தீராத காதல் தொல்லையோ - 4.2
மகள் தன் முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்ததுமே தினகரன் வேலையை விட்டுவிட்டார்.
இன்று மகளின் பிறந்தநாள் என்பதால் குடும்பத்தோடு காலையில் கோவிலுக்கு சென்று வரலாம் என்று தினகரன் சொல்லி இருந்தார்.
மகனுக்கு நிக்கர் போடுவதற்கு தயாராகியவள் அப்போது தான் டயப்பர் காலியாகி போயிருப்பதை கண்டு வெளியில் வந்தாள்.
“ரெடியா மகா?” என்ற கதிர் வெளியில் கிளம்புவதை கண்டவள், “ஆச்சு ண்ணா, நீங்க இப்போ வெளிய போறீங்களா?” என்றாள்.
“ஆமா டா ஏதாவது வாங்கணுமா?”
“டையப்பர் தீர்ந்து போச்சுன்னா.. கௌஷி ரெடி, கௌரவ் தான் இன்னும் ரெடியாகலை..” என்று சொல்லி கொண்டிருக்க கௌரவ் “மா..மா..” என்று மழலை அழைப்போடு அவனிடம் ஓடி வந்தான்.
“அடடே! வாங்க ராஜா.. என்ன ஆச்சு ஏன் இப்படி ஓடி வரீங்க?” என்றிட பின்னாடியே அவன் மகன் சஞ்சய் இவனை துரத்தி கொண்டு வந்தான்.
“மா.. மா..” என்று கௌரவ் ஏதோ சொல்ல முயல, “ப்பா.. ப்பா என் மொம்மை எத்துத்தா...” என்று புகார் வாசித்தான் சஞ்சய்.
“காலையிலேயே ஆரம்பிச்சாச்சா?” என்றவன், “உங்க மூணு பேருக்கும் ஒரே மாதிரி தானே டா வாங்கிட்டு வந்தேன். ஆனாலும் ஒரு பொம்மைக்கு மூணு பேர் சண்டை போடறதை இன்னும் நிறுத்தலையா?” என்றான் சிரிப்போடு.
“அப்பா சஞ்சய் பொம்மை இங்க இருக்கு. இது கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கிறான். கௌரவ் பொம்மை தான் வேணும்னு சொல்றான்..” என்று அவன் அண்ணன் மகள் குற்ற பத்திரிகை வாசித்தாள்.
அவள் கையில் இருந்த கௌஷிகாவை கண்டவன் முகம் பூவாய் மலர்ந்தது.
“என் தங்ககட்டி எவ்ளோ அழகா இருக்கீங்க..” என்று ஆசையோடு முத்தமிட அவளோ கௌரவ் கையில் இருந்த பொம்மையை பறிப்பதிலேயே குறியாய் இருந்தாள்.
“உங்களுக்கும் இந்த பொம்மை தான் வேணுமா செல்லம்?”
“அண்ணா அடுத்த முறை மூணு பேருக்கும் ஒரே மாதிரி பொம்மை வாங்க கூடாது ஒரே கலர்ல வாங்கணும் அப்போவாவது இந்த பிரச்சனை சால்வ் ஆகுதான்னு பார்க்கலாம்..” என்றாள் சிரிப்போடு.
“அதானே! மூணு பேருக்கும் ஒரே கலர் தான் வேணும்னு ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துட்டு இருக்காங்களே..”
“சரி, சரி சஞ்சய், கௌரவ் பாப்புக்குட்டி எவ்ளோ அழகா ரெடி ஆகி இருக்காங்க. அவங்களை அழவிட்டா நல்லா இருக்காது…” என்று தங்கை மகளுக்கு பொம்மையை வாங்கி கொடுத்தவன்,
“நீங்க வாங்க உங்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கிறேன்..” என்று இருவரையும் தூக்கிக்கொண்டு கிளம்பினான்.
“சித்தப்பா எங்களுக்கும், ப்பா எனக்கும் சாக்லெட்..” என்று மற்றவர்கள் ஓடி சென்று பைக்கை கிளப்பியவனிடம் லிஸ்ட் கொடுத்து கொண்டிருக்க மகாவிற்கு அழைப்பு வந்தது.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் லட்சுமி..” என்றார் சிவபாலன்.
“தேங்க்ஸ் மாமா!! எப்படி இருக்கீங்க? உங்க பிளட் பிரஷர் இப்போ நார்மலா இருக்கா?”
“இருக்கு மா… குழந்தைகள் என்ன பண்றாங்க?”
“கௌரவ் அண்ணாவோடு வெளியே போயிருக்கான். கௌஷி விளையாடிட்டு இருக்கா..” என்ற மகாவிற்கு கணவன் மட்டுமல்ல மாமனார் உட்பட யாருமே பிள்ளைகளை பார்க்க வராததில் அத்தனை வருத்தம்.
ஆனால் பிள்ளைகளின் காதணி விழாவிற்கு மொட்டை அடித்து காது குத்தும் சமயம் அவராகவே வரவும் அவளால் தவிர்க்க முடியவில்லை.
‘எப்படி அவருக்கு தெரிய வந்தது?’ என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் “எப்படி லட்சுமி இருக்க? உடம்பு பரவாலயா?” என்று அவள் எதிரே வந்து நின்றவரை பார்த்தும் முகம் திருப்ப அவளால் முடியவில்லை.
மகாவை தன் சொந்த மகளாக பாவித்து அவளின் கடின நொடிகளில் அவளோடு துணை இருந்தவர் அல்லவா!!
வந்ததுமே தினகரனோடு நின்று விசேஷத்தில் பங்கேற்றவர் குழந்தைகள் அழுது ஓய்ந்து சிரிக்க தொடங்கிய நேரம் இருவரையும் தூக்கி ஆசை தீர கொஞ்சினார்.
அவர்களுக்காக ஒன்று போலவே வாங்கி இருந்த தங்க செயின், மோதிரம், பிரேஸ்லெட்டை அணிவித்தவர், பேத்திக்காக வாங்கியிருந்த குட்டி ஜிமிக்கி, வளையல், தங்க கொலுசு, பேரனுக்கான காப்பு அனைத்தையும் மகாவிடம் கொடுத்தார்.
“இதெல்லாம் எதுக்கு மாமா?”
அவள் மட்டுமல்ல அவரிடம் யாருமே ரிஷி பற்றி கேட்காதது மகாவுக்கு ஆச்சர்யம்.
தன் வார்த்தையை பாக்கியலட்சுமி அத்தனை மதிப்பார் என்று அவளுமே எதிர்பார்க்கவில்லை.
மகாவின் வார்த்தைக்காக அமர்ந்து சாப்பிட்டவர் அதன் பின் அவ்வப்போது வீடு வந்து பேரன் பேத்தியை பார்த்து விட்டு போவார்.
மகாவும் அவள் வீட்டாரும் மட்டுமல்ல சிவபாலனுமே மகன் பற்றி எதுவுமே பேசுவதில்லை.
இதோ மருமகளுக்கு வாழ்த்து தெரிவிக்க அழைத்திருக்கும் இந்த நொடி வரைக்குமே மகன் பற்றிய பேச்சை அவருமே தவிர்த்து கொண்டு தான் வருகிறார்.
குழந்தைகளை பார்ப்பதற்காக சிவபாலன் தினகரனுக்கு அழைக்க அவர் வேலையில் சேர்ந்த பின்னர் குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் பேச முடிந்தது.
அதில் இருக்கும் சிரமம் பற்றி ஒருமுறை மகாவை சந்திக்க வந்த போது சொல்லவும் அவரை மட்டும் பிளாக்கில் இருந்து எடுத்து விட்டாள்.
ஹாலில் நடந்தவற்றை எல்லாம் சமையலறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
ஆம் குழந்தை பிறப்பிற்காக தாய் வீடு சென்றிருந்த காயத்ரி ஒன்பது மாதங்கள் கழித்து இங்கே வந்திருந்தாள்.
“காயத்ரி நீ வடை போட்டுடு.. நான் உன் மாமாவுக்கு பரிமாறிட்டு வரேன், நேரம் ஆச்சு..” என்று உணவு பாத்திரங்களோடு டைனிங் ஹாலுக்கு சென்றார் பாக்கியலட்சுமி.
வேண்டா வெறுப்பாக வடையை ஒரு ஈடு போட்டு எடுத்தவள் தினகரன் பூஜை பொருட்களை வாங்கி வருவதற்காக கிளம்பவும் பாக்கியலட்சுமியிடம் பொறுப்பை கொடுத்த காயத்ரி நேராக மகாலட்சுமியிடம் சென்று “உன்னால டையப்பர் கூட வாங்கிக்க முடியாதா?” என்றாள்.
மகாலட்சுமி பதிலளிக்கும் முன் அங்கே வந்த பாக்யா “என் பிள்ளை அவன் தங்கச்சி பிள்ளைக்கு டையப்பர் வாங்கி கொடுக்கிறதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்ட நீ?!” என்றார் சற்று கடுமையான குரலில்.
என்னதான் மகாலட்சுமி கடந்த ஒரு வருடமாகவே வேலைக்கு சென்று வருவதோடு அவளுக்கும் குழந்தைகளின் செலவுக்குமான பணத்தை நேரடியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது மளிகை, பழங்கள், விசேஷங்களுக்கு மொத்த குடும்பத்திருக்குமே உடைகள்..” என்று ஏதாவது ஒரு வகையில் வாங்கி வந்து விடுவாள்.
அதோடு எப்போது குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் தினகரனையோ கதிரையோ செலவழிக்க விடவே மாட்டாள்.
“எங்க கிட்டயே நீ கணக்கு பார்ப்பியா? உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்வோம்?” என்றார் தினகரன்.
“அப்பா அது ஆறு மாசம் வரைக்கும் தான். காலம் முழுக்க உங்களை நான் எதிர்பார்க்கிறது தப்பு. அண்ணாவுக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க..” என்று முடிக்கும் முன்னமே,
“என்ன பிரிச்சு பேசற.. அப்ப நீ எனக்கு யாரோவா?” என்றான் கோபத்தோடு.
“அச்சோ அண்ணா அப்படி சொல்லல. என்னைக்குமே நான் உங்க தங்கச்சி தான்!! ஆனா என் கையில பணம் இல்லன்னா நானுமே நீங்க செய்யறதை தடுக்க போறதில்லையே.. என்னோட காசு என் பசங்களுக்கு இல்லாம வேற யாருக்கு?”
“எங்களுக்கான எல்லா செலவும் நீங்க தான் பார்த்துக்கறீங்க இவங்களோடது கூடவா என்னால பார்க்க முடியாது?! நான் பாத்துக்கறேன் ண்ணா” என்று அன்பாக மறுத்து விடுவாள்.
அப்படி இருந்துமே காயத்ரியால் அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் வீட்டில் இருந்து கொண்டு தான் இருந்தது.
மகாலட்சுமி வீட்டோடு வந்த நாள் முதலே கதிர் அவனையும் அறியாமல் மனைவி பிள்ளைகளுக்கு கொடுக்கும் நேரத்தை விடவும் சற்று கூடுதலாகவே தங்கைக்கும் தங்கை பிள்ளைகளுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான்.
இரவு எத்தனை நேரமானாலும் பிள்ளைகளுக்கு காய்ச்சல் சளி வயிற்றுப்போக்கு என்று எதுவாக இருந்தாலும் மகா அழைக்கும் முன்பாகவே குழந்தைகளின் சத்தம் கேட்டு அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிடுவான்.
தினகரன் செல்லலாம் தான். ஆனால் அவர் வயதிற்கு நடு இரவில் வண்டி ஓட்டுவது சற்று சிரமம் என்பதால் அவர் உடன் சென்றாலும் கார் எடுப்பது என்னவோ கதிர் தான்.
“புருஷனை விட்டுட்டு வந்து உட்கார்ந்து இருக்க உங்க தங்கச்சிக்கு புத்தி சொல்லி அனுப்பி வைக்காம அவளோட தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடிட்டு இருக்கீங்க..” என்று மகாவுக்கு குழந்தை பிறந்ததால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்த தங்கள் மகனை பார்ப்பதற்கு கதிர் வராததில் அன்றே கணவனிடம் சண்டை பிடித்திருந்தாள் காயத்ரி.
mamanar vararam ana pillaya pathi sollalayam ithu nambura mathiriya irukku
ReplyDelete