வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 24.2



அதேநேரம் ‘சிந்து வயதிற்கு வரவில்லை..’ என்று இந்திரா சொன்ன செய்தியை கேட்டு உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் சிவபாலனும் ரிஷிவரதனும். 

“சொன்னா புரிஞ்சுக்கோ வரதா, கூட படிக்கிற பிள்ளைகளால சிந்து புத்தி கெட்டு போய் இருக்கலாம். ஆனா அவ நம்ம ரத்தம் நீ நினைக்கிற மாதிரி எந்த தப்பும் நடந்திருக்காது..”

“வயசுக்கே வராத பொண்ண டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயி அவளை நீயே உயிரோட கொன்னுடாத..” என்று உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டு சென்றவர் அப்போதுதான் ‘தான் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறோம்’ என்று புரிந்து சட்டென பேச்சை நிறுத்தி இரு கைகளாலும் வாயை பொத்தி கொண்டார்.

உடைமாற்றி வந்த சிந்துவும் இந்திரா உண்மையை சொன்னதில் அதிர்ந்து போனாள்.

மூவரில் முதலில் சுதாரித்தது சிவபாலன் தான்!!

மனைவியை இழுத்து தன் முன் நிறுத்தி “என்னடி சொன்ன? திரும்ப சொல்லு..” என்றார்.

பயத்தில் உடல் வெடவெடக்க கணவரை பார்த்திருந்த இந்திராவிற்கு கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது. 

மகளின் வாழ்க்கைக்காக பேத்திகளின் எதிர்காலத்துக்காக எத்தனை அழகாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி இறுதிவரை அவர்கள் மூவரைத் தவிர வேறு யாருமே தெரியாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்தார்.

ஆனால் ‘காலம் இப்படி அவர் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்கும்’ என்று இந்திரா எதிர்பார்க்கவில்லை. 

“உன்னை தான்டி கேட்கிறேன், இப்போ என்ன சொன்ன?” என்று மனைவியை ஓங்கி அறைந்தார் சிவபாலன். 

அப்போதும் இந்திரா பதில் சொல்லாமல் கண்ணீரோடு பார்க்க மீண்டும் ஓங்கி அறைந்ததில் தடுமாறியவர் கீழே விழவும் ஓடி வந்து அவரை தாங்கிக் கொண்ட சிந்து, “பாட்டியை அடிக்காதீங்க தாத்தா நான் உண்மையை சொல்லிடுறேன்..” என்றாள் கண்ணீரோடு.

“நிஜமாவே நான் இன்னும் ஏஜ் அட்டென்ட் பண்ணல தாத்தா.. எல்லாரும் நம்பனுங்கிறதுக்காக அம்மாவும் பாட்டியும் சொன்ன மாதிரி செஞ்சேன். என்னோட அத்தைகளும் வந்து பார்த்து நான் ஏஜ் அட்டென்ட் பண்ணினதா கன்ஃபார்ம் பண்ணாங்க…” என்றிட நம்ப முடியாமல் மனைவியை பார்த்தவர், 

“என்னடி இதெல்லாம்? எதுக்காக இந்த நாடகம்?” என்று கண்ணீரோடு இந்திராவை தூக்கி நிறுத்தி அறைய முற்பட அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, “எல்லாமே என்னோட நல்லதுக்காக தான் தாத்தா.. ப்ளீஸ் பாட்டியை அடிக்காதீங்க..” என்றாள் சிந்து.

“கையை விடு” என்று பேத்தியின் கையை உதறியவர் “இப்படி ஒரு பொய்யை சொல்லி அவசரமா விசேஷம் நடத்துற அளவுக்கு என்னடி ஆச்சு?” என்று சிவந்த விழிகளோடு அவரை நெருங்கினார்.

இடையில் வந்த சிந்து, “சொல்றேன் சொல்றேன் தாத்தா ஆனா பாட்டிய அடிக்காதீங்க.. மாமி வந்த பிறகு மாமா முன்ன மாதிரி பாசமா இல்லாம ரொம்பவே மாறிட்டாங்க. அதுவும் அவருக்கு குழந்தைங்க பிறந்தது என்றால் இன்னுமே மாறிடுவாங்க..”

“அப்படின்னு யார் சொன்னா?”

“அம்மாவும் பாட்டியும் தான்..” என்றவள், “அப்படி மாமாவோட பசங்க வந்துட்டா என்னை தரணியை கண்டுக்க மாட்டாங்க.. அவங்க தான் முக்கியமா இருப்பாங்க. அதோடு மாமி சொல்லி கொடுத்ததால தான் மாமா அம்மாவை மோசமா பேசி அவங்க ஸியூசைட் பண்ணிக்க போனதா சொன்னாங்க..

“அடிப்பாவி! பிஞ்சு மனசுல நஞ்சை நீங்க கலந்துட்டு அடுத்தவங்களையா பழி சொல்றீங்க? பிள்ளை கிட்ட பேச வேண்டிய பேச்சாடி இதெல்லாம்? அதுவும் உன் மகள் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டினதுக்கு மகனும் மருமகளும் காரணம்னு சொல்லி இருக்கியே ச்சீய் என்ன பிறவிடி நீயெல்லாம்!! என்று மனமெங்கும் பரவிய வெறுப்போடு இந்திராவை பார்த்தவர்,

“நீங்க கொடுத்த ட்ரைனிங்கும் தைரியமும் தான் அவளை நம்ம கிட்டேயே சர்வ சாதாரணமா பொய் சொல்ல வச்சுருக்கு...என்று ஆவேசத்தோடு சொன்னவர்,

“நீ சொல்லு சிந்து, ஆத்தாளும் மகளும் வேற என்ன சொன்னாங்க? என்றார்.

இப்போ விட்டா மாமா எனக்கு எதுவும் செய்ய மாட்டார். அதனால குழந்தைகள் பிறக்கிறதுக்கு முன்னாடியே நான் ஏஜ் அட்டென்ட் பண்ணினதா சொல்லி என்னோட கல்யாணத்துக்கான நகையை சேர்த்து வச்சுக்கலாம் சொன்னாங்க..”

“மாமி என்னோட பங்க்ஷனுக்கு வராததால அவங்களுக்கு என் மேல பாசம் இல்லைன்னு அம்மா சொன்னது உண்மையாகிடுச்சு தானே தாத்தா! பாசம் இருந்திருந்தா வந்திருப்பாங்க ஆனா அவங்களுக்கு நான் வேண்டாதவள் எப்போ என்னை வீட்டை விட்டு தூரத்தனும்னு காத்துட்டு இருந்தாங்க” என்றிட மனிதருக்கு இதற்கு மேல் எதையும் தாங்கும் திடம் இல்லாது தலையை சுவரில் சாய்ந்தார்.

“இப்போ எனக்கு செய்துட்டா அப்புறம் குழந்தைகள் இருந்தாலும் இதை வச்சு எனக்கு மாதிரியே தாரணிக்கு செய்ய சொன்னா மாமா மறுக்க மாட்டார்னு சொன்னாங்க தாத்தா..” என்று கண்ணீரோடு சொல்லி முடிக்க மெளனமாக பார்த்திருந்த ரிஷி முற்றிலுமாக இடிந்து போனான்.

“என்ன ம்மா இதெல்லாம்?” என்று மனதில் எழுந்த பெரும் வலி யோடு ரிஷி இந்திராவை பார்த்தான். 

எத்தனை பெரிய துரோகம்? 

ஒருவனுக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கை இவ்வளவு ஏன் கட்டிய மனைவி கூட துரோகம் செய்ய வாய்ப்புண்டு ஆனால் பெற்ற தாய்?! 

எத்தனை தூரம் இந்திரா மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருந்தான். அவருக்கு அடுத்து தானே மற்றவர்கள் எல்லாம் அவனுக்கு. அதனால் தானே உயிரை மாய்த்து கொள்வேன் என்று அவர் சொன்ன பிறகு தாயை விட வீடு முக்கியமில்லை என்று அடமானம் வைத்தான். 

அத்தனையும் மீறி இப்படி ஒரு துரோகத்தை நிச்சயம் அவன் இந்திராவிடம் எதிர்பார்க்கவில்லை. 

தாயே முதுகில் குத்திய அதிர்ச்சியில் உருக்குலைந்து போய் விட்டான். 

அதே நேரம் “ச்சை தாயாடி நீயெல்லாம்?! பெத்த மகனையே நடுத்தெருவுல நிறுத்தி இருக்கியே உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? இப்படி ஒரு காரியத்தை செய்ய கொஞ்சமும் கூசலை உனக்கு?” என்று அறைந்தார் சிவபாலன்.

என்ன பொம்பளைடி நீ? உன்னை கட்டிக்கிட்டு இத்தனை வருஷம் வாழ்ந்ததை நினைச்சு வெட்கப்படுறேன். இத்தனை நாளும் ஒரு பொண்டாட்டியா எனக்காக என் கூட எப்பவும் இருந்திருக்கிறங்கிற பெருமை எப்பவுமே எனக்கு உண்டு.. அதனால நீ லட்சுமி கிட்ட அநியாயமா நடந்துக்கிட்ட போதும் அதை சமாளிச்ச என்னால உன்னை கடிந்து ஒரு வார்த்தை சொல்ல முடியல..”


“ஆனா இப்போ பெத்த பையனுக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை எப்படி உன்னால செய்ய முடிந்தது? ஏன்டி ஊர் உலகத்துல இவன் வயசுல இருக்கிற பசங்க ஒவ்வொன்னும் சிகரெட், கஞ்சா, தண்ணி, பொண்ணுங்கன்னு தரிகெட்டு திரியிற போது படிக்கும் போதே என் பாரத்தை குறைச்சவன்டி என் பிள்ளை…”


“ஃபிரண்ட்ஸ்ன்னு யாரையாவது இதுவரைக்கும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருப்பானா? ஒரு சினிமா பீச்ன்னு சுத்தி இருப்பானா? காலேஜ் முடிச்சுட்டு பார்ட் டைம் வேலை முடிச்சுட்டு அவன் ராத்திரி வீடு வரவே 11 மணி ஆகுமேடி..

அதை எல்லாம் மறந்துட்டியா ?”


“இவன் வயசுல நான் கூட இந்தளவு உழைச்சதில்லை. படிக்கும் போதுன்னு இல்லாம இப்போ வரைக்கும் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாம ஓயாம உழைக்கிறான். என்னடா என் புள்ளைக்கு நானே இப்படி பாரம் ஏத்துறேனேன்னு எத்தனை நாள் நான் தூங்காம இருந்திருப்பேன்னு தெரியுமாடி? ஆனால் எப்படி உன்னாலே இப்படி ஒரு பொய்யை கூசாம சொல்ல முடிந்தது?”


“என் பிள்ளை மாதிரி யாருமில்லைன்னு என் அண்ணன் தம்பிங்க கிட்ட மார் தட்டும் அளவுக்கு என்னை பெருமை படுத்தினவன், குடும்பத்தோட கஷ்டம் புரிஞ்சுக்கிட்டு இதுநாள் வரைக்கும் நம்மோட தானேடி இருக்கான். கல்யாணமானதும் தனிக்குடித்தனமா போயிட்டான்?”


“அவனை போய் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு உங்களை பார்க்காம விட்டுடுவான்னு அபாண்டமா பேசி இருக்கியே உன் நாக்கு அழுகிடும்டி..”


“அப்படி இல்லைங்க..” என்றவரை ஆத்திரத்தோடு பார்த்தவர், 


“அடியே, என் பிள்ளை அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டிருந்தானா இந்நேரத்துக்கு அவங்க பிரிஞ்சு இருந்திருக்க மாட்டாங்க..” என்று கண்ணீரோடு மகனை பார்த்தவர், “அதுவும் லட்சுமி மேல பழி போட எப்படிடி மனசு வந்தது? அந்த பொண்ணா இருக்கிறதால வீட்டு வேலையும் பார்த்து ஆஃபிஸ் வேலையும் பார்த்து எல்லாரையும் அனுசரிச்சது…”


“இதே லட்சுமி இடத்துல வேற யாராவது இருந்தா இப்படி இருந்திருப்பாங்களா? நம்ம வாரிசை சுமந்துட்டு இருக்கிற பொண்ணை நிம்மதியா வாழ விடலைன்னு பார்த்தா இரண்டு பேரும் நாக்கூசாம பேசி இருக்கீங்க…”


“அனாவசியமா புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்னையை உண்டாக்கி இவங்க பிரிஞ்சு போக காரணமே நீயும் மகளும் தானே! இந்த பாவத்தை எங்க போய் தீர்க்க போறீங்கடி..” என்று கோபம் தாளாமல் மீண்டும் இந்திராவை அடித்தார்.


“என்னங்க நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க..” என்றிட கோபத்தின் உச்சியில் இருந்தவர் மனைவியை மீண்டும் அறைந்து தள்ளினார். 


“பேசாத நாயே!! இன்னொரு வார்த்தை பேசின கொன்னுடுவேன். பெத்தவங்க செய்ற பாவ புண்ணியம் எல்லாம் பிள்ளைகளுக்குன்னு சொல்லுவாங்க..” என்றவன் கண்ணீரோடு மகன் முன் கைகூப்பி, 


“என்னை மன்னிச்சிடுப்பா ரிஷி. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என்னுடைய கையாலாகாத்தனம் தான் ஒரு தொழிலை ஒழுங்கா நடத்த முடியாமல் பல தொழிலை செஞ்சு எல்லாத்தையும் நஷ்டமாக்கி உன்னை இந்த நிலைல கொண்டு வந்து நிறுத்திட்டேன்.. என்னை மன்னிச்சுடு ரிஷி..” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17