“அடுத்து என்ன செய்யணும்னு நான் சொல்ற வரை காத்திருப்பியா..?” என்ற உதய்யின் கேள்வி புரிந்த ராகவன் கைபேசியோட ஒதுங்கி சென்று தளிரின் வீட்டில் இருக்கும் கேமராக்களை அகற்றுவது குறித்து பேச தொடங்கினான்.
தென்றல் நிவேதாவோடு கிளம்ப, “அக்கா அப்பாவை அனுப்பிட்டு நீ தாத்தா கூட இரு நான் தளிரை கூட்டிட்டு வரேன்” என்றான் உதய் சுஜியிடம்.
மனைவி செல்லவும், “தளிர் பிடிவாதமா இருக்கப்போ அடுத்து என்னடா பண்ண போற..?” என்றார் சரவணன்.
“மாமா தளிர் இன்னசென்ட்ன்னு ப்ரூவ் பண்ணனும் அதுதான் முக்கியம்..! இவ்வளவு தூரம் ஆன பிறகு நாம அவனை கட்டி வச்சு மிதிச்சு வாக்குமூலம் வாங்கினா அது நிச்சயம் தளிருக்கு பாதகமா தான் முடியும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கணும். அதனால இப்போ நமக்கு தேவை இந்த மாதிரி கேஸஸ் எடுத்து நடத்தக்கூடிய யாருக்கும் விலை போகாத ஒரு வக்கீல் நான் ஏற்கனவே உங்ககிட்ட கேட்டிருந்தேன் ஆனா நீங்க..” என்றவனை இடையிட்ட சரவணன்..,
“டேய் மாப்பிள்ளை, நீ கேட்கிற மாதிரி யாருக்கும் பயப்படாத, விலை போகாத, எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத எடுத்த கேஸை வெற்றிகரமா முடிக்கிறதுன்னா என்னோட சீஃ ப் வைஃப் மட்டும் தான். ஆனா அவங்க ரொம்ப பிஸி உன்னோட அவசரத்துக்கு ஸார் கிட்ட சொல்லித்தான் நான் அப்பாயின்ட்மென்ட் வாங்கமுடியும்.. அவர்கிட்ட ஃபோன்ல பேசினா நல்லா இருக்காது ஆபிஸ் போனதும் பேசிடுறேன் சீக்கிரமா அவங்களை சந்திக்க ஏற்பாடு பண்றேன்” என்றவர் அலுவலகத்திற்கு கிளம்பவும் அம்பலவாணனுக்கு அழைத்தான்.
“இதுவரை நான் உங்க வார்த்தையை மீறினதில்லைன்னு சொல்றதை விட என்னை அந்த நிலையில கொண்டு போய் நீங்க நிறுத்தினது இல்ல.. எப்பவுமே என்னை புரிஞ்சுக்கிற என் அப்பா இப்பவும் என்னை புரிஞ்சுப்பாருங்கிற நம்பிக்கையோட வந்திருக்கேன்” என்றவன் தளிர் கடந்து வந்த பாதையையும் நேற்று சரத் பேசி சென்றதையும் சொல்லி முடிக்க அம்பலவாணனிடம் அசைவில்லை.
இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக தளிர் நிருத்தபட்டிருக்கும் நிலையை அவரால் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளிரின் தற்கொலை முயற்சி, சிகிச்சை பற்றி கேட்டதில் இருந்தே வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத அதிர்வோடு அமர்ந்திருந்தார்.
ஆனால் இத்தனை வருடங்களில் அதையெல்லாம் கடந்து தன்னுடைய படிப்பு, வேலை, குடும்பம், திருமணம் என்று எத்தனை அழகாக வாழ்ககையை நகர்த்திய பெண்ணை இன்று சிதைக்க பார்ப்பவனை கொளுத்தும் ஆத்திரம் அம்பலவாணனுக்கும்.
“ப்பா இப்போ உங்களுக்கு விஷயம் எவ்ளோ சீரியஸானதுன்னு புரியுதாப்பா.. நிச்சயம் அவங்களால தனியா சமாளிக்க முடியாது வீட்ல கேமரா வச்சு கண்காணிச்சு இருக்கான் ப்பா... இப்போ என்னை நீங்க தடுக்கறதோட விளைவு எத்தனை..” என்ற மகனை கட்டுப்படுத்தி தான் எத்தனை தவறு செய்துவிட்டோம் என்பது புரிபட உதய் தன் பேச்சை முடிக்கும் முன்னமே..,
“தளிர் குடும்பம் இனி அங்க இருக்க வேண்டாம் உதய் அவங்களை ஷிப்ட் பண்றதுக்கான ஏற்பாட்டை பாரு” என்றதும் ஏற்கனவே தான் ராகவ் வீட்டில் தங்க வைக்க இருப்பதை சொன்னவன்..,
“தளிர் பக்கம் எந்த தப்பும் இல்லை அவ இன்னசென்ட்னு நிருப்பிக்கணும் அதுக்கப்புறம் நான் பொறுமையா தாத்தாக்கு புரிய வைக்கிறேன்.. நிச்சயம் இந்தமுறை அவசரபடமாட்டேன்” என்றவன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு,
“தாத்தா கையாள தாலி எடுத்து கொடுத்தா மட்டுமே தளிர் என் மனைவியா நம்ம வீட்டு மருமகளா வருவா ஐ ப்ராமிஸ் யூ ப்பா..” என்று உதய் சொல்ல மகனின் கையை வருடியவர்,
“ஐ அண்டர்ஸ்டேன்ட் முடிஞ்சவரை நம்ம வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்...” என்று சொல்ல மகிழ்வோடு தந்தையை அணைத்து விடுவித்தவன் தளிர் வீட்டிற்கு புறப்பட்டான்.
*********************
பிரபல தொழிலதிபரின் வீட்டில் இருந்து கிளம்பிய வருமான
வரித்துறையினரின் வாகனம் அங்கிருந்து கைப்பற்றிய அனைத்து ஆவணங்களுடன் அவர்கள்
அலுவலகத்தில் சென்று நிற்க அதிலிருந்து முக்கிய கோப்புகளை எடுத்துகொண்டு
இறங்கினார் சரவணன்.
மற்றவர்களிடம் ஆவணங்களை பத்திரபடுத்தி நடைமுறைகளை பின்பற்ற
சொல்லிய சரவணன் “ஸார் இருக்காரா..?” என்று கேட்டுக்கொண்டு நேரே சென்று நின்றது “நா.
அகனெழிலன்,
இணை இயக்குனர்” என்ற பெயர்ப்பலகை தாங்கிய அறையின் முன்.
அப்போது தான் மீட்டிங் முடித்துவிட்டு வந்திருந்த அகனெழிலன்
அடுத்த நாள் சர்ச் செல்லவிருப்போரின் பட்டியலை சரிபார்த்து கொண்டிருந்தான்.
சரவணன் கதவை தட்டவும் “கம் இன்” என்ற
எழிலின் கம்பீரக்குரலில் உள்ளே நுழைந்தான்.
“குட் மார்னிங் ஸார், இன்னைக்கு
ரிபோர்ட்” என்று கோப்பை நீட்டவும் “சிட் டவுன் சரவணன்” என்றவாறே அதை வாங்கி சரி
பார்த்தான் எழிலன்.
சரவணன் அன்றைய நிகழ்வுகளை சொல்லி முடித்து அகனெழிலனின்
ஒப்புதல் பெற்று கொண்ட பின்னரும் கிளம்பாமல் சிறு தயக்கத்தோடு “ஸார் ஒரு ஹெல்ப்”
என்றான்.
“ஹெல்ப்பா..?” என்று
ஒருநொடி எழிலின் நெற்றி சுருங்கி விரிய “அஃபிஷியல் ஆர் அன்னஃபிஷியல்”
“அன்னபிஷியல் ஸார்... இங்க பேசக்கூடாதுன்னு
தெரியும் பட் இட்ஸ் ஆன் இமெர்ஜென்சி”
“ஓகே கோ அஹெட்”
“ஸார் எனக்கு மேம்மோட அப்பாயின்ட்மென்ட்
வேணும்.., அவங்க பிஸின்னு தெரியும் ஆனா நீங்க சொன்னா கொஞ்சம்
சீக்கிரம் கிடைக்கும் வாங்கி கொடுக்க முடியுமா..?
“உங்களுக்கா..?” என்றவனின்
விழிகள் இடுங்க, “லீகல் அட்வைஸ் எடுக்கிற அளவு என்ன பிரச்சனை
சரவணன்..?” என்று கேட்டவனுக்கு சரவணனின் பின்னணி தெரியும்
அவன் குடும்பத்தில் அண்ணன் தம்பி அனைவரும் தொழிலில் ஈடுபட்டிருக்க இவன் மட்டுமே
அரசு துறையில் கால் பதித்திருப்பவன்.
“எனக்கு இல்ல ஸார் இளந்தளிருக்கு! ஐ மீன்
என்னோட மச்சான் கல்யாணம் செய்துக்க இருந்த பெண்ணுக்கு.. என்னோட சிஸ்டர் மாதிரி”
“கல்யாணம் நின்னுடுச்சே அப்புறம் நீங்க எப்படி
சரவணன் அந்த பெண்ணுக்காக..?”
“ஸார் தளிர் மேல அவன் சொன்னது எல்லாமே false allegation (பொய்யான குற்றச்சாட்டு) அவங்களை ஏமாற்றியவன் கிட்ட இருந்து டிவோர்ஸ்
வாங்கணும்.. ஆனா அவன் கொடுக்க மாட்டேங்கிற மாதிரி பேசியிருக்கான் ரொம்ப
க்ரிட்டிக்கலான சிச்சுவேஷன் ஸார்” என்று சொல்ல எழிலுமே உதய்யின் திருமணத்தில்
கலந்து கொள்ள இருந்தவன் முக்கிய அமைச்சரின் வீட்டிற்கு ரெயிட்
செல்வதற்கு அவர்கள் குறித்திருந்த நாள் கசிந்த நிலையில்
தவிர்க்க முடியாமல் வேறு தேதிக்கு மாற்றியிருந்தது உதய்யின் திருமண நாளாக அமைந்து
போனதில் அவன் கலந்து கொள்ள முடியாமல் போனது.
அதன்பின் திருமணம் நின்றது தெரிந்து அண்ணாமலை அனுமதிக்கப்பட்டது
வரை சரவணன் மூலம் தெரிந்து கொண்டவன் இப்போது தளிருக்காக கேட்கவும் “ஒன் செகென்ட்
சரவணன் இப்பவே கேட்டு சொல்லிடுறேன்” என்று மனைவிக்கு அழைத்துவிட்டான்.
ஆனால் இருமுறை அழைத்தும் அலர் ஏற்காமல் போகவும் “அவங்க
கோர்ட்ல இருந்தா பெரும்பாலும் எடுக்க மாட்டாங்க பார்த்துட்டு கூப்பிடுவாங்க நான்
உங்களுக்கு சொல்றேன்” என்று சரவணனை அனுப்பி விட்டு,
“ஃப்ரீ ஆனதும் கால் பண்ணுடி பட்டு..
எமெர்ஜென்சி” என்று அலருக்கு மெசேஜ் போட்டுவிட்டு தன் வேலையை கவனிக்க தொடங்கினான்.
அதேநேரம் “ராக்கிங் ராயல்ஸ்” என்ற பெயர் தாங்கிய டிஷர்ட் தலையில்
தொப்பி கண்களில் குளிர்கண்ணாடி சகிதம் அவிரன், சித்தார்த்தில்
தொடங்கி ஆதிரையன், அர்ஜுன், அக்ஷதா வரை
அனைவரையும் இரு அணிகளாக பிரித்து ஒன்றுக்கு ப்ரீத்தி தலைமை ஏற்க மற்றொரு அணிக்கு
தான் தலைமை ஏற்று தாமரையின் அம்பையரிங்கில் வியர்க்க விறுவிறுக்க கிரிக்கெட்
ஆடிக்கொண்டு இருந்தாள் அலர்விழி.
“அலரம்மா உங்களுக்கு ஃபோன்” என்று ஆதி குரல்
கொடுக்க,
“யாரு ஆதி”
“அகனப்பா கால் பண்றாங்க...”
“சரி நான் பேசிக்கிறேன் நீ வச்சுட்டு ஃபீல்டிங்
பாரு” என்றவள் சித்தார்த் எறிந்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட அதை தடுக்க ஓடினான்
ஆதி.
ஃபீல்டிங்கை மாற்றி அமைத்த ப்ரீத்தி நாதன் வீட்டு
போர்டிக்கோவை ஒட்டி நிற்க, “ப்ரீத்திம்மா அகனப்பா கால் பண்றாரு” அக்ஷதா
கொடுக்கவும் வாங்கியவள்,
“சொல்லுங்க மாமா..”
“அமுலு எங்க ப்ரீத்தி...?” என்றான் அவள் கணீர் குரலை கண்டுகொண்டு.
“பேட்டிங் பண்ணிட்டு இருக்கா மாமா..” என்று
ப்ரீத்தி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,
“இன்னும் ஒரு பால் தான் வரேன்னு சொல்லு
ப்ரீத்தி” என்ற அலர் தன்னை நோக்கி வந்த பந்தை சிக்ஸராக மாற்றியவள் “அஜு நீ பேட்
பண்ணு நான் பேசிட்டு வந்துடுறேன்” என்று கிளம்பினாள்.
“சரி அத்தை” என்ற பளீர் சிரிப்போடு சொன்ன அர்ஜுன்
அலரின் மகள்களுக்கு பழிப்பு காட்டிக்கொண்டு சென்று நிற்க அவர்களோ கோபமாக தாயை வழி
மறித்து,
“ம்மா அது என்ன எப்போவும் நீங்க அஜுவையே
ஸப்ஸ்டியுட் பண்றீங்க.. திஸ் இஸ் நாட் ஃபேர் அதுவும் அவன் ஆல்ரெடி அவுட் ஆகிட்டான்
அவனை எதுக்கு கூப்படறீங்க” என்று வரிந்து கட்டிக்கொண்டு நின்றுவிட்டனர்.
“அப்பா கால் பண்ணியிருக்காங்க சின்கி நான்
பேசிட்டு வர வரைக்கும் நிறுத்தவேண்டாம்னு கொடுத்தேன்.. நகருங்க”
“நீங்க அண்ணா, சர்வேஷ்
மாமா, ஆத்விக்னு யாருக்குனாலும் கொடுங்க ஆனா இந்த அஜுக்கு
மட்டும் கொடுக்காதீங்க” என்று அலரை வழி மறிக்க, விளையாட
வரும்போதெல்லாம் தன் மகனுக்கும் மருமகள்களுக்கும் முட்டிக்கொள்வது வழக்கம்
என்பதால் தாமரை அலரிடம் “நீ முடிச்சிட்டு கூப்பிடு டி வரோம்” என்றுவிட்டு நிழலில்
சென்று அமர வேதாவும் ப்ரீத்தியும் அவளோடு சேர்ந்து கொண்டனர்.
“ஏன்டி அவன் எப்போ ஆட வந்தாலும் முதல் இரண்டு
பால்லயே அவுட் ஆகிடுறான்..” என்ற அலரை இடைமறித்த அர்ஜுன்,
“அத்தை நானா அவுட் ஆகறது இல்ல lm, hm ஏதோ ப்ளான் பண்ணி என்னை அவுட் பண்றாங்க” என்று புகார் வாசிக்க அலரின்
புதல்விகள் இருவரும் அர்ஜுனை தீயாய் முறைத்து கொண்டு நின்றனர்.
“ம்மா அவனுக்கு விளையாடவே தெரியல.. he
is a dafod..” என்று குஜாராத்தியில் அவனை பைத்தியக்காரன் என்று மெல்லிய
குரலில் முணுமுணுத்தனர்.
“அத்தை நான் ஸ்கூல் மேட்ச்ல எத்தனை ஃபோர்
அடிச்சிருக்கேன் இந்த kcs என்னை எப்பவும் டக் அவுட் பண்றங்க”
என்றதில் “யாருடா kc நீதான் அது kc மட்டும்
இல்ல rk வும் நீதான்” என்று சின்கி அவன் காலை மிதிக்க போக,
“அம்மா போன அப்புறம் பார்த்துக்கலாம் அமைதியா
இரு” என்று லட்டு அவளை கட்டுப்படுத்தி இருந்தாள்.
“அர்ஜுன் கூட என்னடி பிரச்சனை உங்களுக்கு..?”
என்று தலையை பிடித்து கொண்டாள் அலர்விழி..,
சித்து, சர்வேஷுடன் இருந்த அவிரனிடம் சென்ற சுபி,
“மாமா சின்கியும் லட்டுவும் திரும்ப பிரச்னை ஆரம்பிச்சுட்டாங்க
இன்னைக்கு விளையாடின மாதிரி தான், நீங்க வாங்க நான் சொன்னதை
மதிக்கவே இல்ல” என்று அழைத்தாள்.
சுபி என்று இல்லை யார் சொன்னாலுமே அர்ஜுன் விஷயத்தில்
இருவரும் மதிக்காதது மட்டுமல்ல அருகில் யாரும் இல்லையென்றால் அர்ஜுனை மிதி மிதியென
மிதிக்கும் ஆத்திரத்தில் இருப்பவர்கள் கட்டுப்படுவது எழில் மற்றும்
அவிரனுக்கு மட்டுமே..!
அலர் தலையை பிடிப்பதை கண்ட அவிரன் “என்னம்மா ஆச்சு
ஏன் தலையை பிடிச்சுட்டீங்க வலிக்குதா..?” என்று ஓடி
வந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் இவளுங்க கூட பேசினா
வந்துடும் அப்பு.. நான் அப்பாக்கிட்ட பேசிட்டு வரேன் நீ இவங்களை சமாளி” என்றவள்
தன் முகத்தை துடைத்துக்கொண்டே செல்ல,
“உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க நான்
சால்வ் பண்றேன்” என்று கேட்ட அவிரனிடம் ,
“ஒண்ணுமில்லண்ணா அத்வைத்க்கு பேட்டிங் கொடுக்கலையான்னு
கேட்டோம் அவ்ளோதான்” என்றவர்கள் பாலை கையில் வைத்து கொண்டிருந்த ஆதியை நெருங்கி,
“ஆதிண்ணா அஜு முட்டி உடையனும்”
“இல்ல சின்கி அவன் வாய்”
“இல்லடி அவனோட தலை”
“ஒரே பால்ல எப்படி முட்டி தலை வாயை குறி
பார்க்க முடியும் ஏதாவது ஒரு பார்ட் சொல்லுங்க டா” என்றான் ஆதி
“லட்டு” என்ற அவிரனின் அழுத்தமான குரலில்,
“மாமாக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னேன் ண்ணா”
என்றவள் சிரித்துக்கொண்டே “சிக்சர் அடிக்கணும் அஜு மாமா” என்று சொல்லி ஆதிக்கு கண்
காட்டிவிட்டு சென்று அமர்ந்து கொண்டனர்.
பிள்ளைகளை பார்த்தவாறே அலர்விழி வீடியோ காலில் எழிலை அழைக்க
அவள் கோலம் கண்டவன், “என்னடி பண்ணிட்டு இருக்க..?” என்றான்.
“விளையாடிட்டு இருக்கேன் மாமா”
“விளையாடுறியா..? இந்நேரத்துக்கா..?”
என்று நேரத்தை பார்த்தவன் இன்னைக்கு ஏதோ முக்கிய ஹியரிங்
இருக்குன்னு சொன்ன இப்ப கோர்ட்க்கு போகாம விளையாடிட்டு இருக்க..?”
“காலையிலேயே போயிட்டு வந்துட்டேன் மாமா
ஆப்போஸிட் பார்டி வராததால திரும்பவும் ஒத்திபோட்டுட்டாங்க.. மற்ற வாய்தா வாங்க
வேண்டிய கேஸ் எல்லாம் ஜூனியரை முடிக்க சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..”
“சரிடி ஆனா இந்நேரத்துக்கு என்ன விளையாட்டு
எப்படி டையார்ட்டாகி இருக்க..” என்று மனைவியின் முகத்தில் அவன் விழிகள் நிலைகொள்ள,
“பசங்க விளையாட போறேன்னு சொன்னாங்க மாமா உன்
பொண்ணுங்க நாங்களும் போவோம்னு ஒரே அடம் அதுதான்”
“சரிடி.. என் ஜூனியர்
உன்னோட அப்பாயின்ட்மென்ட் கேட்டாரு கொஞ்சம் எமெர்ஜென்சி எப்போ வரசொல்லட்டும்
சொல்லு..”
“என்ன கேஸ் மாமா” என்றதும் தனக்கு தெரிந்தவரை
சொல்லி முடிக்கவும்,
“பொண்ணு பேர் இளந்தளிர் தானே மாமா..! நானும்
அந்த கிளிப்பிங்ஸ் பார்த்தேன், எங்க சர்கிள்ல இந்த பேச்சு
தான் சரி நாளைக்கு பதினோரு மணி போல வர சொல்லுங்க” என்றவள் அப்போது தான் எழில் தன்
சட்டையை முழங்கை வரை மடித்துவிடுவதை கண்டவள் விழிகளில் மெல்லிய அதிர்வு.
“மாமா இந்த ஷர்ட் எப்.. எப்படி..?” என்றதில், ஒருமுறை தன்னை குனிந்து பார்த்தவன்
இப்போது பதில் சொல்லாமல் அலரை முறைத்து கொண்டிருந்தான்.
“சொல்லு மாமா”
“என்னடி சொல்ல..? வைட்
ஷர்ட்டை கையில தோய்ச்சாதான் நல்லா பளீச்சுன்னு இருக்கும்னு சொல்லி இந்த ஷர்ட்டை
வாங்கி நாலு மாசம் ஆச்சு..” என்று பல்லை கடித்தவன்,
“நான் கேட்கும் போதெல்லாம் இதோ தோய்க்கிறேன்
அதோ தோய்க்கிறேன்னு சொல்லி மறைச்சு வச்சுட்டா கண்டுபிடிக்க முடியாதா..?” என்றான் கோபமாக..
“கண்டுபிடிச்சிட்டதால நீ எப்படி மாமா இதை போட்டுட்டு
போகலாம்..? இதுல நீ எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா..?” என்று ஆவேசமாக கேட்டவள்.,
“அன்னைக்கு அப்புவோட டிஷர்ட் போட்டுட்டு எங்களை
பிக் பண்ண டான்ஸ் க்ளாஸ் வந்த, கூட இருந்தவங்க எல்லாரும்
உங்களை அண்ணன் தம்பியான்னு கேட்கிறாங்க.. நீ ஏன் அப்புவோட டீசர்ட் போட்ட..?”
“ஏன்டி என் டீஷர்ட் எல்லாமே
பழசாகி போச்சு வெளியில போட எதுவும் இல்ல புதுசு எடுன்னு உன்கிட்ட சொல்லி எத்தனை
மாசம் ஆச்சு எடுத்து கொடுத்தியா..?” என்று கோபமாக கேட்க
திருத்திருத்தவள்,
“அதுல நீ இன்னும் ஹாண்ட்ஸ்மா இருப்ப மாமா”
என்றாள் ரசனையாக.
“அமுலு எனக்கு என்னடி வயசு..?” என்றான் பல்லைக்கடித்து கொண்டு.,
“என்னவா இருந்தா என்ன..? அது
எப்படி நீ மட்டும் வயசு ஆக ஆக அழகாகிட்டே போற.. அதுவும் இன்னைக்கு வைட் ஷர்ட்
அப்போ இன்னைக்கு கனவுல நீ என்னை அடிப்..” என்று ஆரம்பித்தவள் அவன் முறைப்பில்
பேச்சை நிறுத்தி,
“அதில்ல மாமா.. நான்.. நீ.. ப்ச் ஆனா யார்
ஷேர்ட் கண்டுபிடிச்சா? எனக்கு தெரியாம தோய்ச்சது யாரு..?”
“எதுக்கு கேட்கிற..?”
“சும்மா தெரிஞ்சுக்க..”
“யாரு நீ..? அடியேய்
தெரிஞ்சுக்கிறதோட நீ நிறுத்த மாட்டேன்னு எனக்கு தான்டி தெரியும் குள்ளச்சி...
ஒழுங்கா கேஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு அதைவிட்டுட்டு தேவையில்லாம
இன்னைக்கு நைட் பிரச்சனை பண்ணி என் தூக்கத்தை கெடுத்த நடக்குறதே வேற..! ஒரு
சட்டையை போட சுதந்திரம் இல்லாம போச்சு வைடி ஃபோனை” என்று எழில் வைத்துவிட,
அலரோ தன்னை விளையாட அழைத்தவர்களின் பேச்சை கேட்காது ‘வீடு
நிறைய இருக்கும் பிள்ளைகளில் சட்டையை எடுத்து கொடுத்தது யாராக இருக்கும்..?’ என்ற
யோசனையில் ஆழ்ந்தாள்.
By RP
Comments
Post a Comment