல உயிரா இருக்கிறது உனக்கு தெரியாதா..? உன்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகளை பற்றி என்ன விசாரிச்ச நீ..?" என்று கேட்க பதிலில்லை  அம்பலவாணனிடம்.

"சட்டப்படி கல்யாணம் பண்ணின பெண்ணுக்கு எப்படி இன்னொரு வரன் பார்த்தாங்க, அதுகூட தெரியாம நீ கல்யாணத்தை நடத்துற..” என்று குறையாத ஆதங்கத்தோடு அவர் கேட்க இங்கே ராஜிக்கு அத்தனை கொண்டாட்டமாக இருந்தது.

பின்னே தளிருக்காக உதய் பரிந்து பேசியதில் சற்று மிரண்டிருந்தவருக்கு இப்போது அண்ணாமலையின் கேள்வியில் இந்த திருமணம் நடைபெறாது என்ற நம்பிக்கை கூடிட அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

ஆனால் ஜெகாவிற்கு தான் கணவரின் நிலை கண்டு தாளமுடியாமல், “மாமா அவர் வெளுத்தது எல்லாமே பால்ன்னு நினைக்கிறவர், அவருக்கே இது பெரிய அதிர்ச்சி வழக்கத்தை விட  ப்ரெஷரும் அதிகமாகிடுச்சு நீங்க இன்னும் கேட்டு அவருக்கு  எதுவும்.. ” என்று முடிக்கும் முன்னமே,

அப்போ உனக்கு புருஷன் முக்கியம் பிள்ளை முக்கியமில்லையா..? என்னை கேட்டா அவங்களைவிட உன் பிள்ளை வாழ்க்கை இந்த நிலைக்கு ஆளாக காரணமே இவன்தான்..! என்ன தைரியத்துல என்கிட்டே இருந்து ஒரு உண்மையை மறைச்சு இந்த கல்யாணத்தை நடத்த ஒத்துகிட்டான்..? இவன் தேடி கொண்டு வந்த சம்பந்தத்துக்கு இவனை கேள்வி கேட்காம யாரை கேட்க சொல்ற..?” என்று மருமகளிடம் சீறியவர்,

வாயை திறந்து பதில் சொல்லு அம்பலா, உன்னால இனி நாம சொந்தத்துக்கு மத்தியில தலை நிமிர முடியுமா..?  டிவி நியூஸ்ல எல்லாம் நம்ம ஸ்கூல் கம்பனின்னு ஒன்னுவிடாம பேர் சொல்லி கிழிக்கறாங்க, எல்லாத்தையும் விட தப்பே பண்ணாத என் பேரனோட மதிப்பும் மரியாதையும்  போச்சு இதெல்லாம் யாரால..?” என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த சீதாலக்ஷ்மி,

அப்பா அண்ணாவை எதுவும் பேசாதீங்க, தப்பு எங்க மேல.. நான் தான் இதுக்கு காரணம்! உங்களோட கோபம் எனக்கு புரியுது என்னனாலும் என்னை பேசுங்க தயவுசெய்து அவரை பேசாதீங்க” என்று கண்ணீரோடு சொல்ல அவரை வெறுப்பாய் பார்த்தார் ஜெகதீஸ்வரி.

சரிம்மா உன் பக்கத்து நியாயத்தையும் நான் கேட்கிறேன்.. ஏன் இந்த விஷயத்தை முதல்லையே எங்கிட்ட சொல்லாம மறைச்சீங்க..?”

இல்லப்பா அதை மறைக்கணும்னு நினைக்கலை உண்மையாவே அப்படி ஒரு விஷயம் நடந்ததையே  நாங்க மறந்துட்டோம்.. ஆனா உங்களை ஏமாத்தணும்னு நாங்க எதையும் செய்யலைப்பா இப்போ அண்ணா சொல்லித்தான் அவன் கல்யாணத்தை பதிவு செய்திருக்கிறதே எனக்கு தெரியும்...” என்றவருக்கு சூழலின் கனம் புரிந்தாலும் எப்படி தன் நிலையை விளக்க என்று புரியாமல் தவித்து போனார்.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3