வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 29.1

 

“அப்பா நீங்களுமா?” என்று மகா வேதனையோடு தந்தையை கேட்க மனைவியோடு அங்கே வந்த கதிர், “எவ்ளோ கோபம் இருந்தாலும் உன்னை ஆசையா தேடி வந்த ரிஷி கிட்ட இப்படி நடந்துட்டு இருக்க கூடாது மகா..” என்றான்.

அதில் இன்னுமே அவள் அதிர்ந்து பார்க்க, “மாப்பிள்ளை செத்து பிழைச்சு உனக்காகவே உன்னையும் குழந்தைகளையும் பிரிஞ்சு இருந்தார். உனக்காவது நாங்க, குழந்தைகள் துணையா இருக்கோம் ஆனா மாப்பிள்ளைக்கு அவர் அப்பாவை தவிர்த்து யாருமே இல்லை..” என்று பாக்கியலட்சுமி சொல்ல அவரை வெறுமையோடு பார்த்தாள் மகாலட்சுமி.

“...”

“யாருக்காக உன் கிட்ட சொத்து பத்திரத்தை கேட்டாரோ அந்த அக்காவும் அம்மாவுமே அவருக்கு துரோகம் செய்துட்டாங்க.. அதுல ரொம்பவே மனசு ஒடிஞ்சு போயிருந்தவர் இப்போ வாழ நினைக்கிறதே உங்களுக்காக தான்! அதை புரிஞ்சுக்காம அவசரப்பட்டு கை நீட்டிடியே மகா..” என்றார் தினகரன்.  

“ஸாரி மகா, இவர் மேல இருந்த கோபத்துல நான் உன்னை அளவுக்கு அதிகமாவே பேசிட்டேன். என்னோட கோபத்துக்கு நீ மட்டுமே காரணமில்லை, ஆனா நீ டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினதுல இனி எப்பவும் அண்ணாவோடு சேராம இங்கேயே இருந்துடுவன்னு தெரிஞ்சதால காலம் முழுக்க என் புருஷன் உங்களுக்கு வேலை செய்துட்டு தான் இருக்க போறாரோன்னு நான் பயந்துட்டேன்...”

“இவருக்கு உன் மேல பாசம் அதிகம். இவருமே அப்போ அண்ணா மேல கோபமா இருந்தார் அதனால உன்னை சமாதானப்படுத்தி அனுப்பாம உங்க மூணு பேரோட எதிர்காலத்தை ப்ளான் பண்ண ஆரம்பிச்சுட்டார் அதுல எனக்கு இன்னுமே கோபம்…”

“எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனா நீ வந்த பிறகு என்னோடு சரியா பேசுறது இல்லை, எங்களை பார்க்க வருவது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போயிடுச்சு..”

“நான் அண்ணா கிட்ட எவ்வளவோ சொன்னேன் அண்ணி. உங்களுக்கு அது தெரியாம போயிருக்கலாம்..”

“உன் அண்ணா சொன்னார் ஆனா எனக்கு இருந்த கோபத்துல நான் எதையும் சரியா புரிஞ்சுக்கலை. அதோடு அண்ணாவுக்கு ஆக்ஸிடென்ட்டான விஷயம் எனக்கும் தெரியாது. அவர் நல்லா இருந்திருந்தா குழந்தைகள் பிறந்தப்போவே உன்னை தேடி வந்து பிரச்சனையை முடிச்சிருப்பார்னு இப்போ தான் சொன்னார்...”

“அப்படின்னா இப்போ அவர் வந்திருக்க விஷயம் தெரிஞ்சதால தான் நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா அண்ணி?” என்றாள் ஆழ்ந்த குரலில்.

“ஆமா அண்ணா உன்னையும் குழந்தைகளையும் கையோடு கூட்டிட்டு போயிடுவார்னு அத்தை மாமாவும் சொன்னாங்க..” என்றதும் தான் தாமதம், 

“ஒருவேளை அவர் வராம போயிருந்தா நீங்க வந்திருக்க மாட்டீங்க தானே அண்ணி?!” என்றிட சட்டென அவளால் பதில் சொல்ல முடியவில்லை. 

“பரவால்ல, நீங்க திரும்ப வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இனி நீங்க வீட்டை விட்டு போகுற சூழல் வராது அண்ணி ஐ ப்ராமிஸ் யூ!!” என்றவள் குழந்தையை தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

“மகா என்னடி உன் அண்ணி கிட்ட அப்படி வெடுக்குன்னு சொல்லிட்டு வர..” என்று பாக்கியா அவள் பின்னாடியே வர கௌரவை தூக்கிக்கொண்டு கதிரும் தினகரனும் உடன் வந்தனர். 

அவருக்கு பதில் சொல்லாத மகா அமைதியா பெட்டியில் துணி மணிகளை அடுக்க தொடங்கினாள்.

அனைவரும் அதை ஆச்சர்யமாக பார்த்திருக்க, “அப்போ உங்களுக்கு என்னை விட உங்க மாப்பிள்ளையும் அவரோட விருப்பமும் தான் முக்கியமா இருக்கு அப்படித்தான் ப்பா?” என்றாள் பொருட்களை அடுக்கியபடி.

“இல்ல மகா நீ மாப்பிள்ளையோட பெயரையே எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டதால அவர் மேல இருக்கிற கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம்னு நினைச்சோம்..”


“அதைவிட புருஷன் பொண்டாட்டி பிரச்சினையை யாரோட தலையிடும் இல்லாம அவங்களா பேசி தீர்த்துக்கறதுக்கு தான் நல்லது.. அதனால தான் மாப்பிள்ளையா வந்து உன்கிட்ட பேசி புரிய வைக்கட்டும்னு நினைச்சோம்…” என்றார் பாக்கியா அவசரமாக.


“இது நல்ல விஷயம் தான். ஆனால் குணமான பிறகு அவரு வெளிநாட்டுக்கு போகும் போது உங்க கிட்ட சொல்லிட்டு தானே போனாரு அப்பக் கூட நீங்க என்ன பத்தி யோசிக்கலையாமா..” என்றாள் அடர்த்தியான குரலை. 


“யோசிக்காமல் இருப்போமா? மாப்பிள்ளை கிட்ட உன்னை வந்து பார்த்து உன் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போக  சொன்னோம், ஆனால் அவருக்கு எங்க நீ திரும்ப பணம் சொத்தை பற்றின பேச்சு எடுப்பியோன்னு இருந்திருக்கு…”


“அதை வச்சு அவரோடு வர மாட்டேன்னு சொல்லுவியோனு நினைச்சிருந்தார் போல.. அதனால எல்லா கடனையும் முடிச்சிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி வரேன்னு சொல்லிட்டு போனார்.. எங்களுக்கும் அது சரின்னு தோணுச்சு…”


“என்ன ப்பா பேசுறீங்க?.. எந்த விதத்துல உங்களுக்கு இது சரின்னு தோனுச்சு?” என்றாள் இதழ்களை மடித்து கண்ணீரை கட்டுபடுத்தியபடி.


“மாப்பிள்ளைக்கு ஏற்கனவே இருந்த கடன் இல்லாமல் இப்போ வீட்டை அடமானம் போட்டு வாங்கினது அவரோட மருத்துவ செலவுக்காக வாங்கினது கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு கடன் இருக்கு, அந்த பிரச்சனை தீராமல் நீயும் குழந்தைகளும் அங்கு போகும் போது திரும்ப உங்களுக்குள்ள ஒரு புரிதலின்மையோ பிரச்சனையோ வர வாய்ப்பு இருக்கு மகா…”


“ஒரு ஆம்பளைக்கு தலைக்கு மேல கடன் பிரச்சினை இருந்தால் பொண்டாட்டி, பிள்ளைங்க, தூக்கும், சாப்பாடுன்னு எதை பத்தின நினைப்பும் இருக்காது. எப்போ அதை தீர்த்து நிம்மதியா மூச்சு விடுவோம்னு தான் நினைப்பாங்க... அதனால மாப்பிள்ளை கடனை அடைச்சுட்டு உங்களை கூட்டிட்டு போறேன்னு சொன்னது எனக்கு தப்பா தெரியல..” 


“மாப்பிள்ளை பெரிய கண்டத்தை தாண்டி இருக்கிறதால உங்க ஜாதகத்தையும் குழந்தைகளோட ஜாதகத்தையும் ஜோசியர் கிட்ட கொடுத்து பார்த்தோம். அதுல இன்னும் ஒரு வருஷத்துக்கு நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறது நல்லது. சேர்ந்து இருந்தா பிரச்சனைகள் தொடர்ந்து இருந்துட்டே இருக்கும்னு சொன்னாங்க…” என்றார் பாக்கியா.


“அது எப்படி ம்மா உங்க மாப்பிள்ளை ஃபாரீன் போன ஒரு வருஷம் வரைக்கும்னு சரியா சொன்னாங்க?” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டாள்.


“அப்போ இல்லைடி. மாப்பிள்ளையை பார்த்துட்டு வந்தப்புறம் ஜோசியரை பார்த்தோம். உனக்கு குழந்தை பிறந்ததுல இருந்து ஒரு வருஷம் வரைக்கும் நம்ம வீட்லயே வச்சுக்க சொன்னார். ஒருவேளை வெளிநாட்டுக்கு போகாம அப்போவே மாப்பிள்ளை உன்னை கூப்பிட வந்திருந்தாலும் நாங்க உடனே அனுப்பி இருக்க மாட்டோம்..”


“நினைச்சு பார்க்க முடியாத கஷ்டத்தை, கண்டத்தை தாண்டி வந்த பிறகு மாப்பிள்ளையோடு என் பொண்ணும் பேர பசங்களும் இதுக்கு மேலயாவது நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா மகா?” என்றார் தினகரன்.


“அதோடு இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட நீ ரிஷியை பத்தி பேசில.. இத்தனைக்கும் மாமா இங்க வந்து போயிட்டு இருந்தப்ப கூட அவர் கிட்டயும் எதுவுமே கேட்டுக்கல.. அதனால தான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பிறகு ரிஷி உன் கிட்ட பேசுறது சரியா இருக்கும்னு நாங்களும் எதையும் சொல்லல..”

 

“சரி ஏதேதோ காரணத்தால நீங்க என்கிட்ட தான் சொல்லல.. அட்லீஸ்ட் அண்ணி கிட்டயாச்சும் சொல்லி இருந்தா இவ்ளோ  பிரச்சனை வந்திருக்காது ண்ணா.. உங்களுக்குள்ள பிரச்சினை வர நான் காரணம் ஆயிட்டேன்னு எத்தனை நாள் நான் தூங்காம இருந்திருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு?” என்றாள் சொல்லிலடங்கா வேதனையோடு.

 

“காயத்ரி இங்க வந்த பிறகு உன் கிட்ட நடந்துகிட்ட விதத்துலையே இவன் கிட்ட நான் சொன்னேன் ஆனா அவன் தான் வேண்டாம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்கிட்ட சொல்ல வாய்ப்பு உண்டுன்னு சொன்னான்..”


“ஆமா மகா காயத்ரி கொஞ்சம் பொசஸிவ்! விஷயம் தெரிஞ்ச பிறகும் நான் உங்களுக்கு செய்யறதை அவளால் அவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியாது. ஒருவேளை அவ சொன்ன பிறகு உனக்கு ரிஷி மேல இருக்கிற கோபம் எப்படி உருமாறும் என்று எங்களால கணிக்க முடியலை அதனால தான் ரிஷி வந்து பேசிக்கட்டும்னு விட்டுட்டோம்…”


“அவரை பற்றி நான் எதுவும் பேசலை, யார்கிட்டயும் விசாரிக்கலை உண்மைதான்! ஆனா அவரை நினைக்காம இருந்தேன்னு உங்களுக்கு தெரியுமா?”


“மகா..”


“இதோ தினம் தினம் அவரை ஞாபகப்படுத்துற மாதிரி இவங்க ரெண்டு பேரும் என்னோடவே இருக்கும் போது அவர் நினைப்பு எனக்கு இல்லாம போகும்னு எப்படி நினைச்சீங்க?”


“அங்க இருந்து வண்டி எடுத்தா ஒன்றரை மணி நேரத்துல இங்க வந்துடலாம் இத்தனை வருஷத்துல ஒரு நாளும் வரலை.. ஏன், எதனாலன்னு கேள்வி எழாத நாளில்லை. ஆக்ஸிடென்ட்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது.. அந்தளவுக்கு அவருக்கு நான் வேண்டாதவளா போயிருக்கேன்..” 


“மகா என்ன பேசற? குழந்தை பெத்திருக்க உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்க கூடாதுன்னு தான் ரிஷி நினைச்சார்.. இத்தனைக்கும் கூட மாமாவை தவிர வேற யாருமே இல்லை. இதே அவர் இடத்துல வேற யாராவது இருந்தா குறைந்த பட்சம் வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டியை தனக்கு உதவுறதுக்காக வர வச்சுருப்பாங்க.. அவர் அப்படி செய்யலையே?!”


“அதனால அவர் ரொம்ப நல்லவர் ஆகிட்டார் அப்படி தானே ண்ணா?!” என்றாள் விண்டு போன மனதோடு.


Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17