வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 22


நாட்கள் அதன் போக்கில் செல்ல மஹாவிற்கு பிரசவத்திற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்தது.

மருத்துவரின் வழிகாட்டுதல் படி சரியான உணவு, நடை பயிற்சி, உடற்பயிற்சி, யோகா என்று இருந்தவளுக்கு வளைகாப்பு முடிந்த 10 நாட்களிலேயே குழந்தைகளின் தலை திரும்ப தொடங்கி இருந்தது.


அன்று செக்கப்பிற்கு சென்ற போது அடுத்த நாளே வந்து அவளை அட்மிட்டாக மருத்துவர் சொல்லிவிட்டதில் மகாவின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 


“அத்தை வெந்நீருக்கு தனியா ஃப்ளாஸ்க் பாலுக்கு தனியா எடுத்து வச்சுட்டேன்.. உடனே எடுக்கிற மாதிரி மகாவுக்கான நைட்டி குழந்தைக்கு போடுறதுக்கான டிரஸ் எல்லாமே இதுல தனியா வச்சுருக்கேன். பெரிய பேக்ல தேடாதீங்க..” 


“சரி சுமதி குழந்தைகளுக்கு கட்டுறதுக்கு துணி எங்க இருக்கு?..” 


“எந்த குழப்பமும் வேண்டாம்னு முதல் நாளைக்கு தேவையான திங்ஸ் எல்லாமே இதுல தனியா வச்சுருக்கேன்..” என்று மாமியாரிடம் அத்தனையும் ஒருமுறை மீண்டும் சொல்லி முடிக்க அங்கே வந்த கதிர், 


“அம்மா நீங்க கேட்ட சுத்தமான தேன், அப்புறம் வைப்ஸ் (Wipes) , ஹக்கீஸ் (Huggies) ..” என்று அவர் கேட்டதனைத்தும் வாங்கி வந்து கொடுத்தான்..


“அப்பா எங்க வந்துட்டு இருக்காங்கன்னு கேளு கதிர், மகா கஷாயத்தை குடிச்சாளா பாரு சுமதி..” என்ற சுமதி பூஜையறையில் விளக்கேற்றுவதற்க்கான ஆயத்தம் செய்ய சென்றார். 


“இப்பதான் வாஷ் ரூம் போயிட்டு வந்தா அத்தை.. கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்க சொல்லி இருக்கேன்..”


“அண்ணி, அத்தை மாமா குழந்தை பிறந்ததும் சொல்ல சொன்னாங்க.. குட்டிகளை கூட்டிட்டு வந்து காமிச்சுட்டு போயிடுறாங்களாம்..”


“என்ன அவ்ளோ அவசரம்? வெளியே எங்கேயாவது போறாங்களா தம்பி..”


“இல்லை அண்ணி ஆனா நான் பசங்களை விட்டுட்டு பாதி தூரம் கூட வரல அதுக்குள்ள அவங்க கிட்ட இருந்து எனக்கு ஃபோன் வந்துடுச்சு.. அதுதான் அத்தை குழந்தைகளை பார்த்துட்டு வர வரைக்கும் எங்களை இருக்க விடமாட்டாங்க உடனே சொல்ல சொன்னாங்க..” என்றான் புன்னகையோடு. 


“பாவம் பிள்ளைகள், ஏன் சுமதி அதுதான் கதிர் ஒரு வாரம் லீவ் போட்டு இருக்கானே அவனே குழந்தைகளை பாத்துக்க மாட்டானா?! அவங்களுக்கும் ஆசை இருக்கும் தானே! எதுக்கு உங்க அம்மா வீட்டுல விட சொன்ன?”


“அத்தை காயத்ரி கூட இருந்தாலாவது பரவால்ல இங்கேயே விட்டு வைக்கலாம். ஆனா தம்பியால அவங்களை தனியா சமாளிக்க முடியாது..” 


“வீடு ஹாஸ்பிடல்ன்னு அவருக்கு சரியா இருக்கும். இதுல இவங்களையும் வச்சுக்கிட்டு சுத்த முடியுமா? குழந்தைகளை ரொம்ப நேரம் ஹாஸ்பிடல்ல இருக்கவும் விட மாட்டாங்க, எனக்கும் அவங்களை வச்சுட்டு சமைக்கிறது கஷ்டம்..” 


“எவ்வளவு நேரம் தான் சின்ன அத்தையும் நீங்களும் பார்க்க முடியும்? நான் வந்தா உங்களுக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் கிடைக்குமில்லையா?” 


“அதுவும் சரி தான்.. ஆனா மகாவை டிஸ்சார்ஜ் பண்ணினதும் குழந்தைகளை கூட்டிட்டு வந்துடலாம்.. துணி கசக்க, பாத்திரம் தேய்ச்சு, வீடு துடைக்க நம்ம ரமணி கிட்ட பேசிட்டேன் வரேன்னு சொல்லி இருக்கா அதோடு என் தங்கச்சியும் இரண்டு வாரம் கூட இருக்கிறதால கவலை இல்லை..”


“எப்போ அத்தை? ரமணி அக்கா கிட்ட நான் கேட்டதுக்கு வேற எங்கேயோ வேலை இருக்கிறதா சொன்னாங்களே..”


“ஆமா சுமதி ஆனா அவங்க பக்கத்துலயே வசதியா இன்னொரு ஆள் கிடைக்கவும் இவளை வேண்டான்னு சொல்லிட்டாங்களாம். இரட்டை குழந்தைகளை சமாளிக்கிறது கஷ்டம் அதனால மகா இங்கே இருக்கிற வரைக்கும் மட்டுமில்ல அவ எப்போ வந்தாலும் செய்து தர தயாரா இருக்காளாம்..”


“ரொம்ப சந்தோஷம் அத்தை…” என்றவள் கொசுவலையை எடுத்து வைக்க குளித்து விட்டு வந்த கதிர், “ம்மா சித்தி எங்க வந்துட்டு இருக்காங்க? நான் கால் பண்ணினா ரீச் ஆகலை..” என்றான்.


“அச்சோ, சொல்ல மறந்துட்டேன் டா சௌந்தரி இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டேஷனுக்கு வந்துடுவாளாம்.. நீ போய் அவளை கூட்டிட்டு நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துரு நாங்க எல்லாரும் நல்ல நேரத்தில கிளம்புறோம்..” என்று சொல்ல அவனுக்கு காயத்ரி அழைத்திருந்தாள். 


“சொல்லு காயூ..” என்றான் பைக் கீயை எடுத்தபடி.. 


“என்னங்க குழந்தைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும், எப்போ வரீங்க?” 


“ஏன் என்ன ஆச்சு? நல்லா தானே இருந்தான், ஏதாவது பிரச்சனையா?” 


“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க இன்னைக்கு அவனுக்கு வாக்ஸினேஷன் பண்ணனும்னு சொன்னேனே மறந்துட்டீங்களா?” 


“அட ஆமா இல்ல..” என்று புருவத்தை கீறியவன், “காயூ டாக்டர் மகாவை இன்னைக்கு அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க.. நான் சித்தியை கூட்டிட்டு வர கிளம்பிட்டு இருக்கேன் என்னால வர முடியாது.  இந்த முறை உன் தம்பியை கூட்டிட்டு போயிட்டு வந்துடு..” 


“போன முறையும் இதே தான் சொன்னீங்க.. இந்த முறை கண்டிப்பா வருவீங்கன்னு எவ்வளவு நம்பி இருந்தேன்..” 


“ப்ச், நீ என்ன சின்ன குழந்தையா சூழ்நிலையை புரிஞ்சிக்கோடி.. நான் மகாவை அட்மிட் பண்ணிட்டு முடிஞ்சா வந்து பார்க்கிறேன்…” 


“வந்துடுவீங்க தானே?!” 


“இது என்ன நம்பிக்கை இல்லாத கேள்வி…”


“அப்படி இல்லைங்க..”


“ப்ச், மகாவுக்கு இன்னும் பெயின் ஸ்டார்ட் ஆகலை…” என்றவனை சுமதி அழைக்க, “இதோ வரேன் அண்ணி”  என்றவன் அப்படியே அழைப்பை துண்டித்து விட்டு செல்ல காயத்ரியின் முகம் சுணங்கி போனது.


“கொடுங்க அண்ணி நான் வச்சுட்டு வரேன்…” என்று அவள் கையில் இருந்த பொருட்களை வாங்க, “நான் பார்த்துக்கிறேன் தம்பி, உங்களை அத்தை கூப்பிட்டாங்க என்னன்னு பாருங்க..” என்றிட


“என்ன ம்மா விஷயம்?” என்று மஹாவின் அறைக்குள் சென்றான்.


“கதிர் ஹாஸ்பித்திரிக்கு கிளம்பறதை பற்றி மாப்பிள்ளைக்கு ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு சொன்னா உன் தங்கச்சி கேட்க மாட்டேங்கற நீயாவது சொல்லு..” 


“ம்மா இப்ப எதுக்கு அண்ணனை கலவர படுத்துறீங்க? இத்தனை நாளும் குழந்தைகளை நான் தனியாத்தானே சுமந்துட்டு இருந்தேன் உன் மாப்பிள்ளை என்ன பாதி மாசம் பிள்ளைகளை வச்சு சுமந்த மாதிரி பேசற?”


“மகா என்னடி பேசற?”


“பின்னே என்னம்மா, தனியா சுமக்க முடிஞ்சவளுக்கு உன் மாப்பிள்ளை இல்லாம அவங்களை பெத்தெடுக்க முடியாதா?” என்றவளின் குரலில் என்றும் இல்லாத வைராக்கியம். 


இதே மகா தான் ஒரு காலத்தில் கணவனின் கைபிடித்து பிரசவத்தை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்தவள் ஆனால் இப்போது தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து பிரசவத்தை எதிர்கொள்ள இரு மடங்கு பலத்தோடு தயாராக இருக்கிறாள். 


இதுநாள் வரை அவள் எடுத்திருக்கும் முடிவை பற்றி மகாலட்சுமி பெற்றவர்களிடம் பேசவில்லை. எங்கே பேசினால் பாக்கியலட்சுமி இதை வைத்தே தினமும் பேசி அவளை நிம்மதி இழக்க செய்து விடுவாரோ என்பதாலேயே குழந்தைகள் பிறந்த பின்னர் தன் முடிவை சொல்ல தீர்மானித்திருந்தாள்.


“மகா சொன்னா சரியா தான் இருக்கும். நீங்க எதுக்கு இப்போ அவளை கம்பெல் பண்றீங்க? ஏன் பிள்ளைகளோட டியூ டேட் உன் மாப்பிள்ளைக்கு தெரியாதா என்ன? அக்கறை இருந்தா இந்நேரத்துக்கு வந்து இருக்கணும்…”


“என்னடா அவளுக்கு புத்தி சொல்லுவன்னு பார்த்தா நீ இன்னும் ஏத்தி விடற..”


“ம்மா இந்த நேரத்துல மகா நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். நீங்க ஏன்ம்மா தேவை இல்லாம அவளை தொல்லை பண்றீங்க?!”


“உன்னை போய் கூப்பிட்டேன் பாரு என்னை சொல்லணும்..” என்று நெற்றியில் அடித்துக் கொண்டவர் தனக்காக பேச கணவனை தேடி சென்றார். 

 

தினகரனும் மகளின் முடிவை ஆதரிக்க அங்கும் அவருக்கு தோல்வி தான் கிட்டியது. 


“நம்ம பொண்ணு முக்கியம் பாக்கியா அதை மட்டும் பாரு..”

 

“இல்லைங்க எல்லா பொண்ணும் புருஷன் பக்கத்துல இருக்கணும்னு ஆசைப்படுவாங்க..” 


“நம்ம பொண்ணு ஆசைப்படலையே.. அப்படி ஆசை இருந்தா மகாவே சொல்லி இருப்பாளே.. உனக்கு புரியுதா இல்லையா?” 


“இல்லைங்க ஒரு நிமிஷம் நான் சொல்றதை..” என்றவரை கை நீட்டி தடுத்தவர்,


“நேரமாச்சு மகாவை  கூட்டிட்டு வா சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம்..” என்றிட அதற்கு மேல் வாதிடாமல் பாக்கியலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு வர கடவுளை வணங்கி விட்டு நல்ல நேரத்தில் மருத்துவமனைக்கு கிளம்பினர்.


அதேநேரம் ஹைதராபாத்திலிருந்த ரிஷிக்கு சிந்துவின் ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. 


“சொல்லுங்க மேம்..” என்றான் தன் பொருட்களை பெட்டியில் அடுக்கியபடி. 


“ஸார் நான் சிந்துவோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்.. லாஸ்ட் பிடிஏ (PTA) வில் உங்களை எதிர்பார்த்தேன்..” என்றார் எடுத்தும்.


“நான் கொஞ்சம் பிஸி.. அப்பா இல்ல அம்மா வந்திருப்பாங்களே..”


“வந்திருந்தாங்க ஸார் ஆனா இந்த விஷயம் உங்க கிட்ட தான் பேசணும். நான் ஏற்கனவே சிந்து கிட்ட அவளோட அம்மாவை அடுத்த மீட்டிங்கு கூட்டிட்டு வர சொன்னேன் பட் அவங்களால வர முடியாதுன்னு சொல்லவும் தான் உங்களை கூட்டிட்டு வர சொல்லி இருந்தேன்..”


“அப்படியா? அவ என்கிட்ட அப்படி எதுவும் சொல்லலையே.. சரி என்ன விஷயம் சொல்லுங்க மேம்..”


“கிளாஸ்ல நிறைய ஸ்டூடண்ட்ஸ் instagram அக்கவுண்ட் வச்சிருக்காங்க.. அதுவும் பேரன்ட்ஸ்க்கு தெரியாம.. அதை பற்றி உங்க கிட்ட பேசணும்..”


“என்ன சொல்றீங்க? இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டா?” 


“ஆமா ஸார், அப்படி இன்ஸ்டா அக்கவுன்ட் வச்சுருக்கிற ஸ்டுடென்ட்ஸ்ல சிந்துவும் ஒருத்தி…”


“என்ன சொல்றீங்க, அவகிட்ட தனியா ஃபோன் கிடையாதுங்களே அப்புறம் எப்படி?”


“ஸார் அவ இன்ஸ்டாகிராமில் இருக்கிறது தெரிஞ்ச பிறகு தான் நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்..”


“படிக்கிறதுக்காக அப்பா இல்ல அம்மாவோட ஃபோன் வாங்கிட்டு போவா ஆனாஅவ கிட்ட எப்படி அக்கவுண்ட்?! மேடம் நீங்க சரியா செக் பண்ணீங்களா?” 


“ஸார் எல்லாருடைய டீடைல்ஸும் எடுத்துட்டு தான் உங்ககிட்ட பேசுறேன். அதுதான் உங்க பேரன்ட்ஸோட ஃபோன் யூஸ் பண்றான்னு சொன்னிங்களே.. அதிலிருந்து அக்சஸ் பண்ணி இருக்கலாம்.. பெரியவங்களுக்கு அதை பற்றி தெரியாமல் போயிருக்கும்..”


“சிந்து கிட்ட இதைப் பற்றி நாங்க பேசல. உங்களுக்கு அவளோட ஐடி அனுப்புறேன் நீங்களே பாஸ்வோர்ட் வாங்கி செக் பண்ணி பாருங்க உங்களுக்கு உண்மை தெரிய வரலாம்…”


“ஓகே மேடம். பட் என்னால இன்னுமே நம்ப முடியல எப்பவுமே படிப்புன்னு இருக்கிறவ இந்த மாதிரி வாய்ப்பு இல்ல..”

 


“நீங்க சொல்றது சரிதான்.. ஆனால் சிந்து முன்னாடி இருந்த மாதிரி இப்போ கிடையாது. அதிலும் கடந்த ரெண்டு எக்ஸாம்ல மோஸ்ட் ஆஃப் தி சப்ஜெக்ட்ல அவ பார்டர்ல பாஸ் பண்ணி இருக்கா.. ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில்..”


“அப்படியா? இதை பற்றி யாரும் என்கிட்ட சொல்லலையே..”


“ஒருமுறை உங்க அம்மா வந்த போது நான் அவளோட படிப்புல கவனம் செலுத்த சொன்னேனே ஸார்..”


“அவங்க என்கிட்ட சொல்லல நான் என்னன்னு விசாரிக்கிறேன்..” என்றவன் முகமே வெகுவாக மாறி போய் இருந்தது .


“ஸார் இன்னொரு விஷயமும் சொல்லணும். இது ரொம்பவே சென்சிட்டிவான விஷயம்.. வெளியில யாருக்கும் தெரிய கூடாதுங்கிறது மேனேஜ்மென்ட்டோட இன்ஸ்ட்ரக்ஷன்.. எனக்கும் வயசு பொண்ணு இருக்கா அதனாலதான் சொல்றேன், கொஞ்சம் உங்க அக்கா பொண்ண உங்களோட கண்காணிப்புல வைங்க..”


“எதுக்காக அப்படி சொல்றீங்க? என்னாச்சு?”


“ஸார் எங்க ஸ்கூல் பொண்ணு ஒருத்தி ஃபோர் மந்த்ஸ் ப்ரெக்னன்ட்.. கிளாஸ்ல அவ அப்நார்மலா இருந்ததை வச்சு நாங்க கவுன்சிலர் கிட்ட கூட்டிட்டு போய் விசாரிச்ச போது அவளும் இன்னொரு பிளஸ் டூ பையனும் சேர்ந்து தப்பு பண்ணின விஷயம் தெரிய வந்தது..”


“இரண்டு பேரோட பேரன்ட்ஸையும் கூப்பிட்டு பேசிட்டு இருக்காங்க..” 


“என்னங்க சொல்றீங்க உங்க பாதுகாப்புல இருக்காங்க தானே நாங்க நம்பிக்கையோடு இருக்கோம் அப்புறம் எப்படி இதெல்லாம் மேடம் என்ன ஸ்கூல் நடத்துறீங்க?” 


“ஸார் நாங்க எல்லா பிள்ளைகளையும் எங்க பிள்ளை போல தான் நினைக்கிறோம், நடத்துறோம் அப்படித்தான் எல்லா இடத்திலும் கண்காணித்து வரோம் அப்படி இருந்தும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது எங்களுக்குமே அதிர்ச்சி தான்..”


“தப்பு செய்ய அவங்களுக்கு ஸ்கூல் மட்டும் தான் இடம்னு கிடையாது கண்ணால பார்க்காமலேயே யார் என்னன்னு தெரியாமலே லவ் பண்ற காலகட்டம் இது. நாங்க டீச்சர்ஸ் எவ்வளவோ ஸ்கூல்ல சொல்லி பாத்துட்டோம் ஆனாலும் ப்ராஜெக்ட் அது இதுன்னு மொபைல் யூசேஜை என்கரேஜ் பண்ணிட்டு தான் இருக்காங்க…”


“ஸ்கூல்ல நாங்க கண்காணிக்கும் அதே அளவு கண்காணிப்பை வீட்லயும் நீங்க கொடுத்தா நல்லா இருக்கும். சிந்துவுடைய நடவடிக்கையில இத்தனை வருஷம் இல்லாமல் நான் பார்த்த மாற்றங்களை தான் சொன்னேன். மற்றபடி அவளை தப்பா நினைச்சு சொல்லல..”


“உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் ப்ளீஸ் இதை ஸ்கூல் வரைக்கும் கொண்டு வந்து பெரிசு படுத்த வேண்டாம். சிந்து மேல இருக்கிற அக்கறையில் தான் சொல்றேன்..”


“ஓகே மேடம் நான் பார்த்துக்கிறேன் தேங்க்ஸ்..” என்று வைத்து விட்டவன் விமான நிலையத்திற்கு கிளம்பினான்.


இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்றிருந்த ரிஷி ஞாயிறு மதியம் போல தான் வீடு வந்து சேர்ந்தான். 


வழி நெடுக அவனுக்கு அழைத்த ஆசிரியர் சொன்ன செய்தி தான் அவன் மனதை ஆக்கிரமித்து இருக்க வீட்டிற்குள் நுழைந்ததும், “சிந்து எங்க ம்மா?” என்றான். 


“அவ இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலையே.. ஏன் வரதா கேட்கிற?”


“ஸ்கூலா? சண்டே அதுவுமா?” என்று நெற்றி சுருங்க இந்திராவை பார்த்தவன், “எத்தனை நாளா அவளுக்கு இப்படி ஞாயிறு கிழமைகளில் ஸ்கூல் இருக்கு?” என்றான். 


“அது எப்போவாவது ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க..”


“அதுதான் எப்போன்னு கேட்கிறேன். எனக்கு தெரிஞ்சு அவ இப்படி ஸ்பெஷல் கிளாஸ் போனது கிடையாதே.. சாயந்திரம் வரைக்கும் வைப்பாங்க அதுவும் அவளை அப்பா போய் கூட்டிட்டு வந்துடுவார் தானே?!”


“ஆமாப்பா ஆனா நீ இரண்டு முறை ஊருக்கு போயிருந்தியே அப்போ கிளாஸ் வச்சுருந்தாங்க.. முதல்முறை உங்கப்பா கல்யாணத்துக்கு போயிருந்தால அவ ஃபிரெண்ட் ஒருத்தி கூட கிளம்பி போயிட்டா.. அடுத்தமுறையும் அவளே வந்து கூட்டிட்டு போனா..”


“என்னது, நான் ஊருக்கு போயிருக்கும் போது மட்டுமா? அதுவும் ஃப்ரெண்ட் கூடவா? இதை ஏன் நீங்க என்கிட்டே சொல்லவே இல்லை..”


“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு வரதா, பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதற பசங்களுக்கு இப்படி ஸ்கூல்ல கிளாஸ் வைக்கிறது வழக்கம் தானே!”


“இருக்கட்டும். ஆனாலும் இதை நீங்க என்கிட்டே சொல்லி இருக்கனுமா இல்லையா? வயசு பொண்ண யார் கூடவும் தனியா அனுப்பிடுவீங்களா? சரி இன்னைக்கு யார் கூட போனா?”


“அதே பொண்ணு தான்பா வந்து அழைச்சுட்டு போனா? ஆமா எதுக்கு நீ இவ்ளோ கேள்வி கேட்கிற?”


“என்னம்மா ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கிற பொண்ணை தனியா எதுக்கு அனுப்புனீங்க ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா பெத்தவங்களுக்கு யார் பதில் சொல்றது?”


“வரதா அவ சின்ன குழந்தை. கூட்டிட்டு போக வந்த பொண்ணு இவளுக்கு ஃபிரெண்ட்..”


“இருக்கட்டுமே, முதல் முறை விடுங்க நம்ம கண்காணிப்புல இல்லாம அடுத்தடுத்து எதுக்கு தனியா அனுப்புனீங்க? அப்பாவோடு போக சொல்ல வேண்டியது தானே..”


“நீ பேசறது கொஞ்சமும் சரியில்லை. என் பேத்தி என்ன தப்பு பண்ணிட்டான்னு கண்காணிக்க சொல்ற? அவ என் மகளை மாதிரி…”


“நான் இல்லைன்னு சொல்லலை..” என்றவன் இதற்கு மேலும் அவருக்கு புரிய வைக்க முடியாது என்பதால், “சரி நான் கிளம்பறேன்..” என்று வந்ததும் வராததுமாக பைக் சாவியை எடுத்துகொண்டு கிளம்பிவிட்டான்.


அவர்கள் தெருவை கடந்ததுமே வண்டியை நிறுத்தி விட்டு முதலில் அவளின் ஆசிரியருக்கு அழைத்தவன் இன்றைய வகுப்பு பற்றி கேட்க அவரோ ஞாயிறுகளில் எப்போதுமே  யாருக்குமே வகுப்புகள் கிடையாது என்றார். 


கோபத்தோடு வண்டியை கிளப்பியவன் சிந்துவின் தோழி வீட்டிற்கு தான் சென்றான். அங்கே அந்த பெண் அவள் வீட்டில் தான் இருந்தாள். ஆனால் ரிஷி சிந்துவை பற்றி கேட்க அவள் முகம் மாறிப்போனது. 


அவள் அன்னையும் உடன் இருக்க, “கொஞ்சம் தண்ணி கொடுங்க..” என்று அவரை அனுப்பியவன், “சிந்து எங்கன்னு உண்மையை சொன்னா நான் உங்க வீட்ல எதுவும் பேச மாட்டேன் இல்லை இப்போவே உன் அப்பாவை கூப்பிட்டு நீ செய்த வேலையை சொல்லிடுவேன்..” என்றதில் உண்மையை சொல்லிவிட்டாள்.

நொடி நேரம் கூட தாமதிக்காமல் சிந்துவை தேடி சொல்ல அங்கு அவளும் 23 வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவனும் ஒரே ஐஸ்கிரீமை பகிர்ந்து உண்டு கொண்டிருக்க அதை கண்டவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.


Comments

  1. super
    ini thanda unakkum unga amma akka yellarukkum irukku

    ReplyDelete

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17