வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 40




கண்களை மூடி படுத்திருந்த தளிரின் மனதில் காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகளே ஊர்வலம் போக அவளையும் மீறி விழிகளில் ஈரம் கசிந்தது. 

முதலில் அதிகாரி மட்டும் அவளிடம் விசாரித்து கொண்டிருந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அவளை சூழ்ந்து கொண்ட பெண் காவலர்களிடம் இருந்து அவள் வாழ்நாளில் கேட்டிறாத அளவு என்னென்ன பேச்சுக்கள் கேள்விகள் அவளை நோக்கி பாய்ந்தது அதிலும் எத்தனை எள்ளலும் குத்தலுமாக பேசியவர்கள் பலநேரம் அவளை பேசவே விடவில்லை.

தளிர் ‘தான் கையெழுத்து போடவில்லை தன்னை ஏமாற்றி வாங்கினார்கள்’ என்று சொல்லவும் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜையில் போட்ட அப்பெண் அதிகாரி இதை பார்த்துட்டு பேசு என்றார்.

தளிர் எடுத்துபார்க்க, அது பாஸ்போர்ட் எடுத்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ‘ஒரு முக்கியமான டாக்குமென்ட் வாங்கனும் பத்து நிமிஷம் தான் போயிடலாம்’ என்று சொன்னவனின் பின்புலம் அறிந்திருந்தவர்களும் சம்மதிக்க அனைவருடன் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு சென்றிருந்தான் சரத். 

சரத் அசோக்கோடு உள்ளே செல்ல மற்றவர்கள் காரில் இருந்து கீழிறங்கி பேசிக்கொண்டிருந்தனர். 

எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நண்பர் கூட்டம் அங்கு வந்ததன் நினைவாக ரெஜிஸ்டர் அலுவலகத்தின் முன்பும் நின்று புகைப்படம் எடுத்துகொண்டிருக்க அங்கே வந்த சரத் எதார்த்தம் போல தளிர் அருகே நிற்க யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தீனா அழகாக இருவரும் மட்டும் இருப்பது போல எடுத்திருந்தான்.

இப்போது அதை ஆதாரமாக காட்டிய அதிகாரி சரத் மீதான அவள் குற்றசாட்டை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை மற்றவர்கள் மீதான அவள் புகாரையும் காது கொடுத்து கேட்கவும் மறுத்துவிட்டனர். சரத்திடம் பெற்ற பணத்திற்கு அதிகமாகவே ஆளாளுக்கு தளிரை பேசினாலும் அவர்கள் பேச்சில் உதய் மீதான தாக்குதலும் சமஅளவில் இருந்தது.

இத்தகைய சூழலை முதல்முறை எதிர்கொள்பவளுக்கு அவர்களை கையாள முடியாது போனதில் வெகுவாக அயர்ந்து போனா தளிரின் ஒட்டுமொத்த தைரியமும் உடைந்தது உதய் குறித்தான கேள்விகளை கொண்டு விசாரணையை திசைமாற்றிய  நொடிகளில் தான்.

உன்கிட்ட நல்ல முறையில விசாரணை நடத்தினோம் நீயும் எங்களுக்கு ஒத்துழைச்சன்னு எழுதியிருக்கோம் கையெழுத்து போட்டுட்டு போ..’ என்று சொல்ல படித்து பார்த்து கையெழுத்திட்டு கொடுத்தாள் இளந்தளிர்.

என்னதான் சரத்தை குப்பையாக வீசியெறிந்துவிட்டு தன் வாழ்வை தளிர் நகர்த்தியது அவர்கள் வரை சரியென்றாலும் அது இப்போது மற்றவரை பாதிப்பதை எப்படி அவளால் ஏற்க முடியும்..? எத்தனை எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் இருந்தவன் இன்று ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருப்பது அவளால் மட்டுமே என்பது மறுக்க முடியாத நிஜம்.

உதயாதித்தனை மணமுடிக்கும் தகுதியை இழந்து விட்ட தான் நிச்சயம் அவனுக்கு ஏற்றவள் இல்லை’ என்ற எண்ணமே பதிவு திருமணம் குறித்து அறிந்த நொடியில் இருந்து அவளை சுழற்றி அடித்துகொண்டிருந்தது. நிதர்சனத்தை ஏற்று கொண்டதாலேயே செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக உதய்யின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்க முடிவெடுத்தவள் தங்கையை அவனுக்கு மணமுடிக்க துணிந்தாள்.

துணிந்து விட்டாளே தவிர அதை செயலாற்றுவது அவளுக்கு அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. அதேநேரம் உதய் தென்றலை மறுத்ததை கண்டவளின் மகிழ்ச்சி சில நிமிடங்களுக்கே நீடித்தது உதய் அவளிடம் சொல்லிய வார்த்தைகளால்.

முற்றுபுள்ளியிட்டு அவன் வாழ்வில் இருந்து தளிர் விலக நினைத்தால் அவனோ அதை கார்புள்ளியாக்கி அவளை மணப்பேன் என்று உறுதியாக சொன்னதில் தொடங்கி ராகவனிடம் தன்னை பாதுகாக்க சொன்னது வரையில் அவன் பேரன்பை கண்டு தளிரிடம் கலக்கமே மிஞ்சியது.

தகுதியே இல்லாத தனக்காக அவன் மெனக்கெடுவதை கண்டவளுக்கு தன்னை எண்ணி சிரிப்பதா அழுவதா..? என்று புரியாத நிலை..!’

பின்னே ஏற்கனவே சரத்தால் அவள் பாதிக்கப்பட்ட போதும் அனைத்திற்கும் தன்னையே குற்றம்சாட்டிக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் துடித்தவள் இப்போது தான் உதய்க்கு பொருத்தமில்லாதவள் என்று வெகு தீவிரமாக நம்பியிருந்தாள்.

அதைவிட இனியும் அவன் வாழ்க்கையில் அவள் நுழைந்து அவனுக்கு களங்கம் ஏற்படுத்தகூடாது, அவளால் அவன் நிம்மதி இழக்ககூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தவளுக்கு எப்படி அதை செயலாற்றுவது என்று புரியாத நிலையில் அதை யோசனையுடனே கண்மூடி இருந்தவள் ஒரு கட்டத்தில் அவளையும் அறியாமல் உறங்கியிருந்தாள்.

காலிங் பெல் ஓசை கேட்கவும் கதவை திறந்த இளந்தென்றல் அங்கே சரத்தை கண்டு உச்சபட்ச அதிர்வில் உறைந்து போனாள்.

ஓஓ மச்சினிச்சியா..? நான் என் பொண்டாட்டி கதவை திறப்பான்னு இல்ல நினைச்சேன்” என்றவன் உள்ளே நுழைய பார்க்கவும் தான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட இளந்தென்றல்,

நீ.. நீ எங்க இங்க வந்த போடா வெளியே..” எனவும் அவள் சத்தத்தில் சமையலறையில் இருந்து வந்த சீதா சரத்தை கண்டதும் மின்சாரம் பாய்ந்த அதிர்வில் அடுத்த அடி வைக்க முடியாமல் நின்றுபோனார்.

அத்தை உங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே மரியாதை தெரியாதா..? என்ன வளர்த்து வச்சிருக்கீங்க..” என்றவாறே கையில் போடபட்டிருந்த கட்டோடு இடது காலை சற்று இழுத்தெடுத்து  தாங்கியவாறே நடந்து உள்ளே வந்தான்.

நெற்றியில் பிளாஸ்டர் போடப்பட்டு, கண்ணோரம் வீங்கி, உதடு கிழிந்த நிலையில் கையில் கட்டு என்று உதய் அடித்த அடியில் இரு நாட்களாக எழ முடியாமல் இருந்தவன் இன்று காலையில் இருந்து மெல்ல நடை பழகி  ஓரளவு நடக்க முடியவும் தாமதிக்காமல் இங்கே வந்துவிட்டான்.

உன்னை வெளியே போக சொன்னேன்” என்ற தென்றலின் பேச்சை காதில் வாங்காது, “நம்ம வீட்டு விஷயம் வெளி ஆளுங்களுக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது பாருங்க...” என்றவாறே கதவை சாற்றி தாளிட சென்றான்.

அவனை தடுக்க முயன்ற தென்றல் ஒருகையால் கைபேசியை எடுத்து உதய்க்கு அழைக்க உடனே பறித்து சுவரில் விட்டெறிந்த சரத் ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் தோரணையாக அமர்ந்து வெற்றிகளிப்போடு தளிரை பார்த்தான்.

தன் எதிரே அமர்ந்தவனை கண்டு தளிர் விழிகள் ஒருமுறை இடுங்கியதே தவிர அவளிடம் வேறு உணர்வில்லை.

என்ன தளிர் அவ்ளோ சீக்கிரம் என்னை மறந்துட்டு இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகிட்ட போல..? உன் அத்தை பேச்சை கேட்டு ரொம்ப புத்திசாலிதனமா என்கிட்டே இருந்து தப்பிச்சுட்டதா நினைப்பா..?” என்று அவளை கூர்ந்து பார்த்தவன் “நீயா தப்பிக்கல  உன்னை தப்பிக்க விட்டதே நான்தான்..!! எப்படின்னு யோசிக்கிறியா..?” என்று சிரிக்க,

டேய் வெளியே போறியா இல்ல போலீசை கூப்பிடட்டா..?என்று தென்றல் அவன் முன்னே வர,

போலீஸா..? தாராளமா கூப்பிடலாமே.. ” என்று நக்கலாக சொன்னவன், “ஏன் இந்த சரத்தை எதிர்த்து உங்கக்கா இதுவரை பட்டது போதாதா..? இனியும் எதுவும் படக்கூடாது உங்கக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சா போ நான் பேசி முடிக்கிற வரை போய் ஓரமா நில்லு” என்று சொல்ல ஆவேசமாக அவன் சட்டையை பிடித்து, பொறுக்கி நாயே என் பெண்ணை வாழவே விட மாட்டியா..?என்று ஓங்கி அறைந்த சீதா,

படுபாவி இன்னும் என்னடா மிச்சம் வச்சிருக்க..? தப்பே பண்ணாத என் பெண்ணை ஊரே தப்பா பேசுது, உன்னை பிரெண்டா நம்பி பழகினதுக்கு அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணோம்.. நீயெல்லாம் நல்லா இருப்பியா..?” என்று மீண்டும் அறைய அவர் கையை பிடித்தவன்,

அத்தை இப்பவும் உங்க பொண்ணோட வாழ்க்கைக்காக தான் நாலு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணுவேன்னு சொன்ன டாக்டரை மீறி வந்திருக்கேன்.. இதெல்லாமே அவமேல எனக்கு இருக்கிற அக்கறை தான்னு எப்போ புரிஞ்சுப்பீங்க..?”

எந்த ஊர் தப்பா பேசுதுன்னு சொன்னீங்களோ அதே ஊர் எதிர்ல உங்க பொண்ணுக்கு தாலி கட்டி அவங்க வாயை அடைக்க என்னால முடியும், அதனால் வீட்டு மாப்பிள்ளையை இப்படி கை நீட்டாம என் பொண்டாட்டி கிட்ட நான் பேசி முடிக்கிற வரை ஓரமா நில்லுங்க..”

“இல்ல விளைவு இதை விட விபரீதமா இருக்கும்” என்றவனின் குரலில் இருந்த மிரட்டலில் ‘இதற்கு மேல் அவன் இன்னும் என்ன செய்யக்கூடும்?’ என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் சரத் வாய் திறந்து உண்மையை சொன்னால் மகள் மீதான களங்கம் துடைக்கபட்டுவிடும்.

எங்கே அவர் அவசரப்பட்டு அதை கெடுத்துவிடக்கூடாது என்று எண்ணியவர் பதைபதைப்போடு தென்றல் அருகே நின்றார்.

காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் போகாது என்பதால் சரத்தின் வருகை தளிரை  பெரிதாக திகைக்க செய்துவிடவில்லை. அமர்ந்திருந்த ஒற்றை சோபாவில் இருந்து எழுந்தவன் காலை இழுத்தவாறு மெதுவாக அவளருகே வந்து அமர தளிர் மெளனமாக அவனை பார்த்திருந்தாள்.

இத்தனை வருஷமா உன்னை தேடி வராமா போனதுல என்னை நீ மறந்துட்ட இல்ல தளிர்..? எப்படி உன்னால என்னை மறக்க முடிஞ்சது ஆனா நான் இத்தனை வருஷமா உன்னைத்தான் நினைச்சுட்டு இருக்கேன் தெரியுமா..?

நான் கட்டின தாலிய கழட்டி போட்டுட்டு வந்துட்டு யாருக்கும் தெரியாம மறைச்சு என்ன சாதிக்க நினைச்ச..? உன்னோட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவையும் நான் பார்த்து ரசிச்சிட்டு இருந்தேன்.. ஆனா எனக்கு தெரியாதுங்கிற தைரியத்துல தானே இன்னொருத்தனை கல்யாணம் பண்ண துணிஞ்ச..? என்று ஆவேசமாக கேட்டவன்,

எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா..? அதிகம் யோசிக்காத உங்கத்தை அறிவாளியா செயல்பட்டு உன்னை காப்பாத்திட்டதா நினச்சிட்டு இருந்தாங்க ஆனா அவங்களுக்கு தெரியாதது நீங்க இங்க வந்த அடுத்த வாரமே இதே தெருவுல உங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கிற இரண்டாவது வீட்டை விலைக்கு வாங்கி அதுல குமார் தம்பி குடும்பத்தை குடியேற்றி, வீட்டு வாசல்ல கேமரா பிக்ஸ் பண்ணிட்டேன்”  

அதுமட்டுமில்ல அவனோட ஆட்டோவை தான் நீங்க அடிக்கடி யூஸ் பண்ணினது, அவன் பசங்க உன்கிட்ட டியூஷன் படிச்சதுல இருந்து அவன் வைஃப் உங்க வீட்டுல ஒரு ஆளாவே மாறினதுக்கு யார் காரணம்னு நினைக்கிற..?” என்று வீடே அதிரும்படி சிரித்தவன் நிதானமாக அவள் வீட்டு ஹாலில் மறைத்து வைக்கபட்டிருந்த கேமராவை சுட்டிக்காட்ட மற்றவர்களோ மின்சாரம் பாய்ந்த அதிர்வோடு அவனை பார்த்திருந்தனர். 

நீ என் பொண்டாட்டி தளிர்! தாலி வேண்டாம்னு நீ கழட்டி போட்டுட்டு போயிடலாம் ஆனா என்னால அப்படி போக முடியாது தாலிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு” என்றவன் தன் கையை நீட்ட அதில் அவள் கழற்றி வீசியிருந்த தாலி மஞ்சள் கயிறின் நிறம் மாறாமல் வீற்றிருந்தது.

"என்ன தளிர் நிறம் மாறாம இருக்கேன்னு பார்க்கிறியா..? குமார் பொண்டாட்டி தினமும் தாலி கயிறுக்கு மஞ்சள் பூசி குளிக்கும்னு சொன்னான் அதான் இத்தனை வருஷம் விடாம பூசுவேன்.., இதை அன்னைக்கே உன்னை இழுத்து பிடிச்சு திரும்ப கட்டி என்னோட தூக்கிட்டு போயிருக்க முடியும் தளிர்.." 

"ஆனா நான் அப்படி செய்திருந்தா இதோட மதிப்பு தெரியாத நீ திரும்பவும் கழட்டி போட்டுட்டு போயிருப்ப.. அதுதான் உனக்கு தாலியோட மதிப்பையும் என்னோட அருமையையும் புரிய வச்சு உன் கழுத்துல கட்டனும்னு இத்தனை வருஷம் காத்திருந்தேன்.. அடுத்த வெள்ளி நல்ல முகூர்த்த நாள் இதை விட பிரமாண்டமா நம்ம கல்யாணத்தை நான் நடத்தறேன் தளிர் நீ ஓகே மட்டும் சொல்லு" என்று சரத் அவள் முகம் பார்க்க., 

நான் தான் பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் இப்படி என்னை விடாம துரத்துற..?”

ஏன்..?” என்று அவளை கூர்மையாக பார்த்தவாறே தன் மேவாயை நீவியவன்,

உனக்கு நியாபகம் இருக்கா தளிர் அன்னைக்கு ஒரு ஆம்பள நான் சுத்தி அத்தனை பேரை வச்சுக்கிட்டு அவ்ளோ தூரம் உன் கால்ல விழுந்து கெஞ்சுறேன் அப்பவும் உனக்கு என் காதல் புரியலை.. என்ன சார் இது இரண்டு இழுத்து விட்டீங்கன்னா வழிக்கு வந்துடும் அதைவிட்டுட்டு பொம்பள கால்ல போய் விழுந்து அசிங்கமாக கெஞ்சிட்டு இருக்கீங்கன்னு சொன்னான்.

ஆனா அவன் கண்ணுல இருந்த சிரிப்பை இன்னைக்கு வரை என்னால மறக்க முடியாது, ஆனா அந்த அவமானத்தை கூட நான் தாங்கிகிட்டது நீ என்கூட வாழ வந்துடுவியானு நப்பாசையில் தான் ஆனா நீ வரல அப்படி என்னடி உனக்கு திமிரு..? உன் திமிரை அடைக்கலனா நான் ஆம்பளையா பொறந்ததுல அர்த்தமே இல்ல.., என்கூட வாழாத நீ வேற யார் கூடவும் வாழக்கூடாது அதுக்கு தான் உன் கல்யாணத்துக்காக காத்திருந்தேன்

உன்னை  பொண்ணு பார்க்க வந்தப்பவே  நான் நினைச்சிருந்தா அதை தடுத்திருக்க முடியும்.. ஆனா நான்  அப்படி பண்ணியிருந்தேனா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மட்டும் தான் நீ என் பொண்டாட்டின்னு  தெரிஞ்சுருக்கும்.., ஆனா இப்போ விஷயம் ஊர் உலகத்துக்கே தெரிஞ்சிருச்சு. நான் வைத்திருக்கிற வீடியோஸ், எடுத்திருக்க மேரேஜ் சர்டிபிகேட் சொல்லும் நீ தான் என் பொண்டாட்டின்னு..!”

இனி ஒருத்தன் உன்னை கல்யாணம் பண்ணிக்க வருவானா..?  அப்படியே வந்தாலும் என்னை ஏமாத்திட்டு போன மாதிரி அவனையும் ஏமாத்த மாட்டியாங்கிற பயத்துல ஒரு மடையனும் வரமாட்டான். 

நீ என் பொண்டாட்டி என்கூட வந்து வாழறது தான் உனக்கான விதி..! ஏதோ உன் விதியை மாத்தி எழுதுறேன்னு ஒருத்தி கிளம்பினா நான் விட்டுடுவேனா..? பொம்பளைங்க சேர்ந்து உன்னை என்கிட்டே இருந்து சாமார்த்தியமா பிரிச்சு ஜெயிச்சுட்டதா நினைப்பா..?” என்று அவன் பேச சீதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

By RP

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17