தீராத காதல் தொல்லையோ - 4.2
பழைய பொலிவோடும், கம்பீரத்தோடும் இப்போது ரிஷி மீண்டிருந்தாலும் அன்றைய அவன் கோலம் காலம் முழுக்க அவரால மறக்க முடியாதது.
இதோ இப்போதும் அவரை அறியாமல் அன்றைய நினைவில் மூழ்கி போனார்.
சொல்லப்போனால் அன்று மகன் படுக்கையில் கிடந்த கோலம் அவரை முழுதாக உலுக்கி போட்டிருந்தது.
அதோடு உடனடியாக அவனுக்கு சர்ஜரி செய்ய வேண்டி பணத்தை கட்ட சொன்னதில் அலமலந்து போயிருந்தவர் மகளை மருமகனுக்கு அழைத்து பணம் அனுப்ப சொல்லி இருந்தார்.
“கட்டிக் கொடுத்த பொண்ண இந்த வயசுல அடிக்க எப்படி உங்களால முடிஞ்சது?” என்று அப்போதும் இந்திரா மகளுக்காக போர் கொடி உயர்த்தினார்.
“வாயை மூடுடி!! தம்பி அடிபட்டு கிடக்கிறான் நகையை கொண்டு வந்து கொடுக்க சொன்னா இல்லங்கிறா.. புருஷன் கிட்ட கொடுத்துட்டேங்கிற அவ வார்த்தை எதுவுமே உண்மையா இல்ல..” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு சத்தம் இன்றி மகளுக்கு பின்னே வந்து நின்றார்.
அவள் பின்னே வந்து நின்றவர்களால் இருவரின் பேச்சையும் தெளிவாக கேட்க முடிந்தது.
அவர் வந்த நேரம் ஸ்ரீனிவாசன் பணத்தை அனுப்பட்டுமா? என்று கேட்க அதற்கு வனிதாவோ ‘அது நம்முடையது. ரிஷி உயிருக்கு பெரிதாக ஆபத்து இல்லை.. எதுக்கு கொடுக்கணும்?’ என்றதைக் கேட்ட சிவபாலன் அதிர்ந்து போனார்.
“இல்லைங்க..” என்று ஆரம்பிக்கவுமே அவர் வாயை பொத்திக்கொண்டு மகளின் பேச்சை கேட்கலானார்.
“அர்ஜெண்டா ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னாங்கன்னு சொன்னியேடி..”
“டாக்டர்களுக்கு என்ன? அவங்க சம்பாதிக்க அப்படி தான் சொல்லுவாங்க.. ஒன்னை பத்தா சொல்லி இந்த நேரத்துல பேஷன்ட்டுங்க கிட்ட இருந்து கறக்கிறது அவங்களுக்கு லாபம் தானே..”
“ஆனாலும் உன் தம்பி பாவம் வனிதா.. நம்ம பொண்ணு விஷயம் தெரிஞ்சு தானே வீட்டை விட்டு போனதா அத்தை சொன்னாங்கன்னு சொன்ன..”
“இவங்களை நம்பி தானே விட்டு வச்சேன் ஆனா என் பொண்ணை ஒழுங்கா வளர்க்க முடியலை, வீட்டையும் என்ன எனக்கு பங்கு போட்டா கொடுத்தாங்க? எங்க அம்மா நகையையும் வீட்டுக்காகன்னு வச்சுட்டான் இப்போ எல்லாம் அவனுக்கு தானே!!”
“அதை வச்சே ஆப்ரேஷன் பண்ணட்டும். இப்ப கொடுத்தா பணம் நிச்சயமா திரும்ப வராது… அதுவும் உங்க பொண்ணு பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு இனி அவ கல்யாணத்தை ரிஷி எடுத்து நடத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை அதனால வந்த வரைக்கும் லாபம்..”
“அப்பாவை நான் சாமாளிச்சுக்கிறேன் கிறுக்குத்தனமா நீங்க எதுவும் பண்ணிடாதீங்க..” என்ற நொடி ஓங்கி மகளை அறைந்திருந்தார் சிவபாலன்.
“ச்சீய்!! நன்றி கெட்ட நாயே இன்னொரு முறை என்னை அப்படி கூப்பிடாத.. என்ன சொன்ன உன் மக இந்த நிலையில இருக்கிறதுக்கு நகை சரியா போச்சா?” என்று மீண்டும் அறைய போக இடையில் வந்து தடுத்தார் இந்திரா.
“நகருடி!!” என்றவர் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.
“அவ ஏதோ தெரியாம பேசி இருப்பா. நல்லபடியா சொன்னா புரிஞ்சுப்பா..” என்றதும் தான் தாமதம் மனைவியையும் ஓங்கி அறைந்தவர்,
“மனுஷியாடி நீ!! என் பிள்ளை அங்க படுத்த படுக்கையா கிடக்குறான். அவன் உயிரை விட பணமும் நகையும் தான் இவளுக்கு முக்கியமா இருக்கு. அதை அவ வாயால கேட்ட பிறகும் எப்படி தெரியாம பேசினான்னு சொல்ற?”
“அப்படி இல்லைங்க அவ சூழ்நிலை..” என்றதில் மனிதருக்கு கொதித்து போனது.
“ஒரு நிமிஷம் என் கண்ணு முன்னாடி இருந்தாலும் கொன்னுடுவேன் மரியாதையா இங்கிருந்து போயிடுங்க..” என்றவருக்கு மகன் பிரதானமாக இருந்தான்.
“அன்னைக்கு பொண்டாட்டிக்காக என் மகளுக்கு எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னதால தான் அவனுக்கு இந்த நிலைமை. ஏன் அவன் பொண்டாட்டியை வந்து செலவு பண்ண சொல்ல வேண்டியது தானே!! என்னை ஏன் கேட்கறீங்க?” என்று கண்டபடி வார்த்தைகளை சிதற விட ஆடிப்போனார் மனிதர்.
வீட்டிற்கு வந்த தினகரன் மகாவின் அறையில் இருந்த மனைவியிடம், “எல்லாரும் ரெடியா பாக்கியா? கிளம்பலாமா?” என்றார்.
“நீங்க பூஜை பொருள் வாங்க போன நேரத்துல என்னென்னமோ நடந்து போச்சு. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம குழந்தைகளை கூட்டிட்டு காயத்ரி அவங்க வீட்டுக்கு போயிட்டா..”
“நான் தான் ஏற்கனவே கதிரை தனி குடித்தனம் வைக்க சொல்லி உங்க கிட்ட சொன்னேனே.. என்ன அவசரம் பொறுமையா பார்த்துக்கலாம்னு சொன்னீங்க ஆனா உங்களோட தாமதத்தால் இன்னைக்கு பெருசா போயிடுச்சு.. கதிர் பேசிட்டு இருக்கும் போதே காயத்ரியை கை நீட்டிட்டான்..” என்று நடந்ததை சொல்லி முடிக்க,
“அன்னைக்கு அவர் என்னை கேட்ட அதே கேள்வியை தான் இன்னைக்கு அண்ணா அண்ணி கிட்ட கேட்டாங்க ப்பா.. அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.. அண்ணி ரொம்ப பாவம்..”
“அண்ணாவுக்கு அண்ணி மேல பாசம் அதிகம் கோபத்துல நடந்ததே தவிர்த்து அண்ணியை ஒதுக்கி வைக்கணும்னு அந்த கேள்வி
“நிச்சயமா ஒன்னு கிடையாது.. என்ன மாப்ள கல்யாணம் ஆகி ஒரு சில மாதத்தில் உன்னை அந்த கேள்வி கேட்டார், ஆனால் உங்க அண்ணன் இத்தனை வருஷம் ஆகியும் ஒன்னுக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்த பிறக்கும் அதே கேள்வியை கேட்டு வச்சிருக்கான்.. இப்ப சொல்லு ரெண்டு பேரும் ஒண்ணா?”
“பெரும்பாலான நேரம் கோவத்துல சொல்ற வார்த்தைக்கு அர்த்தமே இருக்காது மகா. அதெல்லாம் மனசுல இருந்து வரக்கூடிய வார்த்தையா இருக்காது அந்த நேரத்துல ஏற்படக்கூடிய உணர்வுகளை முன்னிலப்படுத்தி
“அதை புரிஞ்சுக்காம பெருசு படுத்தினா வாழ்க்கை நரகமாகிடும். நானும் பலமுறை உன் அண்ணிக்கு புரிய வைக்க முயற்சி பண்ணேன். இதோ சுமதி இல்லையா? ஆறு மாசத்துக்கு ஒரு முறை 45 நாள் மட்டுமே புருஷனை நேரில் பார்க்கிறா…”
“அப்படி வரும் போது கூட முழுசா அவளோடு உன் அண்ணன் இருக்கானான்னு கேட்டா? இல்லை. அவளோடு நேரம் செலவிடுறதை விட நம்ம எல்லாரோடவும் செலவிடுவது தானே அதிகம். அவன் வந்துட்டாலே கதிருக்கு பெருசா வேலை இருக்காது..”
“அவனுக்கு எதுக்கு தேவையில்லாத அலைச்சல்? ரெஸ்ட் எடுக்கட்டும்! நான் சும்மா தான் இருக்கேன்னு வீட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு வர்றதுல இருந்து எந்த குழந்தைக்கு முடியலைன்னாலும் ஹாஸ்பிடலுக்கு போறவனும் அவன் தானே!! சுமதி நினைச்சிருந்தா பிரச்சனை செய்திருக்கலாம்..”
“ஆனா அவ அப்படி எதுவும் செய்யலை. அதுக்கு காரணம் அவங்களோட புரிதல்! இங்க சுமதியும் காயத்ரியும் வேற வேற.. புருஷன் வேண்டாம்னு வந்திருக்க உனக்கும் குழந்தைகளுக்கும் கதிர் அவன் தான் பொறுப்புன்னு நினைக்கிறான்.. அதை காயத்ரி புரிஞ்சுக்கிட்டு இருந்தாலும் இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்திருக்காது..”
“கதிரும் கோபப்படாமல் அவளுக்கு புரிய வச்சுருக்கணும். ஆனா நீ சொன்ன மாதிரி கோபத்தோடு நடந்துக்கிட்டான். இவ்வளவு சொல்ற நானே என் பொண்ண காயத்ரி ஒரு வார்த்தை சொல்லிட்டானதும் கோபத்துல அவளை திட்டினேன் தானே.. அதுக்காக என் மருமகளை வெறுத்துட்டேன் அவ மேல பாசம் இல்லைன்னு அர்த்தம் கிடையாது மகா..”
“இப்போ என்னம்மா சொல்ல வரீங்க? எல்லா தப்பும் என்னோடது தான், அவர் என்ன பேசினாலும் புரிஞ்சுகிட்டு வாயை மூடிகிட்டு இருக்கனுமா? பேசாம நான் தனியா போயிடறேன் யாருக்குமே பிரச்சனை இருக்காது..” என்று மகாவும் கண்ணீரோடு வெடித்து விட்டாள்.
“அப்படின்னு நீ நினைக்கலாம் ஆனா அப்பவும் குழந்தைங்களை வச்சுட்டு நீ தனியா இருக்கன்னு உன்னை பார்த்துட்டு வர உன் அண்ணன் கிளம்பி வந்துடுவான். அதனால இப்போ இருக்கிறதை விட சூழ்நிலை இன்னும் மோசம்ஆகும் மகா..”
“அதுக்காக எங்களை எல்லாம் மறந்துட்டு இருக்கிற அவர் கூட மானம் கெட்டு போய் சேர்ந்து வாழ சொல்றீங்களா?”
“நீங்க இவ்வளவு நேரம் பேசுறதை பார்த்தா எனக்கு அப்படித்தான் ம்மா தோணுது…”
“யாருமே இங்க பெர்ஃபெக்ட் கிடையாது மகா. குறை நிறையோடு தான் மனுஷங்க, குறையை பெருசு படுத்தாம நிறையை கொண்டு நிறைவா வாழணும்னு சொல்றேன்..”
“பாக்கியா இப்போதைக்கு இந்த பேச்சை விடு. முதல்ல காயத்ரி வீட்டுக்கு போய் கூட்டிட்டு வரலாம். அவன் திரும்பவும் கோபத்துல எதையாவது பேசி வைக்க போறான்…” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
“அண்ணி புரிஞ்சுப்பாங்கன்னு சொல்லி என்னை சமாதானம் பண்ணிடுவார். ஒரு அளவுக்கு மேல என்னால அவரை வற்புறுத்த முடியலை..”
“உன் மேல எந்த தப்பும் இல்லை மகா.. நான் சொல்லியுமே தம்பி காயத்ரியை பார்க்க போகாம ரொம்ப பிடிவாதமா இருந்துட்டார். அந்த கோபம் தான் உன் மேல திரும்பியிருக்கு.. அவங்க ரெண்டும் பேரும் தான் பேசி தீர்த்துக்கணும், நாம என்ன செய்ய முடியும்?”
“நான் இங்க வராம போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானே?!”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி..”
“கவலைப்படாத மஹா, எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. வாழ்க்கையில எல்லா நேரமும் நாம எதிர்பார்க்கிற மாதிரி தீர்மானிக்கிற மாதிரி இருக்காது.. சூழல் வேற மாதிரி மாறினா அதுக்கு ஏத்த மாதிரி நம்மளும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கும் போது பிரச்சனைகளை தவிர்க்கலாம்..”
“ஆனா நான் நினைச்சது தான் நடக்கணும்னு பிடிவாதமா இருக்கும் போது தேவையில்லாத மன உளைச்சல் தான். நானுமே காயத்ரிக்கு அடிக்கடி சொன்னேன் ஆனா போஸ்ட் பார்டம் டிப்ரெஷன்ல அவளால புரிஞ்சுக்க முடியலை.. இனியாவது புரிஞ்சுப்பான்னு நம்புவோம் நீ சாப்பிட வா” என்றார்.
nice
ReplyDelete