வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 45

 


உதய் தளிரோடு கிளம்பிய அதேவேளை அவனை பின்தொடர்ந்திருந்தான் குமாரின் தம்பி. ஆனால் இடையில் வந்த சிக்னலில் அவனை சிக்க வைத்த உதய் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின் படி தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியருடன் காத்திருந்த செல்வத்திடம் தன் காரை கொடுத்து மற்றொரு காரில் மாறிக்கொண்டான்.

சிக்னலில் இருந்து விடுபட்டவன் தூரத்தில் தெரிந்த உதய்யின் காரை பின்தொடரஉதயாதித்தனோ வேறு பாதையில் பயணித்து ஆறு மாடி கட்டிடத்தின் முன் காரை நிறுத்தி டேஷ்போர்டில் இருந்து மாஸ்க்கை எடுத்து அவளிடம் கொடுத்தவன் தானும் ஒரு மாஸ்க்கை எடுத்து அணிந்துக்கொண்டான்.

எதுக்கு..?”

இது நாம சிக்ஸ்த் ஃப்ளோர் போற வரைக்கும்” என்றவன் அவள் மாஸ்க்கையே வெறித்திருப்பதை கண்டு தானே மாஸ்க் போட்டுவிட்டவன்காரை திறந்து அவள் கையை பிடித்து இறக்கினான்.

எதுக்காக இங்க கூட்டிட்டு வந்தீங்க..?” என்றவள் பிரம்மாண்டமாக அமைத்திருந்த கட்டிடத்தை பார்த்தவாறே அவனிடம் இருந்து தன் கையை பிரிக்க முயன்றாள். ஆனால் அதில் உதய்யின் இறுக்கம் கூடியதே தவிர குறையவில்லை.

இது எங்க பெரிய மாமாவோட ரெஸ்டரன்ட்  இங்க சாப்பிட வந்திருக்கோம். ரூஃப்டாப் நமக்காக அலாட் பண்ண சொல்லிட்டேன் யாரும் நம்மை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க” என்றவன் அவளோடு லிஃப்ட்டில் நுழைந்தான்.

நான் என்ன சின்ன குழந்தையா கையை விடுங்க எனக்கு வர தெரியும்” என்று கடுகடுக்கவும்  அவள் கையை விட்டவன் அடுத்த நொடியே அவளிடையோடு கரம் சேர்த்தணைக்க குப்பென வியர்த்துவிட்டது தளிருக்கு.

உதய் விடுங்க” என்றவளுக்கு விழிகள் கலங்கிய போதும் கண்ணீரை உள்ளிழுத்து சற்று அதட்டலாகவே சொன்னாள்.

அன்னைக்கு மேடையில என் கையை பிடிச்சுட்டு உன்கூடவே இருக்க சொன்னவ இப்போ ஏன்டி விட சொல்ற..நான் எப்பவும் என்னோட முடிவுகளை அவ்ளோ சீக்கிரம் எடுக்கமாட்டேன் அப்படி எடுத்தா அதுல இருந்து எப்பவும்எதுக்காகவும்யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்னு ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன்..” என்று அடிக்குரலில் சீறியவன்,

நீ சொன்னா நான் விட்டுடனுமா..அன்னைக்கு ஒரு தாலி கயிறு நம்ம உறவை மாற்றிடாதுன்னு நம்பி என்னோட மணமேடை ஏறினவளுக்கு இப்போ எங்க போச்சு அந்த நம்பிக்கை...?” என்று கேட்க விழியகலாது அவனை பார்த்திருந்த தளிருக்கு வார்த்தை எழவில்லை.

அதற்குள் ஆறாவது தளத்திருக்கு வந்துவிட்ட  லிஃப்ட் திறக்கவும் “என்ன பார்க்கிற நீ தான் என் பொண்டாட்டி அது அப்பவும் இப்பவும் எப்பவும் மாறாது... இன்னொருமுறை கையை விடுன்னு சொன்னா நாம எங்க இருக்கோம்பக்கத்துல யார் இருக்கான்னு பார்க்க மாட்டேன்இதுதான் நடக்கும்” என்று எச்சரித்தவாறே அவளிடையை விடுத்து கையை பிடித்துக்கொண்டு வெளியேறினான்.

இம்முறை கையை விலக்க முடியாதவள் பார்வை இயலாமையுடன் உதய் மீது படிந்தது.

பின்னே! தேவையான இடத்தில் முற்றுபுள்ளி வைக்காவிடில்  வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாததாகி விடும் என்பதால் உதய்க்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று அவள் கொண்டிருந்த உறுதிகளை தகர்த்து கொண்டிருப்பவனுக்கு என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் அவன் அதிரடியில் சிக்கி சிதறிக்கொண்டு இருக்கிறாள்.

மனதை ஒருமுகபடுத்தி அவனை எப்படி தன் வாழ்வில் இருந்து விலக்குது என்ற யோசனையுடன்  நடந்தவள் அப்போதுதான் அங்கே மேஜை நாற்காலி அலங்கார விளக்குகள் பூக்கள் தவிர வேறு யாரும் இல்லாததை கண்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.

நான் கால் பண்ணினாதான் வருவாங்க” என்றவன் அவளை அழைத்து சென்று நாற்காலியில் அமர்த்தி அவளருகே அமர்ந்தான்.

அன்று பள்ளியில் தளிர் வளையலை மறுத்தபோதுகூட தன் விருப்பத்தை மதித்து எதற்கும் தன்னை கட்டாயபடுத்தாதவன் இன்று அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதை கண்ட திகைப்பில் இருந்து மீளாதவளுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற பலத்த யோசனை.

மெனு கார்ட்டை பார்த்தவாறு, “என்ன சாப்பிடுற..உனக்கு பிடிச்சதை சொல்லு ஆர்டர் பண்றேன்” என்றவன் கேள்விக்கு பதிலளிக்காதவளின் பார்வை சுற்றுபுறத்தை அலசிக்கொண்டு இருந்தது.

உன்னை தான்டி கேட்கிறேன் காதுல விழுந்ததா..?”

என்னை என் விருப்பத்தோடவா இங்க கூட்டிட்டு ஸாரி இழுத்துட்டு வந்தீங்க இப்போ மட்டும் என்ன..?”

வயிறு காலியா இருந்தா எதையும் சரியா யோசிக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.... நீ முதல்ல சாப்பிடு நாம அப்புறம் பேசலாம்” என்றவன் இட்லிவடைபூரிபொங்கல்மசால் தோசைஊத்தாப்பம்இடியாப்பம் என்று இருந்த அத்தனை வகைகளையும் கொண்டு வரசொல்லிவிட்டான்.

உதய் பேசி முடிக்க மேஜை மீது அலங்காரத்திற்காக வைக்கபட்டிருந்த செயற்கை பூக்களை பார்த்தவாறே, “இதுவே நாம சந்திப்பது கடைசியா இருக்கட்டும் உதய் இனிமேல் வேண்டாம் அது யாருக்குமே நல்லதில்லை.. நா..” என்று குரலை செருமியவள்,

உங்களுக்கு நல்ல பெண் கிடைப்பாங்க...” என்று ஒருவாறு கோர்வையாக சொல்லி முடிக்கவும்,

நல்ல பெண்ணா...?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்க ஆம் என்பதாக தலையசைத்தாள்.

எப்போ இருந்து டீச்சர் வேலையை விட்டுட்டு ப்ரோகர் வேலை பார்க்க ஆரம்பிச்ச..?” என்றவனின் குரலில் அத்தனை காரம்.

“...”

உன்னை நான் கேட்கவே இல்லையே அப்புறம் எதுக்குடி உனக்கு இந்த வேலை..?” என்றபோதும் தான் கொண்ட உறுதியில் இருந்து மாறாதவள்,

கண்டிப்பா நல்ல பெண்...” என்று தொடங்கவுமே,

இருக்கலாம் உன்னை போல நல்ல பெண்கள் பலர் இருக்கலாம்..ஆனா எனக்கு இந்த பெண்ணை தானே பிடிச்சிருக்கு” என்று இப்போதும் அவன் அசராமல் பதில் சொன்ன வேளை உணவுகள் மேஜையை நிறைத்திருந்தது.

தேங்க்ஸ்” சொல்லி அனுப்பி வைத்தவன், “முதல்ல சாப்பிடு அப்போதான் உளறாம உருப்படியா பேசுவ..” என்று தட்டை வைத்து அவனே பரிமாற தளிர் முகம் உணர்வுகளற்று கிடந்தது.

சாப்பிடு தளிர்” என்ற போதும் தன்னுள் நிகழும் பிரளயத்தை கையாள முடியாதவளுக்கு இறுதியில் கண்ணீர் மட்டும் துணையாகி போனதில் ததும்பிய நீர்த்துளியை உள்ளிழுத்து முகத்தை திருப்பிகொண்டாள்.

இது வேலைக்காகாது என்பது புரிபட உதய் தோசையை பிட்டு அவளருகே எடுத்து செல்ல அவளோ  இதழ்களை இறுக்கமாக மூடி இருந்தாள்.

இதோபார் நாலு நாளா நானுமே சரியா சாப்பிடலஉன்னை பார்த்த பிறகு தான் எனக்கு பசியே தெரியுது.. சீக்கிரம் சாப்பிடு நாம கண்டிப்பா பேசலாம்” என்ற பின்னரே முதல்முறை வாய் திறந்தவள்,

எனக்கு பசியில்ல நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

ப்ச் அதுதான் உனக்கு பொய் சொல்ல வரலைன்னு ஏற்கனவே சொன்னேனே மரியாதையா வாயை திற இல்ல நானே ஊட்டிவிடுவேன் ஆனா கையாள இல்லை..” என்றதும் தளிரிடம் அத்தனை  மிரட்சி.

நாம கீழ போறவரை இங்க யாரும் வரமாட்டாங்க கேமராவும் ஆஃப்ல தான் இருக்கு... வசதி எப்படி..?” என்றவனின் குரலில் இருந்த உறுதியில்,

இப்போ உங்களுக்கு என்ன..நான் சாப்பிடனும் அவ்ளோதானே..! கொடுங்க” என்று அவன் கையிலிருந்த தோசையை வாங்கி வாயில் போட்டவள் அதே வேகத்தோடு தட்டில் இருந்ததை அள்ளி விழுங்க தொடங்கினாள்.

கண்களில் வழிந்த புன்னகையோடு, “மெதுவா சாப்பிடுசிக்கிக்க போகுது..”

எனக்கு தெரியும் நீங்க சாப்பிடுங்க”

ஏன் நீ எனக்கு ஊட்டிவிட மாட்டியா..?” என்று கேட்க ஒரு நொடி உண்பதை நிறுத்தியவள் அவன் முன் இருந்த பிளேட்டை பார்த்தவாறு நிதானக்குரலில், “இப்போ நான் சாப்பிடவா வேண்டாமா..?” என்றாள்.

ப்ச் என்னடி ஆச்சு உனக்கு..இதுக்கு முன்ன நீ எனக்கும் நான் உனக்கும் ஊட்டிவிட்டது இல்லையா..இப்போ என்ன புதுசா..?” என்று சலிப்போடு கேட்க,

கலங்கிய மனதை இறுக்கி பிடித்தவளின் தொண்டைகுழி ஒருநொடி ஏறி இறங்கிட, “ப்ளீஸ் சாப்பிடுங்க” எனவும் அமைதியாக அவனும் உண்ண தொடங்கினான்.

*********************

உண்டு முடித்த பின் அங்கே பேரமைதி நிலவிட அதை கலைத்தது ராகவனின் அழைப்பு பேசி முடித்தவன், “என் நம்பரை ப்ளாக்ல இருந்து எடு” என்றான்.

“...”

தளிர் சொல்றது கேட்குதா..?” என்றபோதும் அவள் அசையாமலிருக்க அவள் கைபேசியை எடுத்தவன் பாஸ்வோர்ட் கேட்கவும் அவளிடம் சிறு அதிர்வு.

பாஸ்வோர்ட்” என்று அவன் அழுத்தி கேட்க,

கொடுங்க நானே..”

இல்ல சொல்லு”

“...”

தளிர்” என்றவனின் குரலில் அசைந்தவள் u.t.h.a என்று தளிர் ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்க அவள் முடிக்கும் முன்னமே uthayathithan என்று தன் பெயரை கொடுக்கவும் திறந்து கொண்டது. தளிரோ திருமணத்திற்கு முதல் நாள் இரவு அவனிடம் பேசிவிட்டு வந்த பின்னர் தான் பாஸ்வேர்டையும் ரிங்டோனையும் மாற்றி இருந்தாள்.

தளிரை பார்த்தவாறே அவன் எண்ணை ப்ளாக்கில் இருந்து எடுக்க,

தாயும் ஆனவனே…
என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து…
காதல்…”

என்று அவள் கைபேசி இசைத்திட பாடலின் அடுத்தடுத்த  வரிகள் வரும் முன்னமே “கொடுங்க” என்று வேகமாக பறித்தவள் உடனே ஏற்க மறுபுறம் தென்றல். சிறு பதட்டத்தோடு தளிர் அவளிடம் பேசி முடிக்கும் வரை அவளை அவதானித்திருந்த உதய் கைபேசியை பார்த்தவாறே

இதுக்கு அப்புறமும் உன்னோட உளறலை கேட்க நான் தயாரா இல்லை... மாமாகிட்ட பேசிட்டேன் அனேகமா நாளைக்கே வக்கீலை பார்க்க வேண்டியது இருக்கும்.. அவங்க எடுத்த கேஸஸ் எல்லாமே சக்சஸ் தான் ஸோ கண்டிப்பா உன்மேல அவன் சுமத்தின பழியை ஒண்ணுமில்லாம செய்துடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொல்ல தளிர் மெளனமாக அவனை பார்த்திருந்தாள்.

இரண்டு பேரும் மியூச்சுவலா போனாலே நேரமெடுக்கும் இப்போ அந்த நாய் கொடுக்க மாட்டேன் சொல்லியிருக்கிறதால எப்படியும் அவன் பண்ணின ஃபோர்ஜரியை நிருபிச்சு உனக்கு டிவோர்ஸ் கிடைக்க ஒன்றிலிருந்து ஒன்றரை வருஷமாவது ஆகும்.. அந்த நேரத்தை ஏன் வேஸ்ட் பண்ணனும்..?” என்று உதய் கேள்வியாக நிறுத்தினான்.

என்.. என்ன பண்ணனும்..?” என்ற தளிரின் வார்த்தைகளை திணறி வெளியேறிட..,

அதுவரை நாம ஏன் லவ் பண்ண கூடாது..?” என்றவனின் கேள்வியில் தூக்கிவாரி போட்டது தளிருக்கு..

என்ன சொல்றீங்க..?” என்று அவள் எழுந்து நின்றுவிட,

 “ப்ச் உட்காருடி” என்று அவளை அமர்த்தியவன்,

இவ்ளோ நாளா நீ ஸ்கூல் அகாடெமின்னு பிஸியா இருந்ததால ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க நேரமே கிடைக்கலை.. நம்ம கல்யாணத்தை நடத்த இப்போ நமக்கு லாங் கேப் கிடைச்சிருக்கு அதுதான் இந்த இடைப்பட்ட காலத்துல லவ் பண்ணலாமேன்னு சொன்னேன்” என்று சொல்ல பிரிவை பற்றி பேசவந்தவளுக்கு அவன் வார்த்தைகள் உச்சபட்ச அதிர்ச்சியை அளித்தது.

யாருடா நீ..?’ என்பது போல பார்த்திருந்த தளிர் மெல்ல அதிர்ச்சியில் இருந்து மீள அவன் மீது சொல்லிலடங்கா ஆற்றாமை பெருகியது.

உனக்கு ஓகே தானே..?” என்று அவள் கையை பிடிக்கவும் அதை உதறியவள்,

Please stop being dramatic uthai! இவ்வளவு நடந்த பிறகும் எதுவும் நடக்காத மாதிரி எப்படி உங்களால பேச முடியுது நடந்துக்க முடியுது.. I... I just can't take this anymore... am leaving” என்று தளிர் திரும்பி நடக்க அவளை இழுத்து அமர்த்தியவன்,

இப்போ என்னஉண்மையை மறைச்சு நீ என்னை ஏமாத்திட்டஎன் குடும்பத்தை அசிங்கபடுத்திட்டஎன் பேரை கெடுத்துட்ட... எப்படி உன்னால செய்ய முடிஞ்சதுன்னு நான் கோபமா கேட்கணுமா..இல்ல அதுக்கு  நீ கொடுக்க போற எக்ஸ்ப்ளனேஷனை வச்சு உன்னை மன்னிக்கனுமா..எதை செய்தா உனக்கு அது ட்ராமாட்டிக்கா தோணாதுன்னு சொல்லு செய்யறேன்” என்று உதய் நிதானமாக கேட்க தன் மனதை படித்தது போல பேசுபவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

எதை சொல்லி எப்படி மன்னிப்பு கேட்டு அவனிடம் இருந்து விலகுவது என்று புரியாமல் தத்தளித்து கொண்டிருப்பவளுக்கு அவன் வார்த்தைகளில் சுத்தமாக பேச்சு மறந்து போனது.

என்னை புரிஞ்சுக்கோங்க” என்பதாக அவள் பார்வை இருக்க அதை கணக்கில் கொள்ளாதவன்,

முதல்ல உனக்கு ஒரு விஷயத்தை க்ளாரிஃபை பண்ணிடுறேன்..” என்றவன் இருகரங்களையும் மேஜை மீது கோர்த்துக்கொண்டு அவளை நோக்கி சற்று சாய்ந்தமர்ந்து,

சந்தேகத்தின் கூடாரம் தான் கேள்விகளால் நிரம்பி இருக்கும் எங்க நம்பிக்கை இருக்கோ அங்க எந்த கேள்விக்கும் இடமில்லை. ஸோ நான் உன்னை கேள்வி கேட்கணும்னு எதிர்பார்க்காதே” என்று உதய் சொல்லிவிட தளிருக்கோ அவன் பேரன்பில் மூச்சை அடைத்துகொண்டு வந்தது.

அதைவிட முக்கியமான விஷயம்! உண்மையை எல்லாம் பேசனும்னு கட்டாயம் இல்ல ஆனா  நாம பேசுறது உண்மையா இருக்கணும்.. அன்னைக்கு நீ பேசினது எல்லாமே உண்மையா இருக்கப்போ நான் ஏன் உன்னை கேள்வி கேட்கணும்..?” என்று சொல்ல தளிரிடம் சிறு அதிர்வு.

ஏன் நான் பேசினது பொய்யா இருக்க கூடாதா..?”

இருந்திருக்கலாம் ஆனா நான் தான் வளையல் போட்டுவிடனும்னு சொல்லி எங்க அக்கா மூலமா வரவழைச்சவ அதை நான் கேட்டதும் உடனே ஒத்துக்காம நீ வரவழைக்கலைன்னு ஒரு சின்ன பொய் சொல்றதுக்குள்ள இந்த கண்ணும் லிப்ஸ்ஸும் என்ன பாடுபட்டதுன்னு கண் முன்னாடி பார்த்தவன்டி  நான்..!”

ஃபியூ செகென்ட்ஸ்ல எவ்ளோ தடுமாற்றம் உன்கிட்ட..! நீ பொய் சொல்ல போறதை நீயே காட்டிகொடுத்துட்டஅதுதான் உனக்கு சரியா பொய் சொல்ல வரலை இனி ட்ரை பண்ணாதன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா..?” என்று அவன் புருவமுயர்த்த தளிர் வார்த்தைகளின்றி போனாள்.

ஆனா நம்பிக்கை துரோகியை பற்றி பேசுறப்போ எங்கயும் நீ தடுமாறல அன்னைக்கு நடந்ததை சொல்றப்போ அவன் டாட்டூ போட்டது உன்னோட ஃபோட்டோ பற்றி பேசுறப்போ உன் குரல் இரண்டுமுறை கலங்கினதே தவிர உன் கண்ணுல பொய்யோ அதை சொல்ற பதட்டமோ உன்கிட்ட இல்ல.. இது போதாதா உன்னை எந்த கேள்வியும் கேட்காம நான் நம்பறதுக்கு” என்றவனின் இதழ்களில் மென்னகை.

“...”

இப்போ என்னஉன் பிரச்சனை ரிஜிஸ்டர் மேரேஜ் தானே..?” உதய் நிறுத்திட,

கல்யாணத்துக்கு முதல்நாள் என்னை தேடி வந்து இவ்வளவும் சொன்ன உனக்கு இதை சொல்ல அதிக நேரம் எடுத்திருக்காது..சொல்லாம விட்டிருக்கன்னா இதை பற்றி உனக்கே தெரியலைன்னு தானே அர்த்தம் அப்புறம் எதுக்கு நான் உன்னை கேள்வி கேட்கனும்..?”

ஆனா நான்..”  என்றவளை இடைமறித்தவன்,

நான் பேசி முடிச்சுடுறேன்” என்றவன் தளிரின் தளிர் கரத்தை பிடிக்கவும் அதை இழுத்துக்கொள்ள போனவள் அவன் இறுக்கத்தில் தன் முயற்சியை கைவிட்டிருந்தாள்.

திருமணத்திற்காக வைத்திருந்த மருதாணியில் அவன் பெயர் உதிர்ந்து நிறம் மங்கி போயிருக்க அதை கண்டவனின் விழிகளில் சிறு தடுமாற்றம். மெல்ல தளிரின் விரல்களை தன்னோடு கோர்த்துக்கொண்டவன்..,

இதோபார் தளிர் மனசை ஒருத்திக்கும் உடம்பை இன்னொருத்திக்கும் என்னால கொடுக்க முடியாது” என்றான் வெகு தீவிரக்குரலில்.

 “ஹான்” என்று திகைப்போடு அவனை பார்த்த தளிரின் முகத்தில் ‘தான் சரியாக தான் கேட்டோமா..?’ என்ற குழப்பமே மிஞ்சிட, “என்னது..என்ன சொன்னீங்க..?” என்று அவனை கூர்ந்து பார்த்தாள்.

என்ன பார்க்கிற  உங்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கா எங்களுக்கு இல்லையா..?” என்றவன் கேள்வியில் இப்போது தளிர் முழுதாக அதிர்ந்திருந்தாள்.

எங்களுக்கும் இருக்கு மா..! என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

அன்ட் யூ லிசென் கேர்ஃபுலி! உன்னைத்தான் பொண்டாட்டியா நினைச்சேன் இப்பவும் நினைச்சிட்டு இருக்கேன் எப்பவுமே நீ மட்டும் தான் என் பொண்டாட்டியா இருப்ப..! அதனால இப்படி நான் எது சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை முரண்டு பிடிக்காம சொல்றதை கேளு எல்லா ப்ராப்ளமும் நான் பார்த்துக்கறேன்...” என்று நிதானமாக கூற தளிரின் மனதில் அத்தனை அலைக்கழிப்பு.

என்னை புரியுதா தளிர்..?” என்று உதய் அவளை பார்க்க அவளிடம் கனத்த அமைதி.

இது என்னோட ஊர்! இனி பிரச்சனை உனக்கும் அவனுக்கும் இல்ல எனக்கும் அவனுக்கும்..நீ எதையும் நினைச்சு கலங்காம என்கிட்டே விட்டுடு நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல கசந்த முறுவலுடன் தன் விரலோடு கோர்த்திருந்த அவன் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்துக்கொண்டே..,

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு” 

என்று குறளின் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்து நிதானமாக தன் கரத்தை அவனிடம் இருந்து முழுதாக பிரித்து எடுத்திருந்தாள்.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17