உதயாதித்தனின் கார் இளந்தளிரின் வீட்டின் முன் வேகமாக வந்து
நிற்க அதே வேகத்தோடு இறங்கி கேட்டை திறந்து காலிங் பெல்லை ஒலிக்கவிட்டான்.
ஆனால்
உள்ளிருந்து எந்த பதிலும் வராது போக மீண்டும் ஒலிக்கவிட்டவன், ‘கதவை
கூட திறக்காம என்ன செய்துட்டு இருக்கா..?’ என்று
முனங்கிகொண்டே,
“தளிர் நான் தான் கதவை திற” என்ற போதும் எந்த
பதிலும் இல்லை.
கதவை தட்டியவன் அருகே இருந்த ஜன்னல் வழியே பார்க்க ஹாலில்
அவள் இல்லை,
‘எங்கிருந்தால் என்ன இத்தனை முறை காலிங் பெல் அடித்தும் திறக்காமல்
என்ன செய்கிறாள்..?’ என்று பதட்டமானவன் இப்போது கதவை ஓங்கி
தட்டி “தளிர் சொல்றது கேட்குதா நான் தான் உதய்! கதவை திற” என்றான்.
அப்போதும் எந்த பதிலும் இல்லாது போனதில் தளிர் எண்ணிற்கு
அழைத்தவனுக்கு அவள் ப்ளாக்கில் போட்டிருந்தது நினைவு வர, உடனே
ராகவனிற்கு அழைத்து “மச்சான் தளிர் வீட்டுல இல்லை எங்கயாவது வெளியில
போயிருக்காளா..?” என்று பதட்டத்தோடு கேட்க,
“இருடா கேட்டு சொல்றேன்” என்றவன் தளிர் வீட்டை
கண்காணித்து கொண்டிருப்பவனுக்கு அழைக்க, இன்று காலை முதலே
அவள் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்ற செய்தியை நண்பனுக்கு
தெரிவிக்க அதற்குள் உதய் வீட்டின் பின்புறம், அவளறை, கிட்சன் என்று திறந்திருந்த ஜன்னல்களின் வழியே ஒருமுறை அலசிட எங்குமே அவள்
இல்லாது போனதில் உதய்யின் இருதய துடிப்பு என்றைக்கும் இல்லாதளவு வேகம் கொண்டது.
பின்னே! தளிர் தற்கொலைக்கு முயன்றால் என்ற செய்தி உதய்யை
திகைப்படைய செய்திருந்தது என்றால் சரத் வந்து சென்ற பின்னர் அவள் கொண்டிருந்த
பேரமைதி அவனை வெகுவாக கலங்கடித்திருந்தது.
அவன் கொண்ட கலக்கம் இத்தனை நாட்களாக அவள் தங்கைக்கு தன்னை தாரை
வார்க்க பார்த்தது, எண்ணை ப்ளாக் செய்தது, தன்னை மற்றொரு திருமணம் செய்து கொள்ள சொன்னது என்று அவள் மீதிருந்த
கோபத்தை கூட மறக்கடிக்க செய்துவிட்டது. ‘எப்போது அவளை பார்ப்போம்..?’ என்று காத்திருந்தவன் அம்பலவாணனிடம் ஆசி பெற்று கிளம்பிவிட்டான்.
‘எங்கடி போன..?’ என்று
கலங்கிய மனதுடன் போர்டிகோவில் நின்றவனுக்கு அவளோடு முதல்முதலாக பேசிய இடம் நினைவு
வரவும் உடனே இரண்டு மூன்று படிகளாக தாவி வேகமாக மாடிக்கு சென்றவன் அதன் கோடியில்
இருந்த அறைக்கதவை திறந்த பின்னரே ஆசுவாசம் கொண்டான்.
படீரென கதவை திறந்தவன் விழிகளை அறையின் மையத்தில் இருந்த
நாற்காலில் அமர்ந்திருந்த இளந்தளிர் நிறைக்கவும் தான் அத்தனை நேரம் தவித்து
தத்தளித்து கொண்டிருந்த அவன் உயிர் கூட்டை வந்து சேர்ந்ததில் நிம்மதி கொண்டவன்
கதவின் மீதே சாய்ந்து நின்று தாறுமாறாக இருந்த மூச்சை நிதானபடுத்த தொடங்கினான்.
அதற்கு நேர்மாறாக அவன் விழிகள் அவள் தலை முதல் கால் வரை
அவசரமாக அளவிட அவள் எழில் கோலமெல்லாம் உதய்யின் கண்ணிலும் கருத்திலும் படவே இல்லை
‘தளிர் முழுதாக தன் முன்னே இருக்கிறாள்’ என்ற நிஜம் மட்டுமே அவன் கருத்தை
ஆக்கிரமிக்க வேகமாக தளிரை நெருங்கினான்.
அங்கே தலைக்கு குளித்திருந்த தளிரோ வீட்டில் அணியும் பைஜாமா
டாப்ஸ்சோடு விரித்து விட்டிருந்த கூந்தலை கோதியவாறே அறையில் இருந்த குட்டி
லைப்ரரியில் இருந்து புத்தகம் எடுத்து நிதானமாக வாசித்துக்கொண்டிருந்தாள்.
உதய்யை கண்டதும் சிறு திடுக்கிடலுடன் தளிர் எழுந்து நிற்க
வேகமாக தன்னவளை நெருங்கியவன் அதைவிட வேகமாக அவளை இழுத்தணைத்து ஆவேசமாக அவள்
முகமெங்கும் முத்தமழை பொழிய தொடங்கிவிட்டான்.
அவன் கைகளில் நிறைந்திருந்த தளிரை இருக்கிக்கொண்டவனுக்கு
அதுநேரம் வரை இருந்த நடுக்கம் மெல்ல விடைபெறவும் அவள் கன்னத்தில் புதைந்திருந்த
உதயாதித்தனின் அதரங்கள் இறுதியில் இதமாக அவள் இதழ்களில் இளைப்பாற தொடங்கியது.
திகைத்த விழிகளோடு மூச்செடுக்கவும் மறந்திருந்த தளிர் அவன்
அதிரடி ஆக்கிரமிப்பில் முற்றிலுமாக அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
சில நிமிடங்களில் அவளிதழ்களை விடுத்து நெற்றியில் அழுத்தமாக
முத்தமிட்டவன், “கொஞ்ச நேரத்துல எப்படி பயம் காட்டிட்டடி” என்றவாறே தளிரை
இறுக அணைத்துக்கொள்ள தளிரோ “உதய்” என்று அவன் இருதய துடிப்பின் வேகத்தை உணர்ந்து
அசைவற்று போனாள்.
“எவ்ளோ நேரமா கூப்ட்டுட்டு இருக்கேன் குரல்
கொடுக்காம இங்க என்னடி பண்ற..?” என்று காற்று புகாதளவு
இறுக்கிக்கொண்டே கேட்டவன் அவள் கழுத்துவளைவிலும் தன் அச்சாரத்தை அழுத்தமாக
பதித்ததில் சுயம் பெற்ற தளிர், “உதய்
என்ன பண்றீங்க..? விடுங்க என்..” என்றவளை இடைமறித்தது
“மச்சான்” என்ற ராகவனின் அதிர்ந்த குரல்.
வாயிலில் திரும்பி நின்றிருந்த ராகவனை கண்ட தளிர் வேகமாக
விலகி நிற்க,
“ப்ச் தள்ளிப்போகாதடி” என்றவாறே அவளை தன் கையில் கொண்டு வர முயல
தளிரோ அவனை விட்டு இன்னும் தள்ளி சுவரோரம் நின்றுகொண்டாள்.
அவளை முறைத்தவாறே, “என்னடா வேணும் போய் வந்த வேலையை பாரு நான்
வரேன்” என்று உதய் கடுகடுக்க,
“திரும்பலாமா..?” என்று
கேட்டுக்கொண்டே திரும்பிய ராகவன் நண்பனிடம், “வீட்டை
திறந்தாதானே நாங்க வேலையை ஆரம்பிக்க முடியும்.. சாவியை கொடுடா” என்று கடிந்தவன்,
“கதவை சாத்த மாட்டியா நல்லவேளை அவங்களை கீழே நிற்க சொல்லிட்டு
வந்தேன்” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“உன்னை யாருடா இங்க வர சொன்னா கால்
பண்ணியிருக்க வேண்டியது தானே..? கரடி” என்று அடிக்குரலில்
சீற,
“டேய் என் தங்கச்சி மேல எனக்கு பாசம் இருக்க கூடாதா..?
வீட்டுலயும் இல்ல வெளியிலையும் போகலன்னு சொல்லவும் உயிரை கையில
பிடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு வந்தேன் தெரியுமா..?”
“இந்த விளக்கெண்ணை எல்லாம் எங்களுக்கு
தெரியாதா..? உன்னை எவன்டா மேல வரசொன்னான்..? இனி பாசம் பொங்கினா தண்ணி தெளிக்க கத்துக்கோ...” என்று உறுமிவிட்டு,
“வீட்டு சாவி எங்கே தளிர்...?” என்ற உதய் கேள்வியில் அத்தனை நேரம் தாழ்ந்திருந்த தளிரின் விழிகள் மேஜையை
நோக்கி நகர்ந்தது... உடனே சாவியை எடுத்து கொடுத்தவன் “கதவை சாத்திட்டு கிளம்பு”
என்றான்.
“நான் மட்டும் எங்க கிளம்பறது நீங்களும்
வந்தாதானே..” என்று சொல்ல “ராகவாஆஅ” என்று பல்லைகடித்து,
“எங்களுக்கு இங்க வேலையிருக்கு மச்சான் நீ
கிளம்புடா” என்ற உதய்யின் வார்த்தையை காதில் வாங்காத தளிர், “என்ன வேலை சொல்லுங்கண்ணா நான் வரேன்” என்று அறையை விட்டு முதலில் வெளியேற
உதய் ராகவனை முறைத்தான்.
“தளிரே கிளம்பினதுக்கு என்னமோ நான் துரத்தி
விட்டமாதிரி என்னை ஏன்டா முறைக்கிற..?” என்று பாவமாக
பார்த்தான்.
“எதையுமே உருப்படியா செய்ய மாட்டியா..? இப்போதான் உனக்கு கடமை உணர்ச்சி பொங்கி வழியனுமா..? உன்னை...”
என்று பல்லை கடித்தவன் “உன்னை அப்புறம் வந்து கவனிச்சுக்கறேன்” என்றுவிட்டு வேகமாக
சென்று தளிரின் கையை பிடிக்க அவளோ பிடிவாதமாக அவன் கையை விலக்கி படியிறங்க
முயன்றாள்.
“தள்ளி போகாதடின்னு சொல்லிட்டே இருக்கேன்”
என்று சொல்லிக்கொண்டே அவள் கையை இறுக்கமாக பிடித்துவாறு கீழே இறங்கினான்
உதயாதித்தன்
எக்ஸ்பர்ட்ஸ் பற்றி சொல்லிய ராகவன், “அவன்
ஒரு கேமரா மட்டும் வச்சிருப்பான்னு தோணலை தளிர் அதனால் வீட்ல வேற எங்கெல்லாம் இருக்குன்னு
பார்த்து எடுக்கணும்” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம் ண்ணா நீங்க..” என்று நொடி
நிறுத்தியவள், “ப்ளீஸ் நீங்க உங்க ஃப்ரெண்டை கூட்டிட்டு
கிளம்புங்க இதெல்லாம் நானே பார்த்துக்கறேன்” என்றாள் உறுதியான குரலில்.
“தளிர் என்ன பேசற..?” என்று
ராகவன் அதிர்வோடு நண்பனை பார்க்க,
“மச்சான் முதல்ல மாடியில இருக்க
ரூம்ல இருந்து ஆரம்பிங்க அடுத்து என்னன்னு நான் உங்களுக்கு சொல்றேன்”
“இல்லண்ணா அதெல்லாம் வேண்டாம் நீங்க இவரை
கூட்டிட்டு கிளம்பு...” என்று முடிக்கும் முன்னமே, “கிளம்பு
ராகவ்” என்றது உதய்யின் கர்ஜனை.
ராகவன் மற்றவர்களுடன் வெளியில் கிளம்ப, “என்ன
நடக்குது இங்க..? நான் தான் ஏற்கனவே உங்களுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் என்ன இதெல்லாம்..? நீங்க தயவுசெய்து கிளம்புங்க” என்று தளிர் வெளியில் சென்றவர்களை
பார்த்தவாறே பேசிக்கொண்டிருக்க உதயாதித்தனோ அவள் பேச்சை காதிலேயே வாங்காமல் அவள்
அறையை திறந்து உள்ளே சென்றிருந்தான்.
“நான் சொல்றது உங்களுக்கு புரியலையா உதய்..?”
என்றவள் அப்போதுதான் உதய் அங்கில்லாது அவளறையில் ஏதோ தேடுவதை
கண்டவள் வேகமாக உதய்யை நெருங்கி அவனுக்கும் பீரோவிற்கும் இடையில் நின்றுகொண்டு,
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? உங்களுக்கும்
எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்ன பிறகும் உங்களுக்கு என்னதான் வேணும்..?
ஏன் இப்படி பண்றீங்க...?” என்று கேட்க தன்னை
உரசிக்கொண்டு நிற்பவளை கண்டு கண்களை இறுக மூடி திறந்தவன்,
“நகருடி” என்றான்.
“நீங்க என்னன்னு சொல்ற வரை நான் நகர மாட்டேன்”
“தளிர் சொன்னா கேளு.. நகரு” என்று அவன்
எச்சரித்த போதும் அவளோ இன்னுமே அழுத்தமாக கால்களை ஊன்றி எனக்கு பதிலளிக்காமல்
எதையும் செய்ய விடமாட்டேன் என்பது போல நின்றிருந்தாள்.
அதில் இன்னுமே இருவருக்குமான இடைவெளி குறைந்ததில் ‘இனி
எதுவும் என் கையில் இல்லை’ என்பது போல உயர்ந்திருந்த உதய்யின் கைகள் மெல்ல
கீழிறங்கி அவள் தோள் சேரவும் தான் அவர்களின் நெருக்கம் கண்டு சுதாரித்த தளிர்
அவனிடமிருந்து விலக முயல., அங்கே உதய்யின் பிடியோ உடும்பாக இருந்தது.
“உதய் என்ன பண்ணிட்டு இருக்கீங்க, விடுங்க” என்றவள் அவன் கையை தளர்த்த முயன்ற வேளை தோளில் இருந்து இறங்கி
அவள் இடையோடு அழுத்தமாக தன் கரங்களை கோர்த்து கொண்டவன்,
“பொறுமையா இருக்கணும்னு தான்டி நானும்
நினைச்சேன் ஆனா இனி முடியாது” என்று தளிரை தன்னை நோக்கி இழுத்து இறுக
கட்டிக்கொண்டு மீண்டும் அவளிதழ்களில் அமிழ்ந்தவன் மீண்டது என்னவோ ராகவனின்
பேச்சுக்குரலில் தான்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சரியான ஊண் உறக்கம் இன்றி
இருந்தவளுக்கு அவன் முத்தத்தின் வேகத்தில் உடல் தோய்ந்து வலுவிழந்த கால்களை தளிர்
கடினப்பட்டு நிலைநிறுத்த முயன்ற போதும் முடியாமல் போக “டோன்ட் டச் மீ உதய்” என்று
அவன் கைகளை விலக்கியவள் பிடிமானத்திற்கு பிடித்தது என்னவோ அவன் சட்டையை தான்!
“கடைசியா எப்போ சாப்பிட்ட..?” என்று அடிக்குரலில் சீறியவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவள் அழுத்தமாக
நிற்க தளிரை மெத்தையில் அமர்த்திய உதய் உள்ளே வந்த ராகவனிடம், “சொல்லு மச்சான் பார்த்துட்டீங்களா..?”என்றான்.
“ஆமாடா மொத்தம் இரண்டு ஹிடன் கேமராஸ் இருந்தது
எடுத்தாச்சு இனி இங்க பார்க்கலாம் தானே..! உனக்கு ஓகேவா..?”
“சரி நீங்க போர்டிகோவை முதலில் பாருங்க நாங்க
வெளியே கிளம்பறோம்” என்றவன் மீண்டும் உள்ளே வர,
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த தளிர் உதய் அவளருகே வரவும், “உங்களுக்கு
ஒருமுறை சொன்னா புரியாது ஸ்டே அவே ஃப்ரம் மீ” என்று எழுந்து நின்றுகொண்டாள்.
“அது எதுக்கு..?” என்று
இடுங்கிய விழிகளோடு அவன் பார்க்க,
“என்ன வந்ததுல இருந்து உங்க இஷ்டத்துக்கு..”
என்று கோபமாக தளிர் ஆரம்பிக்கவும் அவளிதழில் ஒற்றை விரலை வைத்து,
“ப்ச் மெதுவா பேசுடி வெளியில ஆளுங்க
இருக்காங்க..” என்ற அவன் வார்த்தைகளை கேட்காது அவள் மீண்டும் பேச முயல அவள்
முகத்தை தன் கரங்களில் அள்ளிக்கொண்டான் உதயாதித்தன்.
அதில் அவள் வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள சிறு
மிரட்சியுடன் அவனை பார்த்தாள்.
“ஓகே ஃபைன் இங்க எதுவும் பேச வேண்டாம் இப்போ
நாம வெளியில கிளம்பறோம் நீ ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா” என்றான்.
“நான் எதுக்கு உங்களோட வரணும்..? அதுக்கு வேற ஆளை பாருங்க” என்று தளிர் அடமாக நிற்பதை கண்டவன்,
“என்ன தைரியம் இருந்தா என் நம்பரை ப்ளாக் பண்ணி
வேற ஒருத்தியை கல்யாணம் செய்ய சொல்லியிருப்ப..? அந்த
பொறுக்கி தேடி வந்த பிறகும் என்னை தேட தோணலைல உனக்கு? என்னடி
நினைச்சுட்டு இருக்க..?” என்று விழிகள் சிவந்தவன்,
“லுக் இப்போ நாம வெளியில போறோம் அதுல
மாற்றமில்லை..” என்று அழுத்தமாக அவளை பார்த்தவன், “இப்போ
நீயா ட்ரெஸ் சேன்ஜ் பண்றியா இல்ல நான் பண்ணி விடட்டுமா..?” என்று
சொன்னதை செய்வேன் என்பதான பிடிவாத குரலில் அவன் கேட்கவும் தூக்கிவாரி
போட்டது தளிருக்கு.
“என்... என்ன சொன்னீங்க..?”
“ஏன் புரியலையா..?” என்று
ஒற்றை புருவம் உயர்த்தியவன், “உன்னால ட்ரெஸ் சேன்ஜ் பண்ண
முடியுமா முடியாதான்னு கேட்டேன்..” என்றவன் கரம் அவள் பதிலுக்கு காத்திராமல் அவள்
ஆடையில் பதியவும் விதிர்விதிர்த்து போனாள்.
“என்ன பண்றீங்க கை எடுங்க..”
“முடியாது” என்றவனின் உறுதியை கண்டவளுக்குமே அவனிடம்
பேசி தீர்க்க வேண்டியது இருக்க இங்கிருந்தால் நிச்சயம் அவன் தன்னை பேசவிடமாட்டான்
என்பது புரிபட “ஓகே விடுங்க நானே மாத்திட்டு வரேன்” என்று அவன் வழிக்கு செல்லவும்
தான் இளநகையோடு அவள் நெற்றியில் அழுத்தமாக அதரங்களை ஒற்றி எடுத்து,
“ஓகே சீக்கிரம் சேன்ஜ் பண்ணு” என்று சொல்லி
கதவடைத்தவன் நிதானமாக அவள் அறையை பார்வையிட
தொடங்கிவிட்டான்.
“கிளம்பலாமா..?” என்று
திரும்பியவன் இன்னும் அவள் அதே ஆடையில் நிற்பதை கண்டு, “ஏன்
இப்படியே இருக்க ஏதாவது ஹெல்ப் வேணுமா..?” என்று உதய்
இலகுவாக கேட்க பதறிப்போனவள்,
“நீங்.. நீங்க வெளியில போகாம நான் எப்படி மாத்த
முடியும்..?” என்று வேகமாக கேட்டவள் “ப்ளீஸ் வெளியில போங்க
நான் வரேன்” என்று மெல்லிய குரலில் சொல்லவும்,
“கதவை லாக் பண்ணாம மாத்து நான் வெளியில தான்
இருப்பேன். லாக் பண்ணின உடைச்சுட்டு உள்ளே வருவேன், உனக்கு
மூணு நிமிஷம் தான் டைம் புரியுதா..?” என்றவன் வெளியேறி கதவை
சாற்றினான்.
சொன்னபடியே தளிர் உடை மாற்றி வரவும், “மச்சான்
முடிச்சிட்டு அத்தைக்கு விஷயத்தை சொல்லி முக்கியமான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்க
சொல்லி கூட்டிட்டு போ” என்றவன் வெளியில் வந்து காரில் ஏற தளிர் அமைதியாக நின்றாள்.
“என்ன பண்ற..? கெட் இன்
சைட்” என்றதில் இன்னுமே அழுத்தமாக அவனை பார்த்தவள், “எங்க
போறோம்னு தெரியாம...” என்று வார்த்தையை நிறைவு செய்யும் முன்னமே அவள்
புறக்கதவை திறந்தவன் தளிரின் கையை பிடித்திழுத்து சீட்டில் அமர வைத்து
பெல்ட்டையும் போட்டுவிட்டு வேகமாக காரை எடுத்திருந்தான்.
By RP
Comments
Post a Comment