“ஆமா மச்சி! டென்த்ல தளிர் கிட்ட சொல்லலாம்னு
நினைச்சேன் ஆனா சுதாகர் வந்து கெடுத்துட்டான்”
“சரிடா அது அப்போ ஸ்கூல்ல இருந்ததால அப்படி
சொல்லியிருப்பா.., இப்போ நாம காலேஜ் வந்துட்டோம், காலேஜ் ஹார்ட்த்ரோப்டா நீ..!! எவ்ளோ பொண்ணுங்களுக்கு உன்னை பிடிக்கும்
தெரியுமா..? என்னைவிட உன் டான்ஸ் அவங்களுக்கு ரொம்ப
பிடிக்கும்” என்று அசோக் சொல்ல.,
“ஆமா மச்சி எத்தனை பொண்ணுங்க உன்கிட்ட பேச
எங்களை அப்ரோச் பண்ணி இருக்காங்கன்னு எங்களுக்கு தானே தெரியும்.. உனக்கு
காலேஜ்ல பொண்ணுங்க மத்தியில இருக்கிற கிரேஸ் தெரியாம பேசுறடா.. உன்னை எந்த
பொண்ணாவது வேண்டாம்னு சொல்லுவாளா..?” என்றான் தீனா.
“ப்ச் மத்தவங்களுக்கு பிடிச்சு என்ன ஆகபோகுது?”
“மச்சி தளிருக்கும் உன்னை பிடிக்கும்டா”
“இல்ல மச்சி அவளுக்கு பிரண்ட்ஷிப் வேற லவ்
வேறன்னு சொல்றடா!” என்றவன் அன்று அஜய் லேகா காதல் குறித்து
சந்தியாவிடம் தளிர் பேசியதை கேட்க நேரிட்டதை நண்பர்களிடம் பகிர்ந்தவன்,
“எனக்கு தெரியும் தீனா கண்டிப்பா நான் போய்
லவ்வை சொன்னா என்னை அக்செப்ட் பண்ணாதவ அதுக்கு அப்புறம் என்னை
ஃபிரண்டா கூட வச்சுக்க மாட்டா.. உங்களுக்கு தெரியாது டா தளிர் மட்டும் என்னோட
பேசாம போயிட்டா நான் செத்துருவேன் மச்சி” என்று மீண்டும் தொடங்கிய
இடத்திலேயே வந்து நிற்கவும் தீனாவின் கோபம் அதிகரித்தது.
“டேய் லூசு மாதிரி உளறாத நேத்து என்ன தளபதியோட
படம் பார்த்தியா..? லவ்வை சொன்னா செத்துடுவான்னு அவர்
பயப்படற மாதிரி லவ்வை சொன்னா தளிர் பேசமாட்டா, பார்க்கமாட்டான்னு
நீயே முடிவு பண்ணி அவளுக்காக செத்துடுவேன்னு சொல்லுவியா..? வாழ்க்கை
என்ன உனக்கு அவ்ளோ ஈசியா போச்சா..?” என்று சரத்தை பிடித்து
கத்தி தீர்த்தான்.
“இல்ல தீனா உனக்கு தெரியாது தளிர் என்னோட
உயிர்டா..! நான் தினமும் முழிக்கிறது தளிரோட முகத்துல கண்ண மூடுவதும் அவ முகத்தை
பார்த்துட்டு தான் அப்படி இருக்கிறப்போ அவ என்னை உதறிட்டா நான் உதிர்ந்து
போயிடுவேன்டா” என்று காதல் வசனம் பேசியவனின் வார்த்தைகளில்
இருந்த உறுதியும் கண்ணீரும் அவர்களை அசைத்திருந்தது.
“சரிடா
எங் ககிட்ட சொன்னவன் லேகா சந்தியா கிட்ட சொல்லியிருந்தா அவங்களே தளிர் கிட்ட
பேச்சு கொடுத்து அவளோட பதில் தெரிஞ்சு சொல்லியிருப்பாங்களே அவளோட முடிவு என்னன்னு
தெரியாம நீயும் இவ்ளோ கஷ்டபடத்தேவை இல்லை.. அஜய்க்கும் இன்னும் எதுவும் சொல்லலையா
நீ..?”
“உங்க அளவுக்கு அவனை நம்ப முடியாது மச்சி! அஜய்
சரியான ஓட்டைவாய்ன்னு உங்களுக்குமே தெரியும்.. அதோட அவன் ஆசைப்பட்ட பொண்ணு
கஷ்டபடாம அவனுக்கு கிடைச்சுட்டா தளிர் வேண்டாம் சொன்னா வேற ஃபிகரை பாருடான்னு
ஈசியா சொல்லிடுவான்.. அவனுக்கெல்லாம் என்னோட ஆத்மார்த்தமான காதல் புரியாதுடா”
“நீ சொல்றதும் சரி தான்”
“அதுமட்டும் இல்ல அவனுக்கு இந்த விஷயத்தை
சொன்னா நிச்சயம் லேகாகிட்ட சொல்லாம இருக்கமாட்டான்... லேகா மூலமா தளிர்கிட்ட
போச்சுன்னா அதோட எல்லாம் முடிஞ்சது..” என்று குரல்
உடைய சொன்னவனின் கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக வெளியேற,
“கண்டிப்பா அதுக்கப்புறம் என்னை உயிரோடவே
பார்க்க முடியாதுடா..” என்றான் வெகு தீவிர குரலில்.
“தளிர் இல்லன்னா
உயிரை விட்டுடுவேங்கிற ஆனா அவகிட்ட லவ்வும் சொல்லமாட்ட, அப்போ
என்னதான்டா பண்றதா இருக்க..?” என்று
தீனா எரிச்சலோடு கேட்க,
“கல்யாணம்”
“சரத்” என்று பதறிப்போயினர் இருவரும்.
“டேய் இன்னும் நாம ஃபர்ஸ்ட் இயர்கூட கம்ப்ளீட்
பண்ணலை அதுக்குள்ளே கல்யாணம்னு ஏன்டா பெரிய பேச்சு எல்லாம் பேசுற..? யார் வீட்டுலையும் ஒத்துக்க மாட்டாங்க..”
“யாருக்கும் தெரிய வேண்டாம் மச்சி.. தளிருக்கு
நான் எனக்கு தளிர் போதும்..!! வேற யாரை பற்றியும் எனக்கு கவலை இல்ல அசோக்
அன்னைக்கு சந்தியா கிட்ட பேசிட்டு இருந்த தளிர் நம்மில் யாராவது அவளுக்கு ப்ரொபோஸ்
பண்ணினா அதுக்கப்புறம் வாழ்நாள் முழுக்க அவங்க முகத்துலேயே முழிக்க மாட்டேன்னு
சொல்லிட்டா டா”
“டேய் நிஜமாவா சொல்ற..?” என்றவர்களிடம்
அத்தனை அதிர்ச்சி.
“ஆமா அதுக்கப்புறமா தான் நான் அவளை கல்யாணம்
செய்துக்கற முடிவுக்கு வந்தேன்”
“சரி மச்சான் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்
தளிர் உன்னை வேண்டாம் என்று சொன்னா அப்ப என்னடா பண்ணுவ..?”
“இல்லடா அவளுக்கு என்னை பிடிக்கும்..! நீங்களே
பார்த்து இருக்கீங்களா எத்தனை நாள் என்கூட சாப்பாடு ஷேர் பண்ணி சாப்பிட்டு இருக்கா,
எனக்கு நோட்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்கா எனக்காக
அசைன்மென்ட் சப்மிட் பண்ணி இருக்கா..” என்று முகம் மலர சரத்
பேசிக்கொண்டே செல்லவும்..,
“டேய் அவ நம்ம எல்லாருக்கும் தான்டா
செய்திருக்கா..”
“ஆமா மச்சி ஆனா எனக்காகவும் செய்திருக்கா இல்ல!
அப்போ என்னை பிடிச்சவளுக்கு நான் கட்டபோற தாலியும் பிடிக்கும் மச்சான்.. தளிருக்கு
லவ் தானே பிடிக்காது ஃப்ரெண்ட்ஸ் லவ்வரா மாறக்கூடாதுன்னு சொல்றவ கிட்ட நான் கடைசி
வரை லவ் சொல்லமாட்டேன் ஆனா அதே ஃபிரண்ட்ஸ் ஹஸ்பண்ட் ஒய்ஃப்பா மாறலாமேடா..?”
“தளிருக்கு நிச்சயம் நான் நல்ல ஹஸ்பன்ட்டா இருப்பேன்...” என்றவன்
தளிர் மீதான நேசத்தை விவரிக்கவும் அவன் காதலின் ஆழத்தை கண்கூடாக கண்ட பின்னர் அவனை
விட சிறந்த காதலன், கணவன் தளிருக்கு வாய்க்கமுடியாது என்ற
முடிவிற்கு வந்திருந்தனர் தீனாவும் அசோக்கும்.
“டேய் நம்ம பார்த்தோமே இந்த படத்துல என்று சில
படங்களை குறிப்பிட்டவன் அதுல வர மாதிரி நான் தளிரை கல்யாணம் செய்துட்டு அவளோட
வாழ்ந்துட்டா அதுக்கப்புறம் அவ என்னை நிச்சயம் வேண்டாம்னு
சொல்ல மாட்டாடா..!!”
“அதுவும் இன்னொரு படத்துல கல்யாணமே ஆகாம அந்த
ஹீரோயின் ப்ரெக்னென்டாகி இருப்பா ஜாதி அது இதுன்னு என்ன காரணம் சொல்லி பிரிக்க
பார்த்தவங்களாலும் அதுக்கப்புறம் அவங்களை பிரிக்க முடியாது..”
“குழந்தைக்காக அவங்களை ஏத்துப்பாங்க அவங்க கல்யாணத்தன்னைக்கு
தான் அவளுக்கு குழந்தையே பிறக்கும்.., இன்னொரு படத்துலயும் இப்படித்தான் கல்யாணம்
பண்ணாமலே வாழ்ந்து கன்சீவ் ஆகிடுவாங்க படம் முடியறப்போ தாலி கட்டி ஒன்னு
சேர்ந்துடுவாங்க..”
“ஆனா நான் அப்படி இல்ல மச்சி முறையா தளிரை
கல்யாணம் பண்ணி அவளோட வாழ நினைக்கிறேன்.. இது
தப்பா..?” என்று கேட்க பெண்ணை போக பொருளாக உபயோகித்து
கைகழுவுபவர்கள் மத்தியில் தளிரை திருமணம் செய்து வாழ நினைக்கும் நண்பனின் உயர்ந்த
குணத்தில் நெக்குருகி போயினர் தோழர்கள்.
மேலும் ஒரு வருடம் கழிந்த நிலையில்...
தளிர், லேகா மற்ற மாணவிகளுடன் கல்சுரல்ஸ்காக ஆடிடோரியத்தில்
நடனபயிற்சி எடுத்து கொண்டிருக்க அஜய்யும் சந்தியாவும் அவர்களை வீடியோ எடுத்து
கொண்டிருந்தனர்.
“எங்க அஜய் அசோக்கை காணோம்..?”
“தீனா சரத் ப்ராக்டீஸ் முடிச்சுட்டாங்களான்னு
பார்க்க போயிருக்கான் வந்துடுவான்” என்று சொன்ன அதேநேரம் தன்னிடம் கொடுக்கப்பட்ட
கிரீட்டிங் கார்டை பார்த்திருந்த சரத்தின் விழிகள் கொவ்வை பழமென சிவந்து
போயிருந்தது.
தீனா அவனை சமாதானபடுத்தி கொண்டிருக்க அங்கே வந்த அசோக்
“என்னடா ஆச்சு..?” என்றான்.
“நிதீஷ் தளிருக்கு ப்ரோபோசல் கார்ட் கொடுக்க
சொல்லி சரத் கிட்டயே கொடுத்துட்டான் அதான் அவன் ரொம்ப டென்ஷனா இருக்கான்”
“ஏன்டா இப்படி..?” என்றவனுக்கு
அவ்வப்போது தளிருக்கு சிலர் ப்ரோபோசல் கார்ட், லெட்டர்
கொடுக்க சொல்லி நண்பர்களான அவர்களிடமே கேட்டதுண்டு.. அவர்களும் புன்னகையோடு
தளிரிடம் கொடுக்க பள்ளி மட்டுமல்ல கல்லூரியும் காதலுக்கான இடமில்லை என்ற தெளிவோடு
இருப்பவள் எதையும் பிரித்து பார்க்காமல் குப்பையில் போட்டுவிட்டு சென்றுவிடுவாள்.
ஆனால் இப்போது சரத்திடமே கொடுத்ததில் அவன் மனம் எத்தனை
பாடுபடும் என்பது புரிபட ஆதரவாய் நண்பனை அணைத்துக்கொண்டான். அவன் கையை உதறிய சரத், “இனியும்
என்னால பொறுமையா இருக்க முடியாதுடா, எனக்கு தளிர் வேணும்” என்றவன்
கிரீட்டிங் கார்டை வாங்கிய தன் கரத்தை எதிரில் இருந்த சுவரில் ஓங்கி
அறைந்திருந்தான்.
“மச்சி என்ன பண்ற..?”
“என் தளிரோட கையை பிடிக்க முடியாத இந்த கைதானே
அடுத்தவன் கிட்ட கார்ட் வாங்குச்சு, இனி எதுக்கு இது
இருக்கணும்..?” என்று ஓங்கி ஓங்கி குத்த அவன் கை முஷ்டிகளில்
குருதி வழிந்தது.
“மச்சி” என்று
இருவரும் பதறிப்போய் அவனை பிடிக்க முயன்றனர், ஆனால்
பித்துபிடித்தவன் போல ஆமாடா எனக்கு இனி இது வேண்டாம்..! தளிர் வேணும் தளிர் தான்
வேணும் என்றவாறு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே நடந்தவன் ஒருகட்டத்தில் தன்
நடையை நிறுத்தி,
“எனக்கு தளிர் தான் வேணும்! என்று உரத்த
குரலில் சொன்னவன், இப்படி ஒருரொத்தனும் வந்து லவ் லெட்டர்
கொடுப்பான் நான் வாங்கனுமா..? கேட்டா நான் அவளோட ஃப்ரெண்ட்டா
இருக்கிறதால தான் கொடுத்து அவளை கரெக்ட் பண்ணி கொடுக்க சொல்றான்.. இதே நான் அவளோட
ஹஸ்பன்ட்டா இருந்திருந்தா இப்படி கொடுத்திருப்பானா..? எனக்கு
தளிர் வேணும் அவளோட வாழ்ந்து என் காதலை புரிய வைப்பேன்..” என்று கேட்டுக்கொண்டே
சுவரில் மீண்டும் அறைந்தவன்,
“டேய் என்ன பேசுற இதெல்லாம் நடக்கற காரியமா..?
அவளுக்கே தெரியாம கல்யாணம் பண்ணி எப்படி வாழுவ...? இம்பாஸிபில்”
“இல்ல டா நீங்க மனசு வச்சா எல்லாமே பாஸிபில்...
அதுக்கு தான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்..”
“டேய் தளிருக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ்
பண்றது ஈஸி ஆனா அவளுக்கே தெரியாம தாலி கட்டறது கஷ்டம் மச்சான் புரிஞ்சுக்கோ..”
“எங்கடா அதைதான் நடத்த முடியலையே..! நீங்க
சொன்னீங்கன்னு தான் ரிஜிஸ்டர் மேரேஜ் நம்பி இருந்தேன் ஆனா கையெழுத்து வாங்கி
வச்சும் இன்னும் என்னால கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ண முடியலை.. இல்ல மச்சான் இனியும்
நாம டிலே பண்ற ஒவ்வொரு நிமிஷமும் என் உயிர் கொஞ்சம் கொஞ்சமா போயிடும்..”
“மச்சி ப்ளீஸ் ப்ளீஸ் படிப்பு முடியட்டும் பார்க்கலாம்னு
சொல்லாம எனக்கு இப்பவே தளிரை கல்யாணம் பண்ண உதவி பண்ணுங்கடா என்னால இந்த வலியை
தாங்க முடியலை” என்றவன் சட்டென அவர்கள் காலில் விழுந்திருந்தான்.
“சரத் என்ன பண்ற..?” எந்திரி
என்று அவர்கள் பிடித்து நிறுத்த,
“ப்ளீஸ் எந்த விதத்துலயும் தளிர்
எனக்கில்லங்கிற எண்ணமே என்னை அரிச்சு தின்னுதுடா கல்யாணம் நடந்து நான் அவளோட
வாழ்ந்துட்டா போதும் எனக்கு எந்த பயமும் இருக்காது புரிஞ்சுக்கோங்க” என்று
கண்ணீரோடு மீண்டும் காலில் விழப்போக பதறியவர்கள்,
“அழாதடா ..!!” என்று அவனை
கட்டிக்கொள்ள தன் சட்டையை கழற்றியவன் “இங்க
பாருங்கடா அப்போதான் உங்களுக்கு புரியும்” என்று தன் உடலை முன்னும் பின்னும்
காண்பிக்க தீனா அசோக்கிற்கு சரத் தளிரின் முகத்தை தன் நெஞ்சில் புஜத்தில் முதுகில்
வரைந்திருந்திருந்ததிலேயே அவன் காதலின் ஆழம் மெய் சிலிர்க்க வைத்திருந்தது. அவளில்லாமல்
தனக்கு வாழ்க்கை இல்லை என்ற சரத் நிச்சயம் தந்தை இல்லாத தளிரை நன்றாக
பார்த்துகொள்வான் என்ற எண்ணம் மட்டுமே.
“சரி என்ன பண்ணலாம்னு நீயே சொல்லுடா! உன்கூட
எப்பவும் இருப்போம்” என்று வாக்கு கொடுக்கவும், இம்முறை
செமெஸ்டர் பரீட்சைக்கு முன் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது திருமணத்தை
முடிக்கும் தன் திட்டத்தை விளக்கினான் சரத். அமைதியாக கேட்டுக்கொண்ட தீனா மற்றும்
அசோக் நண்பனின் காதல் கைகூடுவதற்கு அவனோடு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர்..
செமெஸ்டர் பரீட்சை ஆரம்பிக்க இன்னும் பத்து தினங்களே இருக்கும்
நிலையில் நண்பர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி
படித்துகொண்டிருந்தனர்.
நாளை மறுநாள் வழக்கம் போல அனைவரும் கோவிலுக்கு செல்ல வேண்டும்
என்று முடிவெடுத்திருந்த நிலையில் சந்தியா தனக்கு மாதவிடாய் என்பதால் வரமுடியாது
என்று கூற நண்பர்கள் அவளை மட்டும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று
யோசித்தவர்கள் பரீட்சைக்கு முதல்நாள் சென்று வரலாம் என்று முடிவெடுத்தனர்.
இதை கேட்ட அஜய் முகம் ஏகத்திற்கும் கூம்பி போனது அதற்கு ஈடாக
சரத்தின் முகமும் பொலிவிழந்தது.
பின்னே! அன்று நிதீஷ் கார்ட் கொடுத்த போதே திருமணம் குறித்து
திட்டமிட்டிருந்தவன் அரிதிலும் அரிதான இந்த வாய்ப்பை நழுவவிட தயாராய் இல்லை.
அதுவும் சென்னையில் இருக்கும் கோவில் என்றால் அவனால் தன் திட்டத்தை
செயல்படுத்துவது மிகவும் கடினம்.. ஆனால் இப்போது அவர்கள் செல்லவிருக்கும் கோவில்
எந்த பிரச்னையும் இல்லாதது திட்டத்தை எளிதாக செயல்படுத்தலாம்.
ஆனால் இப்போது சந்தியாவால் கோவிலுக்கு செல்வது தாமதமாவதில்
அவனுக்கு அத்தனை எரிச்சல். எதுவும் சொல்ல முடியாத அஜய் தவிப்போடு லேகாவை
பார்த்தாலும் அதை கண்டும் காணாமல் படித்துகொண்டிருந்தாள் லேகா.
பின்னே இருவருக்கும் கடந்த இருவாரங்களாக மனஸ்தாபம் எத்தனை
முயன்றும் லேகா அவனை பார்க்ககூட விரும்பவில்லை.. அஜய்க்கோ அவளின் பாராமுகம் அத்தனை
வேதனையளிக்க அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை அதை புரிந்து கொள்ள
லேகாவும் தயாராக இல்லை.
ஒருவழியாக படித்து முடித்து பெண்கள் அனைவரும் கிளம்பவும்
அவர்கள் பின்னே கிளம்ப எத்தனித்த ஆண்களை வழிமறித்த அஜய், “மச்சான்
ப்ளீஸ் டா கோவிலுக்கு போறதை தள்ளி போடாதீங்க அந்த டேட்லயே போயிடலாம் கன்ஃபார்ம்
பண்ணுங்கடா” என்றான்.
“ஏன்டா..?”
“எனக்கும் லேகாக்கும் சண்டைன்னு தெரியாதா
உங்களுக்கு..?”
“ஆமா தெரியும் அதுக்கென்ன..?” என்ற அசோக் புரியாமல் பார்க்க..
“மச்சி நாங்க இரண்டுமுறை பேசி பார்த்துட்டோம்டா
அவ உங்களோட பர்சனல்ல எங்களை தலையிட வேண்டாம்னு சொல்லிட்டா, இதுக்கு
மேல நாங்க என்ன செய்ய முடியும் நீயே சொல்லு..?” என்று
தீனா...
“டேய் நீங்க ஒன்னும் செய்யவேண்டாம் நானே அவளை
சமாதானம் செய்துக்கறேன்.. ஆனா இப்பவும் நான் கேள்வி கேட்டா என் முகத்தை பார்த்து
கூட பேச மாட்டேங்கிறாடா யாரோ போல சந்தியா மூலமா பதில் சொல்றா, கால் பண்ணினா எடுக்கிறதில்ல, ஆயிரக்கணக்கான ஸாரி
சொல்லி அனுப்பின மெசேஜ்க்கும் எந்த பதிலும் சொல்றது இல்ல.. எனக்கு பைத்தியம்
பிடிக்க வைக்கிறா மச்சி!”
“ஏன்டா லவ் பண்ணோம்னு இருக்கு ஆனா இதுக்கு மேல என்னால இந்த
வலியை தாங்க முடியாது.. எக்ஸாம் கிட்ட வரதுன்னு நானும் முட்டி மோதி பார்க்கிறேன்
சுத்தமா கான்சன்ட்ரேட் பண்ண முடியலைடா.. எனக்கு ஸாரி சொல்ல கூட வாய்ப்பு கொடுக்க
மாட்டேங்கிறா.. என்னை மன்னிக்கலன்னா கூட பரவால்ல அட்லீஸ்ட் அவ ஒரு வார்த்தை பேசினா
போதும் நான் படிக்க ஆரம்பிச்சுடுவேன்..” என்று விரக்தியோடு அஜய் புலம்ப
மற்றவர்களிடம் சிரிப்பலை.
Comments
Post a Comment