வாழ்க்கைத்துணை - 20.3
ஆலோசனை கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற மகாவை ஆச்சர்யமாக பார்த்த மிதுன் “என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று கேட்க சிறு புன்னகையோடு அவனருகே அமர்ந்தாள்.
பல நிறுவனங்களில் இருந்து வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்க தன் முறை வந்த போது மஹா பேச தொடங்கினாள்.
அவள் பேசிக் கொண்டிருந்த போது ரிஷிவும் ராமும் உள்ளே வந்தனர். அடுத்த இரண்டு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடக்க “கைஸ், வில் மீட் அஃப்டர் லஞ்ச் பிரேக்..” என்று ஒருங்கிணைப்பாளர் சொல்ல அனைவரும் வெளியேறினர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு மதியம் சைவ அசைவ உணவு வகைகள் பஃப்பே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மகாவும் மிதுனும் தங்களுக்கு தேவையானதை ப்ளேட்டில் எடுத்து வைத்துக் கொண்டு பேசியபடி டேபிளை நோக்கி சென்றனர்.
உணவு இடைவெளியில் 'தன்னை தேடி வருவாள்' என்று எதிர்பார்த்திருந்த ரிஷி மகா மிதுனுடன் செல்வதை கண்டு கொதித்து போனவன் உடனே ஒரு தட்டை எடுத்து கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு வேகமாக அவர்கள் பின்னே சென்றான்.
மகாவும் மிதுனும் பேசி சிரித்துக்கொண்டு செல்ல அவர்களுக்கு இடையில் “எக்ஸ்கியூஸ் மீ” என்று புகுந்த ரிஷி “நீங்களும் எங்களுடன் ஜாயின் பண்ணிக்கலாம் மிதுன். ஐ டோன்ட் மைண்ட்..” என்றான்.
ஒரு நொடி அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தவன், “ஸாரி நீங்க இருக்கிறதை மறந்துட்டேன் ரிஷி, யூ கேரி ஆன்..” என்றான் புன்னகையோடு.
“இட்ஸ் ஓகே, நீங்க இங்கே உட்காருங்க நாங்க அந்த சைடு போறோம்..” என்று மகாவின் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வேறு புறம் சென்றான்.
“இப்போ எதுக்கு என்னை தனியா கூட்டிட்டு போறீங்க? திரும்பவும் சண்டை போடவா?” என்றவளுக்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டவன் அவள் கையில் இருந்து பிளேட்டை வாங்கி டேபிள் மீது வைத்து “உட்காருடி..” என்றான்.
ஒரு பெருமூச்சோடு அமர்த்தவள் இனி வரப் போகும் புயலை சந்திக்க தன்னை தயார்படுத்தும் முயற்சியாக கண்களை மூடி திறந்து கணவனை பார்த்தவள்,
“சொல்லுங்க இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்?” என்றாள் மெல்லிய குரலில்.
“அன்னைக்கு அத்தனை பேச்சு பேசிட்டு கிளம்பினவளால இப்போ மட்டும் எப்படிடி வேலை செய்ய முடியுது..”
“நான் சொல்றதை நீங்க பொறுமையா கேட்பதா இருந்தா நான் பதில் சொல்றேன் இல்லை எனக்கு இதை பற்றி பேச இஷ்டமில்லை ரிஷி..” என்றவள்,
“அன்னைக்கு உன் அப்பா அம்மா எதிர்ல என்னை பேசும் போது மட்டும் இஷ்டம் இருந்ததா?”
“விதண்டாவாதம் பண்ணாதீங்க ரிஷி, இப்பவும் நான் பேச தயார் ஆனா நீங்க பொறுமையா கேட்கிறதா இருந்தா..” என்றிட, “சொல்லு..” என்றவன் அமைதியாக உணவை உண்ண தொடங்கினான்.
“ரிஷி நம்ம வீட்டை விட்டு வந்த போது எனக்கு திரும்ப வேலையில் சேரும் எண்ணம் இல்லை. பட் எங்க வீட்ல எந்த டென்ஷனும், ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம நான் ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருந்தேன்…”
“உங்களுக்கே தெரியும் நம்மோட ஃபீல்ட்ல (Field) ஒரு இடத்தை தக்க வச்சுக்கிறது அவ்ளோ சுலபமில்லை. ஒவ்வொரு நாளும் எவ்ளோ அப்டேட்டடா இருக்கணும் இல்லைன்னா சஸ்டெயின் (sustain) பண்றது கஷ்டம். இந்த இடம் எனக்கு சுலபமா கிடைச்சுடல..”
“என்னோட படிப்பு, திறமை மட்டுமில்லை பல வருட கடின உழைப்பு, அர்பணிப்பு என்னை இந்த இடத்துல இருக்க வச்சுருக்கு…”
“அம்மாவும் அண்ணியும் சமையல் மற்ற வேலைகள் செய்துடுறதால என்னால எந்த ப்ரெஷரும் இல்லாம வேலை செய்ய முடியுது அதுவே என்னோட பீபியை கண்ட்ரோல்ல வச்சுருக்கு..”
“அதுதான் நானும் எங்கப்பாவும்..” என்றவனை இடையிட்டு,
“நான் இல்லைன்னு சொல்லலை ரிஷி..” என்று நெற்றியை வருடியவள், “நான் சொல்றது உங்களுக்கு எந்தளவு புரியும்ன்னு எனக்கு தெரியல. பட் உங்க கோபத்தை ஒதுக்கி வச்சுட்டு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க ப்ளீஸ்..” என்றிட தொடர்ந்து சொல் என்பது போல தலையசைத்தான்.
“நீங்க செய்தது ஃபிசிக்கல்லா எனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தது மறுக்கலை ஆனா அதையும் தாண்டி இந்த மாதிரி நேரத்துல எமோஷனல், மெண்டல் பேலன்ஸிங் ரொம்ப முக்கியமில்லையா? அது எனக்கு நம்ம வீட்ல இல்லாம போனதால தான்..” என்றதில் பொறுமை இழந்தவன்,
“இப்போ என்ன தான்டி சொல்ல வர?”
“நீங்க என்னை விட்டு ரொம்பவே விலகி போயிட்டீங்க.. யார் நீன்னு கேட்டு என்னை தூர நிறுத்தினது நீங்க தான். இன்னைக்கு லிஃப்ட்ல குழந்தைகளை அந்தளவு கொஞ்சின நீங்க, நான் அங்க இருந்த போது எத்தனை நாள் கொஞ்சுனீங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்றிட அவனிடம் பதில் இல்லை.
“என்மேல இருக்கிற கோபத்தை குழந்தைகள் மேலயும் காட்டினீங்க..”
“நீ தானேடி அன்னைக்கு கையை எடுக்க சொன்ன.. அதுக்கு அப்புறமும் உன் மேல கை வைக்க என்னை என்ன மானம் கெட்டவன்னு நினைச்சியா?”
“ப்ச் ரிஷி, அன்னைக்கு அவ்ளோ பிரச்சனை நடந்த பிறகு நீங்க என்னை சமாதானபடுத்தாம கை வச்சது சரின்னு உங்களுக்கே தோணுதா? திரும்ப திரும்ப என் மேல இருக்கிற கோபத்தோடு யோசிக்காம அதை ஒதுக்கி வச்சுட்டு யோசிங்க ப்ளீஸ்..” என்றிட அவளுக்கு பதில் அளிக்காமல் உணவில் கவனம் செலுத்தினான்.
“ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் ரிஷி நான் ப்ரோமோஷன் லிஸ்ட்ல இருக்கேன். இப்போ நான் ப்ரேக் எடுத்தா அது நிச்சயமா ப்ரோமொஷனை பாதிக்கும். அப்பாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது முழுக்க முழுக்க என்னோட டெசிஷன்…”
“இன்ஃபாக்ட் எந்த காலத்திலும் எங்கப்பா என்னோட பணத்தை எதிர்பார்த்தது கிடையாது.. அனாவசியமா அவரை பேசாதீங்க எனக்கு ஹர்ட் ஆகுது..” என்றிட எதுவும் சொல்லாமல் சாப்பிட தொடங்கினான்.
அவன் பதிலுக்காக காத்திருந்தவள் நிச்சயம் இதற்கு மேலும் கணவன் வாய் திறக்க போவதில்லை என்பதை உணர்ந்து தானும் சாப்பிட தொடங்கினாள்.
“குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு கூட எனக்கு நீ அப்டேட் பண்ணலை இல்லை.. அந்தளவு நான் உனக்கு முக்கியமானவனா இல்லாம போயிட்டேன் இல்ல. அப்படி என்னடி வீம்பு உனக்கு?” என்றான் மெல்லிய குரலில்.
“அப்படின்னு நான் சொன்னேனா? என் வாழ்க்கையில் உங்களோட இடம் என்னன்னு உங்களுக்கே நல்லா தெரியும். ஆனா என்னோட இடம் என்னன்னு தெரியாததால தான் இவ்ளோ பிரச்னையும்…” என்றதில் ரிஷியின் முகம் மாற்றம் பெறுவதை கண்டவள்,
“சரி அதை விடுங்க, ஏன் எங்களோட செக் அப் டேட் உங்களுக்கு தெரியாதா? எங்க வீட்டுக்கு வரலைனாலும் அட்லீஸ்ட் ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கலாமே.. இப்போ கூட உங்க குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையில நான் தடையா இல்லையே.. யாருக்கு வீம்புன்னு நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க..”
“என்னடி குத்தி காட்டுறியா?”
“இல்லை ரிஷி. உங்களுக்கு குழந்தைகள் மேல எவ்ளோ பாசம்னு எனக்கு தெரியும் பட் சிலரோட தப்பான கைடன்ஸ்ல நம்மோட முக்கியமான தருணங்களை நீங்க இழக்கறது மட்டுமில்லாம என்னையும் அனுபவிக்க விடாம பண்றீங்க..” என்று மெல்ல பேச்சை தொடங்கவும் அவளை இடையிட்டவன்,
“பேச்சை நிறுத்திட்டு என் பசங்களுக்கு சாப்பிட கொடு. டைம் இப்போவே ஒன்றரை ஆச்சு. தினமும் இப்படி தான் நேரம் தவறி சாப்பிட கொடுக்கிறியா?”
“அடடா! பிள்ளைகள் மேல எவ்ளோ அக்கறை!!இவ்ளோ நாள் இந்த அக்கறை சக்கரை எல்லாம் மெரீனா பீச்ல (Merina Beach) காத்து வாங்க போயிருந்துச்சா ரிஷி?..” என்று சிரிப்போடு கணவனை பார்த்தாள்.
“அமைதியா சாப்பிடுடி..” என்றவன், அவளுக்கு தேவையானவற்றை கொண்டு வந்து வைத்து இறுதியாக பழங்கள் கொண்டு வந்து வைத்தான்.
“இது உங்க குழந்தைகளுக்கு தானே!!” என்று மாம்பழத்தை எடுத்து காண்பிக்க, “என் பசங்களுக்கான மாதுளம்பழம் இதுல இருக்கு..”
“ஓஒ அப்போ இது எனக்கா?!”
“ஏன் சொல்லி தான் தெரியனுமா?”
“சொல்லுங்க ரிஷி அதனால உங்களோட கிரீடம் ஒன்னும் இறங்கிடாது..” என்று இலகுவாக சொன்னவளுக்கு ‘கணவனை எந்த ரகத்தில் சேர்ப்பது’ என்றே புரியவில்லை.
“எதையும் வாய் விட்டு சொன்னால் முத்தா உதிர்ந்திடும்..” என்றதில் ரிஷி முறைக்க அவனையே பார்த்திருந்தவள் ஒரு பெருமூச்சோடு பழங்களை சாப்பிட்டு முடித்தாள்.
“சரி வா மாடியில ரூஃப் கார்டன் இருக்கு வாக் போயிட்டு வரலாம்..”
“வாக்!! இந்த நேரத்திலா? பட் மீட்டிங்..”
“இன்னும் நேரமிருக்கு.. வா..” என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.
பெண் மனதை ஆழம் என்று கணித்த முன்னோர் சில ஆண்களின் மனம் அதனினும் ஆழம் என்பதை ஏனோ கண்டறியாமல் போய் விட்டனர் என்றே அவளுக்கு தோன்ற ரிஷியோடு லிஃப்ட்டில் ஏறினாள்.
மாடியில் அவர்களை தவிர யாருமே இல்லை.
“உட்கார்..” என்று அவளுக்காக நாற்காலியை இழுத்து போட்டவன் அவள் அமர்ந்ததும் அருகே அமர்ந்து அவள் வயிற்றில் கரம் பதித்தான்.
“என்ன எந்த அசைவும் இல்லை..” என்றவனுக்கு இன்றைய நாளை தவற விட மனமில்லை.
ஏனோ இன்று குழந்தைகளை உணர்ந்ததில் மனம் அத்தனை லேசாக இருக்க இருவருக்கும் இடையில் இருந்த கருத்து பேதம் மறைந்து ஒருவித இதம் பரவி இருந்தது.
அதனால் எதையும் யோசிக்காமல், விவாதிக்காமல் இன்றைய நொடிகளை அனுபவிக்க எண்ணினான்.
Comments
Post a Comment