தீராத காதல் தொல்லையோ - 4.2
“எதுக்கு மா இவ்ளோ பெரிய பேச்செல்லாம்? குழந்தைகள் இருக்காங்க அவங்களோட எதிர்காலத்தை பற்றி யோசிக்காம இப்படி ஒரு பேச்சு எதுக்கு? நீ புத்திசாலி பொண்ணு மா கொஞ்சம் நிதானிச்சு முடிவு செய்யலாமே..”
“குழந்தைகளோட எதிர்காலம் பற்றின கவலையே உங்களுக்கு வேண்டாம். ஏற்கனவே சொன்னது போல என்னால தனிச்சு அவங்களை வளர்க்க முடியும்…”
“லட்சுமி ஒரு நிமிஷம்..”
“ப்ளீஸ் மாமா வேண்டாம்.. இதுக்கு மேல அவரை பத்தி பேசவே நான் விரும்பல. விவாகரத்துங்கறது ரொம்ப பெரிய முடிவு மட்டுமில்லை மிகப்பெரிய பிராசஸ் (Process) ஆனா இப்போ அதுக்கு நான் தயாராக இல்லை..”
“விவாகரத்தா? லட்சுமி..”
“ஆமாம் மாமா ஆனா இது இன்னைக்கு எடுத்த முடிவு கிடையாது. என்னைக்கு உங்க பிள்ளை திரும்பவும் என்னை யார் நீன்னு கேட்டாரோ அன்னைக்கு நான் எடுத்து முடிவு. பட் இப்போ குழந்தைகள வச்சுட்டு கோர்ட் ஆஃபீஸ் வீடுன்னு என்னால அலைய முடியாது..”
“அலைச்சல், மனஉளைச்சல், குழந்தைகளை நேரத்துக்கு கவனிக்க முடியாதுன்னு தான் இந்த முடிவை தள்ளி போட்டிருக்கேன். பட் குழந்தைகள் பிறந்து அவங்க ஓர் அளவுக்கு வளர்ந்த பிறகு நிச்சயமா உங்க பிள்ளை கிட்ட இருந்து நான் சட்டப்படி பிரிஞ்சுடுவேன்..”
“அம்மாடி..” என்றவரின் குரல் உடைந்து விட்டது.
“எதுக்காக கல்யாணம் பண்றோம்? நம்முடைய வாழ்க்கை முழுக்க துணை வரக்கூடிய மனைவியின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாதவர்கள் கல்யாணமே பண்ணிக்க கூடாது. ஆனா உங்க பிள்ளை தெரிஞ்சோ தெரியாமலோ அந்த தப்பை செய்துட்டார்.. அதை நான் இப்போ சரி பண்ண போறேன் அவ்வளவுதான்..”
“என் வரையில இந்த உறவை இழுத்துப் பிடிச்சு கட்டி வைக்க நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா கல்யாணம்கிற ரெட்டை மாட்டு வண்டியில ஒரு மாடு ஒரு திசையிலையும் இன்னொரு மாடு இன்னொரு திசையிலயும் போனா எப்படி மாமா சரியான இடத்துக்கு போய் சேர முடியும்?”
“நான் மட்டுமில்லாம இப்போ குழந்தைகளும் அவரால அல்லாடனும்னு நினைச்சாலே என்னால தூங்க முடியாம போயிடுது. என் குழந்தைகளுக்கு நிம்மதியான வாழ்க்கை அமையணும் அப்பா அம்மா சேர்ந்து இருந்தா அதை கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு அவங்களோட சந்தோஷத்துக்காக நான் விலக முடிவு பண்ணிட்டேன்…”
“அவருக்கு யார் முக்கியம் அவங்களுக்கு என்ன பண்ணனும்னு முடிவு பண்றாரோ தாராளமா பண்ணிக்கிட்டும் இனி நான் எந்த விஷயத்துலயும் தலையிடறதா கிடையாது..”
“லட்சுமி வேண்டாமா.. உன் அப்பா அம்மாவுக்கு உன்னோட முடிவு தெரிஞ்சா அவங்களும் கஷ்டப்படுவாங்க பேசி தீராத பிரச்சனை எதுவும் கிடையாது நீ நல்லபடியா குழந்தைகளை பெற்று எடு நம்ம பேசிக்கலாம்…”
“இல்லை மாமா பேசி தீர்க்க கூடிய கட்டத்தை எப்பவோ நாங்க தாண்டியாச்சு. இனி பேச்சினால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கண்டிப்பா எந்த பெற்றவர்களும் தன்னோட பெண் வீட்டோட வந்து இருக்கணும் என்பதற்காக கல்யாணம் பண்றது கிடையாது..”
“நிச்சயமா என்னோட முடிவை என் அப்பா அம்மா ஏத்துக்குவாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்ன ஒன்னு அம்மா கொஞ்சம் வருத்தப்படுவாங்க தாமதமானாலும் என்னை புரிஞ்சுப்பாங்க.. உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்..”
“அம்மாடி அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. அவனுக்காக மட்டுமில்லை நம்ம வீட்ல நடந்த எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிச்சுடு ஆனா உன் முடிவை இன்னொரு தரம் யோசிக்கலாமே மா”
“அச்சோ மாமா நீங்க எதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிட்டு? என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்ல பலர் இப்படி ஒரு வருஷம் முடியாமலே விவாகரத்துன்னு போனதை பார்த்திருக்கேன். அதனாலேயே என்ன நடந்தாலும் நாம அப்படி அவசரப்பட்டு செய்ய கூடாதுன்னு தான் நான் எவ்வளவோ விட்டு கொடுத்து அனுசரிச்சு போனேன்..”
“ஆனா அது எல்லாமே அர்த்தமில்லததா மாறின பிறகு இனியும் இந்த பந்தத்துல இருந்து என்னையும் குழந்தைகளையும் வருத்திக்க நான் தயாரா இல்லை. இந்த முடிவை நான் நல்லா யோசிச்சு தான் எடுத்திருக்கேன்…”
“அதோடு நான் ஒன்னும் இன்னைக்கே போய் விவாகரத்துக்கு ஃபைல் பண்ண போறது இல்லையே.. அதுக்கு இன்னும் நாள் இருக்கு நீங்க கவலைபடாதீங்க மாமா..” என்றிட சிவபாலனுக்கு எப்படியாவது இடைப்பட்ட நாளில் மகன் மருமகளின் வாழ்வை சீர்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
வளைகாப்பை முடித்து கொண்டு வீடு திரும்பியவர் மகனை தனியே அழைத்து சென்று பேசினார்.
விஷயத்தை அறிந்ததுமே, “என்னை விட்டுட்டு என் பிள்ளைகளுக்கு வளைகாப்பு செய்ய அவளுக்கு எவ்ளோ துணிச்சல் இருக்கணும்? நான் வேண்டான்னு முடிவு பண்ணிட்டாளா?” என்று எல்லையில்லா கோபத்தோடு கேட்டான்.
“ஆமாடா, மருமக நீ வேண்டான்னு முடிவு பண்ணிடுச்சு.. முறையா விவாகரத்து வாங்கறதுகுள்ள முடிஞ்சா உன் வாழ்க்கையை காப்பாத்திக்கோ..” என்று காட்டமாகவே சொன்னார் சிவபாலன்.
என்றுமில்லாத திருநாளாக கணவன் மகனை தனியே பேசுவதற்காக அழைத்து செல்வதை கண்ட இந்திரா அவர்கள் பின்னே சென்று அனைத்தையும் ஒட்டு கேட்டிருந்தார்.
ரிஷி பதில் அளிக்கும் முன்பாகவே அங்கே வந்தவர், “என் மகனை அவ என்ன வேண்டான்னு சொல்றது?! என் பிள்ளைக்கு அவ வேண்டாம். இப்பவே விவாகரத்துக்கு அப்ளை பண்ணு வரதா உனக்கு இன்னொரு பொண்ணு பார்த்து நான் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்றேன்..” என்றார் ஆவேசமாக.
“வாயை மூடுடி! ஏற்கனவே அவன் வாழ்க்கையை கெடுத்தது போதாதுன்னு இப்போ மொத்தமாக அழிக்க பார்க்கிறியா?”
“இரண்டு புள்ளைகளை சுமந்துட்டு இருக்கிற பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரும் தெனாவட்டும் இருந்தா என் மகன் ஆம்பளை அவனுக்கு எவ்ளோ இருக்கணும். என்னைக்கு இருந்தாலும் பொம்பளை பொம்பளை தான் ஆம்பளை ஆம்பளை தான்!!”
“என் பிள்ளை துணை இல்லாம அவ வாழ்ந்துட முடியுமா? இல்லை குழந்தைகளை வளர்த்துட முடியுமா? அவ இடத்துக்கு இன்னொருத்தி வந்தா தான் அவளுக்கு புத்தி வரும் நீ விவாகரத்து பத்திரத்தை அனுப்பு வரதா..” என்றார்.
“இப்போ நீ அமைதியா இருக்க போறியா இல்லையாடி?” என்றவர் இந்திராவை கை ஓங்க, அதை தடுத்து பிடித்த ரிஷி,
“இப்போ எதுக்கு அம்மாவை அடிக்க பார்க்கறீங்க? அவங்க கேட்டது சரி தானே!! நான் தானே குழந்தைகளுக்கு அப்பா.. என்னை விட்டுட்டு அவ செஞ்சிருக்கிற வேலைக்கு என்ன அர்த்தம்?”
“ரிஷி, என்னடா பேசற?” என்றவருக்கு அவன் பதில் அளிக்கும் முன் இடையிட்ட இந்திரா,
“இனி நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க.. பொட்டச்சிக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா மாமனார் மாமியாரை தான் மதிக்கலைன்னு பார்த்தா புள்ளைகளுக்கு அப்பனான இவனையும் மதிக்காம வளைகாப்பு செய்திருப்பா.. நீங்களும் மானம் கெட்டு அங்க போய் சீராடிட்டு வந்திருக்கீங்க..”
“என் மகனுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்..” என்றவர் உடனே தினகரனுக்கு அழைத்து, “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்கீங்க? இனி அவளோட உறவே எங்களுக்கு வேண்டாம்..” என்று தொடங்க கைபேசியை வாங்கிய மகா,
“நீங்க போங்க ப்பா நான் பேசிக்கிறேன்..” என்று அவரை அனுப்பி விட்டு தன் அறைக்கு வந்து, “சொல்லுங்க, என்ன தெரியனும் உங்களுக்கு?” என்றாள்.
“யாரை கேட்டுடி வளைகாப்பு நடத்தின?”
“முதல்ல சத்தத்தை குறைங்க.. பேசுறது நம்ம இரண்டு பேருக்கு கேட்டா போதும்.. என்னோட வளைகாப்பை எனக்கு பிடிச்ச மாதிரி நடத்த யார்கிட்ட நான் அனுமதி வாங்கணும்” என்றாள் அமைதியான குரலில்.
“என் பிள்ளையை ஒதுக்கிட்டு விசேஷத்தை செய்த திமிராடி?”
“உங்களுக்கு அப்படி தோணினா தாராளமா அப்படியும் வச்சுக்கலாம்..”
“நீ செய்த காரியத்துக்கு ஒழுங்கு மரியாதையா என் புள்ள காலுல விழுந்து மன்னிப்பு கேளு இல்லை நாங்க உன்னை ஒதுக்க வேண்டியது இருக்கும்..”
“அப்படியா? எப்படி ஒதுக்குவீங்க?”
“ஏதோ விவாகரத்து பண்ணுவேன்னு என் புருஷன் கிட்ட பூச்சாண்டி காட்டினியாமே அதை நாளைக்கே நாங்க பண்ணி காட்டுவோம்..”
“அப்படியா? எனக்கு நேரம் மிச்சமாகும் தாராளமா செய்ங்க..” என்றிட அனைத்தையும் லவுட் ஸ்பீக்கரில் (Loud Speaker) கேட்டு கொண்டிருந்த ரிஷியின் கோபமும் எல்லையை கடந்தது.
“என்ன கொழுப்புடி உனக்கு? வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாம சம்பாதிக்கிற திமிருல பேசிட்டு இருக்கியா?”
“அப்படியே வச்சுக்கோங்க..” என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தாள் மகாலட்சுமி.
“புருஷன் பிள்ளைகள் இல்லாம உன்னை தனியா நிறுத்தி உன் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அடக்கலை நான் இந்திரா இல்லைடி..” என்று சூளுரைத்தார்.
“நான் வேணும்னா உங்களுக்கு இதைவிடவும் நல்ல பேரா, ஸ்டைலிஷா இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி பார்த்து வைக்கட்டுமா?” என்று அனாயாசமாக அவரை கையாண்டாள்.
“ஏய்!! என்ன முடியாதுன்னு பார்க்கிறியா?”
“உங்களால என்ன முடியும்னு பார்க்க நான் தயாரா இருக்கேன்..”
“ஏய்! அதுங்க எங்க குடும்ப வாரிசுங்க.. வெளியே வந்ததும் எங்க கைக்கு எப்படி வர வைக்கணும்ன்னு எனக்கு தெரியும்..”
“ஆல் தி பெஸ்ட்!! இப்போ எனக்கு டையார்ட்டா இருக்கு ரெஸ்ட் எடுக்கணும்.. நீங்க வேற எதுவும் சொல்லனும்னா வாய்ஸ் நோட் அனுப்பி வைங்க நான் ஃப்ரீயா இருக்கிறப்போ கேட்கிறேன்..” என்று மகா அழைப்பை துண்டிக்க இந்திரா முகத்தில் ஈயாடவில்லை.
ஆஹா!!! இந்த பொண்ணு ஒரு முடிவுல தான் இருக்கா.. அந்த லூசு இன்னும் வெட்டி ஈகோவும் சுயநலமுமா திரியுது... இதுல இழக்க போறது ரிஷி தான்..மகாக்கு இதுல இழப்பு ரொம்ப கம்மி. என்னங்க இருந்துச்சு அங்க இழக்கறதுக்கு.
ReplyDeleteJust Wow maha
ReplyDelete