வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 28.1


தினகரன் பாக்கியலட்சுமி கிளம்பிட “என்னம்மா தாத்தா பாட்டி மட்டும் கிளம்பிட்டாங்க.. அப்போ நாம கோவிலுக்கு போக போறதில்லையா?” என்றான் சுமதியின் மகன். 

“இன்னைக்கு நாம எல்லாரும் அத்தை பர்த்டேவை செலிபரேட் பண்ண கோவில், பீச், ஹோட்டல்னு போய் என்ஜாய் பண்ண போறதா தானே ம்மா சொன்னீங்க.. எப்போ போக போறோம்?” என்றாள் மகள். 

“சித்தியை கூட்டிட்டு வர போயிருக்க தாத்தா, பாட்டி, சித்தப்பா வந்ததும் போகலாம்..” என்று குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றாள்.

“அண்ணி ரெண்டு நாளா ப்ளான் பண்ணி இன்னைக்கு இல்லைன்னு சொன்னா குழந்தைங்க என்ன செய்வாங்க? எனக்கும் மனசே சரியில்லை இவங்களை கூட்டிட்டு கோவிலுக்காவது போயிட்டு வரேன்..” என்றாள் மகாலட்சுமி.

“நீ மட்டும் தனியா நாலு பேரையும் எப்படி சமாளிப்ப? இரு அத்தைக்கு சொல்லிட்டு நானும் வரேன்..” என்றிட மகாலட்சுமி கேப் புக் செய்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் கோவிலுக்கு செல்ல மகாவின் பெயரில் அர்ச்சனை செய்தார் சுமதி. 

“தம்பி போயிருக்காங்க மகா நிச்சயம் காயத்ரியை கூட்டிட்டு வருவார் நீ கவலைபடாத..” என்றாள் மகாவின் முகத்தில் இருந்த வேதனையை கண்டு. 

“ப்ச், ஏன் அண்ணி எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” என்றவளின் கையில் இருந்த கௌஷி மற்ற குழந்தைகள் பிரகாரத்தில் விளையாடிக்கொண்டு இருப்பதை கண்டு  அவளிடம் இருந்து திமிறிக்கொண்டு இறங்கினாள்.

“செல்லம் கால் சுடும்..” என்றிட “நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம் அத்தை..” என்று குழந்தைகள் அவளையும் கௌரவையும் அழைத்து சென்றனர். 

இருவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கே சுமதியின் தோழி வந்து சேர்ந்தாள். 

“நீங்க பேசிட்டு இருங்க அண்ணி நான் குழந்தைகளை பார்க்கிறேன்..” என்று குழந்தைகளை தேடி மறுபுறம் சென்றவள் அங்கே ரிஷி இரு குழந்தைகளையும் கையில் தூக்கி கொஞ்சி கொண்டு இருப்பதை கண்டவள் அதிர்ந்து போனாள்.

வேகமாக அவனருகே சென்று குழந்தைகளை பிடுங்கியவள், “என்ன தைரியம் இருந்தா என் குழந்தைகளை தொடுவ?” என்றவள் அவர்கள் இருவரையும் மற்ற குழந்தைகளிடம் கொடுத்து, 

“இவங்களை பார்த்துக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்றாள்.

“நாங்க தான் அத்தை விளையாட வச்சுட்டு இருந்தோம் மாமா வந்ததும் தான் அவர் கிட்ட கொடுத்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போனோம்..”

“உங்க கிட்ட கொடுத்த பொறுப்பை ஒழுங்கா செய்ய தெரியாதா?”

“என் மேல இருக்கிற கோபத்தை எதுக்காக லச்சு குழந்தைகள் மேல காட்டுற?” என்றான் ரிஷி தன்மையாக. 

“ஷட் அப்!!” என்று ஆவேசத்தோடு அவனை பார்த்தவள், “இங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க.. பாப்பாவை கூட்டிட்டு அம்மா கிட்ட போங்க” என்றாள் அண்ணன் பிள்ளைகளிடம். 

சொன்னதோடு அல்லாமல் குழந்தைகள் பின்னே செல்ல முயன்றவளை “லச்சு!!” என்றவனின் குரல் தடுத்தது.

“ஐ சே ஷட் அப்!! இன்னொரு முறை என் பேரை சொன்ன நடக்கிறதே வேற..” என்றவளின் மனம் ஆர்பரிக்க, “ஹாப்பி பர்த்டே லச்சு!!” என்ற ரிஷியின் வாழ்த்து அவளின் கோபத்தை இன்னுமே கிளறிவிட்டது. 

“டேய் ஒருமுறை சொன்னா உனக்கெல்லாம் புரியாதா? எப்படிடா? எப்படி, எதுவுமே நடக்காத மாதிரி ஹாப்பி பர்த்டே சொல்ல முடியுது? கொஞ்சமும் உனக்கு வெட்கமா இல்லையா?!” என்றவளுக்கு அவனை பார்க்க கூட பிடிக்காததால் மீண்டும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

ஆனால் ரிஷிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாததில் “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு லச்சு..” என்று சட்டென மகாவின் கையை பிடித்ததும் தான் தாமதம் கண்ணிமைக்கும் நொடியில் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

தீயாய் எரிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டு அதிர்வோடு ரிஷி நிற்க, “என்ன கேட்கணும்? இனி நீ சொல்லி நான் கேட்க எதுவுமே இல்லை. இத்தனை வருஷமா ஒருத்தி இருக்காளா இல்லையான்னு கூட பார்க்காத நீயெல்லாம் மனுஷனே இல்லை..”

“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருதுடா, இன்னொரு முறை என் கண்ணு முன்னாடி வந்துடாத.. அதைவிட என் பசங்க மேல உன் மூச்சு காத்து பட்டது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”

“லச்சு ப்ளீஸ்..” என்று ரிஷி மீண்டும் அவள் முன்னே வந்து நிற்க, 

“என்ன உன்னோட வீடு கடனில் மூழ்க போகுதா? அதனால தானே என்னை தேடி வந்திருக்க? அப்படி தானே! ப்ச், இல்லைன்னா உனக்கெல்லாம் என்னோட நியாபகம் எப்படி வந்திருக்கும்?”

“நான் என்ன பணம் காய்ச்சி மரமா? எந்தளவு என்னை நீ ஈஸியா எடை போட்டிருக்க.. இனியும் உன்னை நம்பியிருக்க, உனக்காக எதையும் இழக்க நான் முட்டாள் இல்லை, போடா!!” என்று அவனை தாண்டி சென்றாள் மகாலட்சுமி.

இதை பார்த்திருந்த சுமதி, “என்ன மகா அவர் என்ன சொல்ல வரார்னு கூட கேட்காம அவசரப்பட்டுட்டியே..” என்றார். 

“அண்ணி ப்ளீஸ்.. என் இடத்துல இருந்தா மட்டுமே என்னோட வேதனையை புரிஞ்சுக்க முடியும்..” என்றவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றாள். 

சுமதி ரிஷியிடம் பேச முற்படுவதை கண்டவள், “அண்ணி இப்போ நீங்க வரீங்களா இல்லை நான் குழந்தைகளை கூட்டிட்டு கிளம்பட்டுமா?” என்றாள் சப்தமாக. 

“நீங்க போங்க.. அவளை தனியா விட வேண்டாம்..” என்று ரிஷி சொல்ல உடனே மாமியாருக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டு மகாவோடு கிளம்பினாள்.

வீடு வந்த சேர்ந்த மகாவிற்கு இன்னுமே ஆத்திரம் தீரவில்லை. 

‘எத்தனை எளிதாக தன்னை நினைத்து விட்டான்!! முழுசா இரண்டு வருஷத்துக்கும் மேல யாரை பற்றின கவலையும் இல்லாம இப்போ மட்டும் என்ன?’ என்ற கேள்வியோடு அவள் வீட்டினுள் நடந்து கொண்டிருக்க அவசர அவசரமாக தினகரனும் பாக்கியலட்சுமியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

“ஏன்டி உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா? எதுக்கு மாப்பிள்ளையை அடிச்ச?” என்று வந்ததும் வராததுமாக அவளை பிடித்து கொண்டார்.

“மாப்பிள்ளையா?! என்னம்மா திரும்ப உங்களுக்கு பாசம் திரும்புது. இதுவரை என் குழந்தைகளோட முகத்தை கூட பார்க்கலை நான் இருக்கேனா செத்தேனான்னு கூட கவலை இல்லாத மனுஷன் மேல எவ்ளோ கரிசனம்?..” என்று எள்ளலாக கேட்டவள்,

“நான் இங்க வந்து இருக்கிறதுக்கு மட்டுமில்லை இன்னைக்கு அண்ணி வீட்டை விட்டு போனதுக்கும் அவர் தான் காரணம். நான் அடிச்சது மட்டும் உங்களுக்கு பெருசா தெரியுது ஆனா அன்னைக்கு அவர் என்னை அடிச்சது பெருசா தெரியலை… எல்லாத்தையும் மறந்துட்டீங்களா?”

“ப்ச் அப்படியில்லை மகா.. ஆனா உன்னை தேடி வந்த மாப்பிள்ளை கிட்ட எதையும் பொறுமையா கேட்காம அடிக்கிறது என்ன பழக்கம்?...” என்ற தினகரனை ஆச்சர்யத்தோடு பார்த்தாள் மகாலட்சுமி.

“அப்பா நீங்களா இப்படி பேசறீங்க? உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை..”

“எவ்ளோ ஆசையா உன்னை தேடி வந்த ரிஷி கிட்ட இப்படி நடந்துட்டு இருக்க கூடாது மகா..” என்ற கதிரின் பேச்சில் இன்னுமே அதிர்ந்து போனாள்.

“மாப்பிள்ளை செத்து பிழைச்சு உனக்காகவே உன்னை பிரிஞ்சு இருந்தார். அதை புரிஞ்சுக்காம அவசரப்பட்டுட்டியே மகா..” என்று தினகரன் சொல்ல இது என்ன புதுக்கதை.. என்பது போல பெற்றவர்களை பார்த்தாள்.

“ஆமா மகா நீ டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியும் ரிஷி எந்த பதிலும் சொல்லாததுல அவரை தேடி நான் வீட்டுக்கே போனேன்.. அப்போ தான் அவருக்கு ஆக்சிடென்ட் ஆனது அதுவும் உனக்கு குழந்தைகள் பிறந்த அன்னைக்கு நைட்டே ஆனது எனக்கு தெரிஞ்சது..” என்றவன் அன்றைய நிகழ்வை விவரித்தான்.

 ****************

கட்டுக்கடங்கா கோபத்தோடு ரிஷியை தேடி அவன் வீட்டிற்கு சென்ற கதிர் அங்கே சிவபாலனின் தோளை பிடித்தபடி ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு முகத்தில் இருந்த காயங்கள் இன்னுமே முழுதாக ஆறாமல் நடக்க முயற்சித்து கொண்டிருந்தவனை கண்டு அவன் கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை.  

“என்ன ஆச்சு ரிஷி? என்ன மாமா இதெல்லாம்?” என்று தன்னை மீறிய பதற்றத்துடனே கேட்டான். 

கதிரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி “என்னை மன்னிச்சுடு பா.. ரிஷி சொல்லி தான் குழந்தைகள் பிறந்த விஷயம் எனக்கு தெரியும். என் பேரக்குழந்தைகளை பார்க்க எனக்கும் கொள்ளை ஆசை தான்!!” 

“ஆனா என் பிள்ளையை இந்த நிலையில் தனியா விட்டுட்டு வர முடியலை.. அவன் உயிர் பிழைச்சதே தெய்வ செயல்! லாரி அவனை இடிச்சதை என் கண்ணால பார்த்தேன் தம்பி..” என்றவருக்கு இன்றுமே அன்றைய நினைவில் உடல் நடுங்கியது.

“ஆண்டவனா பார்த்து அவனுக்கு உயிர் பிச்சை போட்டிருக்கார், நல்லபடியா அவனை காப்பாத்திக்கனுமா இல்லையா? அதுவும் இப்போ அவனுக்குன்னு இருக்கிறது நான் மட்டும் தான்!!” என்றார் கண்ணீரோடு. 

“ஏன் ரிஷி அம்மா எங்க போய்ட்டாங்க?” 

“அவ ரிஷிக்கு அம்மாவா இல்லாதது தான் பிரச்சனை. எந்த மகள் அவளுக்கு முக்கியம்னு தெரிஞ்சதோ அந்த மகளுடவே அனுப்பி வச்சுட்டேன்..” என்றவர் அதற்கு மேல் அந்த பேச்சை தொடர பிடிக்காமல், 

“சரி சொல்லுங்க தம்பி என் மருமகளுக்கு என்ன குழந்தை பிறந்திருக்கு? ரெண்டும் பையனா இல்ல ரெண்டு பொண்ணா?..” 

“பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு மாமா.. ஆனா நீங்க ஏன் இவ்ளோ பெரிய ஆக்சிடென்ட் நடந்தும் எங்களுக்கு எதையுமே சொல்லாம போனீங்க..” 

“எல்லாமே என் மருமகளுக்காக தான் தம்பி. அதனால் தான் அன்னைக்கு நீங்களும் சம்பந்தியும் கூப்பிட்டப்ப நான் எடுக்கலை.. இவன் நிலைமை மருமகளுக்கு தெரிஞ்சா லட்சுமியால தாங்க முடியாது அது குழந்தைகளை பாதிச்சு, பிரசவம் சிக்கல் ஆக்கிடக்கூடாது..” என்று தன் தங்கை மீதான அவரின் பாசமும் அக்கறையும் கதிரை நெகிழ செய்தது. 

“மருமகளுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“மகா நல்லா இருக்கா மாமா, பிரசவத்துல எந்த சிக்கலும் இல்லை, சுகப்பிரசவம் தான்!!”

“அதுதான் ரிஷி குழந்தை பிறந்ததை சொன்னாரே அதுக்கப்புறமும் ஏன் நீங்க பார்க்க வரலை?”

“இல்லை தம்பி, ரிஷியும் இப்போதைக்கு மகாவுக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்..”

“ஏன் ரிஷி?” என்று இத்தனை நேரம் சிவபாலன் மட்டும் தான் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உணராமலே அவனிடம் கேட்டான் கதிர். 

“அவனால இப்ப பேச முடியாது பா..” என்று மகன் நாக்கை கடித்துக்கொண்டதை பற்றி சொல்ல,

“மதா எப்டி இருக்?” என்று கேட்ட ரிஷியை அதிர்வோடு பார்த்தான். 

ரிஷியின் நிலையை கண்ட கதிருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

எத்தனை ஆளுமையோடு கம்பீரமாக இருப்பான். ஆனால் இப்போது நிற்க, நடக்க, உட்கார என்று அனைத்திற்கும் ஒருவரை சார்ந்து இருப்பதோடு ஒரு மாத காலமாக எதையும் சாப்பிடாமல் இருப்பவனின் பேச்சும் இப்படி மாறிப் போய் இருப்பதை கண்டு அவனுக்கு நெஞ்சை பிசைந்தது. 



Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17